September 30, 2017

உதயமகும் 'விஜயகாலம்'



துர்கையின் மகிஷாசுர வதம் இப்புண்ய காலத்தில் நிகழ்ந்ததாலும், ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்தி மீண்டதால்  மட்டும் நவராத்திரி முடிந்து அடுத்து வரும் தசமியை நற்காரியங்கள் துவக்கும்  "விஜய" தசமி என்று காரணப்பெயர் உண்டாகவில்லை. இதற்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு.

ஒரு முறை பார்வதி விஜயதசமியின் முக்கியத்துவத்தை ஈஸ்வரனிடம் கேட்டறிய முற்பட்டாள்.

அஸ்வினி மாத (தமிழில் ஐப்பசி) சுக்ல பட்சம் பத்தாம் நாள் சந்தியாவேளையில், 'சந்தியா' என்ற நட்சத்திரம் வானில் உதயமாகும் காலம் "விஜ்ய காலம்" எனப்படுவதாகும். இன்னேரத்தில் துவங்கும் எந்த நற்காரியமும் வெற்றியடையாமல்  நிறைவு பேறாது. தீயவை துவண்டழிந்து நன்மை ஏற்படும் நேரம் என்றும்  இதனாலேயே விஜயதசமி என்னும் பெயரும் வழ்ங்கப்பட்டதாக புராணம். 

September 29, 2017

Lalitha Sahasranama 25 - 30 (தமிழிலும்)

Lalitha Sahasranama 25 - 30 



Shuddha vidhyaankuraakara dvija pagkthi dhvayojvala;
karpoora veetikamOdha samakarshi diganthara;
nija saMlaapa maadhurya vinirbhardista kachchapi;
mandhasmitha prabha poora majjath kamesha maanasa;
anakaalitha saadrushya chibuka shri viraajitha;
kamesha baddha maangalya sutra shobitha kandharA;

() Shuddha = pure 
vidhya = knowledge
aakaar = to appear, apperance, external form (esp of body)
dvija = tooth
pagkthi = row or arrangment
dhvaya = couple
ujvala = shine

# 25 Shuddha vidhyaankuraakara dvija pagkthi dhvayojvala = Whose shiny teeth appear like buds of gyaan i.e pure-knowledge

() karpoora = camphor
veetika = variety of spices and nuts chewed along with betal leaves
moda = fragrance
samaakarshi = far spreading aroma
diganthar = space

# 26 karpoora veetikamOdha samakarshi diganthara = who chews betal-rolls filled with aromatic spices that leave the entire space filled with fragrance. 

() kachchapi = name of the veena which goddess saraswathi play
saMlaapa = conversation - talk *note
madhurya = sweet - graceful charming
nija = always - constantly
vinirbha = criticize
sthitha = to be - to be present - engaged in

# 27 nija saMlaapa madhurya vinirbhardista kachchapi = whose voice is so mellifluous that 
it ridicules the sweet notes produced by the veena of goddess saraswathi 

() mandha smitha  = benign laughter 
prabha = gleamy, illuminated
poora  = here, rising of a river or a sea
majjath = immerse, sink , plunge
kamesha maanasa = mind of ishwara 

# 28 mandhasmitha prabha poora majjath kamesha maanasa = She whose captivating smile, deeply draws the mind of lord kameshwara.


() ana-akalitha = thus - non-calculable, un-acclaimed - (because it is incomparable) 
sadrushya = resemblence
chibuka = chin
sri-virajitha = is beautifully adorned, is present in its glory

# 29 anakaalitha saadrushya chibuka sri viraajitha = whose beautiful chin is unparalleled. 

() kamesha = Lord Kameshwara; baddha = tie; mangalya sutra = auspicious/sacred thread
shobitha = to shine
kandhara = neck

# 30 kamesha baddha maangalya sutra shobitha kandharA = whose graceful neck radiates  with auspicious thread tied by lord kameshwara. 

Note: In many books they mention "nija sallaapa". As much as I searched I did not find sallaapa to have right meaning in sanskrit. Samlaapa (संलाप)  means conversation. Hence I changed the word to suit my finding. I assume the change in recent texts might be semantic change.  If my interpretation or word is wrong, pundits, devotees and scholars kindly forgive me.


Reflections: Madhura samlaapa or sweet talks here not just means her tone or voice. It also means her boundless love, patience, grace towards every spec,impartiality, motherhood and hence everything she communicates is sweetest.
We should try our best to talk or communicate only sweet things. We pray that our bitterness, anger, jealousy etc should vanish by almighty's grace paving way to bountiful love.


லலிதா சஹஸ்ரநாமம் 25- 30

ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா ;
கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா;
நிஜ சம்லாப மாதுர்ய விநிர்பர்த்சித கச்சபி;
மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா;
அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா;
காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா;

()  ஷுத்த = தூய  ; வித்யா = மெய்யறிவு
ஆகார் = தோற்றம் / வெளிப்பார்வை
த்விஜ = பற்கள்
பக்க்தி = அணி / வரிசை
த்வய = ஜோடி
உஜ்வலா = மின்னுதல்

# 25 ஷுத்த வித்யாங்குராகார த்விஜ பக்க்தி த்வயோஜ்வலா = ஒளிரும் பல்வரிசைகள்  இரண்டும், ஞான மொட்டுக்கள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.


() கற்பூர = கற்பூரம் ; வீடிகா = வெற்றிலையுடன் மெல்லக்கூடிய பாக்கு மற்றும் இதர நறுமணப் பொருட்கள்  
மோத = நறுமணம்  ; சமாகர்ஷி = பரவலாக மணம் கம்ழதல் 
திகந்தரா = பிரபஞ்சம் 

# 26 கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்தரா =  நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும்  சுகந்தம் பரப்புபவள் 


() சம்லாப = சம்பாஷணை, உரையாடல் *குறிப்பு
கச்சபி = சரஸ்வதி வாசிக்கும் வீணை
மாதுர்ய = இனிய, மதுரமான
நிஜ = எப்பொழுதும்
விநிர்ப = விமர்சித்தல் - இகழ்தல்
ஸ்தித = இருப்பு - இருத்தல் 

# 27 நிஜ சம்லாப மாதுர்ய விநிர்பர்த்சித கச்சபி = சரஸ்வதி இசைக்கும் வீணாகானத்தையும் பழிக்கும் மதுர-சம்பாஷணி


மந்த ஸ்மித = நளின புன்னகை, கனிவான சிரிப்பு
ப்ரபா = பிரகாசம்
பூர = பொங்கும் பிரவாக நதி அல்லது கடல்
மஜ்ஜத் = மூழ்குதல்
காமேஷ மானஸா = காமேஷ்வரனின் மனம்

# 28 மந்த்ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேஷ மானஸா = தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்

() அனா-அகலித - மதிப்பிடமுடியாதபடி - ஒப்பிட முடியாத - கூற்றுக்கு அப்பாற்பட்ட
சாத்ருஷ்ய = ஒப்புமை - சாயை 
சிபுக = தாடை
ஸ்ரீ விராஜிதா  = அழகுற அமைந்திருத்தல்

# 29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா =  விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்

() காமேஷ = ஈஸ்வரன் இறைவன்
பத்த = கட்டிய, கட்டுதல்
மாங்கல்ய சூத்ர = தாலிக் கயிறு
ஷோபித = மின்னும்
கந்தரா= கழுத்து 

# 30 காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபித கந்தரா = காமேஷ்வரன் (ஈஸ்வரன்) அணிவித்த மங்கல நாணுடன் சோபிக்கும் கழுத்தை உடையவள்

குறிப்பு: பல ஸ்லோக புத்தகங்களிலும் வலைதளங்களிலும் "நிஜ சல்லாப" என்று எழுதப்பட்டிருக்கிறது. சல்லாப என்ற சொல்லுக்கு சமஸ்க்ருத பொருள் கண்டெடுக்க முடியவில்லை. அதே நேரம் "சம்லாப" என்னும் சொல்லுக்கு, உரையாடல், சம்பாஷணை என்ற அர்த்தம் உள்ளது. ஆகவே இம்மாற்றம் காலத்தால் மருவி வந்த மாற்றம் எனக் கருதி சம்லாப என்று குறிப்பிட்டுள்ளேன். தவறிருந்தால் அறிஞர் பெருமக்கள் கருணை கொண்டு மன்னிக்கவும்.


எண்ணச் சிதறல்: மதுர சம்பாஷபாஷணை அவளின் இனிய த்வனியினால் மட்டுமல்ல. அன்னையின் அளப்பறிய அன்பு, எல்லையில்லாக் கருணை, பொறுமை, பேதமின்மையால் தோன்றும் சமநோக்கு முதலிய பெரும் பண்புகளால் தொய்த்தெடுக்கப்பட்ட சம்பாஷணை என்பதால் இனிப்பின் இலக்கணமாய் திகழ்கிறது.
நாமும் கோபம், பொறாமை, பகை முதலியவற்றை விட்டு, இனிமையாக பேசிப் பகிர, பொறுமையும் அன்பையும் வேண்டி அன்னையை தொழுதேத்துவோம்.

September 23, 2017

Lalitha Sahasranama 19 - 24 - Interpretations - தமிழிலும்




லலிதா சஹஸ்ரநாமம் (19 - 24)  

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா ;
தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா ;
கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா ;
தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா ;
பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ:
நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா ;

() நவ = புதிய ; சம்பக புஷ்ப = ஷெண்பக மலர்
ஆப = ஒளிர்வு ; 
நாஸ = நாசி / மூக்கு ; தண்ட = தடம்
விராஜிதா = அமைதிருக்கிறது

# 19 நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா =  புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள்

() தாரா = நட்சத்திரம் ; காந்தி = பிரகாசம்
திரஸ்காரி = மிஞ்சிய / மீறிய / அதிகரித்த
நாஸ = நாசி ; ஆபரண = ஆபரணம் / நகை
பாசுரா = மினுனினுப்பு

# 20 தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா = நட்சத்திரங்களின் சோபையை மங்கச் செய்யும் மூக்குத்தியுடன் ஜொலிப்பவள்

() மஞ்சரி = கொத்து 
க்லுப்த = சீராக / தயாராக / அணிவகுத்து
கதம்ப மஞ்சரி க்லுப்த = சீராக மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்து 
கர்ணபூர = காதுகளை சுற்றி அணியும் அணிகலன்
மனோஹர = ரம்யமாக

# 21 கதம்ப மஞ்சரி க்லுப்த கர்ணபூர மனோஹரா = சீராய் மலர்ந்திருக்கும் கதம்ப மலர்க்கொத்துக்களால் காதுகளை அலங்கரித்திருப்பவள் *குறிப்பு1

() தாடங்க = காதணி ; 
யுக = ஜோடியாக
பூத = இருப்பது / உள்ளது
தபன = சூரியன்
உடுப = சந்திரன்
மண்டல = உருண்டையான / சந்திரசூரியர்களின் ஒளிவட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்

# 22 தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா = சந்திரனையும் சூரியனையும்   இரு காதணிகளாக்கியிருப்பவள்.

() பத்மராக = மாணிக்கத்தின் வகை 
ஷிலா = ( மாணிக்க ) கற்கள்
தர்ஷ = பார்வைக்கு 
பரிபாவி = மனத் தோற்றம் 
கபோல = கன்னம்

# 23 பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ: = பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள்

() நவ = புதிய ; வித்ரும = பவழம் / பவளம்
பிம்ப = ஒப்பிட்டால் / பிரதிபலிப்பு 
ஸ்ரீ = காந்தி
ந்யக்கார் = தரம் தாழ்த்துதல்
ரதனச்சதா = இதழ்கள் / உதடுகள்

# 24 நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா = பவளத்தின் பிரகாசத்தை பழிக்கும் உதடுகளைக் கொண்டவள். *குறிப்பு2

குறிப்பு1: கதம்ப மலர்களின் படம் மேலே பகிர்ந்துள்ளேன். மலர்கள் கொத்தாக மலர்கின்றன.  இம்மலர்களை காதுகளை சுற்றி அணியாக்கியிருக்கிறாள். இக்கால 'மாட்டல்' வகையில் சேர்க்கலாம் என்பது என் அனுமானம்

குறிப்பு: மேற்கோளுக்காக நான் படித்த வலைதளத்தில் பிம்ப என்ற வார்த்தை கோவைப் பழத்தை குறிப்பதாக எழுதியிருந்தனர்.

Lalitha Sahasranama 19 - 24


nava champaka pushpaabha nasa dhanda virajitha;
thara kanthi thiraskari nasabharana bhasura;
kadambha manjari kluptha karnapoora manohara;
thaatanga yugali bhootha thapanodupa mandala;
padmaraaga shila darsha paribhavi kapolabhu;
 nava vithruma bimbasri nyakkari rathanachchadha;

() nava = new or fresh
chamapaka = chamapaka flower
pushpa = blossom ; aabha = radiance
nasa = nose dhanda = length of nose (shaft)
virajitha = is present

#  19 nava champaka pushpaabha nasadhanda viraajitha = whose nose is as cute and radiant as a newly unfolded champaka flower

() tara = stars kanthi = brightness
thiraskari = outshines / excel 
naasa = nose ; aabharana = Jewel(ring)
bhasura = splendour

# 20 tarakanthi thiraskaari naasa-abarana bhasura = splendour of whose nose-ring outshine the brightness of stars. 

() kadamba = kadamba flowers
manjari = a cluster of blossom ;; klupta = arranged
manjari-klupta = bunch of flowers arranged or ready as a cluster 
karnapoora = ornament worn around the ears
manohara = enchanting

# 21 kadamba manjari klpta karnapoora manohara = who wears enchanting kadamba clusters around her ears *note1 

() thaatanga = earstud / earring
yuga = pair or couple
bootha = present 
thapana = sun
udupa = moon
mandala = globe / halo around sun and moon

# 22 thaatanga yugali bhUtha tapanOdupa mandala =  Who sports the duo - sun and moon as her earstuds 

padmaraaga sila = another variety of ruby
shila = stone (here gemstone) 
darsha = view / show(s) / be seen
paribhavi = visualised / imagined
kapola = cheek

 # 23 padmaraaga siladarsha paribhavi kapolabhu = Whose cheeks seemingly radiate like gems of padmaraaga(ruby) 

nava = fresh ; vithruma = coral
bimba = when compared / reflection / mirror
sri = here to mean lustre or radiance 
nyakkar = to degrade
rathanschada = lip(s)

# nava vithruma bimbasri nyakkari radhanachchada =
Whose lips degrade the lusture of fresh corals. *note2

Note1: Kadamba flowers blooms in clusters and several flowers bloom in a single cluster. (Refer picture Above)
Note 2: The page I took reference, has taken bimba to mean redness of bimba fruit / kovai pazham

Thanks and Reference credit: 
https://www.stephen-knapp.com/ 

September 21, 2017

LalithaSahasranama(15-18)

லலிதா சஹஸ்ர நாமம் ( 15 - 18 )




**

அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா
முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா
வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா

**

() அஷ்டமி சந்திர = அஷ்டமியில் வரும் பிறைச் சந்திரன்
விப்ராஜ = உள்-ஒளிர்தல்
அலிக = நேற்றி ; ஸ்தல = பிரதேசம் / மேடு 
ஷோபிதா = அழகுடன் அமைந்திருத்தல்

# 15 அஷ்டமி சந்திர விப்ராஜதலிக ஸ்தல ஷோபிதா = அஷ்டமியின் சந்திரப் பிறையொத்த ஒளிரும் நெற்றிப்பிரதேசம் அழகுடன் அமையப்பெற்றவள். *குறிப்பு-1

() முக சந்திர = சந்திர வதனம் (ஒப்புமை)
கலங்க = கறை 
ம்ருகநாபி = கஸ்தூரி (musk) 
விசேஷ = தனித்துவம் / சிறப்பு

# 16 முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா = முழுமதியென ஜொலிக்கும் முகத்தில், நிழற்குறியாய் கஸ்தூரி திலகத்தை சிறப்புற தரிப்பவள்

() வதன = முகம் ; ஸ்மர = தியானித்தல் / கவனித்தல்
மாங்கல்ய = மங்களமான
க்ருஹ = வீடு; தோரண = தோரணம் வாசலை அலங்கரிக்கும் தோரணம்
சில்லிகா = புருவம்

# 17 வதன ஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா = எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றிருப்பவள். *குறிப்பு-2

() வக்த்ர = முகம் ; 
பரீவாஹ = நீர் நிலை, பாயும் நீர் நிலை 
லக்ஷ்மி பரீவாஹ = ஸ்ரீலக்ஷ்மிக்குறிய நீர் நிலை
சலன் = நகர்தல் 
மீனாப லோசன = மீனையொத்த விழிகள் (உவமை)

# 18 வக்த்ர லக்ஷ்மி பரீவாஹ சலன் மீனாப லோசனா = முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகள் கொண்டவள்.
__

குறிப்பு-1: அஷ்டமியின் பிறையின் வளைவு நெற்றியின் அழகுக்கு ஒப்புமை படுத்தும் வகையில் சரியாக வரையபட்டிருக்கும்)

குறிப்பு-2: வர்ணிப்பிற்கு அப்பாற்பட்ட எழில் பெற்றிருப்பதாலும், உலகத்து உயிர்களுக்கெல்லாம் சுரக்கும் அமுதமென அன்பு பொங்குவதாலும், விழிகளின் கருணையால் நமையெல்லாம் அழைத்து, வீடுபேறு அருளுவதாலும் மன்மதனின் மன்றம்(வீடு) என்றழக்கப்படுவது அவள் வதனம். மன்மதனின் கோவிலென அவள் வதனமாக, விழிகளே வாசலாக, புருவங்கள் அதன் தோரணமாக அலங்கரித்திருப்பதாக காட்டியருள்கிறது இந்த நாமம்.


குறிப்பு-3: ரூப அழகிற்க்காக மட்டுமின்றி, தன்னின்று தோன்றிய சிருஷ்டியை இமைவிலகாது கடைக் கண்ணால் காப்பாதால்,  விழிகளின் அங்கும் இங்கும் அலைபாயும் மீன்களுக்கு உவமையாகிறது.
__

Lalitha Sahasranama (15-18)

**

Ashtami Chandra vibhrajadhalika sthala shobhitha;
Muka chandra kalankabha mriganabhi viseshaka;
Vadhana smara mangalya griha thorana chillika;
Vakthra lakshmi parivaha chalan meenabha lochana;

**

() Ashtami chandra = crescent moon on the 8th day from new moon
vibhraaja = to shine across 
alika = forehead ; sthala = mound / section
shobhitha = is set beautifully

# 15 Ashtami chandra vibhraajadhalika sthala shobitha = 
Whose forehead shines beautifully like the perfectly curved crescent moon.

() muka chandra = face which is like moon i.e. face that is radiant like moon
kalanga = blemish / mark / spot
mriganabhi = musk (from deer)
viseshaka = peculiar / one of its kind

# 16 Muka chandra kalanga-abha mriganabhi viseshaka = Whose kasthuri thilak(musk) seems the only special mark on the otherwise radiant face that shines like moon

() vadana =face ; smara = when reflecting ( on the face)
mangalya = auspicious
griha = house ; thorana = decorated portal or doorway
chillika = eyebrow

# 17 Vadhana smara mangalya griha thorana chillika = 
whose inviting eyebrows look like ornamated portals to the auspicious home. *ps1

() vakthra = face
parivaha = channel of water/ pool which flows around. 
Lakshmi parivaha channel of water which Sri.Lakshmi calls her own 
chalan = moving 
meenaba lochan = fish eyed (fish like eyes - simile)

# 18 Vakthra lakshmi parivaha chalan meenaabha lochana = whose face is identital to the pond where  beautiful fish-eyes swims *ps2

**
ps1 : it is assumed her eyelids to be the doors inviting jivas to heavenly home full of love.

ps2: Her eyes is like fish because it keeps moving restlessly, protecting and watching the creation which she gave birth.  channel of water is assumed pond here because of its shape and structure.

Thanks and Reference Credit:
www.sanskritdictionary.com www.spokensanskrit.org

September 20, 2017

Lalitha Sahasranama (13 & 14 )

Lalitha Sahasranama (13 & 14 )



(Describing the beauty of mother from head to toe)
( Kesaadhi paadha varNanai )

It is generally assumed that it is easier to concentrate on the beauty of her form, than her formless attributes. Beauty of her appearance is left to the devotee's imagination to suit varying idea of beauty.
**
(verse 4)

Champakaashoka punnaaga sowgandhika lasad kacha
kuruvindha mani sReni kanath kOteera manditha

**
() champa - ashoka - punnaga - sowgandhika = flowers ( *refer to the picture in comment section) 
lasad = shiny 
kach = hair

**
# 13 champakashoka punnaaga sowgandhika lasad kacha = Who adorns her lustrous hair with champaka, ashoka, sowgadhika and punnaga flowers
**
kuruvinda mani = gems of ruby
sreNi = string
kanath = shine
koteera = crown or crest
manditha = stays decorated

# 14 kuruvindha manishrENi kanath kOteera manditha = whose crown is studded with strings of sparkling ruby gems
( to continue)
**
லலிதா சஹஸ்ர நாமம் 13 & 14
(கேசாதி பாத வர்ணனை)
பொதுவாக ரூப தியானம் அரூப தியானத்தைக் காட்டிலும் எளிதாக கருதப்படுகிறது. அவரவரின் சுய ரசனைக்கேற்ப அம்பிகையின் அழகை தியானம் செய்யலாம்.
**
(ஸ்லோகம் 4)

சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா
குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா

**
() சம்பகா - அஷோகா - புன்னாக - சௌகந்திக = மலர்கள் (கீழுள்ள படங்களைப் பார்க்கவும்)
லசத் = மின்னும்
கச் = கேசம்

# 13 சம்பகாஷோக புன்னாக சௌகந்திக லசத்கசா 
= ஷெண்பகப்பூ, விருக்ஷி, சுகந்திப் புஷ்பம், புன்னை பூ முதலிய மலர்களை மிளிரும் எழில் கூந்தலில் சூடியிருப்பவள்

**
() குருவிந்தமணி = மாணிக்க கற்கள்
ஸ்ரேணி = சரம்
கனத் = பளபளக்கும்
கோடீர = உச்சி / மகுடம்
மண்டிதா = அலங்கரித்திருக்கிறது

# 14 குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா = மாணிக்க பரல்கள் பளபளக்கும் சரத்தால் மகுடத்தை அலங்கரித்திருப்பவள்
( தொடரும்)

Thanks and Credit reference:

Lalitha Sahasranama 10 - 12

Lalitha Sahasranama (10 - 12)



**

manO roopEkshu kodhanda; pancha than-maathra saayaka;
nijaaruna prabha poora majjath brahmaanda mandala ;


**
() manO roopa= in the form of mind
Ekshu = sugarcane
kOdhanda = bow


# mano roopEkshu kodhanda = She who holds (cosmic)mind in the form of sugarcane bow

() pancha than-maathra = Essence or subtle attributes of five basic elements i.e. Sound, Sight, Taste, Smell and Touch (five elements are Mahathboothas Fire,Earth,Water, Air and Ether)
sayaka = arrows (five arrows)

# pancha than-maathra saayaka = Who has made five subtle attributes of the elements, called tanmantras as arrows

() nija-aruna = eternal / constant red
prabha = radiance / glow
poora = completely
majjath = submerge / immerse
brahmaanda mandala = universal territory


# nijaruna prabha poora majjath brahmaanda mandala = Who has completely immersed the entire universe in her eternal red radiance


By now, we must be familiar how these verses, talk of macro or cosmic level concepts. Five elements and their subtle attributes are used by cosmic mother as arrows and 'desire or will' of the universal mind is the bow to begin, sustain / play-on and eventually to dissolve . These are her toys to sport the leela.

With this verse, explanining the manifestation of ambika (mathur-avatara) gets completed. From next verse, we shift to describe the beauty of mother from head to toe. (kEsadhi paadha varNanai)

____

லலிதா சஹஸ்ர நாமம் ( 10 - 12 )

**
மனோரூபேக்ஷு கோதண்டா; பஞ்சதன்மாத்ர சாயகா;
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா;


**
() மனோரூப = மனத்தின் வடிவாக
இக்ஷு = கரும்பு
கோதாண்ட = வில்


# மனோரூபேக்ஷு கோதண்டா = மனதையே கரும்புவில்லாக தரிப்பவள்

() பஞ்ச தன்மாத்ர = ஐந்து பூதங்ளான நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ஆகிய வற்றின் நுட்ப பண்புகளான - சுவை, ஊறு, நாற்றம், ஒளி, ஓசை என்பன

சாயக = அம்பு

# பஞ்சதன்மாத்ர சாயகா = ஐம்பூதங்களின் நுட்ப வெளிப்பாடுகாளான தன்மாத்திரைகளை தன் அம்புகளாக்கி கொண்டவள்

() நிஜாருண = நிரந்தரமான சிவப்பு
ப்ரபா = ஒளிர்வு / பிரகாசம்
பூர = முழுமையாக
மஜ்ஜத் = மூழ்குதல்
ப்ரம்மாண்ட மண்டலா = அண்டசராசரத்தின் மண்டலம்


# நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா;= அண்டசராசரத்தின் மண்டலம் முழுவதையும் செந்நிறத்தின் ஒளிர்வில் மூழ்கச் செய்திருப்பவள்

**

பிரபஞ்சத்தையே தன் ரூபமாக்கியவள். அதன் தோற்றம், இயக்கம் ஒடுக்கத்தியே அன்னை அம்பிகா, வில் அம்புகளாக தரித்து தன்னுடைய லீலைக்கு உட்படுத்தி விளையாடுகிறாள் என்பது புரிதல்.

(இதுவரை லலிதாம்பிகையின் அவதாரம் பற்றிய மூன்று ஸ்லோகங்கள் படித்தோம். இனி அவள் அங்க அழகை கேசத்தில் துவங்கி பாதம் வரையிலான வர்ணனை தொடரும்)

Reference Credit and Thanks:

September 19, 2017

Lalitha Sahasranama - (6 - 9)

Lalitha Sahasranama 6 - 9


**

udyadh bhanu sahasraabhaa; chathur baahu samanvitha;
raaga swaroopa bhashatya; krodhakarangu sojwala


**

() Udhyadh bhanu=rising sun 
sahasra=thousand 
aabhaa=brilliance, shine light.


# udhyath banu sahasrabha = Glitters like thousand rising sun

() chathur baahu=Four arms 
samanvith=associated / possessing


# Chathur baahu samanvitha = possessing four arms, four - armed

() Raaga=desires 
Raaga swaroopa=in the form of desires 
paashadya=rope


# Raaga Swaroopa Paashadya = One who holds pasha, i.e. rope personifiying desires which prompts creation. * PS 1

() krOdhaakar=anger 
angush=as angusa / symbolism to mean control 
jwala=jyothirmayi, glistening like light


# KrodhaakarangusOjwala = She who shines with angusha depicting anger which represents her control over creation. *PS 2

**

* PS 1 : Desire is the root cause for creation and reason for million life forms. She symbolically holds desire in the form of rope to mean desire is the root cause of creation. She thereby induces life particles to assume its role and play its part.
There is another perspective. She has a hold on desires of lifeforms and hence can lift devotees out of rope called desire and pave way for upliftment or liberation.
* PS 2 : Similarly there are different perspectives to understand her symbolising angusha. It may mean to have control over life-forms. It can also mean she, uses anger as a weapon to control when adharma or unrighteousness prevails.
( to continue )
___
லலிதா சஹஸ்ர நாமம் 6 - 9

**

உத்யத்பானு சஹஸ்ராபா ; சதுர்பாஹு சமன்விதா;
ராகஸ்வரூப பாஷாட்யா ; க்ரோதாகாரங்க்குசோஜ்வலா;


( tha-dha, sha-sa, pa-bha போன்ற வித்தியாசங்களுக்கு
மேலே ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை சரி பார்த்துக்கொள்ளவும். )


() உத்யத் பானு = உதய சூரியன் 
சஹஸ்ர = ஆயிரம் 
ஆபா = பிரகாசம்


# உத்யத்பானு சஹஸ்ராபா = ஆயிரம் உதய சூரியனின் பிரகாசத்துடன் பிரகாசிப்பவள்

() சமன்விதா = இருப்பவள் / உடையவள் 
பாஹு = கைகள் 
சதுர் = நான்கு

# சதுர் பாஹு சமன்விதா = நான்கு கைகளை உடையவள்

() ராக ஸ்வரூபா = ராகம் என்றால் ஆசைகள், அபிலாஷைகள் 
பாஷாட்யா = பாசம் என்னும் கயிறு


# ராக ஸ்வரூப பாஷாட்யா = ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள் *குறிப்பு1

() க்ரோதாகார = ஆக்ரோஷம், கோபம் கோண்டு 
அங்குச = அங்குசம் என்ற ஆயுதத்தை க்ரோதத்தின் வெளிப்பாடாக 
சுமந்திருக்கிறாள் 
உஜ்வலா = பிரகாசிப்பவள்


# க்ரோதாகாராங்குசோஜ்வலா = க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள் *குறிப்பு 2

**

குறிப்பு 1 : ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்பது புரிதல்.
மற்றொரு பார்வையில், கருணையின் காரணமாக, அன்னையானவள், ஆசைகளின் வேரை அறுத்து வீடு-பேறு என்னும் முக்திக்கு வழி செய்பவள் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.

குறிப்பு 2 : சினத்தின் வெளிப்பாடு ஒடுக்கத்தின் ஆரம்பமாகவோ, அல்லது அதர்மத்தை அழிக்க அவள் கொண்டுள்ள உக்கிர ரூபமாகவும் பொருள் சொல்லப்படுகிறது.
சினத்தின் பிரதிபலிப்பு சேதன அசேதன பொருட்களை அவள் ஆளுமை செய்வதற்கான அடையாளம் என்பது இன்னொரு பார்வை.

(மேலும் பார்க்கலாம்)

Thanks and Reference Credit:

September 18, 2017

Lalitha Sahasranama - (1-5)


Lalitha Sahasranama Verse 1



Om Sri Matha; 
Sri Maharaajni; 
Srimath SimhaasanEshwari;
Chitagni kunda sambootha; 
Devakaarya samudhyatha;


**
# Sri Maatha = First name addresses her 'THE MOTHER' She is the mother of entire universe. Universal Mother. Creator of all  sentient and in-sentient things. Primary source of all that is, was and will be.

# Sri Mahaaraajni - Ruler of the kingdom (universe). Her role here is to Maintain or sustain the creation. Maha Rajni, ie Greatest ruler. Primary in hierarchy.

# Srimath SimhaasanEshwari = One who rides lion, Sits on the throne of lion. Seated on ferocious line she depicts destruction. It can also mean to say she has control over entire creation.  She 'tames' every aspect of creation.

() Chith = Intellect, Soul, Knowledge
agni-kunda - fire-pit 
sambhootha = she arose (not created...she was swayambu or self-manifested)

# Chithagni kunda sambhootha = Self manifested from the fire of knowledge

# Deva kaarya samudhyatha = One who helps devas ie. Gods. We can also interpret as one who helps jeeva(spirit) to do virtuous tasks. 

(to continue verse 2)

**
லலிதா சஹஸ்ர நாமம் - ஸ்லோகம் 1

**
ஓம் ஸ்ரீ மாதா;
 ஸ்ரீ மஹாராஜ்நீ;
 ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஷ்வரி;
சிதக்னி குண்ட சம்பூதா; 
தேவ கார்ய சமுத்யதா

**
# ஸ்ரீ மாதா = அன்னையானவள். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்க்கான காரணகர்த்தா. உலக சேதன அசேதன தோற்றத்திற்கெல்லாம் ஆதாரமான அன்னை. அவளினின்று புறப்பட்டது இப்ப்ரபஞ்சம்.

# ஸ்ரீ மஹாராஜ்ஞீ = பிரபஞ்சம் என்னும் ராஜ்ஜியத்தை ஆளுபவள். பரிபாலிப்பவள். தோற்றுவித்த அனைத்தையும் ஆளுபவள்.

# ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி = சிம்ம வாஹினி. சிம்மத்தை வாஹனமாக்கி கொலுவிருக்கிறாள். சிம்மத்தை ஆசனமாக கொண்டு வீற்றிருக்கிறாள். பிரபஞ்சத்தின் ஒடுக்கத்தை பிரதிபலிக்கிறாள். பஞ்சபூதம் முதல் அனைத்தையும் தன் வசத்தில் கட்டுக்குள் வைத்திருப்பவள்.

# சிதக்னி குண்ட சம்பூதா = 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வேளிப்பட்டவள். 'சித்' என்பது சேதன்மாகிய ஆன்மாவை குறிக்கும். ஞானம் அல்லது அறிவாகிய அக்னி குண்டத்திலிருந்து சுயம்புவாக தோன்றியவள்.

# தேவ கார்ய சமுத்யதா = தேவர்களுக்கு உதவுபவள். தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்று அர்த்தம் கொள்ளலாம்.தர்மத்தின் அடிப்படையில் அமைந்த நேர்மையான நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்

( மேலும் பார்க்கலாம்)

Thanks Reference Credit:

http://sanskritdictionary.com

September 17, 2017

Lalitha Sahasranama:Dhyana verse 4:


லலிதா சஹஸ்ர நாமம் - தியான ஸ்லோகம் 4



__
இந்த ஸ்லோகம் ஆதிசங்கரர் அம்பாளை துதித்து இயற்றியது.


ஸகுங்கும விலேபனாம்; அளிகசும்பி கஸ்தூரிகாம்;

ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ச-சர சாப பாசாங்குசாம்;
அசேஷ ஜன மோஹினீம்; 
அருணா மால்ய பூஷாம்பராம்;
ஜபா குசுமபாசுராம்; ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்;

**
விலேபனாம் = பூசியிருப்பவள்
அளிக சும்பி = நெற்றியில் முத்தமிட்டிருக்கும்
கஸ்தூரிகாம் = கஸ்தூரி திலகம்
மந்த ஹசிதேக்ஷணாம் = மிருதுவாக புன்னைத்திருக்கிறாள்
சர சாப = அம்பு, வில்
பாசம் = ஜீவனின் பந்தப்படுத்தியிருக்கும் பிணைப்பு
அங்குசம் = ஜீவர்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளச் சின்னம்
அசேஷ = எல்லாமும் எல்லோரும், அனைத்தும்
ஜன மோஹினீம் = ஜனங்களால் மோஹிக்கப்படுபவள்
அருண மால்ய = செந்தூர மாலை
பூஷாம்பராம் = அணிசெய்யும் அலங்காரங்களை உடுத்தியிருக்கிறாள்
ஜபா குசும = செம்பருத்தி மலர்
பாசுராம் = மின்னுதல்
ஜப விதௌ = ஜபத்தின் பொழுது (அதன் விதிகளின் படி)
ஸ்மரேத் = ஸ்மரிக்கிறேன் / தியானிக்கிறேன்
**
குங்குமத்தை பூசியிருப்பவளும், நெற்றியில் கஸ்தூரி திலகம் கொஞ்சுபவளும், மென்மையான புன்னகை சிந்துபவளும், அம்பு-வில்-பாசாங்குசம் ஏந்தியவளும், எல்லா ஜீவனையும் தன்னிடத்தில் மோஹத்திருக்கச் செய்பவளும், சிகப்பு மாலை, செம்பருத்தி மலர் சூடி, அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜொலிப்பவளுமான அம்பிகையை ஜபத்தின் பொழுது தியானிக்கிறேன்.
**
( நான்கு தியான ஸ்லோகங்களுக்குப் பிறகு இனி அடுத்த பதிவில் சஹஸ்ர நாமம் ஆரம்பம் ஆகும். ஒரு பதிவுக்கு ஒரு ஸ்லோகம் விதம் ஆயிரம் நாமங்களை உள்ளடக்கிய 182 ஸ்லோகங்களை, இனி விளங்கிக் கொள்வோம் )
_________
Lalitha Sahasranama:Dhyana verse 4:

This verse is gifted to us by Adhi-shankaracharya. It is no wonder  the verse stay close to our heart for its poetic intricacy.

**
sa-kumkuma vilEpanaam ; aLikachumpi kasthoorikaam;
sa-mandha hasithEskhaNaam; 
sa-chara chaapa paasa angusaam;
asEsha jana mohineem; 
aruNa maalya bhushaambaraam;
japa kusuma bhasuraam;
japavithou smareth ambikaam;

**
kumkuma - kumkum
vilepanaam - smearing
aLika chumbi - foreheard kissed (wearing)
kasthurikaam - with musk
mantha hasithEkshanam - looks soft and smiling
sa-shara chapa - holding(with) arrows and bows
pasa angusaam - paasa a noose to bind souls
angusa - representation of control over souls
Asesha - entire - whole - every
jana mohini - attracts people
aruna malya = red garland
bhoosha- decorated
ambara = clothed i.e. wearing
japa kusuma = red hibiscus
basuram = radiating
japa vidhou = accordingly while doing japa
smareth = I concentrate and meditate
ambikaam = on devi ambika
**
During Japa, I meditate on Devi ambika, who smears holy kumkum, who marks her foreheard with scented-musk, who graces with soft smiling face, whose hands hold bow and arrow, pasha and angusha. Decorating herself with Red garland, hibiscus flowers and ornaments to enhance her radiance, she attracts the entire universe (with no exception).
(pasha and angusha are representations of her aspects. please refer to the explanation above)
**
(Next post, we will be reflecting on thousand names glorifying Devi Lalitha. Sloka verses will be interpreted as "one" sloka verse per post and there are totally 182 sloka verses (comprising thousand names).

Thanks: Reference Credit: