சங்ககாலமெல்லாம் நமக்குப் புரியவே புரியாது. அதை ஒதுக்கி வைத்து விடுவோம். 'கம்பன், வள்ளுவன் பாரதி' என்ற வரிசைகளையும் விட்டுவிடுவோம்.
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
என்றெல்லாம் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பாடலில் மேலோட்டமான கருத்து, அதனைத் தாண்டிய இன்னொன்றும்,அதற்குப் பின்னும் தோண்டித் துழாவினால் வேறொன்றும் பொக்கிஷம் போல் பொங்கிக் கொண்டிருக்கும்.
புரட்சிக் கவிஞர்கள் என்று பெயர் பெற்றவர்களும், தங்கள் நோக்கத்திலிருந்து சற்றும் வழுவாது உயர்ந்த எண்ணங்களை முன் வைத்த சுதந்திரப் போராட்ட கவிஞர்களும் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவரவர் காலத்திற்கேற்ற சூழ்நிலையில் பாட்டு புனைந்தாலும், காலத்தை வென்ற பாடல்களாக அவை திகழ்கின்றன.
கவித்துவத்தில் அடுத்த கட்டமாக, ரசனையை முன் வைத்து, உவமை, உவமேயம் மூலம் கற்பனையூற்றிக் கவிதை புனைந்த கட்டமும் அழகு. இப்படிக் கூட அழகாய் சிந்தனை விரியுமா என்று பாராட்ட தூண்டும் எண்ணங்கள், வார்த்தைக் கோர்வைகள். இப்படிப்பட்ட வரிகளைக் கேட்கும் பொழுது, புனைந்த கவிஞரே நம் மனத்திரையில் கவிதையாகிப் போவதுண்டு.
எல்லா காலகட்டத்திலும், கவிதை வேறு திரைப்படத்திற்கு பாடல் எழுதுவது வேறு என்ற அளவில் பார்க்கப்பட்டது.சிறந்த கவிதைத் தொகுப்பாக கவிஞர்கள் கொணர்வது திரைக்கு சரிவராத எழுத்தாக அமைந்துவிடுகிறது. காலத்தின் சுழற்சியில் சற்றே மாறுபட்ட தோற்றம் கொண்டு இப்பொழுதும் சில பாடல்கள் அவ்வாறு அமைகிறது. வேற்று மொழியும், நடைமுறையில் இருக்கும் வார்த்தைகளைக் கோர்த்து அதற்கு ராகம் உருவேற்றி சமைத்து விடுகிறார்கள்.
கலாரசனை, சொற்களையும் அதன் சந்தங்களையும் ரசித்து சுவைப்பதற்கு யாருக்கு நேரமோ பொறுமையோ இருக்கிறது? அதிகம் யோசிக்கத் தேவையற்ற வார்த்தைகளை சேகரித்தால் mass reach சுலபமாகிவிடுகிறது.
கலாரசனை, சொற்களையும் அதன் சந்தங்களையும் ரசித்து சுவைப்பதற்கு யாருக்கு நேரமோ பொறுமையோ இருக்கிறது? அதிகம் யோசிக்கத் தேவையற்ற வார்த்தைகளை சேகரித்தால் mass reach சுலபமாகிவிடுகிறது.
"Why this கொலவெறி கொலவெறி கொலவெறி டி...." எத்தனை சுலபமாக முடிந்து விட்டது பாருங்கள்! யதார்த்தமான சூழ்நிலைக்கு அமைந்த பாடல், மெட்டு, அதனால் ஒன்றிவிட முடிகிறது .
இதுவெல்லாம் தமிழா? கவிதையா? என்று பட்டிமன்ற பேச்சுக்கள் நேர விரயம். திரைப்படங்களோ, அல்லது இசைதொகுப்புக்களோ, கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே இருக்க வெண்டும் என்ற எண்ணம் குறுகியது. பட்டித் தொட்டிப் பாடல்கள், கிராமிய மணம் சிந்தும் மெட்டுக்கள், நகர வாழ்வின் பிரதிபலிப்புகள் எனப் பாடல்கள் பலவகை இருப்பதை ஒப்புக் கொண்டு வழிவிடுவோம்.
யதார்த்த பேச்சுக்களை நடைமுறைகளை பிரதிபலுக்கும் திரைப்படம், பாடல்கள், எழுத்து, கதை, கவிதை, நாடகம் போன்றவை முதலிடம் பெற்றுவிடுகின்றன. என்னதான் மூக்கை சிந்தி நின்றாலும் இலக்கியம் இலக்கணம் எல்லாம் அதற்கு அப்புறம் தான்.
இணையத்தை அதிகம் வலம் வருவது இளைய தலைமுறை என்பதால் Soup song மற்றும் flop song இங்கே top song ஆகி விட்டது. அவ்வளவு சுயபச்சாதாபமா இளைஞர்களுக்கு?
(இதைப் பற்றிய செய்தி கீழே)
http://www.thehindu.com/arts/cinema/article2650957.ece
சில படைப்புகள் நீண்டு நிரப்பி பல காலம் ஒளிவிடும் நட்சத்திரங்கள். வேறு சிலது, சில மணித் துளிகள் பளீரென மின்னி மறையும் மின்மினிப்பூச்சிகள்.
இணையம், யூட்யூப், கூகுள் போன்ற இணைப்புகளுடன் இந்தப் பாட்டை மட்டும் இருபது லட்சம் மக்கள்கேட்டு மகிழ்ந்தனராம். ஆஹா! இருபது லட்சத்து ஒன்றாக நீங்களும் இணையுங்கள்.
புது இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒய் திஸ் கொலைவெறி ஷக்தி?:)
ReplyDeleteநீயும் உன்பங்குக்கு பிரப்படுதுகிறாயே!!
//கலாரசனை, சொற்களையும் அதன் சந்தங்களையும் ரசித்து சுவைப்பதற்கு யாருக்கு நேரமோ பொறுமையோ இருக்கிறது? அதிகம் யோசிக்கத் தேவையற்ற வார்த்தைகளை சேகரித்தால் mass reach சுலபமாகிவிடுகிறது.//
கலைவெறி முன்பு இப்போ கொலைவெறி என்ன செய்வது காலத்தின் கோலம்!!!!
வாங்க ஷைலஜா. கலைவெறி கொலைவறி சரியா சொன்னீங்க.
ReplyDeleteபாடலை ரெண்டு முறை கேட்டால் நமக்கே பிடித்துவிடுகிறது! Need to be updated right? lol.
பாடலைப் பற்றியோ வரிகளைப் பற்றியோ என் ஆதங்கம் இல்லை.
4 நாளில் இவ்வளவு ஹிட் ஆ!!! எளிமையான விஷயங்களை ரசிக்கத் தான் மக்களுக்கு நேரமிருக்கிறது!
Aamam indha kolaveri kavignar Bharathiyaraikkatilum sirandhavar.Pongada ponga
ReplyDeleteSumma pattai kettu poveengala...
ReplyDeleteஇது நுனிப்புல் மேயும் கலாச்சாரம் ஆகிறதல்லாவா?. எல்லா விசயத்திலும் இதுபோலவேதான் அவசரம் தெரிகிறது. நொடிகளையும் கடன் தந்துவிட்டு நமக்காக வாழும் வாழ்க்கையில் இது போன்றவை பிரமாதமாகவே இருக்கிறது.
ReplyDeleteநன்றி, ஸ்ரீதர், சாகம்பரி, anon,
ReplyDeleteஉண்மை தான். fast-food days!
ரசனையும் துரித கதியில் முடிந்துவிடுகிறது.
<கொள்ளைவெரி
ReplyDeleteNaan num andha paata kekala.. i dont know.. kolaveri... andha vaarthaya keta kaadhula thenaa paayum/?
ReplyDeletehi preethi,
ReplyDeletethanks for dropping by. Do listen to the song, lest u would be left out, atleast the tune sweeps u in lol...
புது இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாருங்கள் ராஜேஸ்வரி. முதல் வருகைக்கும், தொடர்வதற்கும், கருத்துக்கும் நன்றி :)
ReplyDeleteபுது இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் vgk
===========================
தங்களின் பதிவுகள் என் டேஷ் போர்டில் தெரிவதில்லை. தயவுசெய்து பதிவிட்டவுடன் எனக்கு மெயில் மூலம் லிங்க் தரமுடியுமா?
என் மெயில் விலாசம்:
valambal@gmail.com
============================
Shakthiprabha said...
//alls well that ends well
எனக்குப் பிடிச்சதே இது தான்!! மனசு நிறையுது.//
மிக்க நன்றி, மேடம்.
கல்கியில் முகமூடி இல்லாத தங்களின் தோற்றத்தைப்பார்த்து வியந்தேன்.
கல்கியில் “மாத்தி யோசியுங்க” என்ற தொடர் போட்டியொன்று பல வாரங்கள் நடத்தினார்கள். அதில் இறுதிச்சுற்று வரை வந்து நானே முதலிடம் பெற்று வெற்றி பெற்றவனாக அறிவித்து இருந்தார்கள்.
அதைக்கூட நான் பதிவாக எழுதியிருந்தேன். லிங்க் இதோ:
http://gopu1949.blogspot.com/2011/04/6_17.html
அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியே இப்போதும் உங்களின் வெற்றியை கல்கியில் கண்டதும் கல்கண்டாக இனித்தது. வாழ்த்துக்கள்.
பிரியமுள்ள vgk
நேரமின்மையால் இப்பாட்டைக் கேட்பதைத் தள்ளிப் போட்டு வந்திருந்தேன். முதல் தடவையாக இங்கேதான் கேட்டேன்:)!
ReplyDeleteமுன்னுரையை வாசிக்கும் போது ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
//இதுவெல்லாம் தமிழா? கவிதையா? என்று பட்டிமன்ற பேச்சுக்கள் நேர விரயம். //
யதார்த்தம் இதுவே. நல்ல பகிர்வு.
வை.கோ sir,
ReplyDeleteஎனக்கும் உங்கள் பதிவு readerல் வரவில்லை. எதேச்சையாக சென்று பார்த்தல் பல கதைகள் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களின் தமிழ் பெயர் தொடர்புடன் இந்தச் சிக்கல் விலகும் என்று நினைக்கிறேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி.
ராமலக்ஷ்மி,
tune gets on to you...இரண்டு முறை கேட்டுப் பார்த்தால், நாமே "பெப்பேப பைங்" என முனகும் அபாயம் உண்டு. இண்டர்நேஷனல் reach கிடைத்து விட்டது இப்பாடலுக்கு! :))
இளைஞர்களை மட்டும் இல்லாமல், வயதானவர்களையும் கவர்ந்திழுத்திருக்கும் இந்தப்பாட்டு ரொம்ப சிறப்பானதுதான்.
ReplyDeleteசில படைப்புகள் நீண்டு நிரப்பி பல காலம் ஒளிவிடும் நட்சத்திரங்கள். வேறு சிலது, சில மணித் துளிகள் பளீரென மின்னி மறையும் மின்மினிப்பூச்சிகள்.
ReplyDeleteஅழகாச் சொன்னீங்க..
இதுதாங்க உண்மை..
நன்றி க்ருபா, முனைவர் குணசீலன் :)
ReplyDeleteஅப்போ நான் சொன்னது உங்களுக்குப்புரியலை, நல்லவேளை ;)
ReplyDeleteலேசா புரிஞ்ச மாதிரி இருந்தது. நீங்க யாருன்னு தெரியாததால சும்மா விட்டுட்டேன். மரத்தடி க்ருபாவா?
ReplyDelete//க்ருபா said...
ReplyDeleteஅப்போ நான் சொன்னது உங்களுக்குப்புரியலை, நல்லவேளை ;)
12/01/2011 05:39:00 AM
Shakthiprabha said...
லேசா புரிஞ்ச மாதிரி இருந்தது. நீங்க யாருன்னு தெரியாததால சும்மா விட்டுட்டேன். மரத்தடி க்ருபாவா
/////
மறைஞ்சிருக்கிற வேற க்ருபா இது ஷக்தி!! கிண்டல்பண்றாரு சும்மா விடாதே:)
ஒஹோ மறைஞ்சி இருக்கிற அதே..வேற க்ருபாவா? அவர் தன்னை நினைச்சு சொல்லிருபார் ஷைலஜா :(
ReplyDeleteஆமாம் ஆமாம். என்னை நெனச்சுதான் சொன்னேன். அதோட, உங்கள மாதிரி அறிவு, அனுபவம் எல்லாம் உள்ளவங்களையும் கூடக்கவர்ந்திழுக்கும்னும் சொல்லிட்டேனே.
ReplyDeleteஷைலஜா, இதெல்லாம் ஞாயமே இல்லை. பேசாம இருக்கற ஷக்தியை இப்படி தூண்டறீங்களே, உங்களுக்கு
ReplyDeleteWhy this கொலவெறி கொலவெறி கொலவெறி க்ருபா!
ReplyDeleteபாடலை கேட்காமல் கருத்து சொல்வதில் என்று இருந்தேன். ஒரு வழியாக பாடலை கேட்டாகி விட்டது. திரும்ப திரும்ப பாட வைக்கும் இசை!
ReplyDeleteபேச்சு வழக்கில் உபயோகப்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகள் பாடலாகிப் போனது, இப்பாடலுக்கான வெற்றி.
ஒரு ஆங்கில பாடல் என சொல்லப்பட்ட ஒன்று, அந்த பாடலில் எந்த ஆங்கில வார்த்தைகளும் இல்லை. அதில் எந்த மொழியும் இல்லை. வெறும் சந்தத்தில் அமைந்த வரிகள் கொண்டு பாடப்பட்ட பாடல் கூட மிகவும் பிரபலமானது.
நன்றி.
நன்றி ராதாக்ரிஷ்ணன். சரியாகச் சொன்னீர்கள். மொழி பிரதானமாக இல்லாததாலேயே பாட்டு வெற்றி பெற்றது. தமிழர்களால் உருவாக்கப்பட்ட உலகளாவிய பாடல் என்று சொல்லலாம்.
ReplyDelete