September 07, 2010

திரையிசைப் பயணங்கள் - 3 (நடிகர் முரளியின் நினைவில்)


நடிகர் முரளி "பூவிலங்கு" திரைப்படத்தில் அறிமுகமாகி, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்துள்ளார்। அவர் படங்களின் பல பாடல்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவை. "இதயம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் பல வீடுகளில் முணுமுணுக்கப்பட்டவை. அதிகம் பேசப்படாத "இங்கேயும் ஒரு கங்கை" படத்தின் பாடல்கள் மனதை நெகிழச்செய்வன.


பூவிலங்கு, கீதாஞ்சலி முதலிய பழைய படங்களிலும் சரி, வெற்றிக்கொடிகட்டு, போர்களம் போன்ற சமீபத்தில் வெளி வந்த திரைப்படங்களிலும் அமைதியான, மிகையற்ற, இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றார். அவருக்காக என் பிரார்த்தனைகளை சமர்ப்ப்கிறேன்.

முரளி நடித்த திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001785

படம்: புதியவன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்

தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே
சங்கீதம் நானே

இன்னும் தனிமைக்கு துணையில்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்

உனை நினக்கிறது குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே
குயில் எங்கே வசந்தம் அங்கே
நீ வா நீ இங்கே

எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா

கரையை கடந்து ஒரு கடல் வருகிறது
அலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே
உன்னைத்தான் நானே நனைத்தேனே
வா பொன் மானே

4 comments:

  1. உண்மைதாங்க... நல்ல பகிர்வு :)

    ReplyDelete
  2. ஹ்ம்ம்... மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இளைய வயதினர் என்பதால் ரசிகர்களிடையே தாக்கம் அதிகம். அவரது படங்களின் நிறைய நல்ல பாடல்களால் மனதில் நிறைந்தவராகிவிட்டார்.

    ReplyDelete
  3. பிறந்த எல்லோரும் ஒரு நாள் இறந்து தான் ஆகவேண்டும் என்றாலும், 46 வயதிலேயே மறைந்து விட்டார் முரளி என்ற செய்தி கேட்டவுடன், மனதிற்கு என்னவோ போல் தான் இருந்தது..

    எந்த வித பந்தாவும் இல்லாமல், அலட்டாமல் நடித்தவர்... அதிகம் பேச மாட்டார் என்று கூட நினைக்கிறேன்..

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்...

    நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சக்திப்ரபா...

    ReplyDelete
  4. ஆம்...இளமையில் மரணம் பெரும் துயரம்.

    ReplyDelete