உன் வரவில் ஒளிர்ந்ததென் வானம்.
சுற்றித்திரிந்த கடிகைகளின்
பிரிவெனும் இருளிலே
விட்டுச் சென்றதேன் ?
.
நீ சிகரம் நான் துகள்
நீ ஒளிக்கதிர் நான் கருங்காகம்
நீ தொடுவானம் நானோ அறிவீனம்
நீ கரைகிறாய், என நான் கரைகிறேன்.
.
மீண்டு(ம்) வருவாய்; என்றே
மரக்கிளையில்
மோனத் தவமியற்றுகிறேன்.
-ShakhtiPrabha
(Pic Credit - aNNa kaNNan . Thank you)
No comments:
Post a Comment