Showing posts with label lotus லலிதா சஹஸ்ர நாமம். Show all posts
Showing posts with label lotus லலிதா சஹஸ்ர நாமம். Show all posts

February 13, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (215 - 225) (with English meanings)



சகுண உபாசனை


மஹாமாயா;
மஹாசத்வா;
மஹாசக்தி;
மஹாரதீ;
மஹாபோகா;
மஹைஷவர்யா;
மஹாவீர்யா;
மஹாபலா;
மஹாபுத்தி;
மஹாசித்தி;
மஹாயோகேஷ்வரேஷ்வரீ;

#215 மஹாமாயா = மகா மாயையாக விளங்குபவள் *

* மகா மாயை என்பதை எல்லையற்ற முடிவிலலா மாயை என்றும் உணரலாம். இப்பிரபஞ்சத் தோற்றத்தின் முதற் காரணமாக விளங்குபவள் மகா மாயை. பிரக்ருதி பின்னிய மாயையே பிரபஞ்சத்தின் மூலம். இவளால் பின்னப்படும் மாயையை வெல்லும் முயற்சியில் பெரும் யோகிகளும் சமயத்தில் சிக்கிண்டு பிறழ்வதுண்டு. மாயை வென்று பரப்பிரம்ம ஸ்வரூபத்தின் இயல்பை உணர்தல் ஞானத்தின் இறுதி இலக்கு.

() சத்வா = நற்குணங்கள் - ஞானம் - முக்குணங்களில் முதன்மையானது (சத்துவம் - ராஜசம் - தாமஸம்)

#216 மஹாசத்வா = தூயதும் நன்மையுமான அனைத்து சாராம்சங்களின் பிரதிநிதித்துவமானவள் ; பெரும் ஞானி

#217 மஹாஷக்தி = அளப்பரிய ஆற்றல் உடையவள்

() ரதீ = உவகை - மகிழ்ச்சி

#218 மஹாரதீ = பேரானந்தத்திற்கு உரியவள்

() போகா = செல்வம் - வளம்

#219 மஹாபோகா = பெருஞ்செல்வமாக திகழ்பவள்

() ஐஷ்வர்யா = மேலாண்மை

#220 மஹைஷ்வர்யா = சகலத்தையும் மேலாட்சி செய்பவள்

() வீர்யா = சக்தி - ஆற்றல் - ( ஒளி / காந்தி என்றும் குறிப்புள்ளது)

#221 மஹாவீர்யா = அளவிலா வல்லமை மிக்கவள்

#222 மஹாபலா = திடபலம் பொருந்தியவள்

#223 மஹாபுத்தி = ஞானத்தின் சிகரமாக ஜொலிப்பவள்

() சித்தி = இலக்கை அடைதல் - பிறவியின் இறுதிக் குறிக்கோளை எட்டுதல்

#224 மஹாசித்தி = வீடுபேறு என்னும் இறுதி இலக்காக நிலைப்பவள் - பூரணத்துவத்தின் முடிவான ஆனந்தமாக திகழ்பவள்

() யோகேஷ்வர் = யோகக்கலையில் தேர்ந்தவர்

#225 மஹாயோகேஷ்வரேஸ்வரீ = பெரும் யோகிகளுக்கெல்லாம் ஈஸ்வரியானவள்

(தொடர்வோம்)


Lalitha Sahasranama (215 - 225)

Saguna Upasana


Mahamaya;

Mahasathva;
Mahashakthi;
Maharathi;
Mahabhoga
Mahaishwarya;
Mahaveerya;
Mahabala;
Mahabudhi;
Mahasidhi;
Maha yogeshvarEshwari;

#215 Mahamaya = She who is the greatest illusion *

* Being the primary, frontal cause and reason of and for the functioning of the universe, but without her maya, nothing would function. She is the reason for creation. Maya she spins is the strongest force, which even big saints fail to untangle.

() Sathva = Goodness - wisdom - premier amongst three gunas (sattva - Rajas - Tamas)

#216 Mahasathva = She who is the representation of all that is Sattva or Goodness in nature

#217 Mahashakthi = Who is the supreme-force

() Rathi = enjoyment - delight

#218 Maharathi = She who is abundant Joy

() bhoga = wealth

#219 Mahabhoga = She who is the greatest wealth

() aishwarya = sovereignty - dominion

#220 Mahaishwarya = Who is the supreme lordship

() veerya = energy - valour - also lustre

#221 Mahaveerya = Who is most valiant

#222 Mahabala = She who has greatest strength

#223 Mahabhudhi = Who is the pinnacle of wisdom

() Sidhi = attainment (of final perfection)

#224 Mahasidhi = Who is the conclusive destination - who is the eventual happiness

() yogeshvar = master of yoga

#225 Maha-yogeshvar-eshwari = Who is glorified and worshipped by greatest yogis

(to be continued)

November 30, 2017

லலிதா சஹஸ்ரநாமம் (112 - 116) also with English meaning

(பக்த அனுக்ரஹம்)


பவானீ;

பாவனா கம்யா;
பவாரண்ய குடாரிகா;
பத்ர ப்ரியா;
பத்ர மூர்த்தி;


() பவா = சிவன் - சிவனின் வடிவம் 


# 112 பவானீ = இறைவன் ஈஸ்வரனின் பத்தினி


(வேறு)
() பவா = செல்வம்


# 112 பவானீ = நல்-வளத்தை, சுபீட்சத்தை (ஜீவாத்மாவிடம்) ஏற்படுத்துபவள்


() பாவனா = சிந்தனை - ஒருமுகப்படுத்துதல் -கற்பனை

கம்யா = அடையக்கூடியது - சாத்யமாவது


# 113 பாவனாகம்யா = ஒருமுகப்படுத்திய தியானத்தால் உணரப்படுபவள், புத்திக்கு புலப்படுபவள்

() பவ = உலக வாழ்வு - சம்சார சாகரம்

ஆரண்ய = பெருங்காடு
குடாரிகா = கோடாரி


# 114 பவாரண்ய குடாரிகா = கடக்க அரிய பெருங்காட்டை கோடாரியால் அழிப்பது போல் உலக வாழ்வென்ற பெருவனத்தை அழித்து, பயணத்தை எளிதாக்குபவள்

(பிறப்பு-இறப்பு என்ற தளைகளை அறுத்து, முக்திக்கு வழி வகுப்பவள் )


() பத்ர = காருண்ய - கனிவான - அருள் நிறைந்த

ப்ரியா= பிரியமான - பிடித்தமான


# 115 பத்ரப்ரியா = அனுகூலமான யாவற்றிற்கும் அபிமானி

() பத்ர = மகிழ்ச்சியான - மங்களமான

மூர்த்தி = வடிவம்


# 116 பத்ரமூர்த்தி = வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்

(பக்த அனுக்ரஹம் தொடரும்)


Lalitha Sahasranama (112-116)

(Bhaktha Anugraha)

Bhavani;

Bhavana gamya;
Bhavaranya kutarika;
Bhadra priya;
Bhadra moorthy;


() Bhava = Lord Shiva - Form of Lord Shiva - prosperity
Bhavani = Wife

# 112 Bhavani = Who is the consort of Lord Shiva
(also)
# 112 Bhavani = She who brings prosperity

() Bhavana = thinking - imagining - concentrating
gamya = discernible - can be attained


# 113 Bhavanagamya = Who can be perceived by deep meditation and contemplation

() Bhava = in this context means worldy existence
araNya = forest
kutaari = axe


# 114 BhavaraNya kutaarika = Who is like axe severing the wild forest of Samsara 
(Samsara or worldly existence refers to materialistic quests - cycle of birth and death)


() Bhadra = blessed - gracious -kind
priya = fond of - has liking to


# 115 Bhadra priya = Who favours everything auspicious (bestows happiness)

() Bhadra = prosperous- fortune - auspicious
moorthy = form = represented form


# 116 Bhadramoorthy = Who is the incarnation of Grace and Virtue

(to continue with Bhaktha Anugraha)


November 20, 2017

Lalitha Sahasranama (90 - 96) தமிழ் விளக்கத்துடன்


லலிதா சஹஸ்ர நாமம் ( 90 - 96)



மந்திர ரூபம் (தொடர்ச்சி)

குலாம்ருதைக ரசிகா;
குல சங்கேத பாலினி;
குலாங்கனா;
குலாந்த:ஸ்தா;
கௌலினி;
குல யோகினி;
அகுலா;

() குல- அம்ருத = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் அம்ருதம் 
அம்ருதைக = அம்ருதத்திலிருந்து
ரசிகா = விருப்பமுள்ளவள்

# 90 குலாம்ருதைக ரசிகா = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் 'குல' என்ற அம்ருதத்தில் விருப்பமுள்ளவள் . (சஹஸ்ர சக்ரம் என்பது ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்டு உச்சந்தலையில் இடம்பெற்றுள்ளது) 

() குல =   இவ்விடத்தில் 'குல' என்பது பரம்பரை  அல்லது குலத்தை குறிக்கும்
சங்கேத = அவளை அடைவதற்கான பாதைகள் - வழிமுறைகள்
பாலன் = பாதுகாப்பவள்

# 91 குல சங்கேத பாலினி  = தன்னை(மஹாஷக்தி)  அடைவதற்கான பாதையையும் வழிமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவள் 
(வழிபாட்டு நெறிமுறைகள் உயர்ந்த மஹான்களுக்கும்  ஞானிகளுக்கும் மட்டுமே புலப்படுபவையாக வைத்திருப்பவள் ) 

() குல = குலம்
ஆங்கனா = பெண்மணி 

# 92 குலாங்கனா = குலத்திற்கு பெருமை சேர்கும் உயர்ந்த பதிவ்ரதை

() குல = குலம் - குலம் என்பது இங்கு வேத-சாஸ்திரங்களையும் குறிக்கலாம்
அந்த:ஸ்தா = உள் உறைபவள் 

# 93 குலாந்த:ஸ்தா = சர்வ வியாபி - அனைத்திலும் உள்ளுறைபவள் - அனைத்து வித்யைகளிலும் உள் உறைபவாள் 


() கௌலினி = கௌலினி யோக முறைகள்

# 94 கௌலினி = கௌலினி  வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவாள் 

() குல = பரமாத்மாவிடம் மனம் ஒன்றுபடும் தன்மை
யோகினி = யோக வழி நடப்பவள் 

# 95 குலயோகினி = யோகத்தின்  மூல வடிவானவள்


# 96  அகுலா = குலத்திற்கு அப்பாற்பட்டவள் - அனாதியானவள்  (முடிவும் தொடக்கமும் இல்லாதவள்) - வேத சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டவள்   (குலம் என்பது சாஸ்திரத்தை குறிப்பதாக கொண்டால்) *   


குறிப்பு: குல அம்ருதத்தை விரும்புபவளே, குலசங்கேதத்தை பாலிப்பவளாகவும் விளங்கு இறுதியில் குலத்திற்கு அப்பாற்பட்டவளாகவும் வெளிப்படுத்துகிறாள். 

" எல்லாமுமான, எதுவுமற்ற  பரப்ரஹ்மம் " என்ற உபனிஷத் அர்த்தங்களை பிரதிபலிக்கின்றன. 

**


Lalitha Sahasranama (90 - 96)

Mantra Roopam


Kulamruthaika Rasika;
Kula sanketha paalini;
Kulaangana;
Kulaanthahstha;
Kaulini;
Kula yogini;
Akula;


() kula-amrutha = nector (of immortality flowing from sahasra)
amruthaika = belong to the nector 
rasika = fond of - having a liking

# 90 kulaamruthaika Rasika = Who cherishes the nector of immortality flowing from sahasra (Sahasra chakra-thousand petalled lotus located on top of the head) 

() kula = here 'kula' is learnt to mean 'CLAN or race'
sankEtha = whereabouts
paalan = to guard 

# 91 kula sankEtha paalini = She who guards the  path of journey towards her(her clan) 
( i.e whose mantras, rituals and ways to reach her abode or her divine self is known only to the deserving few )

() kula = race or clan or family
aangana = a female

# 92 kulaangana = She who is the pride of her glorious clan. (pure or chaste woman) 

() kula  = clan or community - also refers to scriptures
anthaHstha = to reside in -  to be in midst of

# 93 Kulaanthahstha - She who is present everywhere, - Who is present in every level of knowledge.. ie who is omnipresent 

(this name has to be interpreted as kula = clan or community . Since divine mother's community or clan is the entire prapancha or universe she resides in every atom, or she is omnipresent) 

() kaulini = refers to kaula yoga practices

# 94 kaulini = Who is the essence  of kaula yoga practices

() kula = kula here refers to one-ness of mind in paramatma (in sahasra) 
yogini = One who is in union with Paramathma 

# 95 kulayogini = She who is the quintessence of yogic principles

() Akula = Having no family - beyond knowledge (kula yoga or any practices)

# 96 Akula  = She who is  wihtout origin - beyond any knowledge  * 

Note: It is interesting to note, Mother who cherishes Kula nector, goes on to protect and guard disciplines to reach her abode and finally reveals herself as one who is beyond clan or even scriptures. 

"That which is everything - that which is nothing" is the right understanding of prabrahma - says upanishad.