March 30, 2024

பக்தர் 'விப்ரநாராயணரை' மீட்ட ரங்கநாதர்

 Story of Sri VipraNarayana who rose high to become "thodaradippodi azhwar". Incident from his life highlights how deep devotion towards the lord, can relay the divne path of bhakthi, even if human faulter and sway away from the divine due to destiny.






#தொண்டரடிப்பொடி, #ஆழ்வார், #தொண்டரடி, #திருமால், #ஆழ்வார்கள், #திருமாலை, #திருப்பள்ளியெழுச்சி, #விப்ரநாராயணர், #தேவதாசி, #தேவதேவி, #சிற்றின்பம் #பச்சைமாமலை #ஊரிலேன், #miracle, #Narayana, #thirumal, #azhwargaL, #azhwar, #thirumalai, #thiruppaLLiezuchi, #ranganatha, #Srirangam, #ஸ்ரீரங்கம், #hinduism, #Bhakthi, #பக்தி

March 26, 2024

காக்கையின் ஒருதலைக் காதல்

 



உன் வரவில் ஒளிர்ந்ததென் வானம்.
சுற்றித்திரிந்த கடிகைகளின்
ஒளிச்சுருளை திருடிக் கொண்டு
பிரிவெனும் இருளிலே
விட்டுச் சென்றதேன் ?
.
நீ சிகரம் நான் துகள்
நீ ஒளிக்கதிர் நான் கருங்காகம்
நீ தொடுவானம் நானோ அறிவீனம்
நீ கரைகிறாய், என நான் கரைகிறேன்.
.
மீண்டு(ம்) வருவாய்; என்றே
மரக்கிளையில்
மோனத் தவமியற்றுகிறேன்.

-ShakhtiPrabha

(Pic Credit - aNNa kaNNan . Thank you)

March 18, 2024

பொன்னும் புகழும் விரும்பாத பெரியாழ்வார்

 On episode which brought out Periyazhwar's deep love for god.


#பெரியாழ்வார், #ஆழ்வார், #திருப்பல்லாண்டு, #திருமால், #ஆழ்வார்கள், #திவ்யப்பிரபந்தம், #மறுமை, #இம்மை #வல்லபத்தேவன், #miracle, #Narayana, #thirumal, #azhwargaL, #azhwar, #divyaprabandham, #aandal, #ஆண்டாள், #மதுரை, #பாண்டியன், #பெருமாள், #சிவன், #சனாதனதர்மம், #hinduism, #Shiva, #Sanatana, #Bhakthi, #பக்தி

March 17, 2024

புது உலகம் படைப்பதாலே, நானும் இறைவனே

 




வண்ணத்துப் பூச்சிகள்
அங்குமிங்கும் மலர்ந்தன;

பூக்களெல்லாம் சிறகு பெற்று
பூங்காவெங்கும் பறந்தன.
வண்டுகள் தரையில்
தட்டாமாலை சுற்றின.
.
வானவில்லால் வரைந்த வீதிகளில்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன.
நீர்வீழ்ச்சிகளில் வழியும் தேனாறு;
ஆறுகுளங்களில் தேங்கும் பழச்சாறு;
.
பாற்கடலும் பூமியில் பாய்விரிக்க
கடைந்து கிடைத்த அமுதத்தில் நீர்பாசனம்.
விளையும் பயிர்களில் நிறையும் ருசி
அதில் தணியும் பசி
.
காடு மேடுகளில், நாடு வீடுகளிலும்
கைகெட்டும் தூரத்தில் ஞானப் பழங்கள்
.
நடைபயிலும் மரங்கள்
பாடும் மயில்கள்
ஆடும் குயில்கள்
பேசும் பட்சிகள் ....
'என்ன இது முரணாய்'
முறைத்தான் இறைவன்.
.
புத்தியெனும் இந்திரியத்தால்
மனமெனும் ஆகாயத்தில்
சிருஷ்டித்து, காத்து, ஒடுக்குகிறேன்
'அஹம் பிரம்மாஸ்மி'
என்றேன்
'தத்துவமஸி'
என்றான்.
.
ShakthiPrabha
March 17 2024

March 13, 2024

மாங்கல்ய பலம் தரும் "சாவித்திரி விரதம்"

 

Video talks about story behind Savithri vratham, i.e. greatness of Savithri, who won the debate with Lord Yama, lord of death, and against the odds of destiny, lord yama grants her boons, which she saves her husband and brings him back to life.



March 12, 2024

Lost and Found





தொலைந்து போனதாக ஏன் உணர்கிறேன்?
.
வார்த்தைகளையே விவாகம் செய்து
எழுத்துகளைக் கோர்த்து வீடு கட்டி
அசைகளில் இசைபாடி
ஓசை நயத்தில் நடனமாடி
வார்த்தைகளுக்குள்ளா
ஒளிந்திருந்தது என் ஆன்மா?
.
வரிகளுடன் கைகோர்த்து
அதனுடன் பயணித்து, சுவாசித்து
இறுதியில் அதையே உண்டு
எனதடையாளமாக்கிக் கொண்டு
பயணித்தவள்...
.
சிதறிய சொற்களை மீண்டும்
எடுக்கிறேன்...; தொடுக்கிறேன்...;
சொற்கள் மாறிப்போகிறது.
அதன் நிறம், தரம், எடை, குணம்,
வேறாகிப் போகிறது.
.
தமிழ் எனும் நதியில்
கைசேரும் நுரைகளும்
எனது அடையாளாத்தைப் போலவே
மாறிக் கொண்டே இருக்கிறது
.
ShakthiPrabha
March 12 2024

March 11, 2024

மலர்கள் நனைந்தன பனியாலே...

   



💐



🌺 
🌹🥀🌸🪻🌼🌺🌷🌹🥀🌸🪻🌼🌺🌷🌹🥀🌸🪻🌼💐


.
அதிகாலைப் பனியின் மினுமினிப்பில்
ஆணவத்தின் சிலுசிலுப்பு
.
நானே அழகு என்றது தாமரை
.
என் சிவந்த நிறத்துக்கும்
கவர்ச்சிக்கும் இணையில்லை
ரோஜா பீத்திக்கொண்டது
.
மேனியில் தவழும் நறுமணத்திற்கு
அத்தனை பேரும் அடிமை
மல்லி சொல்லிச் சொல்லி
வெள்ளைச் சிரிப்பை உதிர்த்தது
.
மெல்லிதழ்வழி வழியும் கள்ளுக்கு
மயங்காத வண்டில்லை
காட்டுமலர்களின் கொட்டம்
.
வியப்புட்டும் வண்ணங்களை
சுமந்து வரும் செழுமையில்
நிகருமுண்டோ எனக்கு
என்றாடியது செம்பருத்தி
.
செடிகளிடம் விடைபெற்று
பூக்கூடைகளில் தஞ்சமடைந்த மலர்கள்
வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து
மௌனம் கொண்டன.
பனி விலகியதில் ஒளி பெருகியது.
நாவு அடங்கியதில்
ஞானம் பிறந்தது.
.
ShakthiPrabha

March 11 2024 


March 08, 2024

MahaSivarathri - அறிவியலும் ஆன்மீகமும்

 



What is so unique about Maha Sivarathri?

A festival which celebrates Science and Spirituality. #mahasivaratri #mahashivratri #மஹாசிவராத்திரி #மகாசிவராத்திரி #சிவன் #சக்தி #shakti #shiva #cosmos #creation #dance #sin #marriage #halahala #neelakanta


தோஷங்கள் நீக்கும் மாசிமகம் / புண்ணியம் சேர்க்கும் மாசிச் சிறப்பு

 


Virtues of the month of maasi Religious reasons for glorifying maasi magam , associated purana stories. #maasi, #மாசிமகம் #மாசிமாதம் #தோஷம் #தோஷநிவர்த்தி #முருகன், #சிவன், #அம்பிகை, #கந்தபுராணம், #நதி, #தேவதை, #கும்பகோணம், #தாக்ஷாயணி, #தக்ஷன், #பிரஜாபதி, #வருணன், #புண்ணியம், #பாபம், #ஆரோக்கியம், #ஆறு, #குளம், #பூஜை, #புராணம், #கதை #செல்வம், #சந்தோஷம்,


பாபங்கள் போக்கும் ரதசப்தமி (எளிய வழிபாட்டு முறை)



Video talks about the Importance of Rathasapthami, simple ways to

observe Rathasapthami and benefits of performing prayers to Sun god on auspicious day of Ratha sapthami.


மதுரகவியாழ்வார்

 



Posts briefs some of the important incidents in Madhurakavi azhwar and

Glorifies azhwar,who is very well known for his "guru bhakthi" We prostrates acharya thiruvadi. #azhwargaL, #ஆழ்வார்கள், #இந்துமதம், #குருபக்தி, #நம்மாழ்வார், #nammazhwar,#gurubhakthi, #hinduism, #alwars, #Spirituality, #பக்தி, #krishna, #கிருஷ்ணன், #கண்ணன், #சங்கப்பலகை, #சங்கத்தமிழ், #divyaprabhandam, #திவ்யபிரபந்தம்

ஆழ்கடலின் முத்து (வங்கக் கடல்- பாசுரம் 30)



 Pasuram 30 - Dear Krishna, in you we surrender. To you we belong. Churn all the unwanted dirt and cleanse our soul, to reach, 'you alone'.

#Margazhi, #மார்கழி, #thiruppavai, #திருப்பாவை, #பாசுரம், #pasuram, #Aandal, #ஆண்டாள், #நாச்சியார், #Nachiyar, #Spirituality, #பக்தி, #krishna, #கிருஷ்ணன், #கண்ணன், #kannan, #Bhakthi, #Bhoodevi, #பூதேவி, #Day30, #வங்கக்கடல், #vangakadal , #Bhakthi, #Mukti #Love, #Devotion