Showing posts with label தாமரை. Show all posts
Showing posts with label தாமரை. Show all posts

November 25, 2017

லலிதா சஹஸ்ரநாமம் ( 107 - 111) ( with English Translation)


மந்த்ர ரூபம் ( இறுதி பாகம்)



தடில்லதா  சமருசி: ;

ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா ;

மஹாஷக்தி ; 
குண்டலினி ;
பிஸதந்து தனீயஸீ ;


() தடித் = மின்னல்

லதா = கதிர் - கிரணம்

சம = அதனையொத்த = சமமான
ருசிர = வெளிச்சம் - ஒளி


# 107 தடில்லதா சமருசி: = மின்னல் கிரணங்களுக்கு சமமான ஜோதி ஸ்வரூபமானவள்

ஷட்சக்ர = ஆறு சக்கரங்கள்

உப = மேலே 

சம்ஸ்திதா - இருத்தல் - நிலைபாடு

#108 ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா = ஆறு சக்கரங்களுக்கு மேலே நிலை கொண்டிருப்பவள் (மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரக, அனாஹத, விஷுத்தி, ஆக்ஞா ஆகிய சக்கரங்கள்)

() மஹ  = விழா - கொண்டாட்டம்

ஆசக்தி =  பிடித்தமான

( மஹா அல்ல மஹ என்று பொருளுணர வேண்டும்)

# 109 மஹாசக்தி = பண்டிகைக் கொண்டாட்டங்களில் விருப்பமுள்ளவள் ( சிவ தத்துவத்துடன் பராசக்தியின் ஐக்கியத்தின் விழா) 


# 109 மஹாஷக்தி = பெரும் வலிமையும் மேன்மையும் மிக்கவள் - ப்ரபஞ்சத்தின் உயர்ந்த காரணகர்த்தா

( 'மஹாசக்தி' என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருள் பிரித்து உணரலாம்)

# 110 குண்டலினீ = குண்டலினீ சக்தியின் வடிவாகியவள் (மூலாதாரத்தில்  இருப்பவள்) 

() பிஸ-தந்து = தாமரை இழை
தனீயஸ் = மெல்லிய - மிகச் சிறிய வடிவு


#111 பிஸதந்து தனீயஸீ = தாமரை இழை போன்ற நுண்மையும் மென்மையும் சிறந்த தன்மையும் கொண்டிருப்பவள் 

(தாமரை இழையில் அழகிய வண்ண பட்டாடைகள் தரிக்கின்றனர். இதனின்று நெய்யபட்ட ஆடைகள் உயர்வானதாகவும் சுத்தமானதாகவும் இயற்கைவனப்புடனும் திகழ்கிறதாக தகவல்)

****


(மந்த்ர ரூபம் நிறைவுற்றது. அடுத்த நாமத்திலிருந்து அம்பாளின் "பக்த அனுக்ரஹ"த்தை வெளிப்படுத்தும் நாமாக்கள் தொடரும்)

*****

Lalitha Sahasranama (107 - 111)

Mantra Roopam (Final part)

Thadillatha samaruchi: 
Shadchakropari samsthitha
Maha shakthi
kundalinI
Bisa thanthu thanIyasI


() Thadith = lightening
latha = streak
sama = equal- equally
ruchira = brilliant


# 107 Thadillatha samaruchi: = Whose splendour matches that of a lightening flare

() Shad chakra = six chakras
upa = above
samSthitha = being present - based upon


# 108 Shadchakropari samsthitha = Who is seated above the six chakras 
(Muladhara, swadishtana, manipura, anahata, vishudhi and ajna are the six chakras)


() Maha = (not mahaa) - festival 
aasakthi = fond of - has a liking


# 109 Mahaasakthi = She who likes celebration and festivities ( of union with shiva)
# 109 Mahashakthi = Great power - she who is the supreme potential of the universe
(the name can be interpreted differently as per devotee's mindset)

# 110 Kundalini = Who is in the form of Kundalini (existing in mooladhar)

() Bisa-thanthu = lotus fibre
thanIyas = thin - minuscule


# 111 Bisa thanthu thanIyasI = She who is as tender, soft and fine like the strands of lotus fibre
(lotus fibers are used to make fine clothing and is as lustrous as silk. Its pure and fabrics are 
completely organic)


(with this we complete studyign her Mantra Roopa - we proceed on to study about "Bhaktha Anugraha" or her qualities which defines her compassion towards devotees)




November 20, 2017

Lalitha Sahasranama (90 - 96) தமிழ் விளக்கத்துடன்


லலிதா சஹஸ்ர நாமம் ( 90 - 96)



மந்திர ரூபம் (தொடர்ச்சி)

குலாம்ருதைக ரசிகா;
குல சங்கேத பாலினி;
குலாங்கனா;
குலாந்த:ஸ்தா;
கௌலினி;
குல யோகினி;
அகுலா;

() குல- அம்ருத = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் அம்ருதம் 
அம்ருதைக = அம்ருதத்திலிருந்து
ரசிகா = விருப்பமுள்ளவள்

# 90 குலாம்ருதைக ரசிகா = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் 'குல' என்ற அம்ருதத்தில் விருப்பமுள்ளவள் . (சஹஸ்ர சக்ரம் என்பது ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்டு உச்சந்தலையில் இடம்பெற்றுள்ளது) 

() குல =   இவ்விடத்தில் 'குல' என்பது பரம்பரை  அல்லது குலத்தை குறிக்கும்
சங்கேத = அவளை அடைவதற்கான பாதைகள் - வழிமுறைகள்
பாலன் = பாதுகாப்பவள்

# 91 குல சங்கேத பாலினி  = தன்னை(மஹாஷக்தி)  அடைவதற்கான பாதையையும் வழிமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவள் 
(வழிபாட்டு நெறிமுறைகள் உயர்ந்த மஹான்களுக்கும்  ஞானிகளுக்கும் மட்டுமே புலப்படுபவையாக வைத்திருப்பவள் ) 

() குல = குலம்
ஆங்கனா = பெண்மணி 

# 92 குலாங்கனா = குலத்திற்கு பெருமை சேர்கும் உயர்ந்த பதிவ்ரதை

() குல = குலம் - குலம் என்பது இங்கு வேத-சாஸ்திரங்களையும் குறிக்கலாம்
அந்த:ஸ்தா = உள் உறைபவள் 

# 93 குலாந்த:ஸ்தா = சர்வ வியாபி - அனைத்திலும் உள்ளுறைபவள் - அனைத்து வித்யைகளிலும் உள் உறைபவாள் 


() கௌலினி = கௌலினி யோக முறைகள்

# 94 கௌலினி = கௌலினி  வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவாள் 

() குல = பரமாத்மாவிடம் மனம் ஒன்றுபடும் தன்மை
யோகினி = யோக வழி நடப்பவள் 

# 95 குலயோகினி = யோகத்தின்  மூல வடிவானவள்


# 96  அகுலா = குலத்திற்கு அப்பாற்பட்டவள் - அனாதியானவள்  (முடிவும் தொடக்கமும் இல்லாதவள்) - வேத சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டவள்   (குலம் என்பது சாஸ்திரத்தை குறிப்பதாக கொண்டால்) *   


குறிப்பு: குல அம்ருதத்தை விரும்புபவளே, குலசங்கேதத்தை பாலிப்பவளாகவும் விளங்கு இறுதியில் குலத்திற்கு அப்பாற்பட்டவளாகவும் வெளிப்படுத்துகிறாள். 

" எல்லாமுமான, எதுவுமற்ற  பரப்ரஹ்மம் " என்ற உபனிஷத் அர்த்தங்களை பிரதிபலிக்கின்றன. 

**


Lalitha Sahasranama (90 - 96)

Mantra Roopam


Kulamruthaika Rasika;
Kula sanketha paalini;
Kulaangana;
Kulaanthahstha;
Kaulini;
Kula yogini;
Akula;


() kula-amrutha = nector (of immortality flowing from sahasra)
amruthaika = belong to the nector 
rasika = fond of - having a liking

# 90 kulaamruthaika Rasika = Who cherishes the nector of immortality flowing from sahasra (Sahasra chakra-thousand petalled lotus located on top of the head) 

() kula = here 'kula' is learnt to mean 'CLAN or race'
sankEtha = whereabouts
paalan = to guard 

# 91 kula sankEtha paalini = She who guards the  path of journey towards her(her clan) 
( i.e whose mantras, rituals and ways to reach her abode or her divine self is known only to the deserving few )

() kula = race or clan or family
aangana = a female

# 92 kulaangana = She who is the pride of her glorious clan. (pure or chaste woman) 

() kula  = clan or community - also refers to scriptures
anthaHstha = to reside in -  to be in midst of

# 93 Kulaanthahstha - She who is present everywhere, - Who is present in every level of knowledge.. ie who is omnipresent 

(this name has to be interpreted as kula = clan or community . Since divine mother's community or clan is the entire prapancha or universe she resides in every atom, or she is omnipresent) 

() kaulini = refers to kaula yoga practices

# 94 kaulini = Who is the essence  of kaula yoga practices

() kula = kula here refers to one-ness of mind in paramatma (in sahasra) 
yogini = One who is in union with Paramathma 

# 95 kulayogini = She who is the quintessence of yogic principles

() Akula = Having no family - beyond knowledge (kula yoga or any practices)

# 96 Akula  = She who is  wihtout origin - beyond any knowledge  * 

Note: It is interesting to note, Mother who cherishes Kula nector, goes on to protect and guard disciplines to reach her abode and finally reveals herself as one who is beyond clan or even scriptures. 

"That which is everything - that which is nothing" is the right understanding of prabrahma - says upanishad.


November 03, 2017

Lalitha Sahasranama (58 - 63) தமிழ் விளக்கத்துடன்

Lalitha Sahasranama (58 - 63)





Pancha brahmasana sthitha;
Mahapadmatavi samstha;
Kadhamba vana vaasini;
Sudha Saagara Madyastha;
Kaamakshi;
Kaamadhayni;

() pancha = five in number
brahmaasana = seat of chief person = seated in the posture of chief person
Sthitha = is present - being - existing

# 58 Pancha Brahmasana sthitha = Seated on the throne made of 'aspects of creations' or five 'aspects of brahman' *Note

() Maha- great - big
padhma - lotus
atavi - forest
Samstha - stay - to be

# 59 Mahapadmatavi Samstha - She who is resides in vast extensive lotus-forest

() Kadhamba vana = Forest of Kadhamba trees
Vasi = to reside - native

# 60 Kadhamba vana vasini = She who dwells in kadamba forest

கதம்பமலர் - kadhamba flower

() Sudha - nector - juice
Saagara = river - ocean- sea
Madhya = in the middle
stha = stays put - exists

# 61 Sudha saagara madhyastha = Who is present in the center of the 'ocean of nector'

() Kama = desire- wish - love
akshi= eyes

# 62 Kamakshi = whose eyes emits love

() Kaama= desire - wish
dhayi = grant - give - to yield

# 63 Kaamadhayini = She who grants or fulfills desires.

Note: Pancha brahma can be understood as aspects of creation. Some prefer to meditate the same as pancha bhoothas (air, water, fire, ether and earth) and she the controller of pancha bhoothas from  which creation emerge. Some personify the five aspects of creation and sustenance i.e. Creation- sustenance- destruction - dissappearance or removal - grace ) as - Brahma, vishnu, Rudhra, Isaana, Sadashiva. Devi Lalitha rules is seated on these and rules over these aspects.



***************************************************************************

லலிதா சஹஸ்ர நாமம் (58-63)


பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா;
மஹாபத்மாடவி சம்ஸ்தா;
கதம்பவன வாஸினி;
சுதா சாகர மத்யஸ்தா;
காமாக்ஷி
காமதாயினி;

() பஞ்ச = ஐந்து - ஐந்தாக
ப்ரஹ்மாஸன = அரியணை = தலைமை பதவி - சிம்மாசனம்
ஸ்திதா = இருத்தல்

# 58 பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா = பிரபஞ்ச படைப்பின் லக்ஷணங்களை / அதன் ஐந்து தன்மைகளை அரியணையாக ஏற்று கொலுவிருப்பவள் *குறிப்பு

() மஹா = பெரிய - மேன்மை பொருந்திய
பத்ம = தாமரை
அடவி = காடு - வனம்
ஸம்ஸ்தா = இருப்பவள்

# 59 மஹாபத்மாடவி சம்ஸ்தா = தாமரைமலர்கள் நிறைந்த பரந்த வனத்தில் குடியிருப்பவள்

() கதம்ப வன = கதம்ப மரங்களின் வனம்
வாஸி = தங்கி இருத்தல் 

# கதம்பவன வாஸினி = கதம்ப மரங்களால் சூழப்பட்ட பூவனத்தில் வசித்திருப்பவள்

() சுதா = தேன் - சாறு
ஸாகர = சாகரம் - கடல் - ஆறு
மத்ய - நடுவில் - இடையே
ஸ்தா = இருப்பவள்

# 60 சுதா சாகர மத்யஸ்தா = தேனாற்றின் (கடலின்) நடுவில் வாசம் செய்பவள்

() காம = ஆசை - இச்சை - அன்பு
அக்ஷி = கண்கள்

# 61 காமாக்ஷி = அன்பைப் பொழியும் விழியாள்

() காம = விருப்பம் = இச்சை
தாயி = கொடுப்பது

# 62 காமதாயினி = இச்சைகளை பூர்த்தி செய்பவள்

குறிப்பு: பஞ்ச ப்ரஹ்மத்தை ஆசனமாக கொண்டு ஆட்சி புரிகிறாள். பஞ்ச ப்ரஹ்மம் என்பது எதனைக் குறிக்கிறது என்பது அவரவர் புரிதலுக்கேற்ப மாறுபடுகிறது.  சிலர் பஞ்ச பூதங்களை ( நிலம், நீர், பூமி, காற்று மற்றும் ஆகாயம்) குறிப்பிட்டுள்ளதாக கூறுவதுண்டு. பிரபஞ்ச படைப்பு ஐந்து தன்மைகள் கொண்டதாக  விளக்கம். ஸ்ருஷ்டி (படைப்பு) - ஸ்திதி (காத்தல்) - ஸம்ஹாரம் (அழித்தல்) - மறைத்தல் மற்றும் அருளல், இவற்றை முறையே ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் என்பவர்கள் பிரதிபலிப்பதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவி காமாக்ஷி இந்த ஐந்து தன்மைகளை தன் ஆசனமாக ஏற்றதன் மூலம் அவற்றை ஆள்பவளாக சஹஸ்ர நாமம் உணர்த்துகிறது.



(இத்துடன் ஸ்ரீநகர வர்ணனை நிறைவு பெற்று பண்டாசுர வதம் தொடர்கிறது)

Thanks and credits: sansrkitdictionary.com Spokensanskrit.org manblunder.com