September 29, 2017

Lalitha Sahasranama 25 - 30 (தமிழிலும்)

Lalitha Sahasranama 25 - 30 



Shuddha vidhyaankuraakara dvija pagkthi dhvayojvala;
karpoora veetikamOdha samakarshi diganthara;
nija saMlaapa maadhurya vinirbhardista kachchapi;
mandhasmitha prabha poora majjath kamesha maanasa;
anakaalitha saadrushya chibuka shri viraajitha;
kamesha baddha maangalya sutra shobitha kandharA;

() Shuddha = pure 
vidhya = knowledge
aakaar = to appear, apperance, external form (esp of body)
dvija = tooth
pagkthi = row or arrangment
dhvaya = couple
ujvala = shine

# 25 Shuddha vidhyaankuraakara dvija pagkthi dhvayojvala = Whose shiny teeth appear like buds of gyaan i.e pure-knowledge

() karpoora = camphor
veetika = variety of spices and nuts chewed along with betal leaves
moda = fragrance
samaakarshi = far spreading aroma
diganthar = space

# 26 karpoora veetikamOdha samakarshi diganthara = who chews betal-rolls filled with aromatic spices that leave the entire space filled with fragrance. 

() kachchapi = name of the veena which goddess saraswathi play
saMlaapa = conversation - talk *note
madhurya = sweet - graceful charming
nija = always - constantly
vinirbha = criticize
sthitha = to be - to be present - engaged in

# 27 nija saMlaapa madhurya vinirbhardista kachchapi = whose voice is so mellifluous that 
it ridicules the sweet notes produced by the veena of goddess saraswathi 

() mandha smitha  = benign laughter 
prabha = gleamy, illuminated
poora  = here, rising of a river or a sea
majjath = immerse, sink , plunge
kamesha maanasa = mind of ishwara 

# 28 mandhasmitha prabha poora majjath kamesha maanasa = She whose captivating smile, deeply draws the mind of lord kameshwara.


() ana-akalitha = thus - non-calculable, un-acclaimed - (because it is incomparable) 
sadrushya = resemblence
chibuka = chin
sri-virajitha = is beautifully adorned, is present in its glory

# 29 anakaalitha saadrushya chibuka sri viraajitha = whose beautiful chin is unparalleled. 

() kamesha = Lord Kameshwara; baddha = tie; mangalya sutra = auspicious/sacred thread
shobitha = to shine
kandhara = neck

# 30 kamesha baddha maangalya sutra shobitha kandharA = whose graceful neck radiates  with auspicious thread tied by lord kameshwara. 

Note: In many books they mention "nija sallaapa". As much as I searched I did not find sallaapa to have right meaning in sanskrit. Samlaapa (संलाप)  means conversation. Hence I changed the word to suit my finding. I assume the change in recent texts might be semantic change.  If my interpretation or word is wrong, pundits, devotees and scholars kindly forgive me.


Reflections: Madhura samlaapa or sweet talks here not just means her tone or voice. It also means her boundless love, patience, grace towards every spec,impartiality, motherhood and hence everything she communicates is sweetest.
We should try our best to talk or communicate only sweet things. We pray that our bitterness, anger, jealousy etc should vanish by almighty's grace paving way to bountiful love.


லலிதா சஹஸ்ரநாமம் 25- 30

ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா ;
கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா;
நிஜ சம்லாப மாதுர்ய விநிர்பர்த்சித கச்சபி;
மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா;
அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா;
காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா;

()  ஷுத்த = தூய  ; வித்யா = மெய்யறிவு
ஆகார் = தோற்றம் / வெளிப்பார்வை
த்விஜ = பற்கள்
பக்க்தி = அணி / வரிசை
த்வய = ஜோடி
உஜ்வலா = மின்னுதல்

# 25 ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா = ஒளிரும் பல்வரிசைகள்  இரண்டும், ஞான மொட்டுக்கள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.


() கற்பூர = கற்பூரம் ; வீடிகா = வெற்றிலையுடன் மெல்லக்கூடிய பாக்கு மற்றும் இதர நறுமணப் பொருட்கள்  
மோத = நறுமணம்  ; சமாகர்ஷி = பரவலாக மணம் கம்ழதல் 
திகந்தரா = பிரபஞ்சம் 

# 26 கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா =  நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும்  சுகந்தம் பரப்புபவள் 


() சம்லாப = சம்பாஷணை, உரையாடல் *குறிப்பு
கச்சபி = சரஸ்வதி வாசிக்கும் வீணை
மாதுர்ய = இனிய, மதுரமான
நிஜ = எப்பொழுதும்
விநிர்ப = விமர்சித்தல் - இகழ்தல்
ஸ்தித = இருப்பு - இருத்தல் 

# 27 நிஜ சம்லாப மாதுர்ய விநிர்பர்த்சித கச்சபி = சரஸ்வதி இசைக்கும் வீணாகானத்தையும் பழிக்கும் மதுர-சம்பாஷணி


மந்த ஸ்மித = நளின புன்னகை, கனிவான சிரிப்பு
ப்ரபா = பிரகாசம்
பூர = பொங்கும் பிரவாக நதி அல்லது கடல்
மஜ்ஜத் = மூழ்குதல்
காமேஷ மானஸா = காமேஷ்வரனின் மனம்

# 28 மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா = தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்

() அனா-அகலித - மதிப்பிடமுடியாதபடி - ஒப்பிட முடியாத - கூற்றுக்கு அப்பாற்பட்ட
சாத்ருஷ்ய = ஒப்புமை - சாயை 
சிபுக = தாடை
ஸ்ரீ விராஜிதா  = அழகுற அமைந்திருத்தல்

# 29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா =  விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்

() காமேஷ = ஈஸ்வரன் இறைவன்
பத்த = கட்டிய, கட்டுதல்
மாங்கல்ய சூத்ர = தாலிக் கயிறு
ஷோபித = மின்னும்
கந்தரா= கழுத்து 

# 30 காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா = காமேஷ்வரன் (ஈஸ்வரன்) அணிவித்த மங்கல நாணுடன் சோபிக்கும் கழுத்தை உடையவள்

குறிப்பு: பல ஸ்லோக புத்தகங்களிலும் வலைதளங்களிலும் "நிஜ சல்லாப" என்று எழுதப்பட்டிருக்கிறது. சல்லாப என்ற சொல்லுக்கு சமஸ்க்ருத பொருள் கண்டெடுக்க முடியவில்லை. அதே நேரம் "சம்லாப" என்னும் சொல்லுக்கு, உரையாடல், சம்பாஷணை என்ற அர்த்தம் உள்ளது. ஆகவே இம்மாற்றம் காலத்தால் மருவி வந்த மாற்றம் எனக் கருதி சம்லாப என்று குறிப்பிட்டுள்ளேன். தவறிருந்தால் அறிஞர் பெருமக்கள் கருணை கொண்டு மன்னிக்கவும்.


எண்ணச் சிதறல்: மதுர சம்பாஷபாஷணை அவளின் இனிய த்வனியினால் மட்டுமல்ல. அன்னையின் அளப்பறிய அன்பு, எல்லையில்லாக் கருணை, பொறுமை, பேதமின்மையால் தோன்றும் சமநோக்கு முதலிய பெரும் பண்புகளால் தொய்த்தெடுக்கப்பட்ட சம்பாஷணை என்பதால் இனிப்பின் இலக்கணமாய் திகழ்கிறது.
நாமும் கோபம், பொறாமை, பகை முதலியவற்றை விட்டு, இனிமையாக பேசிப் பகிர, பொறுமையும் அன்பையும் வேண்டி அன்னையை தொழுதேத்துவோம்.

No comments:

Post a Comment