September 15, 2010

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல்



உதடுகள் உயிறற்று உலர்ந்திருந்தாலும்
உயிரோசையில் ஓய்வற்ற அனத்தல்
பழையது புதியது
பத்து வருடத்து முந்தைய தூசு
சின்ன வயது பல்லாங்குழி
வயது வந்ததும் வந்த ஈர்ப்பு்
முற்றிலும் மெய் மறந்த முதல் காதல்
இதுவும் அதுவும்
இன்னும் சிலவும்
நினைவு கிடங்கில்
கூச்சலிடும் சப்தங்கள்
விரதங்களைக் கீறிவரும் ஓசைகள்
உள்ளொன்று வைத்து புறமொன்று
போர்த்தியிருக்கும் பொய் முகத்துடன்
ஓயாமல் ஒலிப்பதால்
மௌனம்
அர்த்தமற்றது

2 comments:

  1. மௌனத்தில் உங்களுடைய இப்பதிவு வித்தியாசமான ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.

    கவிதைக்கு பொய் அழகல்ல, உணமையே என்று நிரூபணம் செய்யும் சிலரில் நீங்கள்.

    தொடரட்டும் உங்களினிய எழுத்துப்பயணங்கள்.

    வாழ்த்துக்களுடன்
    என் சுரேஷ், சென்னை

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சுரேஷ். :)

    ReplyDelete