Showing posts with label Lalitha Sahsranama. Show all posts
Showing posts with label Lalitha Sahsranama. Show all posts

September 11, 2017

லலிதா சஹஸ்ர நாமம் - Lalitha Sahasranama - An Introduction



பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர், பெருங்கருணை கொண்டு லலிதா சஹஸ்ர-நாமத்தை நமக்கெல்லாம் விளக்கியருளினார். அகஸ்திய முனிவருக்கும் ஹயக்ரீவருக்கும் நடைபெரும் உரையாக, சம்பாஷணையாக சஹஸ்ர நாமம் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டது.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பரமசிவன் மன்மதனை உயிர்பித்த போது, கூடவே பண்டாசுரன் என்ற அசுரனும் தோன்றினான். ஈடு இணையற்ற சக்தி கொண்டவனாக, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்து கொடுங்கோல் புரிந்து வந்தான். தேவர்கள் கடுந்தவம் புரிந்து அவனை அழிக்க வல்ல சர்வசக்தியான ஆதிபராசக்தியை துதித்து வழிபட்டனர். யக்ஞத்திலிருந்து ஜகத்தை ஆளும் சக்தியானவள், பேரழகு பொருந்திய லலிதா தேவியாக அவதரித்தாள்.

முதல் 84 ஸ்லோகங்கள் லலிதா தேவியின் அங்க வர்ணனையாகவும் இக்கதையின் ஸ்லோக வடிவாகவும் திகழ்கிறது. சஹஸ்ர (ஆயிரம்) நாமங்களை கொண்ட லலிதாம்பிகையின் நாமங்கள், 'ரஹஸ்ய நாமங்கள்' என்றும் வழங்கப்படுகிறது. இந்த நாமாக்களின் அர்த்தம் உணர்ந்து தியானிக்க முற்பட்டால், பல கேள்விகளுக்கு விடையாக திகழலாம் என்ற எண்ணத்தால்,


வரும் நாட்களில்,

ஆயிரம் நாமாக்களை 4 அல்லது 5 ஸ்லோக வடிவாக பிரித்து, நான் இணையத்தில் படித்த விளக்கத்தை, ஆங்கிலத்திலும் தமிழிலும் என்னால் இயன்ற போது பதிவு செய்ய முயற்சி செய்கிறேன். என் புரிதல் மிகவும் சொற்பமாகவும் அற்பமாகவும் இருக்கலாம். அறிஞர், தெரிந்தோர் தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் விளக்கினாலோ அல்லது தெளிவுபடுத்தி விரிவுரை எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.
என் பதிவுகளை அதன் தொடர்புடைய கதைகளுக்கு சம்பாஷனைக்குறிய களமாகவும் பயன்படுத்தலாம். நன்றி.

எழுத்துப்பிழைகளையும், பொருட்பிழைகளையும் பொறுத்தருள்க.

**

Immature / amateur attempt to discuss the sahasra naama of goddess sri.lalithadevi as per my understanding based on extremely limited knowledge. I shall be posting 4 or 5 shlokas or names per post and try to discuss the meaning. I would elaborate a word or two in some places, if my understanding lets me to do so.
You can use this as a discussion post to comemnt on related stories or any other spiritual explanation from a different dimension. Thankyou.

Please, forgive my errors in language, usage or explanation.