November 12, 2017

Lalitha Sahasranama (80-83) தமிழ் விளக்கத்துடன்




End of Bhandasura 

karaanguli nakhothpanna naraayaNa dhashakrithi;
Mahapaashupathaasthraagni nirdhagdhasura sainika;
kamEshwaraasthra nirdhagdha sa bhandasura sunyaka;
BrahmopEndra mahEndraadhi deva samsthutha vaibhava;

() Kara = hand
anguli = finger 
nakha = nails
uthpanna = come forth - appear 
naaraayaNa = Lord Narayana
dhasha = ten
aakrithi = shape - form - aspect


# 80 karaanguli nakhothpanna naraayaNa dhashakrithi; = Who created ten aspects or incarnations of Sri Narayana from her Finger Nails.

() Maha paashupatha = Great trident (which shiva is depicted carrying)
asthra = weapon
agni = fire 
nirdhagdha = to cause to burn - burnt 
asura - sainika = Asura's army


# 81 Mahapaashupathaasthraagni nirdhagdhasura sainika; = Who burnt the entire asura army with the sparks of fire of  pashupatha - Trident of Shiva * 1


() kamEshwara = Lord Kameshwara
asthra = weapon 
nirdhagdha = to cause to burn -destroy
sa-bhandasura-sunyaka = bhandasura's capital 'sunyaka' 
(here 'sa' may mean "along wiht" or "and" / entirely along with the capital)


# 82 kamEshwaraasthra nirdhagdha sa bhandasura sunyaka; = Who annihilated Bhandasura and his entire clan along with his capital "sunyaka" with Kameshwara's astra


Brahma = Lord Brahma 
upendra = Lord Vishnu
mahendradhi deva = Great Indra and other celestial Gods *2
samsthutha = praised 
vaibhava = might or power


# 83 BrahmopEndra mahEndraadhi deva samsthutha vaibhava; = Whose vigour and glory is
extolled and celebrated by Brahma Vishnu Indra and other celestial Gods.


*Note1: MahaPashupatha astra, according to purana, is one of the greatly ranked astra which emits sparks of fire towards the target resulting in complete destruction.

Note2: In Some places Mahendra is mentioned as a form of Shiva. As per sanskrit website's suggestion, I have mentioned 'Lord Indra'. Few other websites also maintains as Lord Indra.

(With next verses we continue on Mantrarupa of Lalithambika)


லலிதா சஹஸ்ரநாமம் ( 79 - 83 )


பண்டாசுரன் அழிவு


கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருதி;

மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா;
காமேஷ்வராஸ்த்ர நிர்தக்த ச பண்டாசுர சூன்யகா;
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ சம்ஸ்துத வைபவா;


கர = கைகள்
அங்குலி = விரல்கள்
நக = நகம்-நகங்கள்
உத்பன்ன = அதனின்று தோன்றுதல் 
நாராயண = ஸ்ரீ நாராயணன்
தஷ = பத்து
ஆக்ருதி = வடிவம் - அம்சம்


# 80 கராங்குலி நகோத்பன்ன நாராயண தஷாக்ருதி; = ஸ்ரீமன் நாராயணரின் பத்து அவதாரங்களை தனது நகங்களிலிருந்து உருவாக்கியவள்.

மஹாபாஷுபதாஸ்திர = சிவனின் பாஸுபத அஸ்திரம் / ஆயுதம்
அக்னி = நெருப்பு
நிர்தக்த = அழித்தல் 
அசுர-சைனிகா = அசுர சேனை


# 81 மஹாபாஷுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாசுர சைனிகா; = மஹாபாசுபத அஸ்திரத்தின் தீப்பிழம்பில் மொத்த அசுர சேனையையும் சின்னாபின்னமாக்கியவள்.

காமேஷ்வர = இறைவன் காமேஷ்வரன்
அஸ்த்ர = ஆயுதம்
நிர்தங்க்த = முழுவதுமாக அழித்தல்
ச-பண்டாசுர-சூன்யகா = பண்டாசுரனின் தலை நகரமான சூன்யகா
( 'ச' என்பது இவ்விடத்தில் "அதனுடன்" அல்லது "அதனுடன் சேர்த்து" என்று பொருள் படலாம் )


# 82 காமேஷ்வராஸ்த்ர நிர்தக்த சபண்டாசுர சூன்யகா; = காமேஷ்வர அஸ்திரத்தை எய்து பண்டாசுரனையும். சூன்யகா என்ற அவர்கள் மையத்தையும் பூண்டோடு ஒழித்தவள்.

ப்ரஹ்ம = ப்ரஹ்மதேவன்
உபேந்திர = விஷ்ணு
மஹேந்த்ராதி தேவ = இந்திரதேவன் முதலிய தேவர்கள்
சம்ஸ்துத = புகழ்-புகழ்ச்சி
வைபவா = வீரம் - ஆற்றல்


# 83 ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ சம்ஸ்துத வைபவா; = கொண்டிருக்கும் பெரும் வல்லமையை ஏத்தி, பிரஹ்மா, விஷ்ணு, இந்திராதிதேவர்களாலும் துதிபாடி கொண்டாடப்படுபவள்.


குறிப்பு1: மஹாபாசுபத அஸ்திரம் புராணக்கூற்றின் படி, பெரும் சக்திவாய்ந்த ஆயுதம். தீப்பிழப்புகளை பொழிந்து இலக்கையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுவதுமாக பஸ்பமாக்கும் வல்லமை படைத்தது.


குறிப்பு2: சிலர் மஹேந்த்ர என்ற சொல்லுக்கு 'சிவன்' என்ற பொருளுணர்த்துகின்றனர். மஹேந்திரன் சிவனின் ஒரு அம்சமாக புரிந்து கொள்ளப்படுகிறது. சமஸ்க்ருத வலைதளத்தின் வழிகாட்டுதலின்படி, "இந்திரன்" என்றே நான் பொருள் கொண்டு எழுதியிருக்கிறேன். வேறு சில வலைதளங்களும் இந்திரன் என்றே வலியுறுத்துகின்றன.

(பண்டாசுரவதம் நிறைவுற்றது. அடுத்து லலிதாம்பிகையின் மந்த்ரரூபம் தொடரும்)

No comments:

Post a Comment