December 31, 2018

திருமழிசை ஆழ்வார்




ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சனசக்கரத்தின் அவதாரமாக கொண்டாடப்படுகிறார் திருமழிசை ஆழ்வார். பார்கவ முனிவருக்கும் அவர் பார்யாளுக்கும் புத்திரனாக பிறந்தாலும் பிண்டமாக ஜனன உரு கொண்டிருந்து, பின்னர் இறையருளால் கைகால் வரப்பெற்று அழகிய குழந்தை உருவானது. திருவாளன் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் தம் பெருமை அறிந்த ஒரு வேளாளர் தம்பதியினர் அன்றாடம் பாலமுதளித்து வந்தனர். அன்புடன் அளித்த பாலமுதை உண்டு அவர்களின் முதுமை நீக்கி இளமையருளினார். அவர்கள் பிள்ளையான கணிக்கண்ணனை தம் சீடராக்கிக்கொண்டார்.

கணிக்கண்ணனை பல்லவ மன்னன் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, சீடனில்லா ஊரில் தாமும் இருக்கவேண்டாமென அவருடன் புறப்பட்டார் ஆழ்வார். கூடவே அங்கு பள்ளி கொண்ட பெருமாளை நாகப்பாயைச் சுருட்டி தங்களுடன் வரப் பணித்தார். பின்னர் தவறிழைத்ததற்கு அம்மன்னனும் மிக்க வருந்தி இருவரையும் அழைக்கவே, கூடவே பெருமாளையும் தம்முடன் மீண்டும் அழைத்து வந்தார் வீட்டார். அவர் சொன்ன வண்ணம் பெருமாள் செய்ததால், சொன்ன வண்ணம் செய்த பெருமாள். ஒரு இரவு தங்கியிருந்த இடம் ஒர் இரவு இருக்கையாகி பின்னர் ஓரிக்கையானது.

சைவம், சமணம் பௌத்தம் என்ற வழிவகைகளையும் ஆராய்ந்தவர், இறுதியில் பேயாழ்வாரை தமது ஆசிரியர் ஆக்கிக்கொண்டு வைணவம் தழுவினார். மற்ற மூவரும் ஹரியையும் ஹரனையும் சமமெனக் கருதி பாடல் இயற்றியிருந்தாலும், இவரே பெருமாளை உயர்த்திப் பிடித்தவராவார். இவர் எழுதிய நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் திவ்யபிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள முத்துக்கள்.

சின்ன சின்னதாய்






சந்தோஷப் பொழுதெல்லாம்
சாதனைக் கணங்கள்.
அன்றாடப் பணியிலும்
மறைந்திருக்கும் பெருவெற்றி.
மலர் கொண்ட நறுமணம்,
தினம் சிந்தும் புன்னகை,
மனம் பூக்கும் நற்சிந்தனையென
விரியும் வண்ணக் கொண்டாட்டம்.
வாய்மொழியும் வாழ்த்துக்களே
முடிசூடா மகுடங்கள்.
பிறக்கும் ஒவ்வொரு நொடியும் புதுசு.
இயற்கையின் அரிய பரிசு.

December 26, 2018

சார்புடைமை




இடப்பக்கம் வலப்பக்கம்
மேலும் கீழுமாய்
எண்ணங்கள் சிதறியிருந்தன.
எல்லோரும் எல்லாவற்றையும்
எடுத்துக் கோர்த்தனர்;
எடுத்தாண்ட வார்த்தையிலெல்லாம்
இன்னொருவரின் வாசம்
இருந்துகொண்டே இருந்தது

December 19, 2018

அமர்நீதி நாயனார்

Image result for அமர்நீதி நாயனார்


ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர். வாணிபத்தில் பெரும் பொருளீட்டி அப்பொருளையெலாம் சிவனடியார்கள் தொண்டில் செலவிட்டார். சிவனடியார்க்கு அமுதும், ஆடையும் கோவணமும் அளித்தருளி சேவை செய்தார். 

சோதித்த பிறகே அருள் சுரக்கும் பெருமானும், திருவிளையாடல் புரிந்தார். சிவனடியாராகத் தோன்றி அவர் கோவணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்கக் கோரி நீராடச் சென்றார். கோவணத்தை மறையச் செய்து நாயன்மாரை பரிதவிக்கச் செய்தார். அவர் இழப்பிற்கு ஈடுசெய்யும் பொருட்டு, தராசில் அவர் கொணர்ந்த கோவணத்திற்கு இணையாக வேறு ஆடைகள் மற்றும் கோவணங்கள் வைத்தும் தட்டு சமன்படவில்லை. பொன்னும் பொருளும் கொட்டியும் தட்டு சமன்படவில்லை. அமர்நீதி நாயனார் அவர் மனைவி மகனையும் தராசில் வைத்தார். தட்டு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியாக சிவநாமத்தை ஜபித்து அவரே தராசில் ஏறி அமர்ந்தார். தட்டு இளகிக் கொடுத்து சமநிலைப் பட்டது. வந்திருந்த உமாபதி, உமையவளுடன் காட்சி தந்து, தராசையே விமானமாக்கி அடியாரின் குடும்பத்திற்கு சிவலோகப் பிராப்தியருளி முக்தியளித்தார்.

ஓம் நமச்சிவாய

ஆழ்வார்கள் - சிறுகுறிப்பு - பேயாழ்வார்




திருமயிலை கிணற்றில் சிவந்த அல்லிமலரில், மஹாவிஷ்ணுவின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக தோன்றியவர். திவ்யப்பிரபந்த பாடல்களில் மூன்றாம் திருவந்தாதி இவர் புகழைக் கூறும். சிவனும் ஹரியும் ஒன்றென இவர் தரிசித்ததாக கூற்று. சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்ட பெரும்பங்கும் இவருக்கு உண்டு. இறைவன்பாற் கொண்ட பக்தியால் அழுதும் சிரித்தும் பிதற்றியும் (உலகத்தோர் பார்வைக்கு) ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்ததனால் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டார். "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" எனும் பாசுரத்தில் தாயாரையே முதலில் கண்டதாகவும் அவரையே திரு என்று விளிப்பதாக ஆன்றோர் வாக்கு.
நிகழ்வு:
முப்பெரும் ஆழ்வார்களான முதலாழ்வார்கள் மூவரும், திருக்கோவிலூரில் ஒரு சிறு மண்டபத்தில் மழைக்கு அண்டினர். ஒருவர் படுக்கவும், இருவர் அமரவும், மூவர் நிற்கவும் இடம் போதுமானதாக இருந்த அச்சிறு மண்டபத்தில் நாலாமவராக இறைவன் நெருக்கி நின்று இவர்களுக்கு காட்சி தந்தருளினார். இறைவனுக்கு அவ்விடத்திலேயே மூவரும் பாமாலை சூட்டி மகிழ்ந்தனர்.

அப்பூதி அடிகள்




Image result for அப்பூதி அடிகள்


திருநாவுக்கரசரின் சமகாலத்தவர். நாவுக்கரசரையே தமது மானசீக ஆசானாக, இறைவனாகவே வரித்து குருபக்தியில் சிறந்து விளங்கினார். நாவுக்கரசரின் பெயரில் அன்னதானங்களும் நற்பணிகளும் செய்து வந்தார். ஒரு சந்தர்பத்தில் தமது இல்லத்தில் உணவருந்த நாவுக்கரசரை பணித்தார். 

விருந்தளிக்கும் வேளையில் அப்பூதி அடிகளின் மகனை அரவு தீண்டி விட, தம்மை அண்டியவர்களுக்கு துக்கம் நேர்ந்து விடக்கூடாதென்று, இறைவனிடம் மன்றாடி, சிவபெருமான் கருணையால் அப்பூதி-அடிகள மகனை உயிர்பித்து, அவரை புத்திரசோகத்திலிருந்து, நாவுக்கரசரே மீட்டெடுத்தாக புராணம். அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் நாவுக்கரசரின் புகழ்பாடியே இறைவன் திருவடி சேர்ந்தனர். பகவானைக் காட்டிலும் அடியவர் தொண்டே சிறந்தது என்ற கருத்தை மெய்பித்தார். அப்பூதி அடிகள் அந்தணர்  குலத்தில் பிறந்து கிருஹஸ்தாசிரமத்தில் செவ்வனே கடமையாற்றியவர்.

.

ஓம் நமச்சிவாய

சிறு குறிப்பு ஆழ்வார்கள் - பூதத்தாழ்வார்






மல்லிகைப் புதரின் நடுவில் நீலோத்பல மலரில் இவர் அவதரித்தார் என்பது ஸ்தலபுராணம். கௌமோதகீ எனும் கதாயுதத்தின் அம்சமாக ஏழாம் நூற்ண்டில் பிறந்தார். நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி திருவாய்மொழிந்தருளினார். நாராயண ஸ்மரணயைத் தவிர பிறிதொன்றினை அறியார். நொடிப்பொழுதும் திருமாலின் பக்தியில் உருகினார். திருமாலை வணங்கியவனுக்கு மண்ணுலக இன்பமும் விண்ணுலக பதவிகளும் ஒரு பொருட்டல்ல என்றுரைத்தார். சிறந்த பக்திக்கு ஆழ்வார்கள் வாழ்வே சான்று. கடுகளவேனும் அப்படியொரு பக்தி நமக்கும் சித்திக்குமாயின் பிறப்பின் பயனெய்தினோம்.

December 17, 2018

அதிபத்தர்







பரதவர் குலத்தில் பிறந்த மீனவர். தனது வலையில் சிக்கும் சிறந்த மீனை சிவனுக்கு அற்பணித்து வாழ்ந்தார்.  ஒரே ஒரு மீன் பிடிபட்டாலும் அதை இறைவனுக்களித்து பட்டினியில் இருந்து விடுவார். வறுமையில் வாடியவர்.


திருநாள் ஒன்றில் ரத்தினங்கள் பொதிந்த மீன் ஒன்று அவருக்கு வசப்பட்டது. அதையும் இறைவனுக்களித்தமையால், மகிழ்ந்த சிவனார் உமையவளுடன் காட்சி தந்து முக்தியும் அளித்ததாக வரலாறு.

ஓம் நமச்சிவாய

ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார்

 



பன்னிருவரில் முதலாமவர். காஞ்சிபுரத்தில் திருவேக்கா எனும் ஊரில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் பொய்கையில் அவதரித்ததால்  காரணப்பெயர் பெற்றார். அந்தாதியாக பல பாடல்கள் பெருமாள் பேரில் பாடியுள்ளார். அவை நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தில் ‘முதல் திருவந்தாதி’யாக விளங்குகிறது.

 

பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார். 

 

நூறு பாடல்கள் கொண்ட 'முதல் திருவந்தாதி' எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது 

 

பொய்கையாழ்வார் இறைவனை புலன்களைக் கொண்டு துதிக்கிறார். 

*காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன.

*கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன,

*நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன,

*கால்கள் அவன் குடிகொண்டுள்ள தலத்திற்க்கே செல்ல விரும்புகிறது.    

*நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ விழைகிறது,  என்று புலன்கள் அனைத்தும் இறை சேவைக்கே உள்ளதென துதிக்கிறார். 

ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்ந்து போற்றுகிறார். 

 

"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் 
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"

என்று வலியுறுத்துகிறார். 

 

அதாவது சிந்தனையால், ஆழ்ந்த நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.

திருக்கோவிலூரில், பொய்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றது உன்னத நிகழ்வாகும். பக்தவத்ஸலனான விஷ்ணு, தம் அடியவர்க்கு அருளும் பொருட்டு, நிகழ்த்திய  திருவிளையாடல் பெரும் நெகிழ்ச்சிக்குரிய சம்பவமாக குறிக்கப்பட்டுள்ளது.  க்ஷேத்திரங்கள் பல தரிசித்து கொண்டே வந்து திருக்கோவிலூர் வந்தடைகிறார் பொய்கையாழ்வார். திருக்கோவிலூரில் உலகளந்த பெருமானாய் விஷ்ணு கோவில் கொண்டுள்ளார்.

 

பெருக்கெடுத்தோடும் தென்பண்ணை ஆற்றைக் கண்டதும் பெருமானின் பாற்கடலுடன் ஒப்பிட்டார் ஆழ்வார். பெருமாளின் திருவுருவம் நினைந்து பக்திப் பெருக்கெடுக்க உருகுகிறார். உடனே பச்சைமாமலை போல் மேனியுடன் மணிமாலைகள் அணிந்த மார்புடன் எழிலே உருவான திருமாலை தரிசிக்கிறார். பரவசத்தில் உருகி, நேரம் கடப்பதை அறியாமல் அங்கேயே நின்று விடுகிறார். 

தன் இயல்புக்கு திரும்பிய ஆழ்வார், இரவாகிப் போனதை உணர்கிறார். பலத்த காற்றும் பெருமழையும் சூழ, அருகே தென்பட்ட ஆசிரமத்துக்கு செல்கிறார். மிருகண்டு முனிவரால் அமைக்கப்பட்டிருந்த அவ்வாசிரமத்தில் யாரும் தென்படவில்லை.  

ஒருவருக்கு படுக்க இடம் அளவெடுத்தாற்ப் போல் இருந்தமையால், களைப்பாறி சற்றே ஓய்வெடுக்க முற்பட்டார். அங்கே திருமாலின் திருவுளப்படி, பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். மழைக்கு ஒதுங்க இடம் வேண்டி, ஆசிரமக்  கதவைத் பூதத்தாழ்வார் தட்டுகிறார்.  இருவருக்கு உட்கார இடமிருப்பதால், இருவருமாக அமர்ந்தபடி பரந்தாமன் பாடல்களில் லயித்திருந்தனர். 

மீண்டும் கதவு தட்டப்பட்டு, பேயாழ்வாரும் அங்கு வந்து இணைகிறார். மூவருக்கு நிற்க மட்டுமே இடம்.  ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்ள முடியாத காரிருள். மூப்பெரும் ஆழ்வார்களை ஒருங்கே இணைத்த இறைவன், தம் திருவிளையாடலைத் தொடர்ந்தார். 

நிற்க தாராளமாய் இடமிருந்தும், மூவரும் நெருசலுக்கு உட்பட, தம்முடன் இன்னும் ஒரு நபர் இருப்பதை உணர்ந்தனர். மூன்று பேர் மட்டுமே நிற்க முடிந்த இடத்தில் எப்படியோ நான்காமவரும்  இருக்கக் கண்டனர். மின்னலொளியில், நான்காம் நபரின் திருமுகம்..

திவ்யமான பேரழகுடன் விளங்கியதைக் கண்டனர். உடனே இறைவனை உணர்ந்து பாடல்கள் பல பாடி துதித்தனர். 

 

பொய்கையாழ்வார் பாடல்

தம்முடன் தங்கியிருந்த இறைவனைக் காண,  இருள் விலகி, கதிரவனின் வெளிச்சம் வேண்டி,   பொய்கை ஆழ்வார் இவ்வுலகை திருவிளக்க்காகவும், ஆழ்கடலை நெய்யாகவும், கதிரவனின் ஒளியை திரி கொண்ட தீபமாக பாவித்து


வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

எனப் பாடி துதித்தார்.

(இருளை நம் அறியாமை மற்றும் பந்த பாசத்திற்கும், சுடரை முக்திக்கும் பக்திக்கும் ஒப்பிட்டு விளக்கலாம்.)

பொய்கை ஆழ்வார் அந்தாதி வடிவில் பாடிய  நூறு பாசுரங்களில் திருவரங்கத்து பெருமானைக் குறித்தும் பாடியுள்ளார்.

அரங்கனுக்கும் ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்றல்ல. கர்ப்பகாலம் தொட்டே இருந்திருக்கிறது. அதற்கு முன்பும் இருந்திருக்கிறது. தாயின் கர்ப்பத்தில் தோன்றிய சான்றுகள் இல்லாத பொய்கையில் பிறந்தவருக்கு ஏது கர்ப்ப காலம்?! 

கர்ப்பகாலம் என்பது காலத்தின் முன்னோடியாக படைத்தலுக்கு முன் இருந்த ஒடுக்க காலத்தை குறிப்பிட்டிருக்கிறார் போலும். 

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான்
இன்றுமறப்பனோ ஏழைகாள் –அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கணடேன்
திருவரங்கமேயான்  திசை  

என்கிறது ஆழ்வார்  பாசுரம்                   

ஒன்றுமே மறக்கவில்லை. எப்பொழுதும் அவர் மறக்கவில்லை என்ற உறுதிகூறுகிறார். கர்ப்பகாலம் தொட்டே இருந்த சம்பந்தம். காலத்தின் சக்கர சுழற்சிக்கும் அப்பாற்பட்டு நிற்கும் உறவு.

என்னால் இந்த அழகனை எப்படி மறக்க முடியும்! எப்படிப் பட்ட அழகனை? ஓத நீர்வண்ணன்- ஆழியில் வெள்ளப் பெருக்கெடுக்க ஏற்படும் குளிர்வண்ணம் கொண்டவனை ஒரு போதும் மறந்து அறியேன். கர்ப்பத்தில் இருக்கும் காலத்தேயே மறந்தறியாதவன்,  இன்று மறப்பேனோ! 

அன்று தொட்டே கைதொழுதேன், கண்டேன். திருவரங்கத்து உறை கொண்டிருக்கும் அவனை நோக்கி கை கூப்பித் தொழுதேன்.

திருவரங்கத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆழிமேல் பள்ளி கொண்ட பெருமானை, கருவரங்கத்து உள்ளே ஏறக்குறைய அதே போல் சயனித்த நிலையில் கைகூப்பி நின்று, பக்தன்,   தன்னை குழந்தையாக பாவித்து பாடுவது பாசுரத்தின் அழகு.

 

லலிதா சஹஸ்ரநாமம் (411 - 420) (With English Meanings)



பீடங்களும் அங்க தேவதைகளும் 

ஷிஷ்டேஷ்டா;
ஷிஷ்ட பூஜிதா;
அப்ரமேயா;
ஸ்வப்ரகாஷா;
மனோ வாச-மகோசரா;
சித்-ஷக்தி;
சேதனா ரூபா;
ஜட ஷக்தி;
ஜடாத்மிகா;
காயத்ரீ;


()
ஷிஷ்டா = நேர்மையானவன் - கட்டுபாடு உடையவன்
இஷ்டா = பிடித்தம் - விருப்பம் 


#411 ஷிஷ்டேஷ்டா = பண்பாளர்களின் பிரியத்துக்குறியவள் ; அவர்களிடம் அன்பு செலுத்துபவள்.

#412 ஷிஷ்ட பூஜிதா = சீலம் மிகுந்தோரால் பூஜிக்கப்படுபவள்.

()
அப்ரமேயா = முடிவில்லாத - கணக்கில்லாத


#413 அப்ரமேயா = எல்லையற்றவள் [ அளவிட முடியாதவள்; புலன்களால் உணரமுடியாதவள்.

() 
ஸ்வ = சுயமாக - சுயத்தால்


#414 ஸ்வப்ரகாஷா = ஸ்வயம் பிரகாசமானவள் ; தானே உள்ளோளியாய் ஜ்வலிப்பவள்.

() 
மனோ = மனதால்- எண்ணத்தினால் - சிந்தனை அல்லது கற்பனை சார்ந்த
வாசம் = வார்த்தைகளால் - பேச்சு
அகோசரம் = அடையமுடியாத - எல்லைக்கு அப்பாற்பட்ட


#415 மனோ வாச-மகோசரா = மனதின் புரிதலுக்கும் வாக்கின் கருத்துக்கும் அகப்படாமல் எல்லையற்று விரிபவள் .  புலன்களின் திறனுக்கு அப்பாற்பட்டவள் ;

() சித் = புத்தி - ஆன்மீக - அகத்தாய்வு சார்ந்த

#416 சித்-ஷக்தி = பரிசுத்த அறிவின் ஆற்றலானவள்

()
சேதனா = அறிவு - தன்னுணர்வு - தன்னறிவு


#417 சேதனா ரூபா = தூய அறிவானவள் ; ie சைதன்யமானவள் - ஞானமானவள்

() 
ஜட = அறிவற்ற - ஆன்மவிழிப்பற்ற - உயிரற்ற


#418 ஜட ஷக்தி = ஜடவஸ்துக்களிடத்தில் உணர்வற்ற இருப்பாக வெளிப்படுபவள்

#419 ஜடாத்மிகா = ஜடரூபத்தில் ஊடுருவி இருப்பவள்

#420 காயத்ரீ = தேவீ காயத்ரி வடிவானவள்

(தொடரும்)

Lalitha Sahasranama (411 - 420)

Peetas and Anga Devathas

ShishtEshta;
Shishta Poojitha;
ApramEyaa;
Swaprakaasha ;
Mano vaacha-magochara;
Chith-shakthi;
Chetnanaa roopa;
Jada shakthi;
Jadaathmika;
Gayathri;


() 
Shishta = wise - disciplined - polite
ishta = liked - loved - agreable


#411 ShishtEshtaa = Who cherishes the virtuous - who is treasured by the noble-minded.

#412 Shishta Poojitha = Who is revered and worshipped by the righteous

() 
ApramEya = unlimited - immeasurable 

#413 ApramEyaa - She who Cannot be measured understood or known by the senses.


()
Sva = of self - by itself - in itself


#414 Swaprakaashaa = Who is self-luminous

() 
Mano = mentally - by mind - thought - with ideas - imaginary
Vacham = using words - speaking 
agochara = unattainable - not within range


#415 Mano vaacham agochara = Who is imperceptible ie outside the range of mind and speech.

()
Chit = intellect - soul-oriented


#416 Chith-Shakthi = Who is the power of pure-knowledge

()
Chetana = intelligent - conscious


#417 Chethanaa Roopa = She who is pure-knowledge i.e who is pure-consciousness

()
Jada = soulless - senseless - inanimate


#418 Jada Shakthi = Who is the power of inanimate energy

#419 Jada-athmika = Who exists in the insentient forms

#420 Gaayathri = She is the form of Goddess Gayathri

(to continue)

December 11, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (403 - 410) (with English meanings)


பீடங்களும் அங்கதேவதைகளும்

மஹா காமேஷ நயன குமுதஹ்லாத கௌமுதி;
பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி:;
ஷிவதூதி; 
ஷிவாராத்யா; 
ஷிவமூர்தி: ;
ஷிவங்கரீ;
ஷிவபரா;


() குமுத = சிவப்புத் தாமரை - அல்லி
ஆஹ்லாத = ஆனந்தமளித்து 
கௌமுதி = நிலவொளி
நயன = கண்கள் 
மஹா காமேஷ = சிவன்


#403 மஹா காமேஷ நயன குமுதஹ்லாத கௌமுதி = மதியொளியைப் போன்ற தனது இருப்பினால் மகிழ்வூட்டி, சிவனின் தாமரையொத்த கண்களை மலரச்செய்பவள்

() ஹார்த = அன்பு - பிரியம்
தம / தமஸ் = தமோ குணம்
பேத = வித்தியாசம் - பேதம்
பானுமத் = சூரியன் - பிரகாசம்
சந்ததி: = சர வரிசைத் தொடர் - சூரியக்கதிர்


#404 பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி: ; = பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர் மனதில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள்


() தூத் = தூதன் - தூது செல்பவன்

#405 ஷிவதூதி = சிவனை தன் பிரதிநிதியாக்கியவள்

#406 ஷிவ-ஆராத்யா = சிவனால் வணங்கி ஆராதிக்கப்படுபவள்

#407 = ஷிவமூர்த்தி = சிவஸ்வரூபமானவள்

() கர = வழங்குதல் - அளித்தல் - செய்தல்
    ஷிவ = சௌபாக்கியம்

#408 ஷிவங்கரீ = சௌபாக்கியம் அருள்பவள் - சுபமங்களங்களுக்கு காரணமானவள்

#409 ஷிவப்ரியா = சிவனுக்கு ப்ரீதியானவள் - சிவனை நேசிப்பவள் (பரஸ்பர அன்பு)

() பரா = வேறான - இன்னொன்று
   அபரா = இன்னொன்றில்லாத = ஒன்றான
   ஷிவ-அபரா = சிவனிலிருந்து வேறானவள் அல்ல *


#410 ஷிவபரா = சிவனிடம் ஒருமித்த பரிபூரண பக்தியை செலுத்துபவள் *

* பக்தர்கள் சிலர் லலிதாம்பிகையை 'பர சிவனாக' கருதி, அவளே சிவத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பவளான பூரண ப்ரம்மம் என்று உணர்கின்றனர்.

(தொடரும்)

Lalitha Sahasranama (403 - 410)


Peetas and Anga-Devathas

Maha Kamesha-nayana Kumudhahlaadha kaumudhi ;
Bhaktha Hardha tamO bedha bhanumat bhanu santhathi ;
Shiva-dhoothi;
Shiva-aaradhya;
Shiva moorthi;
Shvankari;
Shiva priya;
Shiva para;


()
Kumudha = red lotus - water lilly
aahladha = delight - gladden - causing delight
kaumudhi = moonshine - moonlight
nayana = eyes
Maha-Kamesha = Shiva


#403 Maha Kamesha Nayana Kumudha-aahlaadha Kaumudhi =  Whose presence is like the Moonshine causing delight to Shiva who opens his beautiful lotus eyes

()
Hardha = affection - kindess
Tama / Tamas = Darkness - ignorance
Bedha = difference - contrast 
Bhanumat = Sun - luminous 
Santhathih = expansion - or continuous line i.e. Sunbeam


#404 Bhaktha Hardha tamO bedha bhanumat bhanu santhathi ; = Whose grace is like the luminous Sunbeam which expels the darkness and ignorance from devotees.


() dooth = representative - embassy - envoy


#405 ShivaDoothi = She for whom Shiva acts as an envoy

#406 Shiva-aaradhya = Who is worshipped and cherished by Shiva

#407 Shivamoorthi = Who is the form of Lord Shiva

() 

kar = to confer 
Shiva = Auspicious - benign


#408 Shivankari = Who grants prosperity ; Who causes benevolent things to happen

#409 Shivapriya = Who is fond of Shiva ; Who is dear to Shiva (mutual)

() 

Para = another - other than 
Apara = without another 

Shiva-apara = She is none other than Shiva *

#410 Shivapara = She who has undivided complete devotion upon Shiva *

* Some devotees interpret that, Lalithambika is to be regarded as Para Shiva who surpasses Shiva and hence The Supreme brahman. 


(to continue)