





















.
அதிகாலைப் பனியின் மினுமினிப்பில்
ஆணவத்தின் சிலுசிலுப்பு
.
நானே அழகு என்றது தாமரை
.
என் சிவந்த நிறத்துக்கும்
கவர்ச்சிக்கும் இணையில்லை
ரோஜா பீத்திக்கொண்டது
.
மேனியில் தவழும் நறுமணத்திற்கு
அத்தனை பேரும் அடிமை
மல்லி சொல்லிச் சொல்லி
வெள்ளைச் சிரிப்பை உதிர்த்தது
.
மெல்லிதழ்வழி வழியும் கள்ளுக்கு
மயங்காத வண்டில்லை
காட்டுமலர்களின் கொட்டம்
.
வியப்புட்டும் வண்ணங்களை
சுமந்து வரும் செழுமையில்
நிகருமுண்டோ எனக்கு
என்றாடியது செம்பருத்தி
.
செடிகளிடம் விடைபெற்று
பூக்கூடைகளில் தஞ்சமடைந்த மலர்கள்
வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து
மௌனம் கொண்டன.
பனி விலகியதில் ஒளி பெருகியது.
நாவு அடங்கியதில்
ஞானம் பிறந்தது.
.
ShakthiPrabha
March 11 2024
No comments:
Post a Comment