November 04, 2017

Lalitha Sahasranama (64-71) தமிழ் விளகத்துடன்

Lalitha Sahasranama (64-71)


Bhandasura Vadham






Devarshi gana samgaatha stooyamanathma vaibhava;
Bhandasura vadhodhyuktha shakthi sena samanvitha;
Sampathkaree samaarooda sindhoora vraja sEvitha;
Ashwarooda dhishti dashwa kotikotibi ravrutha;
Chakra raja ratha rooda sarvaayudha parishkrutha;
Geya chakra ratha rooda manthrini parisevitha;
Kiri chakra ratha rooda dhanda natha puraskrutha;
Jwaalaamaalinika kshipta vahni prakaara madhyaga;


() Devarshi = deva rishi - saints among the celestial gods - saintly demi gods
Gana = followers - troops 
sangatha = in company - associated
sthooyamanah = praised or celebrated - glorified 
athma = self - soul
vaibhav = might - power or greatness


# 64 Devarshi gana samgaatha stooyamanathma vaibhava = Whose greatness is celebrated and glorified by celestial and saintly followers. 

() Bhandasura = bhandasura
vadhodh = assasinate
yuktha = joined - in union - possessed of
shakthi sena = powerful strong army
samanvitha = is present


# 65 Bhandasura vadhodhyuktha shakthi sena samanvitha = Who is equipped with powerful army to annihilate bhandasura * 

() Sampathkaree = devi sampathkaree *
samaarooda = mounted or ascended upon
sindhoora = elephant 
vraja = troop - herd (elephant) - brigade 
sEvitha = served


# 66 Sampathkaree samaarooda sindhoora vraja sEvitha = Who is served by elephant battalion headed by sampathkaree devi (one of the shakthisena devi mounted on the chief elephant)



() Ashwa = horse; 
Ashwarooda = Mounted on horse back - devi aShwarooda 
dhishtitha = situated - established 
dhishtithashwa = established with horse(s) 
koti = excellence of high order 
koti = highest number (crores) 
avrutha = covered - surrounded


# 67 Ashwarooda dhishti dashwa kotikotibir-avrutha = Who is surrounded by crores and crores of horse cavalry of highest excellence, commanded by devi Ashwarooda



() Chakra - raja = Chariot of Sri Lalithambika
rath-arooda = mounted on chariot 
sarva-ayudha = entire weapons
parishkruth = prepared - surrounded - furnished - adorned


# 68 68 Chakra raja ratha rooda sarvaayudha parishkrutha = Being fully armed with all weaponry,
she graces the army, mounted in her chariot chakraja


() GeyaChakra = chariot geyachakra
Rath-arooda = mounted on the chariot
manthrini = shakthisena devi named "manthriNi"
parisEvitha = to serve out of transcendal love


# 69 Geyachakra ratha rooda manthrini parisevitha = Who is served by ManthriNi (shakthisena devi) mounted on Geyachakra chariot.


() Kirichakra = chariot kirichakra
rath-arooda = mounted on chariot
dhandanatha = Devi dhandanatha 
puraskrutha = attended by


# 70 Kiri chakra ratha rooda dhanda natha puraskrutha = who is accompanied by devi dhandanatha mounted on chariot kirichakra


() Jwalamaalini = goddess Jwalamalini
KShipta = sent - issued - despatched
vahni = fire - god of fire
prakaara = wall - bulwark 
madhya = in the centre


# 71 Jwaalaamaalinika kshipta vahni prakaara madhyaga = Who has taken the central position in the fortress of fire, effected by devi Jwalamalini

* Note : Goddess lalitha tripurasundari, from her intellect created Shyamala Devi and crowned her as minister. Shyamaladevi is also described as goddess of music, arts, dance etc. She is also known as MantriNi, Rajamathangi, mathangi etc. 


From her ego, she created Vaaraahi Devi also known as dhandanatha. 

Ashwarooda, Dhandanaatha, manthriNi, jwaalamalini, sampathkari etc are some of the goddesses mentioned to have accompanied mother, towards this massive feat. They together formed Shakthisena.

**********************************************************************************************

லலிதா சஹஸ்ர நாமம் 64-71

பண்டாசுர வதம்

(தேவதைகளின் படங்கள் மேலே உள்ளன) 

தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவா;
பண்டாசுர வதோத்யுக்த ஷக்திஸேனா சமன்விதா;
சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா;
அஷ்வாரூடா திஷ்டி தாஷ்வ கோடி கோடிபிராவ்ருதா;
சக்ரராஜ ரதாரூட சர்வாயுத பரிஷ்க்ருதா;
கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிசேவிதா;
கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா;
ஜ்வாலாமாலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா;


() தேவர்ஷி = தேவ-ரிஷிகள் - இதரதேவதைகளும் ஞானிகளும் ரிஷிகளும் 
கண = கணங்கள் - கணங்களின் பட்டாளங்கள்
சங்காத = தொடர்பு - கூட்டம் - கழகம்
ஸ்தூயமாந = போற்றுதல் புகழ்தல்
ஆத்ம = ஆத்மா 
வைபவா = வலிமை - பெருமை


# 64 தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமாநாத்ம வைபவா = தேவாதிதேவ கணங்களும் முனிவர் குழாமும் போற்றிப் புகழும் பெருமையும் உயர்வும் கொண்டவள்.

() பண்டாசுர = பண்டாசுரன்
வதோத் = அழிக்க - வதைக்க
யுக்த = கூடி - சேர்ந்து 
ஷக்திசேனா = வலிமை மிக்க சேனை
சமன்வித = இருத்தல்


# 65 பண்டாசுர வதோத்யுக்த ஷக்திஸேனா சமன்விதா = பண்டாசுரனை அழிக்க வலிமை பொருந்திய பெரும் சேனையுடன் திரண்டிருப்பவள்.

() சம்பத்கரீ = ஷக்திசேனையின் தேவி சம்பத்கரீ ( சம்பத் என்பது செல்வத்தைக் குறிக்கும்.; சம்பத்கரீ - செல்வத்தை அருள்பவள் ) 
சமாரூட = ஏற்றப்பட்டு - ஏறி அமர்தல்
சிந்தூர = யானை
வ்ரஜ = மந்தை (யானை) -சேனை 
சேவிதா = சேவை செய்திருத்தல்


# 66 சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா = சம்பத்கரீதேவி தலைமையில் திகழும் பெரும் யானைப்படையின் செவையை ஏற்றிருப்பவள்.
,
() அஷ்வாரூடா = அஷ்வம் - குதிரை; 
அஷ்வாரூட = குதிரையில் ஏறியிருத்தல் - குதிரை ஏறி அமர்தல்
திஷ்டிதா = அமைந்திருத்தல் 
கோடி = எண் கோடியை குறிக்கும்
கோடி = உய்ர்வுடைய, உயரிய என்றும் குறிக்கும்
ஆவ்ருதா = சூழப்பட்ட


# 67 அஷ்வாரூட திஷ்டிதாஷ்வ கோடிகோடி பிராவ்ருதா = அஷ்வாரூடாதேவி ஆணையின் கீழ் கோடியாக குழுமியுள்ள உயர்ந்த குதிரைப்படையால் சூழப்பட்டவள்

() சக்ரராஜ = ஸ்ரீ லலிதாம்பிகையின் ரதம்
ரதாரூட = ரதம் ஏறியிருத்தல்
சர்வாயுத = எல்லா வித ஆயுதங்களும்
பரிஷ்க்ருதா = சூழப்பட்டு = அலங்கரிக்கப்பட்டு


# சக்ரராஜ ரதாரூட சர்வாயுத பரிஷ்க்ருதா = அனைத்தாயுதங்களும் தாங்கி சக்ரராஜம் எனும் தனது தேரிலேறி பெரும் சேனையை அணிசெய்திருப்பவள்

() கேயசக்ர = கேயசக்ரம் எனும் ரதம்
ரதாரூட = ரதமேறி
மந்த்ரிணீ = மந்த்ரிணீதேவி
பரிசேவிதா = உயர்ந்த அன்பினால் பணிசெய்திருத்தல்


# கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிசேவிதா = கேயசக்ரம் எனும் ரதம் அமர்ந்த மந்த்ரிணீ தேவியால் தொண்டு செய்யப்படுபவள்


() கிரிசக்ர = கிரிசக்ரம் எனும் தேர்
ரதாரூட = தேரில் ஏறி
தண்டநாதா = தண்டநாதா - வாராஹீ எனப்படும் தேவி 
புரஸ்க்ருதா = கவனிக்கபடுதல் - துணையிருத்தல்


# கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா = கிரிசக்ரம் எனும் தேரேறும் தண்டநாதா (வாராஹீ) எனும் தேவி புடைசூழ திரண்டிருப்பவள்

() ஜ்வாலாமாலினி = ஜ்வாலாமாலினி தேவி
க்ஷிப்த = அனுப்பிய - 
வஹ்னி = அக்னி - அக்னி தேவதை
ப்ராகார = அரண் 
மத்யகா = நடுவில்


# ஜ்வாலாமலினிகா க்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகா = ஜ்வாலாமாலினி தேவியால் ஏற்படுத்தப்பட்ட அக்னிக்கோட்டையின் மத்தியில் அமர்ந்து படை நடத்துபவள்


*குறிப்பு: அன்னை லலிதாதிரிபுரசுந்தரி, தன் புத்தியிலிருந்து சியாமளா தேவியை ஸ்ருஷ்டித்து அவர்களை பிரதான மந்திரிணி பதவியில் அமர்ந்த்தினார். சியாமளாதேவி, இசை, நாடகம், நடனம், முதலிய கலைகளின் அதிபதியாகவும், அதனை போஷிக்கும் கடவுளாகவும் அறியப்படுகிறார். அவர்களுக்கு ராஜமாதங்கி, மாதங்கி, மந்திரிணீ என்ற பெயர்களும் வழங்கப்படுகிறது.

அன்னையின் அகங்காரத்திலிருந்து (சுயத்திலிருந்து) வாராஹி தேவி சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு தண்டநாதா என்ற பெயரும்
வழங்கப்படுகிறது.

அஷ்வாரூடா, தண்டநாதா, மந்திரிணீ, ஜ்வாலாமாலினி, சம்பத்கரீ முதலிய தேவதைகளும் இன்னும் பலப் பல வலிமையும் மேன்மையும் பொருந்திய தேவதைகளும் ஷக்திசேனையை வழி நடத்திச் சென்று அன்னையின் பண்டாசுர வதம் என்ற பெரும்பணிக்கு துணை புரிந்ததாக புராணம்.





No comments:

Post a Comment