Showing posts with label Saguna. Show all posts
Showing posts with label Saguna. Show all posts

February 22, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (226-231) (with English Meanings)




சகுண உபாசனா

மஹாதந்த்ரா;
மஹாமந்த்ரா;
மஹாயந்த்ரா;
மஹாஸனா;
மஹா யாக க்ரம-ஆராத்யா;
மஹா பைரவ பூஜிதா;


() தந்த்ரா = தந்திர சாஸ்திரங்களும் அதன் வழிபாட்டு முறைகளும்

#226 மஹாந்த்ரா = தந்திர சாஸ்திரங்களின் இறுதி இலக்காக/ விளங்குபவள் *
* தந்திர சாஸ்திர வழிபாட்டு முறைகள், குண்டலினி சக்தியை எழும்பச் செய்து சஹஸ்ராரத்துடன் இணைக்கும் பயிற்சியில் கவனம் செலுத்துவதாக அமைகிறது. முக்தியை நோக்கிய பயண்த்திற்கான மற்றொரு யோக முறையாக சிலர் கருதுகின்றனர்.


#227 மஹாந்த்ரா = மந்திரங்களிலேயே அதி உன்னத மந்திரமாக திகழ்பவள்

() யந்த்ரா = பூஜைக்குறிய வழிபாட்டு தகடுகள் / தாயத்துக்கள் முதலியன

#228  ஹாந்த்ரா  = தலையாய முதன்மை யந்திரமாகியிருப்பவள்
#228 மஹாந்த்ரா =அதி உன்னத ஸ்ரீசக்ரமாக வீற்றிருப்பவள் ( யந்திரங்களில் தலையாயது)


() ஆசனா = இருப்பு- தங்கியிருத்தல் - ஆசனம்- அமர்ந்திருத்தல்

#229 மஹா(ஆ)சனா = சிகரத்தில் அரியாசனமிட்டு கொலுவிருப்பவள் *
* பிரபஞ்ச தோற்றப் படிநிலைகளின் முகட்டில் இருப்பவள்

() யாக = யாகங்கள் யக்ஞ்சங்கள் மூலம் நடத்தப்படும் தியாகம் - அர்பணிப்பு                                க்ரம = விதி முறைகள் - படிப்படியான முன்னேற்றம்                                                                    ஆராத்யா = பூஜை

#230 மஹா யாக க்ரம-ஆராத்யா = முறையாக செய்யப்படும் மாபெரும் யாகங்களால் ஆராதிக்கப்படுபவள்

#231 மஹா பைரவ பூஜிதா = மஹா பைரவரால் பூஜிக்கப்படுபவள் ( பைரவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார்)

(தொடர்வோம்)




Lalitha Sahasranama (226 - 231)


Saguna Upasana

MahaThanthra;
MahaManthra;
MahaYanthra;
MahaAsana;
Maha Yaga Krama-Araadhya;
Maha Bhairava Poojitha;


() Thanthra = Tantric worship and practices - Technique of Tantric rituals *

#226 MahaThanthra = Who is the supreme destination of Thantra shastras
* Tantric practices and shastras were helpful for raising the kundalini to reach
universal consciousness. Its supposedly the left handed path towards salvation.


#227 MahaManthra = Who is the most Salient of all mantras

() Yanthra = apparatus or device personifying the supreme

#228 MahaYanthra = Who is the apex of all forms of yanthras
#228 MahaYanthra = Who is the seated as sacred Srichakra yanthra (principal of all yantras)


() Asana = Staying-dwelling - seat/sitting

#229 Maha-Asana = She who has has positioned herself at the crest *
* As highest faculty in the hierarchy

() yaga = Sacrifices
Krama = procedures - progressing step by step
Araadhya = worship - to please


#230 Maha Yaga Krama-Aradhya = She who is worshipped throughImmense sacrifices adhering to rituals and procedures


#231 Maha Bhairava Poojitha = Who is worshipped by Lord Bhairava (form of Shiva)

(to continue)

February 13, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (207 - 214)




சகுண உபாசனை

மனோன்மனீ;
மாஹேஷ்வரீ;
மஹாதேவி;
மஹாலக்ஷ்மீ;
ம்ருடப்ரியா;
மஹாரூபா;
மஹாபூஜ்யா;
மஹாபாதக-நாஷினீ;

#207 மனோன்மனீ =  உயர்ந்த மனோ-நிலையின் மகுடமாக தன்னை பிரதிபலிப்பவள் *

* மனோன்மனீ என்ற நிலைபாட்டில் சஹஸ்ரமான சதாசிவத்திற்கு மிக அருகில் இருக்கிறாள். சஹஸ்ரத்திற்கு அருகில் இருப்பதால் சூஷ்ம நிலையில் மிக உயர்ந்த படியாக மனோன்மனீ என்ற நிலைப்பாட்டை குறிக்கலாம். கால-நேரம், அண்டவெளி முதலிய பரிமாணங்ளுக்கு அப்பாற்பட்ட ஸ்திதி.

#208 மாஹேஷ்வரீ = ஈஸ்வரனான மஹேஸ்வரனின் சகதர்மிணியானவள்

#209  மஹாதேவீ = ஈஸ்வரனான மஹாதேவனின் சகதர்மிணியானவள்
#209 மஹாதேவீ = தேவாதிதேவர்களும் போற்றும் தேவியாக, மஹாதேவியாக இருப்பவள்

#210 மஹாலக்ஷ்மீ = சுபீஷம் நல்கும் மஹாலக்ஷ்மியாக திகழ்பவள்

() மிருடா (Mrida) = சிவனின் நாமங்களில் ஒன்று

#211 மிருடப்ரியா = மிருடனின் நேசத்திற்குறியவள்; - மிருடனை நேசிப்பவள்
(இரு பொருளிலும் பொருந்தும்)

* சிவபுராணத்தில் மிருடன் என்ற பெயர் ஈஸ்வரனை விவரிக்கிறது. "மகிழ்ச்சியளிப்பவன்" என்று புரிதல்

#212 மஹாரூபா = பிரம்மாண்டமாய் பரந்து விரியும் உருவடிவத்திற்கு சொந்தமானவள்

() பூஜ்யா = மேன்மை பொருந்திய - போற்றுதற்குகந்த

#213 மஹாபூஜ்யா = பூஜைக்குறிய அதிஉன்னத உயர்ந்த ஸ்தானத்திற்கு உரியவள்

() மஹாபாதகம் = பெரும்பாபம்

#214 மஹாபாதக-நாசினீ = பெருங்குற்றத்தையும் அழித்து விடுபவள் (மன்னித்து அருள்பவள்)


(தொடர்வோம்) 



Lalitha Sahasranama (207 - 214)

Saguna Upasana


ManonmanI;
Maaheshvari;
MahaaDevi;
MahaLalskhmi;
Mridapriya;
Maharoopa;
Mahapoojya;
MahaPaathaka-Nashini;

#207 ManonmanI = Who is present in the exalted state of mind *

At this point or state she is dearer and near to Sadashiva (form of shiva closest to formless parabrahmam) We can thereby conclude this aspect of her is the closest to supreme truth. Since its closest to the truth it would be beyond time and space dimensions i.e. extremely sutble.
#208 MaahEShwari = She Who is the Consort of MahEshwara

#209 MahaaDevi = She who is the wife of Mahaadeva

#209 MahaaDevi = Who is the supreme goddess (ie deity most superior amongst devathas)

#210 MahaLakshmi = Who is worshipped as "MahaLakshmi", bestower of prosperity

() Mrida = Name of Shiva

#211 Mridapriya = Who is the fond of Mrida; Who is dear to Mrida *
(can infer bothways)

* In shiva purana, Mrida is a name associated with Lord Shiva which means "bestower of happiness"

#212 Maharoopa = Who has very extensive-expansive form

() Poojya = to be worshipped - venerable

#213 Mahapoojya = Who is the most honourable supreme entity, worthy of worship

() Mahapaathaka = great crime or sin

#214 Mahapathaka-Nashini = Who nullifies even the greatest miscreancy

( to be continued) 

Thanks to reference links

February 05, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (201 - 206) (with English Meanings)



சகுண உபாசனை

சத்கதிப்ரதா;
சர்வேஷ்வரீ;
சர்வ மயீ;
சர்வ மந்த்ர ஸ்வரூபிணீ;
சர்வ யந்த்ராத்மிகா;
சர்வ தந்த்ர ரூபா;

() சத்கதி = உத்தம வழி - உயர்ந்த கதி
    ப்ரதா = வழங்குதல்

#201 சத்கதிப்ரதா = நற்கதி அருள்பவள்

#202 சர்வேஷ்வரீ = சகலத்தையும் ஆட்சி செய்பவள்

() மயீ = உள்ளடக்கியிருத்தல்

#203 சர்வமயீ = அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவள்

() ஸ்வரூபா = வடிவம் - குணம்

#204 சர்வ-மந்த்ர-ஸ்வரூபிணீ = மந்திரங்கள் அனைத்தின் உருவடிவானவள்

() யந்த்ர = சாதனம்
( இவ்விடத்தில் 'மந்திர உருவேற்றப்பட்ட தகடுகள்', தாயத்துக்கள் என்ற பொருளில் வரும்)
ஆத்மிகா - உள்ளடக்கிய - கொண்டிருத்தல்

#205 சர்வ-யந்த்ராத்மிகா = அனைத்து யந்திரங்களின் சக்தியாக நிறைந்திருப்பவள்

() தந்த்ர = யுக்தி - நுணுக்கம் - போதனை
(வழிபாட்டு முறைகளின் நுணுக்கங்கள் என்ற பொருளில் இங்கு பொருளுணர்த்தப் படுகிறது)

#206 சர்வ-தந்த்ர-ரூபா = தந்திரமுறைகளின் சாரமாக விளங்குபவள்

(தொடர்வோம்)


Lalitha Sahasranama (201 - 206)

Saguna Upasana


Sadgathi-Pradha;

SarvEshvari;
Sarva-Mayi;
Sarva-Manthra-Swaroopini;
Sarva-Yanthraathmika;
Sarva-Thanthra-Roopa;

() Sadgathi = noble way - directing towards happiness and truth
    Pradha = supply - confer upon

#201 Sadgathi Pradha = Who ushers us towards virtuous path

#202 SarvEshvari = She Who is 'The almighty'; 'The supreme ruler'

() Mayi = is composed of - consisting of

#203 Sarva-Mayi = She who is all-pervasive

() Swaroopa = form or shape - nature - quality

#204 Sarva-Manthra-Swaroopini = Who is the quintessence of all mantras

() Yanthra = device
(In this context to mean amulet or Talisman ie. metalic plates with infused power)
Aathmika = composed of - embodiment of

#205 Sarva-Yanthraathmika = Who is present in all yanthras

() Thanthra = technique - doctrine 
( In this context to mean practices of worship)

#206 Sarva-Thanthra-Roopa = Who is in the vitality of all Thanthras (worship)

( to continue )

February 03, 2018

லலிதா சஹஸ்ர நாமம் (193 - 200) (with English Meanings



சகுண உபாசனை

துஷ்டதூரா;
துராசார ஷமனீ;
தோஷவர்ஜிதா;
சர்வக்ஞா
சாந்த்ர கருணா;
சமானாதிக வர்ஜிதா;
சர்வ ஷக்திமயீ;
சர்வ மங்களா;


#193 துஷ்டதூரா = கொடியவர்களிடமிருந்து தூர விலகியிருப்பவள்

() துராசார் = கொடும் செயல்கள் - பாப காரியங்கள் 
    ஷமன = நிறுத்தல்


#194 துராசாரமனீ = தீவினைகளை வேரறுப்பவள் 

() தோஷ = தவறு - பிழை
   வர்ஜிதா - இல்லாமலிருத்தல்


#195 தோர்ஜிதா = மாசற்றவள்

#196 சர்வக்ஞா = ஞானியானவள்

()     சாந்த்ர = மென்மை - அதிதீவிரம்

#197 சாந்த்ரருணா = மிகுந்த இரக்கமுள்ளவள்

() சமானா = சமமான
   அதிக = அதிகமான
   சமானாதிக = சரி நிகர் சமானம்
   வர்ஜிதா = இல்லாதிருத்தல்


#198 சமானாதிகர்ஜிதா = ஒப்புயர்வற்றவள் ; தன்னிகரற்றவள்

() ஷக்திமயீ = ஆற்றல் நிறைந்த

#199 சர்வக்திமயீ = சகல வல்லமையும் பொருந்தியவள்

#200 சர்வங்களா = அனைத்து அனுகூலங்களின் சாரமானவள்

(தொடர்வோம்)

Lalitha Sahasranama (193 - 200 )

Saguna Upasana

DhushtaDoora;
Duraachara-Shamani;
Dosha Varjitha;
Sarvajna;
Saandhra Karuna;
Samaanaadhika Varjithaa;
Sarva Shakthimayi;
Sarva-Mangala;



#193 Dhushta-Doora = Who is distant and guarded against impure sinners

() Dhuraachar = bad practices - evil doings
   Shamana = stop


#194 Duraachara Shamani = She Who severs misconducts

() Dosha = fault - error
   Varjitha = to be deprived of


#195 Dosha Varjithaa = She who is unpolluted

#196 Sarvajna = Who is omniscient

() Saandhra = soft - tender - intense

#197 Saandhra Karuna = Who is intensely compassionate

() Samaana-adhika = Equivalence - Co-rrelation
   Samana = equal
   Adhika = more - greater
   varijitha = without - free from


#198 Saamaanadhika Varjitha = Who has none on-par or superior to her (who is unparalleled)

() Shakthimaya = all powerful

#199 Sarva-Shakthimayi = Who is brimming with every divine potential

#200 Sarva MangaLa = Who is essence of all that is beneficial

(to continue)