September 21, 2010

குங்குமச் சிமிழில் வெளிவந்துள்ள பதிவர் ஷைலஜாவின் நாவல்

"குங்குமச் சிமிழ்" பத்திரிகையில் வெளி வந்துள்ள நாவல்


மலர் போல மனம் வேண்டும்


ஆசிரியர்- ஷைலஜா


வாழ்த்துக்கள் ஷைலஜா. இன்னுமொரு நாவல் உங்கள் கைவண்ணத்தில்.


நாவலை வாசித்தவுடன், கலகலப்பாக ஒரு பதிவு போட வெண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். கதை இறுதி கட்டத்தில் மளமளவென கனத்து விட்டது. அதன் பின் கலகலப்பாக பதிவிட மனம் இடம்கொடுக்கவில்லை.


"மலர் போல் மலர்கின்ற மனம்" என்றால் 'அன்றலர்ந்த தாமரைப் போல்' என்ற வாக்கியம் எண்ணத்தில் உதிப்பது சகஜம். துன்பத்திலும் துவளாது மலர்கின்ற மனம். அப்படி பட்ட மனம் தான் கதாநாயகிக்கு என்று நினைத்தால், கதாநாயகியை தூக்கி சாப்பிட்டு விட்டு மலர் போல் மலர்ந்து மணம் பரப்புவது வேறு சில கதாபாத்திரங்கள்.


மகளிரை மைய்யமாக வைத்து கதை எழுதியிருக்கிறார்கள். துவண்டு விடாத எண்ணமும், தைரியமும் பெற்ற துணிந்த பெண்களின் கதை. கதையின் மையப் பாத்திரத்துக்கு அமைதியாய் துணை நிற்கும் வேறு பாத்திரங்களின் துணிவு எனக்கு இன்னும் பிடித்திருந்தது.


பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை -நிதர்சனமான உண்மை. வீழ்ச்சியடைந்தவர்களின் கண்ணீர் கதைகள் ஏராளம். குறிப்பாக பங்குச் சந்தையின் சரிவின் போதும், நிதி நிறுவனங்களின் சக்கரவீழ்ச்சியில் பாதிக்கப் பட்ட பல நிறுவனங்கள் சரிந்து அதள பாதாளம் சென்றது. பணவீழ்ச்சியில் பாதிக்கப்பட்டு நின்று போகும் திருமணம் "படிக்காத மேதை" சாயலில் இருந்தது.

மசாலாப் பொடிக்கு பெயர் பொருத்தம் பரவாயில்லை, இருந்தாலும் வாஷிங் சோப்புக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா? பெண்ணின் மேல் கொணட பாசத்தால் அவளே அதிர்ஷ்ட தேவதையாக பிறப்பெடுக்கிறாள். அதனாலேயே சோப்பு என்ன, தொழில்நுட்ப பொருட்களின் தயாரிப்பில் இறங்கியிருந்தால் கூட பெண்ணின் பெயரிலேயே தயாரித்திருப்பார்கள்.

ஆசிரியருக்கு எந்தெந்த நடிகர்கள் நடிகைகளையெல்லாம் பிடிக்கும் என்று நாவலைப் படித்து தெரிந்து கொள்ளலாம். கதையில் வலம் வரும் ஏறக்குறைய நிறைய கதாபாத்திரங்கள் நடிக நடிகையர் சாயலில் இருக்கிறார்கள். கதை படமாக்கப்பட்டால் உதவும் என்பதாலா? கதையில் இன்னும் வியாபார நுணுக்கங்களும், சில "டெக்னிகல்" விஷயங்களையும் ஊடே புகுத்தி கனம் சேர்த்திருக்கலாம். தெளிவாக நிதானமாக சென்று கொண்டிருந்த கதையோட்டம் திடீரென அடம் பிடித்து ஆபார வேகத்துடன் திரும்புகிறது. அதே வேகத்தின் முடிந்தும் விடுகிறது.


எல்லாரும் கொல்-னு சிரிக்க, கெட்டி மேளம் முழங்க, ஹீரோயின் வெக்கப்பட ஹீரோ அவள் காதில் காதல் வார்த்தைகள் கிசுகிசுக்க இப்படி முடிச்சாத் தான் கதையில் திருப்தி. நிஜத்தில் அப்படி முடிக்காத சில கதைகள் தான் இன்னும் ஆழமாக பதிகிறது. கதையின் பலமே எதிர்பாராத தருணத்தில் திரையை மூடி, அதே நேரத்தில் நம்பிக்கைக்கும் ஊறு விளைவிக்காமல் வணக்கம் கூறி முடித்திருப்பது தான்.


துன்பத்திலும் துவளாத மனம், பத்து அடி சறுக்கினாலும் இரண்டடி மேலே வைக்கும் திடம், இவை மூலதனமாக கொண்டு பலர் முன்னேறியுள்ளனர். இன்றும் பல பெண்கள் தங்கள் திறமைகளை முடக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பது உண்மை. இப்படிப்பட்ட கதைகள் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் ஊட்டுகிறது. சாதனைப் பெண்களைப் பற்றி தகவல் சேகரித்து நமக்கு தொடராய் தந்துள்ள சாதனைப் பெண் ஷைலஜா அந்த தாக்கத்திலிருந்து மீள்வதற்கு முன் அவற்றையெல்லாம் ஒரு குமிழில் (சிமிழில்) நிரப்பி நமக்கு இந்த நாவலை தந்துள்ளார்.

குங்குமச் சிமிழ் புத்தகத்தில் தனது நாவல் வந்திருப்பதாக சொன்னது முதல் நானும் வாங்கி விட நினைத்திருந்தேன். "இவளெல்லாம் எங்க வாங்கி படிக்க பொறா" என்று நம்பிகை இழந்துவிட்டதாலோ என்னவோ, நாவல் மென்நூல் வடிவில் வரப் பெற்றிருப்பதையொட்டி "என் நாவலைப் படிச்சுட்டு சொல்லு" என்று அன்பான மடல் காலையில் வந்திருந்தது. எழுத்துலகில் தனக்கென பெயர் நாட்டிய பிறகும் ஷைலஜாவின் மாறாத நல்ல மனமும் பிள்ளை குணமும் தான் தலைப்பிற்கும் காரணம் போலும்.

நன்றி.

6 comments:

  1. நாவலைப்படிச்சதுக்கு நன்றி ஷக்தி. படிச்சி விமர்சனம் எழுதினதுக்கு அதையும் பதிவாக இட்டதற்கு ரொம்ப நன்றி நிறைகுறைகளை ஏற்கிறேன் ! அடுத்த நாவலல் குறைகள் களைந்து நிறைவாக எழுதிட்டாப்போச்சு!

    shylaja.

    ReplyDelete
  2. நன்றி ஷைலஜா. நான் சுட்டிக் காட்டியது குறைகளே அல்ல. Just observations. அதை positive ஆக எடுத்திருக்கும் நீங்கள் அடுத்த நாவலில் இன்னும் கலக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. மேன்மேலும் நாவல் எழுதி இலக்கிய சேவை செய்ய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மேன்மேலும் நாவல் எழுதி இலக்கிய சேவை செய்ய வாழ்த்துக்கள்!

    என் சுரேஷ்

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வால்பையன், சுரேஷ்.

    அவர்களின் மென்நூல் சுட்டி outdated என்று நினைக்கிறேன். ஷைஜலா உங்கள் நாவலுக்கு வேறு சுட்டி இருந்தால் இடவும்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஷைலஜா.

    ReplyDelete