Showing posts with label சகுண. Show all posts
Showing posts with label சகுண. Show all posts

February 22, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (226-231) (with English Meanings)




சகுண உபாசனா

மஹாதந்த்ரா;
மஹாமந்த்ரா;
மஹாயந்த்ரா;
மஹாஸனா;
மஹா யாக க்ரம-ஆராத்யா;
மஹா பைரவ பூஜிதா;


() தந்த்ரா = தந்திர சாஸ்திரங்களும் அதன் வழிபாட்டு முறைகளும்

#226 மஹாந்த்ரா = தந்திர சாஸ்திரங்களின் இறுதி இலக்காக/ விளங்குபவள் *
* தந்திர சாஸ்திர வழிபாட்டு முறைகள், குண்டலினி சக்தியை எழும்பச் செய்து சஹஸ்ராரத்துடன் இணைக்கும் பயிற்சியில் கவனம் செலுத்துவதாக அமைகிறது. முக்தியை நோக்கிய பயண்த்திற்கான மற்றொரு யோக முறையாக சிலர் கருதுகின்றனர்.


#227 மஹாந்த்ரா = மந்திரங்களிலேயே அதி உன்னத மந்திரமாக திகழ்பவள்

() யந்த்ரா = பூஜைக்குறிய வழிபாட்டு தகடுகள் / தாயத்துக்கள் முதலியன

#228  ஹாந்த்ரா  = தலையாய முதன்மை யந்திரமாகியிருப்பவள்
#228 மஹாந்த்ரா =அதி உன்னத ஸ்ரீசக்ரமாக வீற்றிருப்பவள் ( யந்திரங்களில் தலையாயது)


() ஆசனா = இருப்பு- தங்கியிருத்தல் - ஆசனம்- அமர்ந்திருத்தல்

#229 மஹா(ஆ)சனா = சிகரத்தில் அரியாசனமிட்டு கொலுவிருப்பவள் *
* பிரபஞ்ச தோற்றப் படிநிலைகளின் முகட்டில் இருப்பவள்

() யாக = யாகங்கள் யக்ஞ்சங்கள் மூலம் நடத்தப்படும் தியாகம் - அர்பணிப்பு                                க்ரம = விதி முறைகள் - படிப்படியான முன்னேற்றம்                                                                    ஆராத்யா = பூஜை

#230 மஹா யாக க்ரம-ஆராத்யா = முறையாக செய்யப்படும் மாபெரும் யாகங்களால் ஆராதிக்கப்படுபவள்

#231 மஹா பைரவ பூஜிதா = மஹா பைரவரால் பூஜிக்கப்படுபவள் ( பைரவர் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார்)

(தொடர்வோம்)




Lalitha Sahasranama (226 - 231)


Saguna Upasana

MahaThanthra;
MahaManthra;
MahaYanthra;
MahaAsana;
Maha Yaga Krama-Araadhya;
Maha Bhairava Poojitha;


() Thanthra = Tantric worship and practices - Technique of Tantric rituals *

#226 MahaThanthra = Who is the supreme destination of Thantra shastras
* Tantric practices and shastras were helpful for raising the kundalini to reach
universal consciousness. Its supposedly the left handed path towards salvation.


#227 MahaManthra = Who is the most Salient of all mantras

() Yanthra = apparatus or device personifying the supreme

#228 MahaYanthra = Who is the apex of all forms of yanthras
#228 MahaYanthra = Who is the seated as sacred Srichakra yanthra (principal of all yantras)


() Asana = Staying-dwelling - seat/sitting

#229 Maha-Asana = She who has has positioned herself at the crest *
* As highest faculty in the hierarchy

() yaga = Sacrifices
Krama = procedures - progressing step by step
Araadhya = worship - to please


#230 Maha Yaga Krama-Aradhya = She who is worshipped throughImmense sacrifices adhering to rituals and procedures


#231 Maha Bhairava Poojitha = Who is worshipped by Lord Bhairava (form of Shiva)

(to continue)

February 05, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (201 - 206) (with English Meanings)



சகுண உபாசனை

சத்கதிப்ரதா;
சர்வேஷ்வரீ;
சர்வ மயீ;
சர்வ மந்த்ர ஸ்வரூபிணீ;
சர்வ யந்த்ராத்மிகா;
சர்வ தந்த்ர ரூபா;

() சத்கதி = உத்தம வழி - உயர்ந்த கதி
    ப்ரதா = வழங்குதல்

#201 சத்கதிப்ரதா = நற்கதி அருள்பவள்

#202 சர்வேஷ்வரீ = சகலத்தையும் ஆட்சி செய்பவள்

() மயீ = உள்ளடக்கியிருத்தல்

#203 சர்வமயீ = அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவள்

() ஸ்வரூபா = வடிவம் - குணம்

#204 சர்வ-மந்த்ர-ஸ்வரூபிணீ = மந்திரங்கள் அனைத்தின் உருவடிவானவள்

() யந்த்ர = சாதனம்
( இவ்விடத்தில் 'மந்திர உருவேற்றப்பட்ட தகடுகள்', தாயத்துக்கள் என்ற பொருளில் வரும்)
ஆத்மிகா - உள்ளடக்கிய - கொண்டிருத்தல்

#205 சர்வ-யந்த்ராத்மிகா = அனைத்து யந்திரங்களின் சக்தியாக நிறைந்திருப்பவள்

() தந்த்ர = யுக்தி - நுணுக்கம் - போதனை
(வழிபாட்டு முறைகளின் நுணுக்கங்கள் என்ற பொருளில் இங்கு பொருளுணர்த்தப் படுகிறது)

#206 சர்வ-தந்த்ர-ரூபா = தந்திரமுறைகளின் சாரமாக விளங்குபவள்

(தொடர்வோம்)


Lalitha Sahasranama (201 - 206)

Saguna Upasana


Sadgathi-Pradha;

SarvEshvari;
Sarva-Mayi;
Sarva-Manthra-Swaroopini;
Sarva-Yanthraathmika;
Sarva-Thanthra-Roopa;

() Sadgathi = noble way - directing towards happiness and truth
    Pradha = supply - confer upon

#201 Sadgathi Pradha = Who ushers us towards virtuous path

#202 SarvEshvari = She Who is 'The almighty'; 'The supreme ruler'

() Mayi = is composed of - consisting of

#203 Sarva-Mayi = She who is all-pervasive

() Swaroopa = form or shape - nature - quality

#204 Sarva-Manthra-Swaroopini = Who is the quintessence of all mantras

() Yanthra = device
(In this context to mean amulet or Talisman ie. metalic plates with infused power)
Aathmika = composed of - embodiment of

#205 Sarva-Yanthraathmika = Who is present in all yanthras

() Thanthra = technique - doctrine 
( In this context to mean practices of worship)

#206 Sarva-Thanthra-Roopa = Who is in the vitality of all Thanthras (worship)

( to continue )