January 04, 2011

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 6 )

ஆக்கம்
______



ஆற்றல் பயன்பட ஆவதெல்லாம் நன்று
சீற்றம் கொண்டு சீவிச் சாய்க்காத
அழிவின் பாதையில் இட்டுச் செல்லாத
மானுடம் மலர நன்மைகள் சிறக்க
தேக்கம் கொள்ளாமல் தொடர்ந்து பெருக்கெடுத்து
அயராது சிந்தித்து தளராது செயல்பட்டு
ஆக்கத் துறைகளுக்கே ஊக்கம் தரும்
உயர்வாற்றாலை மட்டுமே பெருமைப் படுத்துவோம்.

4 comments:

  1. இனிய எண்ணங்கள் ஏற்றம் தரும் சிந்தனைகள்.நினைத்தது நடக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  3. ஆக்கம் அளிக்கும் அத்தனையுமே
    ஆதரிக்க வேண்டிய ஒன்று தான்
    அது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதால் மட்டுமல்ல, தடுத்து நிறுத்தும் அத்தனையையும் தாக்கிச் சாய்த்து அடுத்தூர்வதாலும்.

    ReplyDelete
  4. awesome ஜீவி. எனக்கு உங்கள் கவித்துவப் பதிவு பிடித்திருக்கிறது. நன்றி.

    ReplyDelete