September 30, 2010

திரையிசைப் பயணங்கள் - 5 (அழகான சந்தங்கள்-சந்திரபோஸ்)

உடல் நலக் குறைவால் பிரபல இசையமைப்பாளார் சந்திரபோஸ் இன்று காலை காலமானார். எண்பதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் ஏறக்குறைய முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர்களின் தாயாரும் முன்னாள் பாடகியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எம்.எஸ்.வி அவர்களின் இசையில் "ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடி திரையுலகிற்கு அறிமுகமானவர்.

சூரியனின் பிரகாசத்தில், பல உயிர்ப்புள்ள ஜொலிக்கும் நட்சத்திரங்களின் சுடரை சற்றே முயன்று தேடி கண்டுணர வேண்டியுள்ளது. "இளையராஜா" என்ற சூரியனின் பிரகாசத்தில் மறைந்து விடாமல் தன் தனித்தன்மையை ஜொலிக்கச் செய்த நட்சத்திரமாய் ஒளிர் விடுகிறது சந்திரபோஸ் அவர்களின் இசை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்ற பாடல். நளினமான ஓவியம் மெல்ல எழுந்து நடப்பது போன்ற உணர்வைத் தட்டி எழுப்பியிருப்பார்.

சந்திரபோஸ் இசையில் பாரம்பர்ய வருடலுடன் துள்ளலும் உணர்வும் சேர்ந்து மிதக்கும். இளையராஜா அவர்களின் இசைக்கும் எம்.எஸ்.வி அவர்களின் இசைக்கும் இடையில் அமைந்த அற்புத இடைவெளிப்பாலமாக இவரது இசை அமைந்தது என்பது என் கருத்து. சந்திரபோஸ் இசையில் மனதில் நின்ற பாடல்களுக்கு நிச்சயமாக இந்த ஒரு பதிவு போதாது.

"நீலக்குயில்கள் ரெண்டு"
"இளஞ்சோலை பூத்ததோ"
"மாம்பூவே"
"வண்ணத்துபூச்சிக்கு வயசென்ன ஆச்சு"


ஆகிய பாடல்கள் என் நெஞ்சில் நிறைந்த பாடல்களில் சில என்றாலும் இவற்றையும் தாண்டி என் மனதில் முதலிடம் பிடித்த பாடலைத் தான் இன்று நான் இடப் போகிறேன். அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்" என்ற பாடலை "rare songs" பிரிவில் சேர்க்கலாம். மற்ற பாடல்கள் அளவு பேசப்படாத பாடல். கேட்டுப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

படம்: அது அந்தக் காலம்
பாடல்: அழகான சந்தங்கள்
பாடியவர்கள்: கே.ஜெ.யேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்


த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
ஸ நி த நி த ப க ப நி த
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது!!!
அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

த த நி த நி த த நி த நி த ப க
த த நி த நி த த நி த நி த ப ப
சுர மழையில் இவள் நனைந்து கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்

சங்கீதம் முதல் என்று யார் சொன்னது
சாஹித்யம் முதல் என்று நான் சொல்வது
எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது
சங்கீதமோ உயிர் போன்றது
சாஹித்யமோ உடல் போன்றது
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
உடலோடு உயிர் சேரும் திருநாளிது.

நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது
மண்ணோடு நீர் சேரும் புதுவானது
உன்னொடு நான் சேர முடிவானது
பூங்காக்களே வாருங்களேன்
பூமாலைகள் தாருங்களேன்
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
சுர மழையில் நனைந்து ஒரு கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்

இவ்விசைக்கு மயங்கி நடனமாட வேண்டும் என்ற எண்ணம் நடனமாடத் தெரியா பாமரனுக்கும் வந்து விடும். இங்கு மயங்கி ஆடும் இருவரின் மயக்கம் இசையின் மயக்கமா, ஆடலின் மயக்கமா அல்லது காதலின் மயக்கமா? எல்லாம் கலந்ததொரு விருந்தின் மயக்கம்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

இந்த இசைப் பயணம் துவங்கியதிலிருந்து வரிசையாக முரளி அவர்கள், ஸ்வர்ணலதா அவர்கள், சந்திரபோஸ் அவர்கள் என்று அஞ்சலி பதிவுகளாய் பதிக்க நேரிடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சந்திரபோஸின் இசைக்கு என் வணக்கங்கள்.

4 comments:

  1. மரணம் கருணையற்றது!

    ரூத்லஸ் டிக்டேக்டர் - என்பது உண்மை தான்!

    சந்திரபோஸ் என்ற சங்கீதஜ்ஞன் இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் என்று கவலையோடு நினைக்காமல் இருக்கவில்லை!

    அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

    என் சுரேஷ்

    ReplyDelete
  2. ஆம். எவ்வயதிலும் மரணம் ஜீரணிக்க கடினம். சிறிய வயதினரின் மரணம் மனதை புண்படுத்துகிறது.

    ReplyDelete
  3. சந்திரபோசின் இசை ஆரவாரமில்லாத மென்மை கொண்டது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்கள் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
  4. mohanji,
    Few mds really create an indelible mark in our mind. I always have a place for chandrabose and his music.

    ReplyDelete