April 07, 2009

காதல் - கத்திரிக்காய் (mann)



இதோ இப்பொழுதுதான் சோனி டிவியில் விடிய விடிய, ஆறிப் போன 'மன்' (mann) படம் பார்த்து, அதன் பாதிப்பை இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆங்காங்கே இந்தப் படத்தில் (படமே தழுவல்) சுட்ட தழுவல்கள் பற்றி உபரியாய் தகவல்களும் கொடுத்தனர். எஸ்.ஏ ராஜ்குமாரின், படப்பாடல் ஒன்றும் தழுவப்பட்டிருக்கிறது. 1957ல் ரிலீசான 'An affair to remember' என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான (இந்தியத்தன) தழுவல். 1957களில் பேசப்பட்ட படம் தான் என்றாலும் அது இந்த அளவு அஜீரணம் ஏற்படுத்தியுள்ளது என்பது இதன் இந்தியத்தழுவலால் வந்த வினை. எந்த ஒரு அருமையான ஆங்கிலப்படமும் இந்தியப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இன்னும் 50 வருடம் கழித்து நம்மூரில் TITANIC எடுக்கப் போகிறார்களோ என பயமாய் உள்ளது.


படம் முழுக்க காதலுக்கு அழகான(!) விளக்கங்கள. ஒரு வேளை 18 வயதில் பார்த்திருந்தால் அடடே காதல் என்பது இது தான் என்று வக்காலத்து வாங்கியிருக்கலாம். அடிக்கடி 'சச்சி ப்யார்' (உண்மை காதல்) என்ற வசனம் வேறு எரிச்சலூட்டுகிறது.


மணமாகப் போகும், ஒருத்தியும் ஒருவனும், அவரவர்கள் முறையே திருமணம் செய்து கொள்ளவிருந்தவர்களை தடாலடியாய் மறந்து விட்டு, ஒருவரை ஒருவர் கண்டதும் மோதி, பிறகு காதல் கொள்கிறார்கள்। அப்பொழுது, இவனை நினைத்து வேறொருத்தியும், அவளை நினைத்து வேறொருவனும் காத்திருக்கிறார்களே... அவர்களுக்கு 'டிமிக்கி' கொடுப்பது என்னவாயிற்று!


இன்னொரு விஷயம் நெருடுகிறது. இதுவே மணமான இருவருக்கு, அட... அவர்களே திருமணம் செய்து கொண்டு ஒரு இரண்டு மாதம் கழித்து சந்தித்திருந்தார்கள் எனில், அது bigamy! ஆக சச்சி ப்யாருக்கும் bigamy க்கும் வெறும் ஒரு இரண்டு மாத கால அவகாசம் தான் வித்தியாசம்! கல்யாணம் ஆகிய பின் வேறொருவன் மூலமாக சச்சி ப்யாரை கண்டு கொண்டால் அவர்கள் கதி என்ன? என்ற விளங்கங்களுக்கு வேறொரு படம் எடுப்பார்களா?


அது எப்படிங்க, காதல் படங்களில் பலவற்றில் இருவரும் தனித்து பயணிக்கும் போது மட்டும் lift நின்றுவிடுகிறது? அவர்கள் வழிந்து, மேலே விழுந்து புரண்டு என ஒரு 15 நிமிடம் அவகாசம் கொடுத்துப் பிறகு மெதுவாய் திறக்கிறது। ஒவ்வொரு இளம் ஆணும் பெண்ணும் சத்தியமாய் liftக்கு கோவிலே கட்ட வேண்டும்.


ஹீரோயினுக்கு கால் ஊனமாகிவிடுவது பரிதாபமான விஷயம். ஆனால், அநியாயம் என்னவென்றால், "எக்காரணத்தை கொண்டும் அவனுக்கு உண்மை தெரியவே கூடாது" என்று வெறித்தனமாக மறைக்கும் ஹீரோயின், கடைசி சீனில் ஹீரோவே தட்டுத்தடுமாறி இவளைக் கண்டுபிடித்து, கால் போய்விட்டது என்று கண்டு கொண்டு, "உனக்குக் காலாய் நான் இருக்கிறேன்" என்று சொன்னவுடன் பஞ்சாய் இளகிவிடுகிறாள்! "எனக்கு உன்னை விட்டும், உனக்கு என்னை விட்டும் இருக்க முடியுமா?" என்றதும் "முடியாது!! இது சச்சி ப்யார்(! அந்த வார்த்தையே கடுப்பா இருக்குங்க!)" என்று சொல்வது மெய் சிலிர்க்க வைக்கிறது!!!


காதலன், ராப்பகலாய் உழைக்கிறான். அவனது கலைஓவியங்களை விற்று, குத்துமதிப்பாய் நாம் ஒரு 40 வருடத்தில் சம்பாதிப்பதை ஆறே மாதத்தில் சாதித்து, அவன் பணக்காரனாகி விடுகிறான்.(Ah! if only life was that easy!) சிண்ட்ரெல்லா கதை போல், ஒரு மாயை உண்டு பண்ணுகிறார்கள் காதல் எனும் பெயரில்.


மனிஷா கொய்ராலா, ஆமிர்கான் நன்றாய் நடித்துள்ளனர். பாவம் அனில் கபூர், அவளின் ex காதலனாய் வருகிறார்.அவர் மட்டும் காதலை உடனே விட்டுக்கொடுத்து விடுகிறார். அது சச்சி ப்யார் இல்லையல்லவா!!


பதினெட்டு வயது மதிக்கத்தக்கவர்கள் இப்படத்தைப் பார்த்தால் காதல் போதை ஏறும். அவ்வயதைத் தாண்டி வந்ததால், காதல் பிதற்றலை விட யதார்த்தப் பிதற்றல்களே நமக்குச் சரியாய்படுகிறது. இத்தனையும் தாண்டி சில இடங்களில் சில காதல் வசனங்களை ரசிக்க முடிகிறது.(அவரவர் MATURITY பொறுத்து). நிறைய மனிதர்களுக்கு சிண்ரெல்லா போன்ற கதைகளின் மேல், குழந்தைத்தனமான குதூகலமும் நம்பிக்கையும் எத்தனை வயதானாலும் ஓய்வதில்லை. அதனாலேயே இது போன்ற படங்கள் ஓடி விடுகிறது.


நிஜ வாழ்வில் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, 'உன்னோடு நான் கழித்த பொழுதுகள், இனிமை. நீங்கா நினைவோடு, உனக்காக உன் சந்தோஷத்துகாக இறைவனைப் பிரார்த்திப்பேன்' என்று பிரியும் காதலர்களே அதிகம்.

அவர்கள் இதயத்துள் இருப்பது தான் 'சச்சி-ப்யார்'

8 comments:

  1. //இன்னும் 50 வருடம் கழித்து நம்மூரில் TITANIC எடுக்கப் போகிறார்களோ என பயமாய் உள்ளது. //
    எனக்கும் அதே பயம் தான்.

    ReplyDelete
  2. //அவர்களே திருமணம் செய்து கொண்டு ஒரு இரண்டு மாதம் கழித்து சந்தித்திருந்தார்கள் எனில், அது bigamy! //

    Bigamy ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கும் பொழுது இன்னொரு திருமணம் செய்து கொள்வது அல்லவா? ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கும் பொழுது காதலிப்பதற்கும் இது ஒத்துவருமா?

    “சச்சி பியார்” அப்படிங்கிறது ஒரு தேவாமிர்தமான வார்த்தை, ஒருவன்/ஒருத்தி தான் காதலிக்கும் அல்லது கல்யாணம் செய்துகொண்டிருக்கும் ஒருவனிடம்/ஒருத்தியிடன் கிடைக்காத சச்சி பியார், மற்றொருவனிடம்/ஒருத்தியிடம் கிடைப்பதாக/இருப்பதாக நினைக்கும் பொழுது ஜம்ப் அடிப்பது தான் இயற்கையான ஒன்றாகவும் சரியான ஒன்றாகவும் இருக்க முடியும்.

    மேற்சொன்னதை நம்பிக்கொண்டும் still பழைய புருஷன்/பொண்டாட்டி காதலன்/காதலியுடன் சேர்ந்திருப்பது என்பது நாடகமாகவும்/பொய்யாகவும் இருக்க முடியும். அப்படி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் பிடிக்காத காதலன்/காதலி பணக்காரன்/பணக்காரி ஸ்டேட்டஸ் அப்படி இப்படி என்று. ஆனால் ‘சச்சி பியார்’ முக்கியமா இல்லை இன்னபிற முக்கியமா என்பதை தேர்ந்தெடுப்பதிலும் வளர்ந்த விதம், சமுதாயத்தை அணுகும் போக்கு என ஏகப்பட்ட விஷயங்கள் காண்டெக்ஸ்டிற்கு வரும்.

    //ஆக சச்சி ப்யாருக்கும் bigamy க்கும் வெறும் ஒரு இரண்டு மாத கால அவகாசம் தான் வித்தியாசம்!//

    இது ஒரு நடுத்தர இந்திய மனப்பான்மை. சச்சி பியார் என்பது ஒருவன்/ஒருத்தி காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது மண வாழ்க்கையில் இருக்கும் பொழுதோ உணரலாம். அதை Bigamy ஆக்காமல் lawfully டிவர்ஸ் வாங்கிட்டு கல்யாணம் செய்துக்கிட்டா போச்சு. மேட்டர் வந்து நீங்கள் உண்மையிலேயே அதை சச்சி பியாரா உணருரீங்களா இல்லையா என்பது தான்! இல்லையா?

    டிஸ்கி: எனக்கு பதினெட்டு வயது இல்லை! ஹார்மோன் குறுகுறுப்புக்களைத் தாண்டி நான் காதலைப் பார்க்கிறேன்!

    //நிஜ வாழ்வில் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, 'உன்னோடு நான் கழித்த பொழுதுகள், இனிமை. நீங்கா நினைவோடு, உனக்காக உன் சந்தோஷத்துகாக இறைவனைப் பிரார்த்திப்பேன்' என்று பிரியும் காதலர்களே அதிகம்.//

    இதை நீங்கள் இந்தியாவை மய்யப்படுத்தி எழுதியது போல் இருக்கிறது. அவுதா?

    //அவர்கள் இதயத்துள் இருப்பது தான் 'சச்சி-ப்யார்' //

    அவர்கள் மனதுக்குள் இருப்பது கள்ளத்தனம்! சச்சி பியார் கிடையாது. தங்களையும் ஏமாற்றிக் கொண்டு தங்கள் வாழ்வோடு lawfully இணைந்தவர்களையும் ஏமாற்றுகிறவர்கள்.

    ReplyDelete
  3. பிரபல பதிவர் மோகன்தாஸ்லாம் முன்னால வந்து பின்னூட்டம்எழுதி இருக்காங்க ஷக்தி ம்ம்:)

    ஆக சச்சீ ப்யார் 'சீ,ப்யார்' ஆகவோ அல்லது 'cheapப்யார் ' ஆகவும மாறிடலாம்.

    ஆனாலும் இப்படி பழைய படத்துக்கு இப்போ விமர்சனம் எழுதற G(B)old woman(n) தாங்களே!!!(கோச்சிக்காதீங்க தோழி ரசிச்சேன் !)

    ReplyDelete
  4. ///எனக்கும் அதே பயம் தான்.///


    வாருங்கள் இளமாய கருத்துக்கு நன்றி :)
    அப்படியெல்லாம் நேராது என்று நம்புவோமாக.


    //ஆக சச்சீ ப்யார் 'சீ,ப்யார்' ஆகவோ அல்லது 'cheapப்யார் ' ஆகவும மாறிடலாம். ///

    வாருங்கள் ஷை :)

    Yeah cheap pyaar def from society's point :)

    ////ஆனாலும் இப்படி பழைய படத்துக்கு இப்போ விமர்சனம் எழுதற G(B)old woman(n) தாங்களே!!!(கோச்சிக்காதீங்க தோழி ரசிச்சேன் !)////

    பழைய பதிவு ஷை. இன்னும் நிறைய பதிவேற்றம் செய்ய இருக்கு. அப்புறம் தான் புதிதாய் எழுதலாமா என்று யோசிக்கப் போகிறேன்.

    வரவுக்கு நன்றி. எனக்கு கோச்சுக்கவே தெரியாதுன்னு என்பது உங்களுக்கு மறந்து போனதால, உங்க மேல கோவம் வரது :D

    ReplyDelete
  5. வாருங்கள் மோஹன் :)

    ////////Bigamy ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கும் பொழுது இன்னொரு திருமணம் செய்து கொள்வது அல்லவா? ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கும் பொழுது காதலிப்பதற்கும் இது ஒத்துவருமா?////////

    நீங்கள் கூறியதுதான் சரி. என்னுடையது தவறான வார்த்தை பிரயோகம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி :)

    //// “சச்சி பியார்” அப்படிங்கிறது ஒரு தேவாமிர்தமான வார்த்தை, ஒருவன்/ஒருத்தி தான் காதலிக்கும் அல்லது கல்யாணம் செய்துகொண்டிருக்கும் ஒருவனிடம்/ஒருத்தியிடன் கிடைக்காத சச்சி பியார், மற்றொருவனிடம்/ஒருத்தியிடம் கிடைப்பதாக/இருப்பதாக நினைக்கும் பொழுது ஜம்ப் அடிப்பது
    தான் இயற்கையான ஒன்றாகவும் சரியான ஒன்றாகவும் இருக்க முடியும்.////

    சரி, அதுவும் சரிப்படவில்லையென்றால் இன்னொரு ஜம்ப் அடிபார்களா? இதுக்கு முடிவே இருக்காதே?!? வாழ்கைன்னா என்னங்க? இருப்பதை
    வைத்து ஒராளவு compromise செஞ்சுக்கறது தானே திருமணம். நாம் கனவு காணும் "ultimate soul partner" கிடைப்பது அரிது. கிடைத்தவன் கிடைத்தவள் பாக்கியசாலி. ஒன்றை விட ஒன்று மேலாய் தோன்றிக்கொண்டே தான் இருக்கும். முடிவற்றது.

    செய்யலாம். நிச்சயமாக ஜம்ப் செய்யலாம். அப்படி ஜம்ப் செய்வதில் தம்பதிகள் இருவருக்கும் மனக்கசப்போ, வருத்தமோ இல்லைன்னா செய்யலாம்.
    அப்புறம் ஜம்ப் செய்யும் போது அவர்கள் பெயரைச் சொல்லும் பிள்ளைகள் இல்லையென்றால் செய்யலாம். பிள்ளைகள் இருந்தால், அவர்கள் யாருடன் ஜம்ப் செய்ய முடியும்? Its an emotional torture for kids.


    ///////இது ஒரு நடுத்தர இந்திய மனப்பான்மை. சச்சி பியார் என்பது ஒருவன்/ஒருத்தி காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது மண வாழ்க்கையில் இருக்கும் பொழுதோ உணரலாம். அதை Bigamy ஆக்காமல் lawfully டிவர்ஸ் வாங்கிட்டு கல்யாணம் செய்துக்கிட்டா போச்சு. மேட்டர் வந்து நீங்கள் உண்மையிலேயே அதை சச்சி பியாரா உணருரீங்களா இல்லையா என்பது தான்! இல்லையா?////////////

    Lawful divoce is not a problem mohan, again provided both parties mutually agree without ill feelings and they dont have issues (kids).

    இல்லாவிட்டால் ஒருவரின் விருப்பத்திற்காக, சுகத்திற்காக, பல பேரை மனவருத்தத்தில் ஆழ்த்துவது சரியல்ல என்பது பொதுவாய் எல்லோக்கும் உள்ள தர்ம சங்கடம்.

    /////// இதை நீங்கள் இந்தியாவை மய்யப்படுத்தி எழுதியது போல் இருக்கிறது. அவுதா?/////

    ஹ்ம்ம் இருக்கலாம். நம் நாட்டில் இப்படி நிறைய பேர் இருப்பதாய் கேள்வி.

    ReplyDelete
  6. மொத்தத்தில் mann மண்ணாங்கட்டி.
    (இது குமுதம் டைப் விமர்சனம்)

    ReplyDelete
  7. //மொத்தத்தில் mann மண்ணாங்கட்டி.
    (இது குமுதம் டைப் விமர்சனம்)//

    குமுதம் டைப் விமர்சனம் நச் ன்னு இருக்கு. ஆனாலும் ஆமிர்கான் முகம் நினைவுக்கு வந்தா, மண்ணாங்கட்டின்னு சொல்ல மனசு வர்ல :(

    ReplyDelete
  8. " அது எப்படிங்க, காதல் படங்களில் பலவற்றில் இருவரும் தனித்து பயணிக்கும் போது மட்டும் lift நின்றுவிடுகிறது? அவர்கள் வழிந்து, மேலே விழுந்து புரண்டு என ஒரு 15 நிமிடம் அவகாசம் கொடுத்துப் பிறகு மெதுவாய் திறக்கிறது। ஒவ்வொரு இளம் ஆணும் பெண்ணும் சத்தியமாய் liftக்கு கோவிலே கட்ட வேண்டும். "

    naanum pala varushamaa lift use pannittirukkEn :cry2:

    ReplyDelete