(சோ-வின் எங்கே பிராமணனைத் தழுவியது)
ராமாயணத்தையோ மஹாபாரதத்தையோ பொருத்த வரை விவாதங்களுக்கு இடம் வகிக்கும் சம்பவங்கள் நிரம்ப உள்ளன. வாலி வதம் பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றிருப்பானேயானால் அது தவறான ஒரு செயலே. அதை நியாயப்படுத்த முடியாது.
மறைந்திருந்து இராமன் கொன்றான் என்பதற்கு ஆதாரம் இல்லை, மாறாக வாலி மறைந்திருந்து கொல்லப்படவில்லை என்று நிறைய ஆதாரம் இருக்கிறது. ராமன் மறைந்து நின்றிருந்ததாக வால்மீக ராமாயணத்தில் இல்லை. வாலியை வதம் செய்ய நாண் ஏற்றும் போது பட்சிகளும் மிருகங்களும் அலறுகின்றன. பேரொலி எழும்புகிறது. அப்படியொரு ஒலியை அவன் கவனியாமல் இருந்திருக்க முடியாது. அம்பு எய்தபின் வாலி புலம்புகிறான் "நான் பார்க்காத போது நீ என்னை வீழ்த்தினாய்" என்கிறானேயொழிய மறைந்து நின்று அடித்ததாக கூறப்படவில்லை. அதற்கு ராமன் "யுத்தத்தில் அம்பு எய்தும் பொழுது எதிரி அதை பார்க்கிறானா இல்லையா என்பது அவசியம் இல்லை. மேலும் நீ ஒரு மிருகம், மிருகத்தை மனிதன் வேட்டையாடும் பொழுது அதற்கு நியதி ஏதும் இல்லை" என்கிறான். நாரதர் சொல்லச் சொல்ல வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதுகிறார். நாரதர் சொல்லும் பொழுது வாலியை தன் பராக்ரமத்தினால் வீழ்தினார் என்றே வருகிறது.
குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?"
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் - திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?"
(நன்றி chennailibrary.com)
"உன் குலம், அறிவு, கொற்றம் தான் என்னே! உன்னுடன் வந்து இணைந்த நற்பண்புகள் எத்தகையது!உலகம் மூன்றின் ஆளுமையானவன். உன் ஆற்றல் வண்மை எப்படிப்பட்டது! உன் பண்புகள்மறந்து இத்தகைய தகுதியற்ற செயலை செய்யலாமோ" என வாலி இகழ்வதும்
"நீ பிறன் மனை கவர்ந்த கொடிய பாவத்தை செய்துள்ளாய். சரணம் என அடைந்தவனை கொல்ல முயன்றாய்.இதையெல்லாம் தடுத்து அறத்தை நிலை நாட்டுவது என் கடமை" என்று இராமன் சொல்வதெல்லாம் கவிதைக்குமகுடமான கம்பராமாயணத்தில் உள்ளது.
இது பற்றிய ஆய்வு மேற்கொண்டு 1939 ஆம் வருடம் ஸ்ரீ சீதாராம சாஸ்த்ரிகள் என்பவர் எழுதியிருக்கிறார். கம்ப ராமாயணத்தில் வாலியை மறைந்து வீழ்த்துவது போல் இருந்தாலும், நாரதர் சொல்லி வால்மீகி முனிவரால் எழுதப்பட்டதும், முதன்மையானதும் ஆதாரமானதுமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை.
வால்மீகியால் எழுதப் பட்டது, நாரதர் சொல்லச்சொல்ல வால்மீகி எழுதியதுகம்பர் எழுதியது என்பதையெல்லாம் நாம் சாதாரணமானவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அதனதன் மூலம் என்பதே மற்றவர் சொல்லித் தெரிவதுதானே. செவி வழியாக செய்திகள் உலாவரும்போது, நிறையவே கூட்டல் கழித்தல்கள் இருக்கும்.
ReplyDeleteசெவி வழிச்செய்தியாகத் தான் வருவதைத் தவிர சில கல்வெட்டு பதிப்புகள் ஓலைகள் இருக்கும், அதெல்லாம் வரலாற்று உண்மைகளுக்கு, புராண இதிஹாசங்கள் பெரும்பாலும் நாம் கேட்டு தொடர்வதே. உண்மை தான். புரரண இதிஹாசங்கள் பல நூற்றாண்டுகள் சொல்வதாலேயே நிறைய மறுவி வருவதும் உண்டு.
ReplyDeleteராமாயணம் இருக்கும் வரை, வாலிவதம், சீதை தீக்குளிப்பு, போன்ற சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும்.
ReplyDeleteதங்களின் இலக்கியத் தேடல் நிரம்பிய பதிவுகள் என் ஆர்வத்தை தூண்டி என் இலக்கியப் பசிக்கு தீனி போடுவ தாய் உள்ளன.
மிக்க நன்றி சகோதரி.
வருகைக்கு மிக்க நன்றி சிவகுமாரன்.
ReplyDeleteஉண்மை எதுவென்று பழமையில் சென்று காண்பது கடினம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி வி.ராதாக்ருஷ்ணன் அவர்களே. உங்கள் கூற்று முற்றிலும் உண்மை தான்.
ReplyDeleteவிளக்கமும் விவரங்களும் படித்து மகிழ்ந்தேன். அருமை!
ReplyDeleteமிக்க நன்றி ஜனா. :)
ReplyDeleteவால்மீகி படித்ததில்லை, கம்பன் படித்துக்கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteவால்மீகியின் வாலி, ராமன் தன்னை ஏமாற்றிக் கொன்றுவிட்டதற்கான கோவப்படுகிறான். கம்பனின் வலி, ராமன் பிழை செய்துவிட்டானே என்பதற்காகக் கோவப்படுகிறான்.
அந்தப் படலத்தில் பல பாடல்கள் பிரமாதமாக இருக்கும்.
வால்மீகி படித்ததில்லை என்றாலும் ராமன் மறைந்து கொன்றிருக்க மாட்டான் என்றெல்லாம் நான் நம்ப முயலவில்லை.
எதிரில் இருப்பவன் பலத்தில் பாதியை எடுத்துக்கொள்ளும் arithmetically unfair வரம் பெற்றவனை வேறெப்படி வெல்ல இயலும்?!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு. சிறியன சிந்தியாதான் பதிவை வித்தியாசமாக பதிந்திருக்கிறீர்கள். கேட்டு பார்க்க வேண்டிய பதிவு. நன்றி.
ReplyDelete