January 18, 2011

ஹனுமன் ( ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)



ஹனுமனை இறையம்சமாக வழிபடும் பக்தர்கள் பலர். ஆலயங்களின் அருகாமையில் அல்லது ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பொழுது குரங்குகள் கண்ணில் பட்டாலும் அனுமன் அம்சம் என்று பயபக்தியோடு நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அப்போது நமக்கு இருக்கும் மனநிலையே இதற்கு காரணம். மற்ற காட்டுக் குரங்குகளுக்கோ அல்லது மற்ற நேரத்தில் தென்படும் குரங்குகளுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. கேள்வி இங்கே என்னவென்றால், அனுமனோ, வாலி, சுக்ரீவர் கூட்டதவர்களோ (சற்றே அறிவு முதிர்ச்சி எய்திய) குரங்குகளா? பரிணாம நிலையில் அறிவு முதிர்ச்சி எய்திய குரங்கு மனிதனுக்கு முதல் கட்ட நிலை.


இங்கு கூறப்படும் சுக்ரீவ வாலிகள் குரங்கினின வரிசைகளின் பரிணாம வளர்ச்சியை கடந்த நிலையில் இருப்பதைப் படித்து தெரிந்து கொள்கிறோம். சுக்ரீவன் வாலி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் பராக்ரமமும், அறிவு முதிர்ச்சியும், சிந்தனையும் மனிதனுக்கு ஒப்பாக கருதக்கூடியது. பலவித சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் எனவும், அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அரண்மணைகளும் அற்புதமென வியக்கும் வண்ணம் அமைந்திருந்ததாக இதிஹாச வரலாறு எடுத்துரைக்கிறது. இவர்களை "வானரங்கள்" என்று கூறுவதே முறையாம். வானரங்களை பொதுவாக குரங்குகள் என்றே நாம் நினைத்தாலும், ராமாயணம் நடந்தது த்ரேதா யுகத்தில், அந்த யுகத்தில் வானரர்களும் இத்துணை மெத்த அறிவுடையவர்களாக இருந்திருக்கின்றனர். சாதாரண குரங்குகள் என்று நினைத்து விடாமல், அவர்களை வானரங்கள் என்று விசேஷமாய் பிரித்துப் பார்ப்பதே தகும்.

மேலும் ஜாம்பவான் ஹனுமனின் பராக்ரமத்தை எடுத்துரைக்கையில் "ஹனுமனே நீ சாமான்யன் அல்ல, ராம லக்ஷ்மணர்களுக்கு சமமான தேஜஸைப் பெற்றவன்" என்கிறார். ஹனுமன் வாயு பகவானுக்கு அஞ்சனைக்கும் பிறந்தவர். ஹனுமன் புகழுரைக்கும் வாயு பகவான், "ஹனுமன் பெரிய வீரன், சிறந்த அறிவாளி, எனக்கு நிகரானவன்" என்று வாய்மொழிகிறார்.

ஹனுமனை வணங்கும் ஸ்லோகம்:


"அசாத்யம் சாதக ஸ்வாமின்
அசாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா சிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ"

"சாத்யம் மீறிய அரிய செயல்களை செய்யும் இறைவனே, உங்களுக்கு செய்ய முடியாததென ஏதேனும் உண்டோ?! ராமனின் தூதனே கருணை கொண்டு என் கார்யத்தை சாதிக்க அருள் புரியுங்கள் ப்ரபோ" என்பது தோராயமான அர்த்தம்.

2 comments:

  1. சிலருக்கு சில கடவுள்களைப் பிடிக்கும்.என் மகனுக்கு ஆஞ்சனேயர் மீது அலாதி பக்தி. அவன் ஒருமுறை மாடியிலிருந்து கீழே விழுந்தும் காயம் ஏதும் இல்லாமல் தப்பினான் அப்போது அவன் ஆஞ்சனேயர் டாலர் அணிந்திருந்தான்.ஃபாண்டஸி உலகை விரும்பும் குழந்தைகளுக்கும் ஹனுமான் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  2. ///.என் மகனுக்கு ஆஞ்சனேயர் மீது அலாதி பக்தி. அவன் ஒருமுறை மாடியிலிருந்து கீழே விழுந்தும் காயம் ஏதும் இல்லாமல் தப்பினான் அப்போது அவன் ஆஞ்சனேயர் டாலர் அணிந்திருந்தான்.//

    ஆஹா...இறைவனின் அற்புதம் சொல்லி மாளாது.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete