September 23, 2017

Lalitha Sahasranama 19 - 24 - Interpretations - தமிழிலும்




லலிதா சஹஸ்ரநாமம் (19 - 24)  

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா ;
தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா ;
கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா ;
தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா ;
பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ:
நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா ;

() நவ = புதிய ; சம்பக புஷ்ப = ஷெண்பக மலர்
ஆப = ஒளிர்வு ; 
நாஸ = நாசி / மூக்கு ; தண்ட = தடம்
விராஜிதா = அமைதிருக்கிறது

# 19 நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா =  புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள்

() தாரா = நட்சத்திரம் ; காந்தி = பிரகாசம்
திரஸ்காரி = மிஞ்சிய / மீறிய / அதிகரித்த
நாஸ = நாசி ; ஆபரண = ஆபரணம் / நகை
பாசுரா = மினுனினுப்பு

# 20 தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா = நட்சத்திரங்களின் சோபையை மங்கச் செய்யும் மூக்குத்தியுடன் ஜொலிப்பவள்

() மஞ்சரி = கொத்து 
க்லுப்த = சீராக / தயாராக / அணிவகுத்து
கதம்ப மஞ்சரி க்லுப்த = சீராக மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்து 
கர்ணபூர = காதுகளை சுற்றி அணியும் அணிகலன்
மனோஹர = ரம்யமாக

# 21 கதம்ப மஞ்சரி க்லுப்த கர்ணபூர மனோஹரா = சீராய் மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்துக்களால் காதுகளை அலங்கரித்திருப்பவள் *குறிப்பு1

() தாடங்க = காதணி ; 
யுக = ஜோடியாக
பூத = இருப்பது / உள்ளது
தபன = சூரியன்
உடுப = சந்திரன்
மண்டல = உருண்டையான / சந்திரசூரியர்களின் ஒளிவட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்

# 22 தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா = சந்திரனையும் சூரியனையும்   இரு காதணிகளாக்கியிருப்பவள்.

() பத்மராக = மாணிக்கத்தின் வகை 
ஷிலா = ( மாணிக்க ) கற்கள்
தர்ஷ = பார்வைக்கு 
பரிபாவி = மனத் தோற்றம் 
கபோல = கன்னம்

# 23 பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ: = பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள்

() நவ = புதிய ; வித்ரும = பவழம் / பவளம்
பிம்ப = ஒப்பிட்டால் / பிரதிபலிப்பு 
ஸ்ரீ = காந்தி
ந்யக்கார் = தரம் தாழ்த்துதல்
ரதனச்சதா = இதழ்கள் / உதடுகள்

# 24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா = பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள். *குறிப்பு2

குறிப்பு1: கதம்ப மலர்களின் படம் மேலே பகிர்ந்துள்ளேன். மலர்கள் கொத்தாக மலர்கின்றன.  இம்மலர்களை காதுகளை சுற்றி அணியாக்கியிருக்கிறாள். இக்கால 'மாட்டல்' வகையில் சேர்க்கலாம் என்பது என் அனுமானம்

குறிப்பு: மேற்கோளுக்காக நான் படித்த வலைதளத்தில் பிம்ப என்ற வார்த்தை கோவைப் பழத்தை குறிப்பதாக எழுதியிருந்தனர்.

Lalitha Sahasranama 19 - 24


nava champaka pushpaabha nasa dhanda virajitha;
thara kanthi thiraskari nasabharana bhasura;
kadambha manjari kluptha karnapoora manohara;
thaatanga yugali bhootha thapanodupa mandala;
padmaraaga shila darsha paribhavi kapolabhu;
 nava vithruma bimbasri nyakkari rathanachchadha;

() nava = new or fresh
chamapaka = chamapaka flower
pushpa = blossom ; aabha = radiance
nasa = nose dhanda = length of nose (shaft)
virajitha = is present

#  19 nava champaka pushpaabha nasadhanda viraajitha = whose nose is as cute and radiant as a newly unfolded champaka flower

() tara = stars kanthi = brightness
thiraskari = outshines / excel 
naasa = nose ; aabharana = Jewel(ring)
bhasura = splendour

# 20 tarakanthi thiraskaari naasa-abarana bhasura = splendour of whose nose-ring outshine the brightness of stars. 

() kadamba = kadamba flowers
manjari = a cluster of blossom ;; klupta = arranged
manjari-klupta = bunch of flowers arranged or ready as a cluster 
karnapoora = ornament worn around the ears
manohara = enchanting

# 21 kadamba manjari klpta karnapoora manohara = who wears enchanting kadamba clusters around her ears *note1 

() thaatanga = earstud / earring
yuga = pair or couple
bootha = present 
thapana = sun
udupa = moon
mandala = globe / halo around sun and moon

# 22 thaatanga yugali bhUtha tapanOdupa mandala =  Who sports the duo - sun and moon as her earstuds 

padmaraaga sila = another variety of ruby
shila = stone (here gemstone) 
darsha = view / show(s) / be seen
paribhavi = visualised / imagined
kapola = cheek

 # 23 padmaraaga siladarsha paribhavi kapolabhu = Whose cheeks seemingly radiate like gems of padmaraaga(ruby) 

nava = fresh ; vithruma = coral
bimba = when compared / reflection / mirror
sri = here to mean lustre or radiance 
nyakkar = to degrade
rathanschada = lip(s)

# nava vithruma bimbasri nyakkari radhanachchada =
Whose lips degrade the lusture of fresh corals. *note2

Note1: Kadamba flowers blooms in clusters and several flowers bloom in a single cluster. (Refer picture Above)
Note 2: The page I took reference, has taken bimba to mean redness of bimba fruit / kovai pazham

Thanks and Reference credit: 
https://www.stephen-knapp.com/ 

2 comments:

  1. வருகை தருகிறேன் வாசிக்கிறேன்

    ReplyDelete
  2. நன்றி ....தொடர் வருகைக்கு ஜி.எம்.பி சார்.

    ReplyDelete