மனிதனின் உயரிய இலக்கு தன்னிலை அறிதல் என்று கூறப்படுகிறது. இதனையொட்டியே ஆன்மீகம், நம்பிக்கை, தேடல், புரிதல், ஜபம் தபம் என அனைத்தும் ஏற்பட்டுள்ளது. எக்காலத்திலும் பிறப்பு இறப்பை தாண்டிய புரியாத விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கை இருப்பது போல், நம்பிக்கை அற்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.
கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியை இரண்டு விதமாய் அணுகலாம்.
கடவுளை (personal or unexplained force) நம்புபவர்களாக இருப்பவர்களை ஆத்திகர்கள் என கொண்டாலும் நாத்திகவாதிகளில் இரண்டு பார்வைகள் உண்டு என நான் நினைக்கிறேன்.
கடவுள் என தனிப்பட்ட கூட்டம்/உருவகம் இல்லை என்று நினைப்பவர்கள். அனைத்தும் இயற்கை என்ற cosmological action எனக்கருதி அதன் விளங்க்கங்களாகவே அனைத்தையும் கண்டு எனவே கடவுள் என ஒரு விஷயம் தேவை இல்லை என்று வாதம் செய்பவர்கள். ஆனால் இக்கருத்தினை உடைய சிலர், இருப்பு நிலை என்ற consciousness மேல்நம்பிக்கை உண்டு. அதனால் இவர்களும் ஏறக்குறைய அத்வைத சித்தாந்தத்தில் அல்லது பௌத மத கோட்பாடுகள் பாதி நம்பிக்கை கொண்டவர்களாக சித்தரிக்கலாம். மதம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிடிக்காமல் போனவர்களாக இருப்பவர்களும் உண்டு. இவர்களெல்லாம் ஏறக்குறைய பாதி ஆத்திகவாதிகள் என நான் நினைக்கிறேன்.
இன்னொரு வகை உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாம், "உண்மையான நாத்திகவாதிகள்" அதாவது "இருப்பே/soul/conciousness" இல்லை என நம்புபவர்கள். இவர் தரப்பு வாதங்களில் சில
1. Miracles are hallucinations.
அற்புதங்கள் என்பது மனதின் பிரமையே
2. OBE are not personally verified and / or gimmicks to promote popularity
உடல் சாராமல் உலகை உணர்வது சாத்தியமற்றது. இப்படிப்பட்ட கருத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாதது
3. (Straight from the horse's mouth, i.e stephen hawkins) "I regard the brain as a computer which will stop working when its components fail. There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark"
மனித உடல் (மூளை) என்பது ஒரு உயிர் வேதி தகவமைப்பு [Adaptive bio chemical machine] உபகரணம். இதன் மூலப் பொருள்கள் பழுது பட்டால்,முடிந்ததும் வாழ்வு முடிகிறது.மறுமை வாழ்வு கிடையாது
4. Brain is responsible conciousness.
மூளையி(னா)ல்தான் உணர்தல் ஏற்படுகிறது

5. When anything out of the ordinary happens, they club it as "mass hypnotism"
இயற்கை விதிகளுக்கு முரணான் ஒன்றை நம்புவதற்கு மன [மயக்க]மே காரணம்
6. பஞ்சபூதங்களின் கூட்டால் விளைந்ததே "இருப்பு நிலை" அந்த கூட்டமைப்பு கலையும் பொழுது இருப்பு நிலை என்ற consciousness இல்லாமல் கரைந்து விடும். when elements dissolve, consciousness dissolves into airy nothing. ஆன்மா, soul, போன்றவற்றை மறுக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் அவர்கள் தரப்பு மறுப்பை வைத்திருக்கிறார்கள்.
ஆரோக்கியமான விவாதமாக இதை கொண்டு செல்ல ஆசை.... தொடருங்களேன்...உங்கள் ஒவ்வொருவரின்
ஆரோக்கியமான விவாதமாக இதை கொண்டு செல்ல ஆசை.... தொடருங்களேன்...உங்கள் ஒவ்வொருவரின்
1. கருத்து
2. பார்வை
3. தெரிந்த, அனுபவித்த விஷயங்கள்,
4. ஆச்சாரியர்கள் , குருக்கள், ஸ்வாமிகள் பற்றிய நல் விஷயங்கள்
5. நாத்திகத்தின் கேள்விகள், சுட்டிகள்
6. நிரூபிக்கப்பட்ட பொய் சாமியார்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், சுட்டி
7. carl sagan, முதல் ஐன்ஸ்டீன், stephen hawking போன்றவர்கள் கூற்று / அதன் சுட்டி....
9. உங்களுக்கு தெரிந்த அறிவியல், அணுவியல், அனுபவம் சார்ந்த விஷயங்கள்..
10. நம்பிக்கைகள்..
11. குட்டிக் குட்டி தகவல்கள்....
12. சும்மா கலந்து கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர்
13. பெரிய பெரிய விளக்கங்கள்.....
14. பழைய சித்தாந்த விளங்க்கங்கள்
எல்லாரும் வாருங்கள்....
எல்லாமே கொண்டு வாருங்கள்.....
தொடர்ந்து பதில் விவாதம் வைய்யுங்கள்.....ஆங்கில சுட்டி, விவாதம், ஆங்கிலம் கலந்த விவாதமும் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொருவரின் கருத்தும் வேறு யாருக்கேனும் வழிகாட்டியாய் பார்வையாய், ஞானமாய், உண்மையின் உணர்ந்தலாய் இருக்கக்கூடும்.... நீண்ட ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமாகத் தொடர்ந்தால் மகிழ்வேன்.... பிறரின் கருத்துக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பு கொடுத்து உங்கள் கருத்தை தொடரலாம்.
இறுதியாக,...."வெளியே தேடாமல், வீண்விவாதம் செய்யாமல், உள்ளே தேடுவதே வழி" என்ற தெரிந்தாலும், இந்த விவாதம் எதுவரை செல்லும், அல்லது புதிய தகவல்கள் கொடுக்கும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன்...