November 18, 2017

Lalitha Sahasranama (84 - 89) தமிழ் விளக்கத்துடன்



Mantra Roopam

Hara Nethraagni sandhagdha kaama sanjeeva naushadhi;

Srimad vaagbhava kootaika swaroopa mukha pankajaa;

Kantadha kati paryantha Madhya koota swaroopini;

Shakthi kootaikathapanna katyadho bhaaga dharini;

Moola manthraathmika;
Moola kootathraya kalevara;


() Hara-Nethra-agni = Fire emitted from Shiva's eye (third eye) 
Sandhagdha = burnt
Kaama = Manmatha -Kaamadev
Sanjeevana = Giving life - to make alive
aushadha= medicine


# 84 Hara Nethraagni sandhagdha kaama sanjeevana-aushadhi = Who caused the revival of Kaamadev who was burnt by the fire from Shiva's (third) eye.

() Srimad = Auspicious - Great
vaag = word - speech 
bhava = to produce - is born 
Koota = peak i.e as a dwelling 
Swaroopa = form
Mukha = face
Pankajaa = lotus


# 85 Srimad vaagbhava kootaika swaroopa mukha pankaja = Whose Divine Lotus Face personfies the syllables of auspicious vaag-bhava koota of the (pancha dashakshari) mantra *


() Kanti = neck
adha = below - under
kati = hip region
Paryantha = to come to an end
Madhya Kootaka = middle set of syllables of mantra placed in the mid-region
SwaroopiNi = in the form - shape


# 86 Kantadha kati paryantha Madhya koota swaroopini = Who from the neck to the hip region reflects Madhya-koota (middle set of syllables) of the pancha-dashakshari mantra.


() Shakthi Koota = Last set of syllables dwells as shakthi-koota
aapanna = have got - obtained
Kati = hip
adho-bhaaga = lower part of the body
Dharin = to hold or possess


# 87 Shakthi kootaikathapanna katyadho bhaaga dharini = Whose subtle body below the hip region is personfied as Shakthi koota (of the pancha dasaakshari mantra)


() Moola mantra = basic or root mantra
athmika = characterised


# 88 Moola mantra = Whose is  very chracterisation of the root mantra.

() Moola-koota = the root kootaka (all three koota or set of syllables of pancha-dashakshari mantra)
thraya = three 
kalevar = body


# 89 Moola kootathraya kalevara = whose subtle body projects as three parts(three kootas seen above) of the root mantra (pancha dasakshari)

***


Note: vaagbhava mantra is the First five syllables of pancha-dasakshari mantra. Vaag to be understood as vaach which means to utter or speak. Pancha-dashakshari mantra is a fifteen lettered mantra split in three kutas (peaks) personifying her subtle form. It is better to chant this mantra only after proper initiation from the right guru. Fifteen lettered pancha dashakshari mantra becomes explicit or visible with letter "Srim" to become Shodasi.


The fifteen lettered mantra is divided into three groups:

ka e i la hrim; 
ha sa ka ha la hrim; and; 
sa ka la hrim.


The three groups that constitute the mantra are called Kuta (peaks) or Khanda (segments). They are interpreted variously in sets of three as:


Agni(fire) , Surya(sun) and Chandra(moon); 
srishti (creation), Shtithi (preservation) and laya (dissolution);
Iccha ( will), jnana(knowledge)and kriya (action);
Sattva, Rajas and Tamas;
Jagrat (wakefulness); swapna (dream state) and sushupthi (deep sleep);
jnatra (the knower), jnana (the knowledge) and jneya ( the known) ;
Atma (individual self) , Antaratma (inner being) and Paramatma (supreme self); and as ,
Past , present and future.


For reading more please refer


லலிதா சஹஸ்ரநாமம் (84-89)

மந்திர ரூபம்

ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி;
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா;
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி;
ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ;
மூல மந்த்ராத்மிகா;
மூல கூடத்ரய கலேவரா;


() ஹர நேத்ர அக்னி = ஹரனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிபட்ட நெருப்பு 
சந்தக்த = எரிந்த
காம = காமதேவன்-மன்மதன்
சஞ்சீவன = புனர் ஜீவனம் - மீண்டு உயிர்த்தெழுதல்
ஔஷதி = மருந்து


# 84 ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி = சிவன் நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த மன்மதனை உயிர்த்தெழுப்பியவள்.

() ஸ்ரீமத் = மேன்மை மிகுந்த - மங்களமான
வாக் = வார்த்தை - பேச்சு 
பவ = தோன்றுதல் - பிறத்தல்
கூட = முகடு - முகட்டின் இருப்பிடம் 
ஸ்வரூப = ரூபம் - வடிவம்
முக = முகம்
பங்கஜா = தாமரை


# 85 ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா = மேன்மை மிகுந்த 'வாக்பவ-கூட'த்தின் வடிவமாக முகத்தாமரை கொண்டவள் *  (வாக்பவ கூடம் - பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் முதல் அக்ஷரங்கள்)

() கண்டி = கழுத்து
அத = கீழே 
கடி = இடுப்பு 
பர்யந்த = முடிவுக்கு வருதல் - முடிய 
மத்ய கூட = மத்ய-கூட வடிவாக அமைந்துள்ள நடுப் பகுதி
ஸ்வரூபிணி = வடிவம்


# 86 கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி = கழுத்திலிருந்து இடை வரையிலான சூக்ஷ்ம உடலின் நடுப்பகுதியை மத்ய கூடத்தின் (பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் நடு ஆறு பீஜங்கள் ) வடிவாக கொண்டிருப்பவள்

() ஶக்தி கூட = பஞ்ச தசாக்ஷர மந்திரத்தின் கடை நான்கு எழுத்துக்கள் ஷக்தி கூடம் எனப்படும்
ஆபன்ன = பெற்றிருத்தல்
கடி = இடை
அதோ பாக = கீழ் பாகங்கள்
தாரிணி = கொண்டிருத்தல்


# 87 ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ = தனது வடிவத்தில் இடை முதல் கீழ்வரையிலான பாகங்களை ஷக்தி கூடமாக ( பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் கடை நான்கு எழுத்துக்கள் ) உருவகப்படுத்தியவள்

() மூல மந்த்ர = மூல அல்லது அடிப்படையான மந்திரம்
ஆத்மிகா = தனது தன்மையாக கொள்ளுதல்


# 88 மூல மந்த்ராத்மிகா = மூல மந்திரத்தின் வடிவானவள் (பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் மொத்த வடிவம்)

() மூல கூட = மூல மந்திரத்தின் இருப்பிடமாக
த்ரய = மூன்று
கலேவரா = உடல்


# 89 மூல கூடத்ரய கலேவரா = மூல மந்திரத்தை (பஞ்ச தசாக்ஷரி மந்திரம்) தனது சூக்ஷ்ம உடலின் முப்பகுதிகளாக கொண்டுள்ளவள்

குறிப்பு: வாக்பவ கூடம் பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் முதல் ஐந்து எழுத்துக்களை கொண்டுள்ளது. வாக் என்பதை சமஸ்க்ருதத்தில் வாச என்று பொருள் கொள்ளலாம். வாச என்றால் பகருதல் அதாவது வார்த்தைப் ப்ரயோகங்களை குறிக்கும். பஞ்ச தசாக்ஷரி மந்திரம் பதினைந்து எழுத்துக்களின் கூட்டு. அதை மூன்று கூடங்களாக பிரித்து தனது சூஷ்ம உடலின் வடிவமாக ப்ரதிபலிக்கிறாள். இம்மந்திரம் முறையான குரு தீக்ஷை பேற்று தியானத்தல் சிறப்பு. பஞ்ச தசாக்ஷரி உள்முகமான மந்திரத்துடன் "ஸ்ரீம்" என்ற பதினாறவது எழுத்தும் சேர்த்தால் ஷோடசியாகி பார்வைக்கும் புத்திக்கும் புலப்பட்டு வெளிமுகமாகிறது.
பஞ்ச தசாக்ஷரி என்ற பதினைந்து அக்ஷர மந்திரம் மூன்று முகடுகளாக பிரித்து விளங்குகிறது.
க – ஏ – ஈ – ல – ஹ்ரீம்
ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம்
ஸ – க – ல – ஹ்ரீம்

மூன்று கூடங்கள் மூன்று முகட்டின் இருப்பிடமாக அல்லது பிரிவுகளாக என்று உணரப்படுகிறது. இம்மூன்று பிரிவுகள் வெவ்வேறு புரிதலின் அடிப்படையிலும் அறிய முற்படலாம். 

அக்னி - சூரியன்- சந்திரன்
ஸ்ருஷ்டி - ஸ்திதி - லயம்
இச்சை - ஞானம் - க்ரியை
சத்துவம் = ராஜசம் =  தாமஸம்
விழிப்பு - கனவு - ஆழுறக்கம்
புரிந்துகொள்பவன் - புரிதல் - புரிந்து கொள்ளப்படுவது
ஆத்மா - அந்தராத்மா - பரமாத்மா
கடந்த காலம் - நிகழ்காலம் - எதிர்காலம்


மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழுள்ள சுட்டியை பார்க்கவும்.

No comments:

Post a Comment