September 15, 2017

Lalitha Sahasranama Dhyana Sloka 2




லலிதா சஹஸ்ர நாமம் த்யான ஸ்லோகம் 2:

இரண்டாம் தியான ஸ்லோகம் தத்தாத்ரேயரால் அம்பிகையை துதித்து பாடப்பட்டது.
**
அருணாம்; கருணா தரங்க்கிதாக்ஷிம்; 
த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்;
அணிமாதிபிராவ்ருதாம்; மயூகை-ரஹமித்யேவ விபாவையே பவானீம்

**
அருணாம் = சூரிய அருணோதயம்
கருணா = கருணை கொண்டவள்
தரங்கி = அலை
அக்ஷி = கண்கள்
த்ருத = சுமந்து, தரித்து அல்லது கொண்டிருப்பவள்
பாச = பாசம் என்னும் சூக்ஷ்ம பிடிப்பு-ஜீவனை பந்தப்படுத்தியிருப்பது.
அங்குசம் = ஜீவனை தன்னிடத்தில், தன் வசத்தில், கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளம்
புஷ்ப பாண = மலர்களாலான அம்பு
(பாண) சாபாம் = கரும்பு வில்
அணிமாதி = அஷ்ட சித்திகளின் வடிவ தேவதைகள்
அணிமாதிபிராவ்ருதாம் = அஷ்டமாசித்தி தேவதைகளால் சூழப்பட்டவள்
மயூகை = ஒளிக்கதிர்
அஹம் = நான்
இத்யேவ = இப்படிப்பட்ட
விபாவயே = மஹத்துவத்தை உடைய
பவானீம் = தேவி பவானீ
**
சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளும், அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும், பாசம், அங்குசத்தை தரித்தவளும், புஷ்பத்தாலான அம்புகளையும் கரும்பு வில்லையும் சுமந்தவளும், அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளும், ஒளிக்கதிரென மிளிர்பவளும் பெரும் மஹத்துவத்தையுடையவளுமான பவானியை நான் தியானிக்கிறேன்.
பின் குறிப்பு: 'த்ருத', 'விபாவயே' போன்ற பல சொற்களுக்கு, அமைப்பு, சொற்றொடருக்கேற்ப வேறு இடங்களில் பொருள் மாறுபடலாம்.
(த்யான ஸ்லோகம் 3 தொடரும்)
**
Lalitha Sahasra Nama - Dhyana shloka 2
**
These were Lord Dattatreya's work in praise of Goddess Bhavani
**
Arunam; Karuna thrangitakshim; 
dhrutha pasangusa pushpabana chapam; 
Animadhibhiravrutham; 
mayukair-ahamityeva vibhavaye Bhavanim.

**
I mediate on bhavani, who...
Aruna = who shines like rising sun
karuna = is merciful
tharanga = wave
karunaa tharangitha = waves of mercy
akshi = eyes
dhrutha = held
pasa = we can understand this as invisible noose which binds every soul to the truth (parabrahman)
angusa = Symbolic representation divine having control or power over the souls
pushpa bana = arrows made of flowers
BaNa chapam = bow (BaNa means arrow. BaNa can also mean sugarcane)
aNimadhibhi = eight sidhis which includes anima, mahima, lahima etc
aNimaadhibhir-avruthaam = surrounded by either sidhis...
mayukai - streak/ray/beam of light/shine/brightness
aham = me
ithyeva= accordingly (thereby)
vibhavaye = magnanimity or exalted personification
Bhavaneem = of Devi Bhavani
**
I meditate on devi bhavanee, who shines red like rising sun,
whose eyes emits eternal waves of mercy. Who holds pasa and angusa in her hands to bind and control souls (every living non-living entity). Who holds bows of sugarcane and arrows of flowers. Devi who is surrounded by ashta sidhis, who shines like streak of ray, I meditate upon such exalted divinity of devi bhavanee .

**
Ps: meaning of certain words would vary depending on context.
Here I have assumed "dhruta" to mean "held" or "to hold"

(dhyana 3 to continue)

2 comments:

  1. திரு மீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் போன நினைவு வருகிறது

    ReplyDelete
  2. naan sendrathaaga ninaivillai. kElviyutrirukkiren. varugaikku nandri sir.

    ReplyDelete