December 13, 2011

வாடா மலரே...தமிழ்த்தேனே!



திரும்பப் படிக்கும் போதெல்லாம்
வேவ்வேறு வண்ணத்தில்
புதுசு புதுசாய் உணர்வுகளைத் தூண்டுகிறது
தூசி படிந்த நம் காதல் கவிதைகள்..
இன்று பிறந்தது போல்
விரியும் காதல் பரிமாணங்கள்.
தவறு உன்னுடையது.
சரி ஒப்புக்கொள்கிறேன்..
உனை இன்னமும் நினைத்து உருகும்
என்னுடையது.
இல்லையில்லை
ஒரு வேளை தமிழ்மொழியின்
தனிச்சிறப்பாக இருக்கலாம்.

12 comments:

  1. தமிழ் மொழி சிறப்போ தவறு யாருடையதோ வாசிக்க நல்ல கவிதையை ரொம்ப நாள் கழித்து அளித்தது ரைட் ஷக்தி!!

    ReplyDelete
  2. //புதுசு புதுசாய் உணர்வுகளைத் தூண்டுகிறது....

    தமிழ்மொழியின்
    தனிச்சிறப்பாக இருக்கலாம்.//

    என்றும் வாடாமலர் தான் ...
    ஆனாலும் வாசமுள்ளது.

    தமிழ்த்தேன் தான் ...
    செவிக்குப் புத்தின்பம் தருவது.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  3. நன்றி ஷைலஜா, வை.கோ sir :)

    ReplyDelete
  4. என் காதல் கவிதைகளை தூசு படிய விடுவதே இல்லை.( நான் ) சரி. எது தவறு , யார் தவறு. ?

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி gmb sir. எதுவும் தவறில்லை. எதுவும் சரியில்லை. எல்லாமெ பார்வையின் கோணம் தானே :)

    ReplyDelete
  6. //உனை இன்னமும் நினைத்து உருகும்
    .............
    என்னுடையது.//

    இந்த இரு வரிகளுக்கிடையே, ஏதாவது வரி விட்டுப் போய் விட்டதா?

    தவறு உன்னுடையது
    சரி ஒப்புக்கொள்கிறேன்

    இல்லை, உனை இன்னமும் நினைத்து உருகும்
    என்னுடையது.

    -- என்று இருக்க வேண்டுமோ?..

    ReplyDelete
  7. தவறு உன்னுடையது அல்ல என்னுடையதாகவும் இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டு விட்டது போல்
    எழுத நினைத்தேன்.
    ______

    தவறு உன்னுடையது.

    சரி ஒப்புக்கொள்கிறேன்
    உனை நினைத்துருகும் என்னுடையது

    ______

    என்ற பொருளில் எழுதியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி ஜீவி :)

    ReplyDelete
  8. இந்த பாடலை தினம் தினம் கேட்க தோன்றும். அத்தனை அருமையான பாடல். காவிய புலவரெல்லாம் களிப்புடன்...

    இன்னுமொரு பழைய பாடலும் உண்டு, பார்க்கலாம் என்றாவது அதன் தலைப்பில் எழுதுகிறீர்களா என!

    தமிழ்த்தேன் கலந்த காதல் கவிதை நன்றாக இருக்கிறது சகோதரி. நன்றி.

    ReplyDelete
  9. கொஞ்சம் லேட்டாய் வந்ததில் எல்லாம் பேசப்பட்டு விட்டது.
    ஓக்கே.. கை தட்டும் கூட்டத்தோடு நானும்!

    ReplyDelete
  10. வாங்க ரிஷபன் sir. நன்றி :)

    ReplyDelete
  11. வாங்க ரிஷபன் sir. நன்றி :)

    ReplyDelete