அசைந்தாள்;
அசைந்தான்.
எண்ணங்களால்
கிளர்ந்தெழுந்தான்.
..
மாயத்திரை எழுப்பி
கதைகதையாய் திரித்தாள்.
அதில் கரைந்தான்.
உட்புகுந்து உலகையளந்தான்.
உடனிணைந்து
பின்னிப் பிணைந்து
தன்னை மறந்தான்.
..
மாயசக்தியின் மயக்கத்தில்
தன்னில் பாதியைத் துறந்தான்.
அவள் இயக்க;
இவன் இயங்கினான்
..
சிவசிவசிவ என ஆட
சக்தியவளோ
இச்சையாகி இசைந்து
கிரியையாகி நடந்து
ஞானமாகி அடங்குகிறாள்
..
நாடகத்துள் நயமுண்டு
லயமுண்டு நவரசமுண்டு
ஆங்காங்கு இடைவேளைகள்
இறைந்து கிடைப்பதுண்டு
இறுதியும் அறுதியுமின்றியே ;
சதா தொடரும் ; படரும்; துளிரும்
சதா சிவமேனவே...
-ShakthiPrabha
No comments:
Post a Comment