September 21, 2017

LalithaSahasranama(15-18)

லலிதா சஹஸ்ர நாமம் ( 15 - 18 )




**

அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா
முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா
வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா

**

() அஷ்டமி சந்திர = அஷ்டமியில் வரும் பிறைச் சந்திரன்
விப்ராஜ = உள்-ஒளிர்தல்
அலிக = நேற்றி ; ஸ்தல = பிரதேசம் / மேடு 
ஷோபிதா = அழகுடன் அமைந்திருத்தல்

# 15 அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா = அஷ்டமியின் சந்திரப் பிறையொத்த ஒளிரும் நெற்றிப்பிரதேசம் அழகுடன் அமையப்பெற்றவள். *குறிப்பு-1

() முக சந்திர = சந்திர வதனம் (ஒப்புமை)
கலங்க = கறை 
ம்ருகநாபி = கஸ்தூரி (musk) 
விசேஷ = தனித்துவம் / சிறப்பு

# 16 முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா = முழுமதியென ஜொலிக்கும் முகத்தில், நிழற்குறியாய் கஸ்தூரி திலகத்தை சிறப்புற தரிப்பவள்

() வதன = முகம் ; ஸ்மர = தியானித்தல் / கவனித்தல்
மாங்கல்ய = மங்களமான
க்ருஹ = வீடு; தோரண = தோரணம் வாசலை அலங்கரிக்கும் தோரணம்
சில்லிகா = புருவம்

# 17 வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா = எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றிருப்பவள். *குறிப்பு-2

() வக்த்ர = முகம் ; 
பரீவாஹ = நீர் நிலை, பாயும் நீர் நிலை 
லக்ஷ்மி பரீவாஹ = ஸ்ரீலக்ஷ்மிக்குறிய நீர் நிலை
சலன் = நகர்தல் 
மீனாப லோசன = மீனையொத்த விழிகள் (உவமை)

# 18 வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா = முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகள் கொண்டவள்.
__

குறிப்பு-1: அஷ்டமியின் பிறையின் வளைவு நெற்றியின் அழகுக்கு ஒப்புமை படுத்தும் வகையில் சரியாக வரையபட்டிருக்கும்)

குறிப்பு-2: வர்ணிப்பிற்கு அப்பாற்பட்ட எழில் பெற்றிருப்பதாலும், உலகத்து உயிர்களுக்கெல்லாம் சுரக்கும் அமுதமென அன்பு பொங்குவதாலும், விழிகளின் கருணையால் நமையெல்லாம் அழைத்து, வீடுபேறு அருளுவதாலும் மன்மதனின் மன்றம்(வீடு) என்றழக்கப்படுவது அவள் வதனம். மன்மதனின் கோவிலென அவள் வதனமாக, விழிகளே வாசலாக, புருவங்கள் அதன் தோரணமாக அலங்கரித்திருப்பதாக காட்டியருள்கிறது இந்த நாமம்.


குறிப்பு-3: ரூப அழகிற்க்காக மட்டுமின்றி, தன்னின்று தோன்றிய சிருஷ்டியை இமைவிலகாது கடைக் கண்ணால் காப்பாதால்,  விழிகளின் அங்கும் இங்கும் அலைபாயும் மீன்களுக்கு உவமையாகிறது.
__

Lalitha Sahasranama (15-18)

**

Ashtami Chandra vibhrajadhalika sthala shobhitha;
Muka chandra kalankabha mriganabhi viseshaka;
Vadhana smara mangalya griha thorana chillika;
Vakthra lakshmi parivaha chalan meenabha lochana;

**

() Ashtami chandra = crescent moon on the 8th day from new moon
vibhraaja = to shine across 
alika = forehead ; sthala = mound / section
shobhitha = is set beautifully

# 15 Ashtami chandra vibhraajadhalika sthala shobitha = 
Whose forehead shines beautifully like the perfectly curved crescent moon.

() muka chandra = face which is like moon i.e. face that is radiant like moon
kalanga = blemish / mark / spot
mriganabhi = musk (from deer)
viseshaka = peculiar / one of its kind

# 16 Muka chandra kalanga-abha mriganabhi viseshaka = Whose kasthuri thilak(musk) seems the only special mark on the otherwise radiant face that shines like moon

() vadana =face ; smara = when reflecting ( on the face)
mangalya = auspicious
griha = house ; thorana = decorated portal or doorway
chillika = eyebrow

# 17 Vadhana smara mangalya griha thorana chillika = 
whose inviting eyebrows look like ornamated portals to the auspicious home. *ps1

() vakthra = face
parivaha = channel of water/ pool which flows around. 
Lakshmi parivaha channel of water which Sri.Lakshmi calls her own 
chalan = moving 
meenaba lochan = fish eyed (fish like eyes - simile)

# 18 Vakthra lakshmi parivaha chalan meenaabha lochana = whose face is identital to the pond where  beautiful fish-eyes swims *ps2

**
ps1 : it is assumed her eyelids to be the doors inviting jivas to heavenly home full of love.

ps2: Her eyes is like fish because it keeps moving restlessly, protecting and watching the creation which she gave birth.  channel of water is assumed pond here because of its shape and structure.

Thanks and Reference Credit:
www.sanskritdictionary.com www.spokensanskrit.org

No comments:

Post a Comment