சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
December 16, 2022
மார்கழிக் கோலங்கள்
December 13, 2022
நான்
December 05, 2022
World of Cinema - Drama : changing scenarios (Deivathin kural Volume 7 )
( தெய்வத்தின் குரல் பகுதி 7 தொகுப்பிலிருந்து)
November 23, 2022
பாதைகளின் ஆலிங்கனம்
November 22, 2022
What is True Secularism ( Deivathin_kural Volume 7 )
November 01, 2022
தேவார திருமுறைகள் - ராஜராஜ சோழனின் பங்களிப்பு (தெய்வத்தின் குரல்)
RajaRaja Sozhan's thirst
அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் ராஜராஜ சோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக்கொண்டிருந்தார்கள்.
சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து ப்ரகாசப் படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது. 'எப்படியாவது' என்றால் நடைமுறையில் எப்படி? அதுதான் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
Nambiyandaan nambi's childhood
அப்போது அவனுக்கு ஒரு நல்ல சேதி வந்தது. "சிதம்பரத்துக்குக் கிட்டே திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி என்று ஒரு மஹான் இருக்கிறார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம்.
அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னாராம். இவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்யம் பண்ணினாராம். பிள்ளையார் நிஜமாகவே நைவேத்யத்தைச் சாப்பிடுவார்கள் என்று நினைத்தார். அவர் அப்படிப் பண்ணாததால் ஒரே அழுகையாய் அழுது கல்லிலே தலையை மோதிக் கொண்டு ப்ராணனை விட்டுவிடப் பார்த்தார். உடனே பிள்ளையார் ப்ரஸன்னமாகி அவர் ஆசைப்பட்டாற்போலேவே அத்தனை நைவேத்யத்தையும் சாப்பிட்டாராம்!
"இதற்குள் பள்ளிக்கூட வேளை தப்பி விட்டதாக நம்பி மறுபுடி அழ ஆரம்பித்தாராம். உடனே பிள்ளையாரே அவருக்கு வித்யாப்யாஸம் பண்ணி ஆத்ம வித்யை உள்பட எல்லாக் கல்வியிலும் தேர்ச்சி பெறச் செய்த விட்டாராம்.
Pillaiyaar blessing Nambi and RRC
அந்தப் பெரியவர் (Nambiyandaan nambi) பிள்ளையாரோடு ஸஹஜமாகப் பேசுகிறாராம். அவரைக் கேட்டால் தேவார ஸமாசாரம் தெரியலாம்" என்று ராஜராஜ சோழனுக்குச் சேதி சொன்னார்கள்.அப்படியா?" என்று அவன் உடனே நம்பியுடைய பிள்ளையாருக்காக ஏகப்பட்ட நைவேத்யங்கள் ஸித்தம் செய்து கொண்டு அவரிடம் ஓடினான். ராஜராஜசோழன் ஸமர்பித்த நைவேத்யங்கள் நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாருக்குப் படைத்தார். பிள்ளையார் வாஸ்தவமாகவே தும்பிச்சுக் கையை நீட்டி அதெல்லாவற்றையும் போஜனம் பண்ணினார் ராஜாவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. நம்பியாண்டார் நம்பியிடம், "உங்களுடைய இந்த ப்ரத்ட்யச தெய்வத்தைக் கேட்டு மூவர் தேவாரங்கள் முழுக்கவும் எங்கே கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு சொல்லவேணும்
இன்னொரு ஆசை, இப்ப கிடைத்துள்ள தேவாரத்தில் 'திருத்தொண்டத் தொகை' என்று 63 நாயன்மார் பேர்களைத் தெரிவிப்பதாக ஸுந்தரர் பாடல் இருக்கிறதோல்லியோ? அந்த மஹாநுபாவர்களின் திவ்ய சரித்ரங்களையும் பிள்ளையார் வெளியிட்டாரானால் லோக மங்களமாக எல்லாருக்கும் ப்ரசாரம் பண்ணலாம். அநுக்ரஹிக்கணும்' என்று ப்ரார்த்தித்துக் கொண்டான். இவன் சொன்னதை அவர் பிள்ளையாரிடம் சொல்லி, "அநுக்ரஹிக்கணும்" என்று வேண்டிக் கொண்டார்.
இந்தத் தமிழ்த் தேசத்துக்கு, பக்த லோகத்துக்கே, பரமோபகாராகப் பிள்ளையாரும் அந்த இரண்டு விஷயங்களையும் தெரிவித்தார். "சிதம்பரத்திலே நடராஜா ஸந்நிதானமான கனக ஸபைக்கு மேலண்டையிலே ஒரு அறை இருக்கிறது. அதிலேதான் மூவரும் தங்களுடைய தேவாரச் சுவடிகள் வைத்திருக்கிறார்கள். கதவில் அவர்களே இலச்சினை வைத்திருக்கிறார்கள். (லாஞ்சனை என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையைத் தமிழில் இப்படிச சொல்வது. அதுதான் அதிகாரப்பூர்வமான அடையாளம், முத்திரை முதலானது.) அப்படி அந்தச் சிதம்பர மேலண்டை அறையில் தேவார மூவரே அதிகார பூர்வ அடையாளமாகத் தங்களுடைய கையை அழுத்திய இலச்சினைகளை வைத்து மூடியிருக்கிறார்கள். அங்கே பாய்க் கதவைத் திறந்து சுவடிகளை எடுத்துக்கோ" என்றார்
அறுபத்து மூவர் சரித்ரங்களையும் சொன்னார். 'நம்பிக்கு தும்பி சொன்னார்' என்பார்கள்.
Rushing to Chidambaram
தேவாரக் கதை என்ன ஆச்சு என்றால், நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.
மூவர் விக்ரஹங்களுக்கு விமிரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், "முத்ரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்" என்று கேட்டுக்கொண்டான். எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவார ஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.
தீக்ஷிதர்கள் மனஸ் உருகிக் கதவைத் திறந்தார்கள்.
உள்ளே போய்ப் பார்த்தால்!'ஐயோ, இத்தனை ப்ரயாஸைப் பட்டும் கடைசியில் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல, சுவடிகளையெல்லாம் ஒரேயடியாகச் செல்லு மூடிப் போயிருக்கிறதே' என்று எல்லாரும் வருத்தப்படும்படிச் சுவடிக் கட்டெல்லாம் செல்லரித்து மூடிக் கிடந்தது. மொத்தம் மூவர் பாடின லக்ஷத்து சொச்சம் பதிகங்களிலே எண்ணூறுக்கும் குறைச்சலானவை தான் அரிபடாமல் தப்பித்திருந்தன.
எல்லாரும் சோகாக்ராந்தர்களாக இருக்கும்போது அசரீரி கேட்டது. திவ்ய ஸங்கல்பத்தினால் இப்படி ஆச்சு. அது மாத்திரமில்லாமல் இந்த 796 பதிகங்களே ஒரு ஜீவனைக் கடைத்தேற்றவும் போதும்" என்று அசரிரி சொல்லிற்று.
Treasures- Thirumurai
எண்ணூறு பதிகங்களையும்கூட ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால ஜனங்கள் ஜாஸ்தீ என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான். அவரும் அப்படியே தேவாரப் பதிகங்களையும், இன்னும் அப்போது தெரிந்திருந்த மற்ற சைவப் பெரியார்களுடைய பாடல்களையும் 'திருமுறைகள்' என்ற பேரில் பதினொன்றாகப் பகுத்துக் கொடுத்தார்.
Chapter: 'திருமுறை' கிடைக்கச் செய்தவர்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)
October 31, 2022
சுந்தரருக்கு பொன்னின் மாற்று உரைத்த பிள்ளையார் (தெய்வத்தின் குரல்)
#Deivathin_kural Volume 7:
October 30, 2022
Lord Ganesha heeded to the plea (cute n short incident) (Deivathin Kural)
October 27, 2022
Lord Vinayaka guided Sambandhar (short incident at thErezhundhur) (தெய்வத்தின் குரல்)
சம்பந்தர் குமாரஸ்வாமி அவதாரம்.
October 25, 2022
வானத்தில் திருவிழா
October 23, 2022
Mother Ganga, SriLakshmi and Deepavali (Excerpts From Deivathin Kural)
‘கங்கா ஸ்நானம்’ என்று ஏன் தீபாவளியன்று வைத்திருக்கிறது?
கீதை : தீபாவளியின் தம்பி (Excerpts from Deivathin Kural)
October 01, 2022
Where does Sri.Lakshmi Reside (Deivathin kural)
லஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து.
அம்பாள் திருவடி மகிமை ( #Deivathin_kural Volume 6: )
Thiruvadi Mahimai
September 28, 2022
தேவை ஒரு துளசிச் செடி
சமீர் வருவதாகச் சொன்ன ஐந்து மணியைத் தாண்டி நாற்பத்தியெட்டு நிமிடங்கள் ஆகியிருந்தன . கூடவே சஞ்ஜயைக் கூட்டி வருவதாக சொல்லியிருந்தானே, அதனால் நேரமாகிறதோ!
.
நேற்றையிலிருந்தே நெஞ்சத்தை உழப்பிக் கொண்டிருந்த விஷயம். இது கனவா நிஜமா?
நூலைப் பிடித்து, தொடரலாமா வேண்டாமா? ஒரே மன
உளைச்சல். இன்றைய தேதியைச் சேர்த்தாலும்,
பதினெட்டு வயது
நிரம்பாதவள் ரசிகா. தேவிகா அப்படி அல்ல. அவளை விட இரண்டு
வருடம் பெரியவள்.
.
"தேவி அவங்க வர இவ்வளவு நேரம் ஆகுதே, நாம கிளம்புவமா?" என்று கிசுகிசுத்தாள். வங்கிக்கு சென்றிருந்த அம்மா வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகலாம். அதற்குள் இவர்கள் திட்டத்தின் முக்கியப் பகுதியை நெருங்க வேண்டும்.
..
யார் இவர்கள்?
தேவிகா
ரசிகா
சமீர்
சஞ்ஜய் என்ற நால்வர் தான்.
..
இருவரும் உறிஞ்சிக் குடிக்கும் டீயின் சுவை கூட மனதில் பதியவில்லை. குறுஞ்செய்தி சிணுங்கியது.
.
"நாங்கள் பூங்காவின் அருகே வந்துவிட்டோம். உடனே
புறப்பட்டு வரவும். சர்வ ஜாக்கிரதை!"
கிடைத்ததை பையில் திணித்துக் கொண்டு அவசரமாக ஓடினார்கள். 'இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாலாற்றங்கரையருகே இருக்க வேணும்.' சமீரும் சஞ்சயும் படபடத்தனர். மோட்டர் பைக் பறந்தது. இருபதே நிமிடத்தில் ஆற்றங்கரையை நால்வரும் நெருங்கினர்.
.
சஞ்சய் தன் கைப்பையைத் திறந்தான். இரண்டு உருட்டுக் கட்டைகள், ஒரு சைக்கிள் செயின் உட்பட ஐந்தாறு தற்காப்பு கருவிகள். ‘எப்படி என் திறமை’ என்று கண்களாலேயே பெருமை பேசினான்.
.
"நாம எங்க போக போறோன்னு தெரியுமில்ல! இதெல்லாம் எதுக்குடா?"
.
"உனக்குத் தெரியாது. எல்லாம் தேவை தான். முதலில்
எல்லாரும் செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க" . ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் எடுத்த முடிவு தவறானதா என்ற குழப்பம். பயமாக
இருந்தது. இனம்புரியாதொரு சிலிர்ப்பும் குறுகுறுப்பும் ஓடியது.
.
குறிப்பிட்ட இந்த படகுத்துறைக்கு பொதுமக்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
.
"சமீர் அங்க பாரு, சொன்ன மாதிரியே படகு தயாரா இருக்கு" படகொன்று அவர்களை நெருங்கவும், திடீர் சோதனை உத்தரவின் பேரில் படகுத்துறைக்கு வந்திருந்த முத்துகுமார் கண்களில் இவர்கள் மாட்டவும் சரியாக இருந்தது. யார் இவங்க! முதலில் இந்தத்துறையில் எப்படி படகு செலுத்தபடலாம்? என்ற குழப்பத்துடன் சிலர் பார்த்திருக்க....
.
மலரைப் போல மெல்ல மிதந்து வந்த படகில் நால்வரும் கால்பதித்து ஏறினர். முத்துகுமார் அவசரமாக தளக் புளக்கென்று தண்ணீரில் தள்ளாடி படகை நெருங்கத் துவங்கினார். சமீரும் சஞ்சயும் குபீரென குதித்து அவரை பின்னாலிருந்து வளைத்து தடுக்க முற்பட்டனர்.
.
"கொஞ்சம் நான் சொல்றத நிதானிச்சு கேளுங்க" .... என்று கூவிக் கொண்டே படகை நோக்கி வேகமாக நீந்தினார். அவர் நெருங்குவதற்குள், மெல்லமாக சுற்ற ஆரம்பித்த படகு, கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமெடுத்தது. அவரது இருகைகளும் படகை பற்றிவிட்ட சமயம், ரசிகா கட்டையை ஓங்கினாள். நெற்றியில் ஒரே அடி. தேவிகா கதற, பின் தொடர்ந்த சஞ்சய், இன்ஸ்பெக்டர் கால்களை இழுக்க, அவர் நிலை தடுமாறி குப்புற விழுந்தார்.
.
அவரை அப்புறமாகத் தள்ளி, மின்னல்
வேகத்தில் சமீரும் சஞ்சயும் படகில் ஏறியதும், காற்றை விட
வேகமாக மிதந்த படகு, சடுதியில் தொலை தூர தொடுவானத்தை எட்டி, புள்ளியாய் மறைவதை பார்த்துக் கொண்டே முழுவதுமாக மயங்கினார்
முத்துகுமார். அல்லது மயங்கியது போல
நடித்தார். தெளிந்து எழுந்த போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள்
தொடர்பின்றி இருந்தது.
.
“எப்படி தாக்கப்பட்டீங்க?”
‘நினைவில்லை... ‘
‘யார் தாக்கினாங்க?’
“யாருமில்லையே! “
“பொதுமக்கள் புழங்குவதற்கு தடைசெய்யப்பட்ட
படகுத்துறையில் படகு இருக்குறதா சத்தம் போட்டாங்களே! “
“அப்படியா?”
....
அவர் அருகில் இருந்தவர்களை பேட்டி கண்டனர்.
“நீங்க படகை பார்த்தீங்களா?”
“அப்படி பார்த்ததா எங்களுக்கு நினைவில்லை சார்”.
.
"மர்மமான முறையில் தாக்கபட்ட முத்துகுமார்" - அலறியது மீடியா.
***
சுழன்று சுற்றிய படகு சீர்பட்டது. நெஞ்சம் படபடத்து, தலைசுற்றி விழுந்துவிடுவது போலிருந்தாள் தேவிகா. ரசிகாவை விட தேவிகாவுக்கு எதிலும் தயக்கமும் பயமும் அதிகம்.
.
சென்ற வாரத்தின் வியாழக்கிழமை, சாதாரணமாகத் துவங்கி, அசாதாரணமாக முடிந்தது.
.
"கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே" என்று தொலைக்காட்சியில் ஆண்டாள் எழுப்பிக் கொண்டிருந்ததையும் மீறி ரசிகா தூங்கிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்திருந்த தேவிகா பக்கத்து மேஜையில் ஒப்பனை செய்து கொண்டிருந்த போது முணுக் முணுக்கென்று சிணுங்கியது செல்ஃபோன். சமீர் கூப்பிட்டிருந்தான்.
.
"அவசர சந்திப்பு. இன்னும் ஒரு மணி நேரத்தில் தெருகூடும் இடத்திலுள்ள "சுதந்திரப் பூங்கா"வில் சந்திக்கவும். இன்றைய தினசரி பத்திரிகை எடுத்துவா" என்னவாக இருக்கும் என்று குழம்பி, ரசிகாவையும் உலுக்கினாள். இவர்களின் சந்திப்புகள் பற்றி பெரிய அளவில் பெற்றோர்களுக்கு தெரியாது. ஏதோ சாக்குபோக்கு உளறிவிட்டு, இருவரும் பூங்கா விரைந்தனர்.
.
'இதப் பாரு.' என்றான் சஞ்சய். அவனுடன் சமீரும் வந்திருந்தான். அவர்கள் சுட்டிக்காட்டியது அன்றைய தினசரி பத்திரிகையின் ஒரு சின்ன விளம்பரத்தை.
.
"உடன் விரைந்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு. தேவை ஒரு துளசிச் செடி" பெயர் விலாசம், தொடர்பு எண், முகவரி எதுவுமே மருந்துக்கும் குறிப்பிடப் படவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அதை விட பன்மடங்கு ஆச்சரியம் அவசரமாக தங்கள் பிரதியை பிரித்தபோது காத்திருந்தது...... அப்படிப்பட்ட விளம்பரம் அவர்களது பிரதியில் தென்படவில்லை. ரசிகாவுக்கு
அட்ரினலைன் ஜிவ்வென்று ஏறியது. 'என்னடா இது. யார் இவங்க? ஒண்ணுமே
புரியலையே. உன் கைல இருக்குற பிரதில
மட்டும் இருக்குதே! '
.
அடுத்த நாள் வெள்ளியன்று வந்த தினசரியை அவசரமாக பிரித்து அங்குலம் அங்குலமாக படித்தனர். "பாலாற்றங்கரையின் படகுத்துறைக்கு அடுத்த வியாழன் விரைந்து வரவும். துளசிச் செடியை மறக்காதே!" - இப்போது இவர்கள் தினசரியில் மட்டும் பளிச்சிட்ட செய்தி, சமீர் பிரதியிலும் சஞ்சய் வீட்டு தினசரியிலும் காணப்படவில்லை. தேவிகா பயந்தாள்.
.
நால்வர் கூடியும், கூடாமல்
குறுஞ்செய்தி மூலமாகவும், நாற்பது முறை
அலசினார்கள். ஏதோ மந்திரவாதி விரிக்கும் வலை என்று அறுதியிட்டு தீர்மானத்து, ''பின் தொடர வேண்டாம்'' என்று முதலில் முடிவெடுத்து, செய்தியைக் கடாசினாலும்... அடுத்தடுத்து ரசிகா
மற்றும் சமீரின் ஆர்வக்கோளாறுக்கு இணங்கி, நால்வருமே இச்செய்தியின் ஆழம் வரை சென்றுவர முடிவெடுத்தனர்.
.
***
காற்றைக் கிழித்து புள்ளியாய் மறைவதாகத் தோன்றிய படகு உள்ளபடி, இன்னும் அதிக வேகமெடுத்தது. தேவிகாவுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. அதே வினாடியில் படகு ஒரு விண்கலமாக விரிந்து, நாலாபுறமும் மூடிக்கொண்டு, விண்ணில் உயர்ந்தது.
.
"கொரோனா கவசம் போல இது என்னடி" -
என்றாள். அவள் குரல் பத்து விதமாக எதிரொலித்தது. முகத்திற்கு நேரே சுவாசக்குழாய் தானே இணைந்து கொண்டது.
இத்தனையும் கண்சிமிட்டும் நேரத்தில் அதிரடியாக
நடந்தது.
.
குறிப்பிட்டு சொல்ல முடியாத நேரத்திற்குப் பிறகு சின்ன குலுக்கல் கூட இல்லாமல் மெத்தென்ற வெண்ணிற மண்ணில் இறங்கிய போது அது வேறு ஒரு பிரபஞ்சம் என்று யாரும் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்தது.
.
மூச்சுக்குழாய் அகன்றது. அட! சுவாசிக்க முடிகிறதே. பூமியைப் போலே பிராணவாயு எங்கும் நிறைந்திருந்தது. பூமியை விட அழகாக, பச்சை, நீலம் சிவப்பு என்று வண்ண வண்ண மணல் மேடுகள், விவரிக்க முடியாத வண்ணத்தில் தாவரங்கள், பூக்கள். நால்வரும் திறந்த வாய் மூடவில்லை.
.
பெரிய பறவை போலொன்று பறந்து வந்தது. இல்லை. இல்லவே இல்லை. அருகே பறந்து வந்த பறவையைப் போல ஒரு நங்கையைக் கண்டு பேச்சிழந்தனர்.
.
"கேலக்ஸி-16க்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் பாலவீதிக்கு
மிக அருகில் இருக்கும் கேலக்ஸி எங்களது. என் பெயர் சுவஸ்திகா" என்றது.
.
'உங்களால் எப்படி எங்கள் மொழியில் கதைக்க
முடிகிறது.'
.
“நான் எனது மொழியில் பேசினால் உங்களது மொழியில் கேட்கச் செய்யும் இணைப்பு கருவி எங்களிடம் இருக்கிறது” என்றது. தவறு என்றாள் சுவஸ்திகா.
.
சுவஸ்திகாவின் வண்ணச் சிறகைக் கண்டு கிறங்கிய சமீர் மெல்ல மீண்டு "உங்களால பறக்க முடியுதே" என்று வழிந்தான்.
.
“எங்களால் பஞ்சபூதங்களினால் ஆகப்பட்ட எதனுள்ளும் பயணிக்க முடியும்” என்றாள்.
.
“உங்க உலகம் அற்புதமாகவும் விந்தையாகவும்
இருக்கு.... வண்ணப் பூக்களும், வகைவகை பழங்களும், வண்ண நீர்நிலைகளும்... “
.
“நீர்நிலைகள்!!!! உங்கள் துளசிச் செடியை
அதற்குத்தான் விரும்பியிருந்தோம். எங்களது நீர்நிலைகளின் பசுந்தன்மை குறைந்து
நீலமாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் தாவரங்கள் அதிலுள்ள அமிலத்தன்மையை அழித்து,
புத்துணர்வூட்டுவனவாக
இருக்கும். நீர் நிலைகளின் தன்மை மாசு ஏற்பட்டதால் எங்கள் தேவதைகள் வலு குன்றி
காணப்படுகிறார்கள். எங்களது செயலாற்றும் திறன் குறைகிறது.,....”
.
“செயலாற்றுவதா? அப்படியென்றால்
உங்க பணி என்ன?”
.
பெரிதாக நகைத்தாள். அவள் பற்கள் வசீகரமாக பளிச்சிட்டது. “உங்களது பூவுலகின் மானிடர்களுக்கு இடர் ஏற்படாமல் காக்கும் தேவதைகள் நாங்கள்!”
.
இமைக்க மறந்தனர் நால்வரும். சஞ்ஜய் முதலில் வாய் திறந்தான். "அப்டீன்னா நீங்க தேவதையா?"
.
"உங்களைப் பாதுகாக்கும் தேவதைகள், தேவர்கள், ஏஞ்சல்ஸ், எப்படி வேண்டுமென்றாலும் விளிக்கலாம்"
.
“தேவலோகத்தில் பாரிஜாத மலரை எங்கள் உலகுக்கு கொணர்ந்த பாமாதேவியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பேற்பட்ட தேவலோகத்தில் துளசிச்செடி இல்லையா!” களுக்கென்று சிரித்தாள் தேவிகா.
.
“அதன் மூலப்பிரதியான "ப்ரோடோடைப்" தொலைந்து விட்டது. பூலோகத்திலிருந்து வரவழைத்து இங்கு மாசு களைந்தபின், அதன் பிரதிகளை இங்கு பரவ விடுவோம்.... “ என்றாள்.
.
தன் பையிலிருந்து பத்து துளசிச் செடிகளை எடுத்த ரசிகா புன்னகைத்தாள்.
நால்வருக்கும் சுவஸ்திகாவை மிகவும் பிடித்துவிட்டது.
.
அடுத்த சில வினாடிகளில் விதவிதமான வண்ண அலங்காரத்துடன், பல தேவதைகள் கூடி, துளசிச் செடிகளை சில மூல நீர்நிலைகளில் முக்கி எடுத்தனர். சற்று நேரத்தில் நீர்நிலைகள் இளம் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன. துளசிச் செடிகளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிய சுவஸ்திகாவிடம்....
.
"நீங்க தான் இங்கு தலைமை தேவதையா? இந்திரன் மாதிரி இந்திராணி" என்றான் சமீர்.
.
"என் பேயர் சுவஸ்திகா. மேலும் தேவ ரகசியங்களை
வெளியிட எங்களுக்கு உரிமையில்லை"...
.
“அதிருக்கட்டும்...இவ்வளவு கெடுபிடிகளைத்
தாண்டி உங்க பிரபஞ்சத்திற்கு வந்த எங்களுக்கு என்ன பயன்? ஒரு காவலதிகாரியை வேறு தாக்கியிருக்கோம்....அப்பா அம்மா தேடுனா
என்னத்த ....ஆஹா! நாங்கள் திரும்பி போனா பல யுகம் முடிஞ்சிருக்குமோ! இந்த மாதிரி
கதை எத்தன படிச்சிருக்கோம்! "
.
“அதைப்பற்றிய கவலை வேண்டாம். உங்களது நேரத்திற்கே உங்களை திரும்ப செலுத்தும் ஆற்றம்
எமக்குண்டு. உங்களை படகுத் துறையில் கண்ட
நினைவு அங்கிருந்த பலருக்கும் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது. மேலும்... அவர்
நீங்கள் நினைப்பது போல அங்கிருந்தவர் காவலாளி இல்லை ....அவர்...அதிருக்கட்டும்... நீங்கள்
நால்வரும் துப்பறியும் நண்பர்கள் தானே"
.
அசடு வழிய இளித்தனர்... "ஆமா... "ஃபேமஸ் ஃபைவ்" , சீக்ரெட் செவன்" கேள்விப்பட்டிருப்பீங்களே...அதைப் போல எங்களது "பெண்டாஸ்டிக் ஃபோர்". எங்க மொழியில "நம்பிக்கை நால்வர்" பெயர் சூட்டியிருக்கோம். இதைத் துப்பறியும் ஸ்தாபனமாக்குற எண்ணம் உண்டு. - தெளிவாக விளக்கினாள் தேவிகா.
.
“அது தான் எங்களது பரிசு, நான் ஒரு
களிம்பு தருகிறேன். அதைப் பூசிக்கொண்டால்
சில மணி நேரங்களுக்கு உங்களை யாராலும் பார்க்க முடியாது. நாளை உங்கள் பூமியில், தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவரை, தீவிரவாதியினர் தாக்க முற்படுவார்கள். நீங்கள்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரே முறை தான் பயன்படும். “
.
விண்கலம் வெண்ணிற மண்ணில் ஊன்றி அவர்களை ஏற்றுக் கொண்டது. அவர்கள் விடைபெற்றுக் கொண்டதை தூரத்தில் ஒரு முகம் கவனித்துக் கொண்டிருந்த்து. அந்த முகத்தை நால்வருமே கவனிக்கவில்லை.
.
***
கனவு போல் முடிந்தது. எப்படி சென்றனரோ, அதே வழியில், சுழன்று சுற்றி நின்ற விண்கலம், படகாக மிதந்து அவர்களை கரை சேர்த்தது. வீட்டுக்கு வந்த தேவிகா சகோதரிகளுக்கு பெரும் ஆச்சரியம்.
.
"என்னடி லைப்ரரிக்கு போய் வர மூணு மணி நேரமா!" - என்னது மொத்தம் மூணு மணி நேரமா? ரசிகா கண்ணடித்தாள்.
**
மறுநாள் அதிசுறுசுறுப்பாக விடிந்தது. அதிகாரி வீட்டை நெருங்க தடையேதுமில்லை. களிம்பைப் பூசிக் கொண்டதும் கடவுளாகி விட்டது போலத் தோன்றியது. "மிஸ்டர் இந்தியா படத்துல அனில்கபூர் இப்படித்தான்...." இழுத்தான் சஞ்சய். "ஷ்ஷ்...அங்க பாருங்க அவங்க நடவெடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருக்கு. கண்டிப்பா அவனுங்க தான்." மானாவாரியாக படமும், காணொளியும் பதிவாகிக் கொண்டிருந்தது. நால்வரையும் கண்களால் கண்டு யாரென்று கேட்க ஆளில்லை.
.
அடுத்த மாதங்களுக்கு "நம்பிக்கை நால்வர்" பற்றிய செய்தி, வைரலாகியது. பெரிய விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. இவர்களுக்கு எஸ்காட்டாக எப்போதும் "முத்துகுமார்" . பெற்றோருக்கும் மற்றோருக்கும் இவர்கள் திறமை திண்ணமாக வெளிப்படத் துவங்கியது. சின்னதும் பெருசுமாக பல சில்லறை துப்பறியும் கேசுகள் குவியத் துவங்கின. ஒவ்வொரு கேசிலும் இவர்களுக்குத் துணையாக ஆங்காங்கே முத்துகுமாரும் நுழைந்து விடுவதால் ஏறக்குறைய இவர்கள் நண்பராகி விட்டார்.
.
***
வேலூர் சிறையில்...
.
"எப்படிடா? அவ்வளவு சாக்ரதையா திட்டம் போட்டிருந்தமே.
எங்கியிருந்து இதையெல்லாம் படம் புடிச்சுதுங்க!" –
.
"அதை விடு.... யாரோ முத்துக்குமாராம் அவரை மர்மமா தாக்கினதா வேற குற்றம் சுமத்திருக்காங்க, யாரவன்? என்னடா நடக்குது!"-யோசித்து மண்டை வெடித்தது.
***
“எல்லாம் என்னோட புத்திசாலித்தனம் தான். எப்படி
கரெக்ட்டா துளசிச் செடியை எடுத்து வெச்சிருந்தேன் பாத்தீங்களா!”- ரசிகா
.
சமீர் இடியிடியெனச் சிரித்தான். “அந்த பேஸ்ட் மட்டும் இல்லையின்னு வையி....
நம்ம கதை கந்தல்....எல்லாம் அந்த சுவஸ்திகா....அந்த தேவதை..”.அவன் கண்களில்
சுவர்கம் தெரிந்தது... 'சே! நான் அங்கயே
செட்டில் ஆகியிருக்கலாமோ!'
.
"போதும் ரொம்ப பேசாத ... மூடு' என்றாள் தேவிகா.
.
முணுக்முணுக் என்றது செல்ஃபோன் இளநீலத்தில் மிளிர்ந்து, நால்வர் தொலைப்பேசியும் "வணக்கம்" என்று கிசுகிசுத்தது....
.
'யாராவது விளையாடுறாங்களா இருக்கும். மே பீ அ ப்ராங்க் ' என்றாள் தேவிகா. ரசிகாவின் அட்ரினலைன் ஜீவ்வென்றி ஏறி.....இல்லை என்றது, ஏனெனில் நால்வர் செல்ஃபோனிலும் அடுத்தடுத்த செய்திகள் குரல்வழி செய்திகள் ஒலித்த வண்ணமிருந்தன
.
"நம்பிக்கை நால்வர்...நம்பிக்கை நால்வர்... நம்பிக்கை நால்வர்..... வணக்கம். தொடர்பு கிரகம் "வீனஸ்டோ". உங்களது பாலவீதியிலேயே உள்ளது. உங்களது இணைப்பு உடனே தேவை"......... திரையில் தெரிந்த சுவஸ்திகாவின் முகத்துக்குப் பின், மங்கலாகத் தென்பட்ட தெளிவற்ற முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே!
.
***
அந்த உருவம் சின்னதொரு சாக்லேட் அளவு காந்தக் கருவியை இயக்கியது...
.
"வீனஸ்டோ திட்டத்துக்கு அவர்கள் தயார் - நானும்" என்ற செய்தியை சுவஸ்திகாவுக்கு அனுப்பியது. மோட்டார் பைக்கை விருக்கென்று செலுத்தி ரோட்டோரக் கடையருகே நிறுத்தி "ரெண்டு இட்லி குடுப்பா" என்றது.
.
"இன்ஸ்பெக்டருக்கு சார் சூடா ரெண்டு செட்டு இட்லி" என்ற கடைப் பையனை பார்த்து முத்துகுமார் மெல்லப் புன்னகைத்தார்.
***
.
“முகுந்த் இருக்காருங்களா!”
..
“சார் நான் ஸ்ரீநாத்.”
..
“ஆகிடுச்சு சார். இன்னும் பத்து நிமிடத்தில்
அனுப்பிவிடுகிறேன். ...”
..
“கண்டிப்பாக. பத்து அல்லது பதினைந்து பகுதிகள்
வரும்னு நினைக்கறேன் சார்.”
.
சிறுவர்களுக்கான தொடர் Famous Five சாயலில் இதை மினி தொடர்களாக தொகுக்க திட்டமிட்டு..... (இவர்கள் பயணம் தொடருமோ?).... என்ற கேள்வியுடன், கதைக்கான sequelஐக் குறிப்பிட்டு, கணினியில் சேமித்தான் ஸ்ரீநாத். நாளையே "வீனஸ்டோ" எழுதத் துவங்க வேண்டும்.
.
சரியாக எட்டு நிமிடங்களில் பதிப்பாசிரியர் முகுந்த் மின்னஞ்சலுக்கு "துளசிச் செடி" வந்து சேர்ந்தது.
(முற்றும்)
ShakthiPrabha
(Story was written for "Short story writing contest for given pic)