June 18, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (675-700) (with English meanings)

Image result for panja yagnas
Pancha Yagnas

விபூதி விஸ்தாரம்

ப்ரம்மானந்தா;
பலிப்ரியா;
பாஷா ரூபா;
ப்ருஹ்த்சேனா;
பாவாபாவ விவர்ஜிதா;
சுகாராத்யா;
சுபகரீ;
ஷோபனா சுலபா-கதி;
ராஜ-ராஜேஶ்வரி;
ராஜ்ய தாயினி;
ராஜ்ய வல்லபா;
ராஜத் க்ருபா;
ராஜபீத நிவேஷித நிஜாஷ்ரிதா;
ராஜ்யலக்ஷ்மி;
கோஷநாதா;
சதுரங்க பலேஷ்வரி;
சாம்ராஜ்ய தாயினி;
சத்யசந்தா;
சாகர-மேகலா;
தீக்ஷிதா;
தைத்ய ஷமனி;
சர்வ-லோக வஷங்கரி;
சர்வார்த்த-தாத்ரி;
சாவித்ரி;
சச்சிதானந்த ரூபிணி;



#676 ப்ரம்மானந்தா =  பிரம்மானந்தத்தில் சதா திளைத்திருப்பவள் (மூலப்ரம்ம நிலையின் பரமானந்தம்) 


()
பலி = படையல் 

#677 பலிப்ரியா =   பக்தர்கள் தரும் காணிக்கைகளை விரும்புபவள். 

*ஒவ்வொரு யக்ஞங்களிலும் கொடுக்கப்படும் நிவேதனம் வேறுபடுகிறது. தேவ யக்ஞத்தில் பூஜை வழிபாடே தேவர்களுக்கு அளிக்கும் காணிக்கை. பித்ரு யக்ஞத்தில்  சிரார்த்த வழிபாடே யக்ஞ நிவேதனம். விருந்தோம்பலும் பரஸ்பர  அன்பும் மனுஷ்ய யக்ஞத்தின் நிவேதனம். பிரம்ம யக்ஞத்தில் அனைவருக்குமாக வழங்கும் ஞானபோதனையும் (ப்ரம்ம ஞானம் , தர்ம-சாஸ்திரம் பற்றிய அறிவினை பகிர்தல்) பூத யக்ஞத்தில் அனைத்து ஜீவராசிகளிடம் கொள்ளும் கருணையும் காணிக்கையாகிறது (பட்சி மிருகங்களுக்கு உணவுளித்தல், தாகம் தீர்த்தல், அதனை பாதுகாத்தல் முதலியன பூத-யக்ஞத்தில் சேரும்) 

() 
பாஷா = மொழி

#678 பாஷா ருபா = அனைத்து மொழிகளின் வடிவாக இருப்பவள் *

*மொழிவழியே ஞானமும் அறிவும் போதிக்கப்படுகிறது, எனவே அவள் மொழி வடிவானவள் 

()
ப்ருஹத்  = பிரம்மாண்டமான
சேனா = சேனை

#679 ப்ருஹத் சேனா = பிரம்மாண்டமான சேனையுடையவள் (பிரபஞ்சத்தையே ஆளத் தகுந்த சேனை)

()
பாவா-பாவ = இருத்தலும் இல்லாமையும்
விவர்ஜித் = விடுபட்ட - இல்லாத

#680 பாவா-பாவ விவர்ஜிதா = இருத்தலுக்கும் இல்லாமைக்கும் அப்பாற்பட்டவள் - நிலையானது நிலையற்றது முதலியவற்றிற்கு மேலானவள்

()
சுக = சுகம் -  சௌகரியம்
ஆராத்யா = போற்றுதற்குரிய

#681 சுகாராத்யா = சுலபமான முறையில் ஆராதிக்கத் தகுந்தவள் (சிரமமான முறைகளும் விதிகளும் அல்லாத சௌகரியமான எளிய முறை) 

()
ஷுபகர் = நலம் நல்குதல்

#682 ஷுபகரீ = நன்மையும் சுபீட்சமும்  நல்குபவள் 

()
ஷோபனா = நல்லது = மங்களம்
சுலப = எளிதாக
கதி = செல்லுதல்  
சுலபா-கதி = எளிய பாதையில் அணுகுதல்

#683 ஷோபனா சுலபா-கதி = எளிமையான வழிபாட்டிற்கு (இரங்கி) அதீத மங்களம் அருள்பவள் (பக்தர்களுக்கு மங்களம் தரும் முக்தி அருள்பவள்) 

#684 ராஜ ராஜேஷ்வரி = மன்னாதி மன்னர்களையும் பேரரசர்களையும் ஆளுபவள் (பிரபஞ்சத்தை  ஆள்பவர்களான மும்மூர்த்திகளையும் ஆளுபவள்) 


#684 ராஜ ராஜேஷ்வரி = ராஜ ராஜேஷ்வரரின் (சிவன்) பத்தினி

#685 ராஜ்ய தாயினி = உயர்ந்த  ராஜ்ஜியங்களை அருள்பவள் (  கைலாயம் வைகுண்டம் முதலிய உயர்-சாம்ராஜ்ய பதவி அளிப்பவள் ) 

()
வல்லபா =  பொறுப்பாளி
வல்லபா = பிரபலமான -  (பலருக்கும்) பிடித்தமான 

#686 ராஜ்ய வல்லபா = ராஜ்யத்தின் அதிபதி-பொறுப்பாளி (ப்ரபஞ்சம் எனும் ராஜ்ஜியம்) *

* அனைவராலும் விரும்பப்படுபவள் என்ற பொருளும் இருந்தாலும், "ராஜ்ய வல்லபா" என ராஜ்ஜியம் என்ற சொல்லுடன் இணைந்திருப்பதால் "அதன் பொறுப்பாளி" என்று பதம் பிரித்து உணர்தல் பொருத்தம். 

()
ராஜத் =  ராஜ - அளவில் பெரிய - உயர்ந்த
க்ருபா = கிருபை

#687 = ராஜத்-க்ருபா =  பெருங்கருணை கொண்டவள் 


()
பீட = ஆசனம்
ராஜபீட = சிம்மாசனம்
நிவேஷிதா = பிரவேசிக்கச் செய்தல்
ஆஷ்ரித் = பின்பற்றுபவர்கள்
நிஜ = தொடர்ந்து - சாஸ்வதமாக

#688 ராஜபீட நிவேஷித நிஜாஷ்ரிதா = மெய்யான  பக்தர்களை அரியாசனம் ஏற்றுபவள் 

#689 ராஜ்யலக்ஷ்மி = பிரபஞ்சமெனும் ராஜ்ஜியத்தின் அனைத்து செல்வ வளங்களுக்கும் உரிமை உள்ளவள் 

()
கோஷ = பொக்கிஷம்
நாத் = தலைமை - முதலாளி 

#690 கோஷநாதா = (பிரபஞ்சம் எனும்)  பெரும் பொக்கிஷத்தின் முதலாளி - அதனை இயக்குபவள் 

()
சதுரங்க = யானை, குதிரை, காலட்படைகள், ரதங்கள் ஆகிய நால்வகை
பலேஷ = படைத்தலைவி

#691 சதுரங்க பலேஷ்வரி = நால்வகை படைகளின் தலைவி *

* நால்வகையை அக-நோக்கு சமத்காரங்களாக உருவகப்படுத்தினால், மனம், புத்தி, அஹங்காரம், ஜீவன் ஆகிய நான்கிற்கும் அதிபதி என்பது உணர்தல். 

()
சாம்ராஜ்ய = சாம்ராஜ்ஜியம்
தாயின் = அருளல்

#692 சாம்ராஜ்ய தாயினி = பெரும் சாம்ராஜ்ஜியத்தை அருள்பவள் ( ஆத்மஞானமெனும் பெரும் சாம்ராஜ்ஜியம் - கைலாயம் வைகுண்டம் போன்ற உயர்லோக ப்ராப்தி) 

()
சந்தா = வாக்கு - சத்தியம்

#693 சத்ய சந்தா = வாக்குறுதிக்கு கடமைப் பட்டிருப்பவள் (தனது வாக்குறுதிக்கு கட்டுப்பட்டு பிரபஞ்சத்தை போஷிக்கிறாள்)

()
மேகலா = மேகலை (ஒட்டியாணம்) 
சாகர் = கடல் - சமுத்திரம் 

#694 சாகர மேகலா = பெருங்கடலையும் தனது ஒட்டியாணமென அலங்கரித்திருப்பவள் (பேரண்டத்தின் ஆதாரமானவளின் பிள்ளை-விளையாட்டு) 

()
தீக்ஷித்  = ஆன்மீக தீட்சை (துவக்கம்) 
தீக்ஷா = தீட்சை (அருளுரை) 
தீக்ஷகா = ஆன்மீக குரு

#695  தீக்ஷிதா =   தீட்சை அளித்து கரையேற்றுபவள் (தானே குருவாகி பக்தர்களுக்கு தீட்சையளித்து,  நற்போதனை செய்து ஆட்கொள்கிறாள் )


()
தைத்ய = அசுர (திதியின் புதல்வர்கள்)
ஷமன் = நிறுத்தல் - முடித்தல்

#696 தைத்ய ஷமனி = அசுரர்களை வதம் செய்பவள் 

()
வஷங்கர் = அடக்கி ஒடுக்குதல் -  தனக்கு கீழ்படுத்துதல் 

#697 சர்வலோக வஷங்கரி = அனைத்துலகையும் அடக்கி ஆளுபவள் 

()
அர்த = ஆசைகள்
சர்வார்த்த = அனைத்து ஆசைகளையும்
தாத்ரி = அருளல்

#698 சர்வார்த்த தாத்ரி = அனைத்து அபிலாஷைகளையும் பூர்த்தி செய்பவள் 

#699 சாவித்ரி = சாவித்ரி தேவியானவள் (சரஸ்வதி) *

*புராணங்களிலும் சில நூல்களிலும் சாவித்ரி தேவி,  அன்னை சரஸ்வதியின் அம்சமாக சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி மந்தரத்தின் அதிதேவதைகளாக காயத்ரி, சாவித்ரி மற்றும் சரஸ்வதி தேவியை குறிப்பிடுகின்றனர்.  

()
சத் = சத்தியம் (இருத்தல்) 
சித் = ஆறிவு - சித்தம்  (ஆத்ம அறிவு)
ஆனந்த = ஆனந்தம் 
சச்சிதானந்த = இருப்பு-நிலையின் உண்மை, பிரக்ஞை(அறிவு) மற்றும் ஆனந்தம் 

#700 சச்சிதானந்த ரூபிணி = பேரின்ப வடிவானவள் (  சாஸ்வதமான இருப்பு-நிலையின் பேரானந்தம்) 


(தொடரும்) 


Lalitha Sahasranama (650 - 675) 


Image result for savithri goddess
Goddess Savithri

Vibhoothi Visthaaram


Brahma-anandha;
Bali priya;
Bhasha roopa;
Bruhat Sena;
Bhaavaa-bhaava vivarjithaa;
Sukharadhya;
Subhakaree;
Shobana Sulabha gathi;
Raja-Rajeshwari;
Rajya Dhaayini;
Rajya vallabaa;
Rajat krupa;
Rajapeeta niveshitha nijashritha;
Rajyalakshmi;
Koshanatha ;
Chathuranga baleshwari;
Samrajya Dhayini;
Sathyasandha;
Sagara-Mekhala;
Dheekshitha;
Dhaithya Shamani;
Sarva-loka vashankari;
Sarvartha-Dhathri;
Savithri;
Sachidanandha Roopini;



#676 Brahmaanandha = She who is always in the state of Eternal bliss 
(aananda pertaining to the state of Parabrahman) 


()
Bali = offering - gift 

#677 Bali Priya = Who is fond of offerings (made by devotees) * 

*Yagna offerings are of different types. In Deva yagna, pooja takes the form of offering made towards Gods. Pitr yagna, has shrardha and thanks-giving as offering towards ancestors.  Manushya yagna, talks on love towards fellow beings and hospitality. Brahma yagna, is sharing knowledge (of dharma and Brahman) to one and all. Bhuta yagna, in which offerings or/and services are made to other  living creatures (feeding animals-birds, arranging for their shelter taking care of them and the likes) 

()
Basha = Language

#678 Basha Roopa = Who is present in the form of Languages (means to communicate) *
*Through languages knowledge and wisdom is imparted. 

()
Bruhat = mighty
Sena = army 

#679 Brihat Sena = She who has a huge army  (to administer the universe) 

()
Bhaavaa-bhaava = being and non-being
Vivarjith = without - excluded

#680 Bhaavaa-bhaava vivarjitha = She who is free from (beyond) "existence" and
"non-existence" *

*That which is permanent and impermanent

()
Sukha = pleasure - delight - comfort
Aaradhya = to adorn - praise

#681 Sukha-aradhya = Who can be worshipped with ease (no strenous formalities
required) 

()
Shubhakar = to cause good

#682 Shubhakaree = Who causes prosperity and welfare

()
Shobana = good - auspicious
Sulabha = easy to attain 
gathi= going - manner of going - movement
Sulabha Gathi = easy manner of approach

#683 Shobana Sulabha-gathi = She who grants auspicious goodness to those who choose the easy way to worship her (ie to be devoted).  ( gifts liberation and bliss to her devotees)  

#684 Raja Rajeshvari = Who rules the greatest Kings and emperors (of the universe)*
#684 Raja Rajeshvari = Wife of Raja Rajeshvara (Shiva) 

* Here to mean trinities who are the cosmic rulers. She rules them.

#685 Rajya Dhayini = Who gifts heavenly abodes and kingdoms (to her devotees) ( Eligible to exist in Kailash, Vaikunta and other higher realms )

()
Vallabha = to be incharge
vallabha = favourite - popular with 

#686 Rajya vallabha = Who is incharge of the kingdom of universe*

* Other meaning would read "who is everbody's favourite" . Since this name prefixes "Rajya" before her nama, "to rule or be incharge" seem to suit the context more. 

()
RAjath = Kingly - Massive  - Huge 
krupa = Mercy 

#687 Rajat Krupa = Whose has immense compassion  

()
Peeta = seat
Raajapeeta = Throne
niveshitha = made to enter 
aashrith = follower
nija  = constant - continual

#688 Rajapeeta niveshitha Nijashritha = Who enthrones her genuine devotees 

#689 Rajyalakshmi = Who owns the entire wealth of the kingdom (universal kingdom)

()
Kosha = treasure 
nath = Head - master 

#690 Koshanatha = who controls/heads the treasure-house (called the universe) 

()
Chathuranga = comprising elephants, chariots, cavalry and infantry
Balesha  = chief of the commander

#691 Chaturanga Baleshwari = who commands the four types of armies *

*Here it can to be understood as internal aspects of the self..i.e. mind, intellect,  Ahankar (ego)  and consciousness (self) 

()
Samrajya = empire
Dhayin = award - bestow

#692 Samrajya Dhayini = Who grants the gift of universal sovereign (highest empire of self realisation) (Eligibility to exist in Kailash, Vaikunta and similar higher realms) 

()
Sandha = vow or promise

#693 Sathya Sandha = She who is committed to truth ( in her governance) 

()
Mekhala = girdle (decorated jewellery or belt worn on waist ) 
Sagar = ocean -sea 

#694 Sagara Mekhala = Who adorns the mighty oceans as her girdle  (Mother of Brahmanda for whom it is a sport)


()
Dheekshith = to initiate - instruct 
Dheeksha = initiation 
Dheekshaka = spiritual guide 

#695 = Dheekshitha = Who gives spiritual initiation (acts as a guru to her devotees) 

()
Dhaithya = Asura ( sons of diti )
Shaman = to stop - end

#696 Dhaithya Shamani = Who destroys the demonic

()
vashankar = to subjugate

#697 Sarva loka Vashankari = Who brings every world under her domain and control

()
artha = desires 
Sarvartha = all desires 
Dhathri = to gift - award

#698 Sarvartha Dhathri = Who  fulfills all longings and desires (of her devotees) 

#699 Savithri = She who is Goddess Savithri (Saraswathi) *

* Some puranas and texts emphasise Goddess savithri to be aspect of Saraswathi. It is also said Gayathri mantra's presiding deities are Gayathri, Savithri and Saraswathi. 

()
Sat = truth (true existence) 
chit = soul - spirit 
Ananda = Joy 
Sachidananda = consisting of existence, consciousness and joy 

#700 Sachidananda Roopini = Who is in the form of Eternal bliss (eternal conscious bliss) 



(to Continue) 

June 13, 2019

கூற்றுவ நாயனார்

Image result for கூற்றுவ நாயனார்


குறுநில மன்னர் ஒருவர் முக்கண்ணனது திருநாமம் ஓதி அவர் பேரருளுக்கு பாத்திரமானார். அவர் தான் கூற்றுவ நாயனார். நாமம் ஓதியும் அடியார்களை போற்றியும் சிவபணிகள் செய்து வந்தார். சிவபக்தி பெரும் கொண்ட அவர் மிக்க போர்வீரம் கொண்டு நாற்புறமும் வெற்றி கண்டு குறு நிலத்தை பெரு நிலமென விரியச் செய்து நல்லரசாண்டார். ரத கஜ துரக பதாதிகளுடனான பெரும் சேனை கொண்டு பல நாடுகளை தமது குடையின் கீழ் கொணர்ந்தார்.
,
கூற்றுவன் என்றால் யமதர்மராஜனைக் குறிக்கும். எதிர் நிற்போர்க்கெல்லாம் கூற்றுவன் போல் தெரிந்ததால் கூற்றுவர். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களையும் வென்றார். மூவேந்தர்களை 'முடியுடை மூவேந்தர்கள்' என்று உயர்த்திப் போற்றுவர். அவர்களையும் வென்ற நாயன்மார் மணிமுடி தரித்து ஆள வேண்டும் என்ற ஆவல் கொள்கிறார். மணிமுடி தவிர மற்றனைத்தையும் பெற்றவராய் விளங்கியவர், மணிமுடி சூட்டி கௌவரவிக்கும்படி தில்லையில் வாழும் அந்தணர்களிடம் விண்ணப்பம் செய்கிறார்.
.
சோழ குலத்தவருக்கே உண்மையாக விளங்குபவர்களான அவர்கள் சோழ மன்னர்களைத் தவிர எவர்களுக்கும் முடி சூட்ட முடியாது என்று மறுத்துரைத்து, கூற்றுவரிடம் உள்ள பயத்தின் காரணத்தால் சேர நாட்டுக்கு சென்று விடுகின்றனர (சோழ மன்னர்கள் தில்லை, உறையூர் முதலிய ஊர்களில் முடி சூட்டிக்கொள்வது வழக்கம்)
.
அதட்டி மிரட்டி மணிமகுடத்தை பெற விரும்பாத நாயன்மார், மன வருத்தம் தாளாமல் சிவனாரை சிந்தனையில் நிறுத்தி, "எம்மை அந்தணர்கள் தலைவனாக ஏற்று மகுடம் அணிவிக்க மறுத்தாலும் ஐயனே உமது நடமாடும் திருவடியே எனக்கு மணிமுடியாக அருளல் வேண்டும். அதுவே எமக்கு பெரும் நிறைவத் தரும்" என்றெண்ணியவாறு உறங்கிப் போனார்.
.
கனவில் எம்பெருமான் அவர் நினைத்தவாறே தம் ஆடும் பாதத்தை திருமுடியாக்கி அணிவித்தார். கண்விழித்த மன்னன் தாம் பெற்ற வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றியாக இறையனாரின் அருளமுதை எண்ணி நெகிழ்ந்தார். வென்ற பெரு நிலத்தையெல்லாம் ஒரு கொடியின் கீழ் ஆண்டு, இறையனாரின் திருப்பாதத்தையே முடியாகக் கொண்டு ஆட்சி செய்தார். சிவத்தொண்டு பெரிதும் புரிந்து, கோவில்கள் சிறக்கவும், ஆகமவிதிப்படி பூஜைகள் தவறாது நடக்கவும், ஆவன செய்தார். நல்வாழ்வு வாழ்ந்து இறைவனின் பாதகமலத்தில் சேர்ந்து இன்புற்றார்.
.
ஓம் நமச்சிவாய

லலிதா சஹஸ்ர நாமம் (650-675) (`with English meanings)

Image result for cosmic form of goddess



விபூதி விஸ்தாரம்

விஞ்ஞாத்ரீ;
வேத்ய-வர்ஜிதா;
யோகினீ;
யோகதா;
யோக்யா;
யோகானந்தா;
யுகந்தரா;
இச்சா ஷக்தி ஞான ஷக்தி க்ரியா ஷக்தி  ஸ்வரூபிணீ;
சர்வாதாரா;
சுப்ரதிஷ்டா;
சத்-அசத் ரூப தாரிணீ;
அஷ்ட மூர்த்தி;
அஜா ஜேத்ரீ;
லோக யாத்ரா விதாயினீ;
ஏகாக்னீ;
பூம ரூபா;
நிர்த்வைதா;
த்வைத வர்ஜிதா;
அன்னதா;
வசுதா;
வ்ருத்தா;
ப்ரம்மாத்மைக்ய ஸ்வரூபிணி;
ப்ருஹதீ;
ப்ராம்மணி;
ப்ரம்மி;

()
விஞ்ஞான = விஞ்ஞானம் - அறிவு
விஞ்ஞாத்ர்-(ர) - அறிபவன் 

#651 விஞ்ஞாத்ரீ = சகலமும் அறிந்தவள் - சர்வஞானி 

()
வேத்யா = அறியப்படுதல் - அறிவு
வர்ஜித் = புறம் தள்ளிய - விடுபட்ட 

#652 வேத்ய-வர்ஜிதா = அறிவு மற்றும் அறியப்படும் பொருள்களைக் கடந்தவள் - அறிந்ததிலுருந்தும் அறியப்படாததிலிருந்தும் விடுபட்டு விளங்குபவள் 

()
யோகா - ஐக்கியம் (ஜீவனுக்கும் இறைவனுக்குமான ஐக்கியம்) 

#653 யோகினி = யோகக்கலையின் பிரதிபிம்பம் - சதாசிவனுடன் ஐக்கியத்திலிருப்பவள் . 

()
தா = வழங்குதல்

#654 யோகதா = யோகத்தைப் பற்றிய அறிவு, அனுபவம், ஆற்றலை அருளுபவள் 

()
யோக்யா = யோக்யதையுடைய - தகுதியுடைய

#655 யோக்யா = யோகத்தினால் அடையத்தகுந்தவள் 

()
ஆனந்தா = ஆனந்தம்

#656 யோகானந்தா = யோகத்தினால் அடையப்படும் பேரானந்தமானவள் 

()
தரா = தாங்கியிருத்தல்
யுக = யுகம் - சகாப்தம் -  கால அளவுகோல் 
( சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலி என்ற நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மஹாயுகம் )

#657 யுகந்தரா = முடிவற்ற யுகங்களை (சகாப்தங்கள்)  ஆளுபவள்- தரித்திருப்பவள் 

()
இச்சா = சித்தம் - விருப்பம்
க்ரியா = செயல் - ஆக்கம்
ஞான  =  ஞானம்

#658 இச்சா ஷக்தி க்ரியா ஷக்தி ஞான ஷக்தி ஸ்வரூபிணீ =  சிந்தனை, செயல் மற்றும் ஞானமெனும் மூவகை ஆற்றலாக வெளிப்படுபவள் *

* பிரபஞ்சத்தின் எந்தவொரு நிகழ்வும் முதலில் சிந்தனையாக முளைத்து, அதனை செயல்படுத்தும் அறிவின் துணையுடன் ஆக்கமாக உருபெறுகிறது 

#659 சர்வாதாரா = அனைத்திற்கும் (பிரபஞ்ச முழுமைக்கும்) ஆதாரமாக விளங்குபவள்

()
Prathishta = உறுதியான நிலைபாடு - ஸ்திரமாக நிற்பது

#660 சுப்ரதிஷ்டா = (அனைத்திற்குமான) ஸ்திரமான அஸ்திவாரமென தன்னை நிலை நிறுத்துபவள் 

()
சத் = உண்மை
அசத் =  உண்மையல்லாத
தாரணி = தரித்தல் - கொண்டிருத்தல்

#661 சத்-அசத் ரூப தாரிணீ =  நிலையானதான சத்தியத்தையும், சத்தியமில்லாத அனித்திய ரூபத்தையும் தரித்திருப்பவள் 
( நிலையான மற்றும் நிலையற்ற)

()
மூர்த்தி = உருவம் - ஆகிருதி 

#662 அஷ்ட மூர்த்தி = எட்டு படிமங்கள் தரிப்பவள் *

* அன்னை பராசக்தியின் அஷ்ட வடிவங்கள் (சப்த வடிவம் என்றும் நம்பிக்கை உண்டு). அவை பிரம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, சாமுண்டி, மஹேந்திரி எனும் எழுவருடன்,  நாரசிம்ஹி என்பது நம்பிக்கை. எழுவரோடு அஷ்ட தேவதையாக 'ரௌத்ரீ' என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.  மீனாட்சி மண்டபத்தில் அஷ்ட சக்திகளின் அவதாரமென எழுவருடன் சியாமளா தேவியை வணங்கப்பெறுகிறாள்.

()
அஜதா = மடமை
அஜானதா = அறியாமை
ஜேத்ர்-(ரு) / ஜைத்ரியா = வெற்றி கொள்ளுதல்

#663 அஜா ஜேத்ரீ = அறியாமையை வெற்றிகொண்டவள் ( ஞானத்தின் உருவானவள் என்பதால் அஞ்ஞானமோ அறிவீனமோ அவள்கை நெருங்குவதில்லை) 

()
லோக யாத்ரா = உலகியல்
விதாயினி = காரணமாகுதல்

#664 லோக யாத்ரா விதாயினீ = உலகியல் (லௌகீக - இம்மைக்கு உரிய)  நடவெடிக்கைகளை நடக்கசெய்பவள் அதற்கு காரணமாகியிருப்பவள். 

()
ஏகாகின் = தனித்திருத்தல்

#665 ஏகாகினி = ஏகாந்தமானவள் - தனித்திருப்பவள் -அத்வைதி (இன்னொன்று என இல்லாத ஒருமையானவள்) 

()
பூம = பலவற்றின் தொகுப்பு - அனேகம் 

#666 பூம ரூபா = பூரணத்தின் திரள் -  பெருவடிவத்தின் மொத்தத் தொகுப்பு 

()
நிர்- நிஸ்- நிஹ் = வினைச்சொற்களுக்கு முன் உபயோகிக்கப்படும் முன்னொட்டு (prefix) சொற்கள்.  "அது அல்லாத" - "அதனின்று விடுபட்ட" என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.

#667 நிர்-த்வைதா = இருமையற்றவள் -  த்வைதம் இல்லாத அத்வைதி (ஜீவனும் பிரம்மமும் ஒன்று எனும் அத்வைத வடிவம் பூண்டவள் ) 

()
வர்ஜிதா = விடுத்த - விலக்கிய

#668 த்வைத வர்ஜிதா = த்வைதமென்ற இருமைக் கோட்பாடை புறம்தள்ளியவள் (அத்வைதி) 

#669 அன்னதா = உணவளிப்பவள் * 

#670 வசுதா =  சுபீஷத்தை செல்வத்தை வழங்குபவள் *

* பிரபஞ்ச இயக்கத்தின் அத்தியாவசியங்களை அருளி, அதனை போஷித்து ரக்ஷிக்கும் பணி செய்கிறாள் . 

#671 வ்ரு(ரி)த்தா =   புராதனமானவள் - மூத்தவள் (முதன்மை - வேர் - காரணமானவள்) 

()
பிரம்மா = பரம்பிரம்மா - பரமாத்மா 
ஆத்மா = ஜீவன்
ஐக்ய = ஐக்கியம் - சங்கம்

#672 ப்ரம்மாத்மைக்ய ஸ்வரூபிணீ = ஜீவ- பிரம்மத்தின்  ஐக்கிய வடிவானவள் 

()
ப்ருஹத் = பெரிய - அளவற்ற

#673 ப்ருஹதி = பிரம்மாண்டமானவள் 

#674 பிராஹ்மணீ = பிராஹ்மணத்துவத்தின் பெண் அமசம் * 

* ஒரு சிலர் படைப்புக் கடவுள் பிரம்மாவின் மனைவி என்று புரிந்துணர்கின்றனர். ப்ராஹ்மண எனும் சொல் ப்ரம்ம தத்துவத்தை உணர்ந்தறிந்த ஜீவன் எனும் பொருளில் உணர்தல் வேண்டும்.

*675 ப்ரம்மி = வாக்கின் அதிபதியானவள் (வாணி - படைப்பு கடவுள் பிரம்மாவின் ஆற்றல் சக்தி) *

*ப்ரம்மி சப்த(அஷ்ட) சக்தி  அவதாரத்தின் முதன்மை வடிவம் 

(தொடரும்) 

Lalitha Sahasranama (650 - 675) 

Vibhoothi Visthaaram

Vignaathri
VEdhya-varjitha
Yogini
Yogadha
Yogya
Yogananda
Yugandhara
Iccha Shakthi Gnana shakthi Kriya Shakthi SwaroopiNi
Sarvaadhara
Supratishta
Sat-asat roopa dharini
Ashta moorthi
Aja jEthri
Loka yathra vidhayini
Ekaakini
Bhooma Roopa
Nirdwaitha
Dwaitha-Varjitha
Annadha
Vasudha
Vr(u)ddha 
Brahmaathmaikya-SwaroopiNi
Bruhathi
BrahmaNi
Brahmi

()
Vignaana = Science - knowledge 
Vignathr(a) =  knower - one who understands 

#651 Vignathree = She Who knows  (Omniscient) 

()
VEdhya = to be learnt or understood- knowledge
varjith = with exception - excluded

#652 Vedhya-Varjitha = Who surpasses knowing and knowledge - Whose presence is beyond knowing and not knowing. 


()
Yoga = union (of self with divine)

#653 Yogini = Who is yogic epitome - she who is in union with Sadhashiva  

()
dha = to give - bestow

#654 Yogadha = Who graces (the devotees)  the knowledge, experience
and power of Yoga

()
yogya =   eligible

#655 Yogyaa = Who is perceptible (can be attained) through Yoga

()
aanandha = delight 

#656 Yogananda = She who is the bliss attained through yoga 

()
Dhara = to contain - bear
Yuga = Yugas -Eon - time period divided as eras - units of time - (four age cycles of sathya, tretha, dwapara and kali makes one mahayuga) 

#657 Yugandhara = Who wears (ie bears, controls) the Endless eons 


()
Iccha = will - desire
Kriya  = action - activity 
Gnaana = wisdom - knowledge

#658  Ichcha Shakthi Kriya Shakthi Gnaana Shakthi Swaroopini = Who is in the form of Energy of Will, Wisdom  and Action *

Any macro or micro developments needs to be conceived and desired initially, it requires right knowledge to implement and then the actual accomplisment  of the act for its fruitification. 

()
Adhaara = base- foundation

#659 Sarva-aadhara = Who is the basis for totality  

()
Prathishta =   to stand firmly 

#660 Suprathishta = Who is well established - is the firm foundation (of everything) 

()
sat = truth
asat = untruth 
Dharini =   bearing - wearing

#661 Sat-asat Roopa Dharini = Who holds the forms of both truth and false (permanent and not permanent) 

()
murthi = form - image

#662 Ashta moorthy = Who assumes eight forms *

*Matrikas ie. incarnations of shakthi  are eight (seven according to some belief). They are Brahmi, Maheshvari, Kowmari, Vaishnavai, Varahi, Mahendri, Chamunda are the seven incarnations. Devotees mention Narasimhi as eighth devatha. Few mention "Rowthri" as the eighth form assumed by the Divine Mother. In Madhurai Meenakshi ashta shakthi Mantapam,
they have included "Shyamaladevi" as eighth incarnation of Parashakthi. 

()
Ajatha = ignorance  
Ajaanatha = ignorance
Jethr(u)  / Jaithriya = Conquerer / victory 

#663 Aja jethri = Who has conquered ignorance (she is embodiment of knowledge therefore
no shadow of ignorance is present) 

()
Loka-Yathra = worldly affairs 
vidhayini = to cause 

#664 Loka yathra Vidhayini = Who regulates (causes) the worldly existence
(causes the happenings) 

()
Ekakin = to be alone - solitary

#665 Ekakini = She who is the sole self (one without second)

()
Bhooma=  multitude - assembly

#666 Bhooma Roopa = She is the entirety (Sumtotal - macro form) 

()
Nir-nis-nih = prefixed for verbs which mean without - free from

#667 Nir-Dwaita = She who has no duality 

()
Varjitha = excluded  

#668 Dwaitha Varjitha - Who is devoid of dualism 

#669 Annadha = Who provides food *

#670 Vasudha = Who bestows wealth *

* Acts of sustenance (of the cosmos) 

#671 Vr(i)ddha = Who is the oldest (root - cause- eldest)

()
Brahma = Brahman - Paramatma (not the brahma the creator) 
Atma = the self
Aikya = union 

#672 Brahmathmaikya SwaroopiNi = She whose nature is that of 'union of self and brahman 

()
Brihat = large

#673 Brihathi = She who is immense - cosmic 

#674 BrahmaNi = Who is the feminine aspect of a  Brahmana  *

* Some prefer to relate this name as 'wife of brahma' (the creator). BrahmaNa is to be understood as the jiva who has gained the knowledge of Brahman ie the holy supreme.

#675 Brahmi = Who is the deity of speech  (Lord Brahma's energy- i.e. Saraswathi)  *

*Brahmi is one of the Ashta (or saptha) Matrikas 

(to Continue) 

June 09, 2019

காணாமல் போனவன்




நகைக்கடைகளில் தினமும் திருதியை
கடற்கரைகளில் அடிக்கடி போராட்டம்
கோவில்களில் நித்திய ஆராதனை
மசூதிகளில் மாறாத பிரார்த்தனை
தேவாலையங்களில் அறிவு போதனை
பல்சுவை விருந்தகங்களில் வழியும் கூட்டம்
பலப்பல கேளிக்கைப் பந்தல்கள்...
கூட்டத்துப் பேரொலிகளால் கைவிடப்பட்ட
யாசகனொருவன் தூரத்தில்
காலிப் பாத்திரத்தில்
கண்மூடி மெட்டிசைத்துக் கொண்டேயிருந்தான்....

June 04, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (641 - 650)

Image result for Upanishads rishi meditation


விபூதி விஸ்தாரம்

த்யான-கம்யா;
அபரிச்சேத்யா;
ஞானதா;
ஞான விக்ரஹா;
சர்வ வேதாந்த சம்வேத்யா;
சத்யானந்த ஸ்வரூபிணி;
லோபமுத்ரா-அர்சிதா;
லீலா க்ல்ருப்த ப்ரமாண்ட மண்டலா;
அத்ரிஷ்யா;
த்ரிஷ்ய ரஹிதா;

()
கம்யா = அடையக்கூடிய

#641 த்யான கம்யா = தியானத்தின் மூலம் அடையப்படுபவள் 

()
அபரிதா = வரையறுக்க இயலாத - சூழப்படாத
சேத்யா = பிளக்கப்பட்ட - வெட்டப்பட்ட
அபரிச்சேத = தொடர்ச்சி 

#642 அபரிச்சேத்யா = வரையறுக்க முடியாதவள் - எங்கும் நிறைந்து நிரம்பியிருப்பவள் 

()
தா = கொடுத்தல் - அனுக்கிரகித்தல் 

#643  ஞானதா =   ஞானம் அருள்பவள் ( பிரம்ம ஞானம் )

()
விக்ரஹா = வடிவம் - உருவம்

#644 ஞான விக்ரஹா =  ஞானத்தின் மொத்தவடிவமாக திகழ்பவள் - ஞானமூர்த்தி 

()
சம்வேத்யா = புரிந்துணர்தல் - கற்றல்

#645 சர்வ-வேதாந்த சம்வேத்யா = அனைத்து வேதாந்தங்களின் (உபநிஷதங்கள்) வழியே புரிந்துணரப் படுபவள் 

#646 சத்யானந்த ஸ்வரூபிணீ = மெய்ப்பொருளானவள் ; ஆனந்தத்தின் வடிவானவள் 

()
அர்ச்சித்= புகழ்தல் - வணங்குதல்

#647 லோபமுத்ரா-அர்ச்சிதா = லோபமுத்ராவால் போற்றப்படுபவள் *

* லோபமுத்ரா அகஸ்திய மாமுனியின் துணைவி.  சாக்த வழிபாட்டுக்கு
உறுதுணையாக இவரின் பங்களிப்பு அமைந்திருக்கிறது .

()
லீலா = விளையாட்டு 
க்ல்ருப்த = படைத்த - அமைக்கபப்ட்ட
ப்ரம்மாண்ட - மண்டலா = பிரபஞ்ச மண்டலம் ( பிரபஞ்ச முழுமையும்)

#648 லீலா க்ல்ருப்த ப்ரம்மாண்ட மண்டலா = அண்ட பிரபஞ்சம் முழுவதையும் சிறுபிள்ளை  விளையாட்டென (சடுதியில்)   உருவாக்கியவள் ( பிரபஞ்சப் படைப்பு அவளது தீரா விளையாட்டு ) 

()
த்ரிஷ்ய = பார்க்கும் - பார்க்கப்படும் - காட்சி
அத்ரிஷ்ய = பார்க்கப்படாத

#649 அத்ரிஷ்யா = மறைபொருளானவள் (பார்வையின் புரிதலுக்கு அப்பாற்பட்டவள்) 

()
ரஹிதா = இல்லாத-  விடுத்த - நீங்கிய

#650 த்ரிஷ்ய ரஹிதா = பார்வைக்கு புலப்படாதவள் (பார்வையின் பொருளுக்கு அகப்படாதவள்)*

*சென்ற நாமத்தின்  நீட்சி

#650 த்ரிஷ்ய ரஹிதா = பார்க்க ஏதுமற்றவள் (அவளே அனைத்துமாகி அத்வைதமாகி இருப்பதால், இன்னொன்று என எதுவுமற்ற நிலையில், பார்வைக்கு சர்வவியாபியான  அவளன்றி ஏதுமில்லை) 


(தொடரும்) 

Lalitha Sahasranama (641 - 650) 


Vibhoothi Visthaaram


Dhyana-gamya;
Aparichchedya;
Gnanadha;
Gnana Vigraha;
Sarva vEdantha samvEdya;
Satyananda SwaroopiNi;
Lopamudra-architha;
Leela Klruptha Brahmanda maNdala;
Adhrishya;
Drishya Rahitha;

()
gamya = attainable - perceptible 

#641 Dhyana-gamya = Who is accessible through meditation 

()
Aparita = not contained - not encompassed by - not surrounded
Chedya = to be cut- divided or split 
AparichchEda = continuance  

#642 AparichchEdya = She who is limitless (continous)  - Who is omnipresent 

()
dha = to give - bestow 

#643 Gnanadha = Who gifts knowledge (supreme knowledge of self) 

() 
Vigraha = configuration - body  - form - shape 

#644 Gnaana Vigraha = Embodiment of Gnaana (knowledge) 

()
SamvEdhya = to be understood or learnt

#645 Sarva-vEdanta Samvedhya = Who is to be understood or grasped
through all Vedantas (upanishads) 

#646 Sathya-ananda SwaroopiNi = Who is in the form of eternal truth and bliss 

()
Archith = to praise - salute

#647 Lopamudhra-architha = Who is worshipped by Lopamudra *

*Lopamudra is wife of Sage Agastya who contributed much towards 
Sakta tradition of hinduism . 

()
Leela - play - sport
Klruptha = produced - formed - arranged
Brahmanda-mandala = Cosmic zone (entire orb) (the totality) 

#648 Leela klruptha brahmanda-mandala = She Who has created
the entire cosmos like it is a sport (Entire creation is a child's play for her) 

()
Dhrishya = visual - view - that which is seen 
Adhrishya = unseen 

#649 Adhrishya = Who  is unrevealed (hidden ie not easily perceivable) 

()
Rahitha = deprived of - bereft of - foresaken - absent 

#650 Dhrishya Rahitha = Who cannot be seen (who is beyond visual grasp) *

#650 Dhrishya Rahitha = Who has nothing to see (as she is omnipresent everywhere,
there is no second entity (advaita), therefore she has nothing but herself) 


(to Continue) 


An earnest attempt to discuss meanings word by word - ShakthiPrabha