March 19, 2023

நள தமயந்தியரின் பெருமை (Deivathin kural Volume 7)

(  #Deivathin_kural Volume 7: )

***************************
Daily during sunrise, during Brahma muhurta, contemplating and worshiping these four revered souls, will bring peace in your journey.
.
புண்ணிய ஸ்லோகர்கள், ப்ராத ஸ்மரணீயர்கள் என்றெல்லாம் சில மகாத்மாக்கள் இருக்கிறார்கள். பிராத:க்காலத்தில் – அதாவது காலையில் துயில் எழுந்தவுடன் – இந்தப் புண்ணிய புருஷர்களை நினைக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் விதித்திருக்கிறார்கள்.
.
அப்படி நினைப்பதால் அவர்களுடைய சத்தியம், தர்மம், தியாகம், சீலம் முதலிய குணங்களெல்லாம் நமக்கு வரும். அன்றன்றும் நம் காரியங்களைத் தொடங்குவதற்குமுன் அவர்களை நினைப்பதால் நாமும் வாழ்க்கைப் போராட்டத்துக்கு அவர்களைப் போலவே ஜயசாலிகளாக முகம் கொடுக்கலாம்.
.
இந்தப் பரிசுத்தர்களையும், தார்மிகர்களையும் ஸ்மரிப்பதால் நம்முடைய தோஷங்களும், அதர்ம சிந்தையும் குறையும். தாற்காலிகமாகவாவது மனசில் பயமில்லாத தீரமும், தெளிவும், சாந்தியும் பிறக்கும். இப்படி நாலு புண்ணிய ச்லோகர்கள் இருக்கிறார்கள்.
.
அவர்களில் முதல்வன் நளன்;
அப்புறம் தர்மபுத்திரர்;
மூன்றாவது ஸீதாதேவி;
நாலாவது கிருஷ்ண பரமாத்மா.
.\
புண்ய ச்லோகோ நளோ ராஜா,
புண்ய ச்லோகோ யுதிஷ்டிர: |
புண்ய ச்லோகா ச வைதேஹீ,
புண்ய ச்லோகோ ஜனார்தன: |
.
இந்த நாலு பேருக்கும் வாழ்க்கையில் உண்டான தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவர்கள் இத்தனை தொல்லைக்கு நடுவிலும் தர்ம மார்க்கத்திலிருந்து துளிக்கூட விலகாமல் இருந்து, ஜயசாலிகளாக ஆனார்கள். அவர்களை விடிகிற வேளையில் நினைப்பதால் நம் புத்தியும் கொஞ்சத்தில் கொஞ்சம் அந்த மார்க்கத்தில் பிரவிருத்திக்க ஆசைப்படும்.
.
Chapter: நள தமயந்தியரின் பெருமை
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment