April 07, 2009

எதிரி (திரைப்பட அலசல்)

எச்சரிக்கை: இது எப்பொழுதோ வெளியாகிய "எதிரி" என்னும் வரலாற்று மிக்க சிறப்புப் படத்திற்கு எப்பொழுதோ எழுதிய அலசல். படம் சரியாக ஓட, ஏன் தத்தி தத்தி கூட நடக்கவில்லை. இப்பதிவின் ஒரே ஆறுதல் மாதவனின் நிழற்படம் :P

________________________________________________________________'ஆஹா, மாதவன் படம் பார்க்காமல் இருப்பதா?' என்ற அவருக்காக மட்டுமே படம் பார்த்த பிரஜைகளுள் நானும் ஒருத்தி. இதற்குத்தான் Star value என்று சொல்வார்கள் போலும்। ஸ்டார் வேல்யூவுக்கு வேட்டு வைக்கும் படம்.


ஆரம்பகால கலாட்டக்களுக்கும் கலகலப்புக்கும் முழுப் பொறுப்பு விவேக். கொழுந்து விட்டு எரியும் எரிச்சலை கொஞ்சம் தணிக்கிறார். கனிகா சிக்கென்று அழகாய்த்தான் இருக்கிறார். முதலில் அவர் தான் ஹீரோயின் என்பது போல் ஒரு பில்டப். சளைக்காமல் காமெடிக்கு கைகொடுத்திருக்கும் டில்லி கணேஷ் பரவாயில்லை. ஜெயிலில் இருந்து வெளிவரும் பொழுது, கோழை போல் வசனம் பேசுகிறார் மாதவன். அதனால் இந்தக் காரெக்டர் 'துப்பறியும் சாம்பு' போல் எசகுபிசகாய் ஏதோ செய்து பெயர் வாங்கிகொள்ளும் பாத்திரம் என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது.

'ஆஹா! நானா? குண்டனா? அடிதடிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?' என்று பூனை போல் முகத்தை வைத்துக்கொண்டு, பிறகு கனிகாவிற்காக ரௌடிகளுடன் புகுந்து விளாசுவது, படம் பார்க்கும் எல்லோரும் பூ சுற்றிக்கொண்டிருப்பவர்கள் என்ற நினைப்புடன் படம் பண்ணியதைக் காட்டுகிறது.

ரொம்ப சுவாரஸ்யமாய் போகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ பரவாயில்லை என்று போகிறது முதல் பாதி. யார் சதா? ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்? அட ஆள்மாறாட்டங்கள் வேறயா? ஏதோ சுவாரஸ்யக் கதையோ? என்று நினைக்கத் தொடங்கும் பொழுது இடைவேளை வந்து விடுகிறது.

இடைவேளை வரை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது வித்தியாசமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாதவனும் சதாவும் காதல் என்கிற வட்டத்துக்குள் ரொம்ப தாமதமாய் நுழைகிறார்கள். கடைசியில் பெயர் குழப்பம் காரணமாய் மாதவனை ஏதோ பெரிய ரௌடி என்று போலீஸ் இழுத்துக்கொண்டு போவது நம்பும்படியாய் இல்லை. பெரிய-சிறிய ரௌடிகளின் 'புகைப்பட-நகல்' எல்லாம் வைத்துக்கொண்டிருக்க மாட்டார்களா என்று மறுபடியும் லாஜிக் எதிர்பார்த்து செல்லும் பலரை, தட்டி உசுப்பி, தமிழ் படங்களின் உண்மை நிலையை செவிட்டில் அறைகிறது.

சதாவைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை.ரஹ்மானின் அந்தக் கால விசிறிகள் பலர் துக்கபடுவர். அவருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்ல.'அநாயசமாக ஒரு பொறுப்புள்ள அதிகாரி சுட்டுக்கொல்ல முடியுமா?' என்னும் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு, முன்பே சொன்னது போல் இடமில்லை.அடிபட்டு ஜெயிலில் இருக்கும் மாதவனுக்கு 'மேக்கப்' சிறிது சிரமம் எடுத்து செய்தது பாராட்டத்தக்கது.

முணுமுணுக்கிற அளவு கூட எந்த பாட்டும் இல்லை. ஹரிஹரன், ஷங்கர் மஹாதேவன் என்று பலரின் குரல் இருந்தும் எடுபடவில்லை.

படம் முடியும் சமயம் வரை, விட்டுக்கொடுக்காமல், கதையில் பயங்கர திருப்பம் வரவிருக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே இருந்தால்..., படமும் முடிந்து, சுபம் போட்டு விடுகிறார்கள்! (அடப்போங்கப்பா! )

இன்னும் பலமான கதையை எதிர்பார்த்த நாம் 'எதிரி'; நல்ல கதைகள் படம் பண்ணுபவர் என்ற இமேஜை கெடுத்த கே.எஸ்.ஆர். 'எதிரி'; இளம் ரசிக-ரசிகைகளை ஏமாற்றிய மாதவன் 'எதிரி'; டப்பா ம்யூசிக் போட்ட யுவன் சங்கர் ராஜா 'எதிரி'. இப்படி இந்தப் படத்துக்கு நிறைய எதிரிகள்!

10 comments:

 1. ஏதோ ஒரு அலைவரிசையில போட்டானுங்க.. முடியல.. கே.எஸ்.ஆர் எடுத்த கடைசி உருப்படி வரலாறு [எ] காட்ஃபாதர். அதுவும் முதல் அரைமணி நேரம் கொடுமை. முடிஞ்சா டி.வி.டி வாங்கி பாருங்க. மீள்பதிவெல்லாம் பலமா இருக்கு! முக்கிய பதிவு எதுவும் போட இருக்கீங்களா? :P

  ReplyDelete
 2. என் நண்பன் சொன்னது ஒன்று ஞாபகத்திற்க்கு வருகிற்து.இந்த (சிரஞ்சீவி-சிவாஜி நடித்தது)
  படமெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட்
  பண்றத விட ஒரு குயர் நோட்புக் வாங்கி வீட்டில் உட்கார்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதி புண்ணியம் தேடலாம்.

  அடுத்து MKT நடித்த ஹரிதாஸ்
  படத்தின் அலசல் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. வாங்க வெங்கிராஜா :D

  மீள்பதிவு தான். கிட்டத்தட்ட 70 - 80 பதிவுகள் இருக்கு. எல்லாவற்றையும் என் வலைப்பதிவில் ஏற்ற எண்ணியிருக்கிறேன். ஒரு நாளைக்கு 3 என்ற விதம் ஏற்றினால் தான் உண்டு. அதன் பின் என்னுடைய எழுத்தை தொடர எண்ணி எண்ணியுள்ளேன்.

  அதனால் இன்னொரு 1 மாசத்துக்கு மீள்பதிவுகளின் மழை தான் :P

  நன்றி வருகைக்கு. :)

  வாங்க ரவி :)

  /////படமெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட்
  பண்றத விட ஒரு குயர் நோட்புக் வாங்கி வீட்டில் உட்கார்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதி புண்ணியம் தேடலாம்./////

  எல்லாம் இந்த மாதவனால வந்தது. :D
  அவருக்காக பண்ற தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. :))))))

  //அடுத்து MKT நடித்த ஹரிதாஸ்
  படத்தின் அலசல் எதிர்பார்க்கிறேன்.//

  :)))))))))) ஒன்றும் சொல்ல முடியாது. எதுக்கும் மனச திடப்படுத்திக்கொங்க :D

  ReplyDelete
 4. //முணுமுணுக்கிற அளவு கூட எந்த பாட்டும் இல்லை. ஹரிஹரன், ஷங்கர் மஹாதேவன் என்று பலரின் குரல் இருந்தும் எடுபடவில்லை.//

  படத்தில் வரும் 3 பாட்டுக்கள் முக்கியமாக பறாங் விறாங் விறாங் என ராக் கிட்டாரில் மியுசிக் வரும் 2 பாடல்கள் எப்போதும் பிடிக்கும். அந்த இரைச்சலான இசையை விட்டுவிட்டு மெட்டையும் வரிகளையும் மட்டும் கவனித்துப்பாருங்கள். பாடலில் முதல் பாரா ( பல்லவியோ என்னமோனு சொல்வாங்களே )முடிஞ்சு முதல் இன்வீட்டபிள் கேப் மியுசிக் ( நன்றி விவேக் )முடிஞ்சு வரும் பாடல் வரிகளும்( கொஞ்சம் மொக்கையாக இருப்பினும் செல்லத்தனமாக இருக்கும்) மெட்டும் மிகவும் பிடித்தவை. அட்லீஸ்ட் மெட்டை மட்டுமாவது முணுமுணுத்துப்பாருங்களேன்.

  1. தமிழ் நாட்டுப் பெண்களை தங்கையென..
  2. இச்சுத்தரியா ஒரு ..

  ஹம்ம். இப்படி சொல்லீட்டீங்களே!!!!

  ReplyDelete
 5. //எல்லாம் இந்த மாதவனால வந்தது. :D
  அவருக்காக பண்ற தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. :))))))//

  ஐயோ!!!!
  இந்த மாதவன் ரசிகைகளாயிருக்கிற என் நண்பிகளில் லொள்ளுத்தெல்லை தாங்கமுடியாமல் அந்த அப்பாவி மனுசன ஏனோ பிடிக்காமலே போவுது
  (பொறாமையோ ??? )
  lol

  ReplyDelete
 6. ////ஐயோ!!!!
  இந்த மாதவன் ரசிகைகளாயிருக்கிற என் நண்பிகளில் லொள்ளுத்தெல்லை தாங்கமுடியாமல் அந்த அப்பாவி மனுசன ஏனோ பிடிக்காமலே போவுது
  (பொறாமையோ ??? )
  lol///

  வாங்க சுபாஷ் :D நிறைய பேருக்கு மாதவன் மேல் பொறாமை தான் lol

  :D


  ///மெட்டும் மிகவும் பிடித்தவை. அட்லீஸ்ட் மெட்டை மட்டுமாவது முணுமுணுத்துப்பாருங்களேன்.

  1. தமிழ் நாட்டுப் பெண்களை தங்கையென..
  2. இச்சுத்தரியா ஒரு ..

  ஹம்ம். இப்படி சொல்லீட்டீங்களே!!!!////

  ஹையோ இப்படி வருத்தப்படுறீங்களே!
  முதன் முறை கேட்ட போது மறு முறை கேட்கத்தூண்டுவதாய் இல்லை.

  உங்களுக்காக இன்னொரு முறை கேட்டுப்பார்த்து முடிவை மாற்றலாமா என்று உத்தேசிக்கிறேன்.

  வருகைக்கும் தருகைக்கும் நன்றி :)

  ReplyDelete
 7. ஆஹா!!

  யாரோ புண்யவான் "இந்த மொக்கை படத்துக்கு மொக்கை ரிவ்யூ அதுவும் இவ்ளோ வருடங்கள் கழித்து" என்ற கடுப்பில் down thumbsup பொட்டு போய்டாங்க :))))

  ReplyDelete
 8. ஷக்திப்ரியா,

  //:)))))))))) ஒன்றும் சொல்ல முடியாது. எதுக்கும் மனச திடப்படுத்திக்கொங்க :D//

  உங்க ஊர் வட்டாள் நாகராஜ் அடுத்து
  முத்தலிக் சொல்லி வைச்சுட்டேங்க.

  //:D//

  இது என்னங்க d?

  ReplyDelete
 9. //ஷக்திப்ரியா,

  //:)))))))))) ஒன்றும் சொல்ல முடியாது. எதுக்கும் மனச திடப்படுத்திக்கொங்க :D//

  உங்க ஊர் வட்டாள் நாகராஜ் அடுத்து
  முத்தலிக் சொல்லி வைச்சுட்டேங்க.

  //:D//

  இது என்னங்க d? //

  நான் ஷக்திப்ரபா, ப்ரியா இல்லை :)

  முத்தலிக்? புரியலை :?

  :D ன்ன பல் தெரியும் படி இளிப்பது grin என்று நாகரீகமாக சொல்லலாம் :)
  emoticon உலகத்துக்கு நீங்க புதுசு போல :)

  ReplyDelete
 10. //உங்களுக்காக இன்னொரு முறை கேட்டுப்பார்த்து முடிவை மாற்றலாமா என்று உத்தேசிக்கிறேன்.//

  பாத்துங்க அப்பவும் பிடிக்கலனா எதிரியாகவே போய்டுவோம்
  ஹிஹிஹி

  ReplyDelete