March 30, 2023

அண்ணா தம்பியின் கதை part 2 - ( Deivathin kural)


Seeking solution
கேசித்வஜரின் யஜ்ஞ அநுஷ்டானத்துக்கு தடங்கல் ஏற்பட்டது. ஹோமத்துக்கு ப்ரயோஜனமாகும் க்ஷீரத்தைக் (பாலை) கொடுத்துக் கொண்டிருந்த பசுவை ஒரு புலி அடித்துப் போட்டு விட்டது. கோவதை என்றாலே ஹ்ருதயம் துடித்துப் போகும். அதிலும் யஜ்ஞத்துக்கு உபகரித்து வந்த பசு இந்த கதிக்கு ஆளாயிற்று என்னும் போது கேசித்வஜர் பதறிப் போய்விட்டார்.
.
சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கும் தோஷங்களை நிவ்ருத்தி பண்ணவும் அந்த சாஸ்த்ரங்களிலேயே ப்ராயச்சித்தம் சொல்லியிருக்கும். அவற்றைச் செய்துதான் தோஷத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். “இப்போது நான் பண்ண வேண்டிய ப்ராயச்சித்தம் என்ன?” என்று தம்முடைய பண்டித ஸதஸைக் கேசித்வஜர் கேட்டார்.
.
Scholars pointing kaNdakya
அவர்களோ தங்களுக்குத் தெரியாத ப்ராயச்சித்த ஸமாசாரம் கசேரு என்றவருக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைத்து அவரைக்
கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள். ராஜா கேசித்வஜர் உடனே கசேருவிடம் போயக் கேட்டார். “எனக்குத் தெரியவில்லை.
பார்க்கவரைக் கேளும்” என்று சொல்லிவிட்டார். கேசித்வஜர் பார்க்கவரிடம் போனார். அவர், “எனக்கும் தெரியவில்லை. சுனகருக்குத் தெரிந்திருக்கும். அவரிடம் போம்” என்றார்.
.
நாமானால், “கோவிந்த நாமாவே ஸர்வ ப்ராயச்சித்தம்” என்று மூணு தரம் “கோவிந்தா” சொல்லிவிட்டு அதோடு விட்டிருப்போம். கேசித்வஜர் ஒரு பசுவின் மரணத்துக்குச் செய்ய வேண்டிய ப்ராயச்சித்தத்தில் ‘ஸின்ஸிய’ராக இருந்து, சுனகரிடம் போனார்.
.
”கோவிந்த நாமா ப்ராயச்சித்தம் இல்லையா?” என்றால் ப்ராயச்சித்தம்தான். வேறு ப்ராயச்சித்தம் எதுவுமே நம்மால் முடியவில்லை என்று போது தான் அந்தப் பெரிய ப்ராயச்சித்தத்துக்குப் போக வேண்டும். நாம உச்சாரணம் சுலபமாயிருக்கிறதென்பதால்
நாம் பிறத்தியார் விஷயமாக அதுவே நமக்கு ப்ராயச்சித்தம் என்று பண்ணுவதுபோல், நம் விஷயமாகப் பிறத்தியார் பண்ணினால் சும்மா
இருப்போமா?
.
கேசித்வஜர் சுனகரிடம் போனார். அவர் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார். “கசேரு, பார்க்கவர், நான், இன்னம் யாரெல்லாம்
பெரியவர்களென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அந்த எவருக்குமே நீ கேட்கும் விஷயம் தெரியாது. தெரிந்தவர் ஒருத்தரே ஒருத்தர்தான். நீ ஜயித்து, காட்டுக்கு ஓட்டியிருக்கிறாயே, அந்தப் பரம சத்ருவான காண்டிக்ய ஜனகர்தான் ” என்று சொல்லி விட்டார்.
.
‘பரம சத்ருவிடம் போய் பரிஹாரம் கேட்பதா? கேட்டால் தான் அவர் சொல்வாரா?” என்றுதான் வேறு எவராயிருந்தாலும் கேட்காமல் இருந்திருப்பார்கள். ஆனால் கேசித்வஜர் அப்படிச் செய்யவில்லை.
.
“மஹர்ஷி! நல்ல தகவல் கொடுத்தீர்கள். ரொம்பவும் நமஸ்காரம். விஷயம் கேட்டுக் கொள்வதற்காக காண்டிக்யனைத் தேடி இப்போதே காட்டுக்குப் போகிறேன். ” என்று சொல்லிவிட்டுக் கேசித்வஜர் அங்கேயிருந்தே நேரே தான் மட்டும் ரதத்திலேறிக் கொண்டு
காட்டுக்குப் போனார்.
.
Marching towards the enemy camp
காட்டிலே காண்டிக்யரும் அவரது சின்ன பரிவாரமும் இருக்குமிடத்தை கேசித்வஜர் கண்டுபிடித்து விட்டார். உடனே பரம சத்ருவின்
இருப்பிடத்துக்குக் கொஞ்சம்கூட மனஸ் கலங்காமல் தேரைச் செலுத்தினார்.
.
காட்டுக்கு வந்த பரதனை தூரத்திலிருந்து பார்த்ததும் லக்ஷ்மணனுக்கு எப்படிக் கோபம் வந்ததோ அப்படியே தான் இப்போது காண்டிக்யருக்கும் கேசித்வஜரைப் பார்த்ததும் வந்தது. காண்டியர் கன கோபமாக நாணேற்ற ஆரம்பித்தார்.
....
“அப்பா, காண்டிக்யா! அவசரப்படாதே! நான் சத்யமாய் உன்னைக் கொலை பண்ண வரவில்லை. உனக்கு மட்டுமே தெரிந்ததான ஒரு தர்ம சாஸ்த்ர ஸமாசாரம் கேட்டுக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன் – அந்த விஷயம் தெரியாமலே போகுமானால், அபூர்ணமாக யஜ்ஞத்தை விடுவதைவிட, என் உயிரையே விடவும் தயாராயிருக்கிறேன். ஆகையால் நீ ஒன்று, கோபத்தை விடு, அல்லது பாணத்தை விடு. இரண்டையும் வரவேற்கிறேன்” என்று கேசித்வஜர் ரொம்பவும் உணர்ச்சியோடு கேட்டுக் கொண்டார்.
.
(காண்டக்யர் பரிகாரம் சொன்னாரா? அடுத்த பகுதியில்...)
.
Chapter: கதை உருவாகிறது!
Chapter: ப்ராயச்சித்தம்: பகவந் நாமமும் வைதிக கர்மமும்
Chapter: சத்ருவிடம் பரிஹாரம் கேட்டல்!
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment