October 15, 2017

Lalitha Sahasranamam (55 - 57 ) தமிழ் விளக்கத்துடன்


Lalitha Sahasranamam (55 - 57 )



SumEru madhya shrungastha;
Shriman nagara nayika;
Chinthamani gruhanthastha;

() Sumeru = Mount Sumeru - highest - superior *Note1
Madhya = in between - interior - centre
Shrunga = mountain peak - top - summit - lotus
stha - being - existing

# 55 Sumeru madhya shrungastha - One whose is seated in the exalted central peak of Mount Sumeru *Note
() Shriman = auspicous - respected - revered 
Nagara = city - town
naayika = noble lady - heroine

# 56 Sriman nagara naayika = Who is the Queen of the Glorious city "Sri-Nagara"
() ChinthaamaNi = Gem of "thoughts" - Gem of "desires" - Gem that fulfills desires
gruha = house
antha = in - inside 
stha = being - existing

# 57 ChinthamaNi gruhanthastha = who resides in the house of precious-gems that fulfills desires -Who resides in the form of bestower of blessings * Note2



Pictures with Religious representations: 







Note2: Chintha means thought, wish or will. If she is said to rule the house of desire or thought, she resides in every being's free-will. Hence she is omnipotent. We can assume since she resides in the creation as its free-will, her presence in chinthamani gruha is by playing the role of 'bestower of boons' which fulfills desires.


Note1:
Where is Mount Meru? That is a big question much debated and has varied answers.
(1) Geography:
Some say it is a mountain that lies in Garhwal Himalayan range, in Utharkhand India. It is said that The mountain has three peaks: the harder central peak, was climbed by Valery Babanov a russian mountaineer in the year 2001.

(2) Some speculate that mount Meru relates to Pamirs in northwest of Kashmir.
(3) Interestingly, there is one more Mount Meru which is far more accessible and easier to climb that is in
Northern Tanzania west of Mount Kilimanjaro.

(4) Metaphysical: Hindu-Jain-Budhist Cosmology:
According to Ancient legends, is a sacred cosmological mountain with five peaks in Hindu, Jain and Buddhist cosmology and is considered to be the center of all the physical,  metaphysical and spiritual universes.Many famous Hindu and similar Jain as well as Buddhist temples have been built as symbolic representations of this mountain. Mount Meru is believed to be home of Gods and source of all power and central pivot of the universe. It has blazing appearence and is bestowed with super qualities. The most remarkable belief is, it is said to be a divine place was accessible and visible to humans during the satyug,tretayug and dwaparyug and is not visible in kaliyug.

(5) Ancient Greeks relating to mount Olympus where greek gods reside, reminds us of Hindu Mythology and Mount Meru.
லலிதா சஹஸ்ர நாமம் (55-57)


ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா;
ஸ்ரீமன் நகர நாயிகா;
சிந்தாமணி கிருஹாந்தஸ்தா;

() ஸுமேரு = ஸுமேரு மலை - மேரு மலை - உயர்ந்த - மேம்பட்ட
மத்ய = நடுவில் 
ஸ்ருங்க = மலையுச்சி
ஸ்தா = இருப்பது

# 55 ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா = உயர்ந்த ஸுமேரு மலையின் நடுச் சிகரத்தின் உச்சியில் குடிகொண்டிருப்பவள் *குறிப்பு1
() ஸ்ரீமன் = மங்களமான - மேன்மைதங்கிய
நகர = நகரம் 
நாயிகா = நாயகி - எஜமானி

# 56 ஸ்ரீமன் நகர நாயிகா = பெருமைக்குறிய 'ஸ்ரீ' என்ற நகரத்தின் அரசியாக விளங்குபவள்
() சிந்தாமணி = எண்ணங்களாலான ரத்தினக்கல் - அபிலாஷைகளின் ரத்தினம்
க்ருஹா = வீடு
அந்த - உள் - உட்புறம்
ஸ்தா - இருத்தல்

# 57 சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா = எண்ணம் என்ற ரத்தினங்களான வீட்டின் உள்ளுரைபவள் - இச்சை என்ற ரத்தினங்களாலான இல்லத்தில் உள்ளுரைபவள் -இச்சைகளை என்ற ரத்தினங்களின் உள் உறைந்து அவை நிறைவேற வரம் அருள்பவள். *குறிப்பு2



குறிப்பு 2 : சிந்தா என்பது எண்ணம் அல்லது இச்சையை குறிக்கும் சொல். எண்ணமே ரத்தினமாக கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவள். எண்ணங்களுக்குள்ளும்அ பிலாஷைகளுக்குள்ளும் வசிப்பவள் என்றால் அவள் சர்வவியாபியாக இருக்க வேண்டும். தோற்றத்தின் அனைத்து அம்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். எண்ணங்களுள் அவள் வசிப்பிடம் இருந்தால் அவள் வசிக்கும் வீடு இச்சைகளை பூர்த்தி செய்யும் பேரருளாகவும் பெருவரமாகவும் விளங்கும் என்பது புரிதல்.

குறிப்பு1: மேருமலை எங்கு உள்ளது என்ற கேள்விக்கு பலதரப்பட்ட விடைகள் சொல்லப்படுகின்றன.
(1) இம்மலை நம் இந்திய நாடிலுள்ள உத்தரகண்ட் மாநிலத்தின், கார்வல் இமாலய மலைத்தொடரில் உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.  மலைகளின் மூன்று சிகரங்களில் தொடவதற்கு மிகக் கடினமாக இருந்த நடுச்சிகரத்தை "valery Babnov" என்ற ரஷ்ய மலைஏறுனர் 2001 ஆம் ஆண்டு ஏறியதாக குறிப்புள்ளது.

(2) இன்னும் சிலர் மேருமலை காஷ்மீரத்தின் வடமேற்கிலுள்ள பாமிர் மலைத்தொடருடன் இணைத்து கூறுகின்றனர்.
(3) வடக்கு தான்ஸேனியாவில் கிளிமஞ்சரோவிற்கு மேற்கே உள்ள மலையையும் மேரு மலை என்று குறிப்பிடுகிறனர். இம்மலைச்சிகரம் எட்டுவதற்கும் ஏறுதற்கும் சற்றே எளிதாக இருக்கிறதாம். ஏறக்குறைய புவியியல் மையப்பகுதியாக இது விளங்குகிறது.

(4) ஹிந்து - ஜைன- புத்தமத நம்பிக்கைகள்:
புராண கூற்றுப்படி, மேரு மலை ஐந்து சிகரங்களை உடையதாக நம்பபடுகிறது. இம்மலை சூக்ஷ்ம, ஸ்தூல, தேவ லோகங்களுக்கும், இப்பரபஞ்சத்துக்கும் மையப்பகுதியாக கருதப்படுகிறது. இம்மலையின் அமைப்பையொட்டியும், இதனை அடிப்படையாகக் கொண்டும் பல ஹிந்து ஜைன மற்றும் புத்தமதக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கடவுள்களும் தேவர்களும் ஆற்றலின் மூலஸ்தானமாகவும் சக்தியின் ஆதாரமாகவும் விளங்கும் இம்மலையையே வசிப்பிடமாக கொண்டுள்ளனர். பிரகாசத்துடன் தங்கமாய் மின்னும் தன்மையுடையதாகவும் பல உயர்ந்த பண்புகளையும் கொண்டதாய் இம்மலை போற்றப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த இம்மலை பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதாகவும் எட்டக்கூடியதாகவும் மற்ற யுகங்களான துவாபர, த்ரேதா மற்றும் ஸத்ய யுகத்தில் இருந்துள்ளது. கலியுகத்தில் இம்மலை அறிவுக்கும் புலன்களுக்கும் புலப்படுவது துர்லபம்.

(5) கிரேக்கர்கள் போற்றுதலுக்குறியதும் கிரேக்க கடவுளர்களின் இருப்பிடமாய் கூறப்படும் 'ஒலிம்பஸ் மலை' ஏறக்குறைய இதனை நினைவுபடுத்துகிறது.


Source: Many websites including 
Quora, Hinduwebsites, Mythology, wikipedia, speakingtree, tanzania expeditions etc.


Do visit Speakingtree which talks on multifaceted facts about Mount Meru.

https://www.speakingtree.in/allslides/mount-meru-hell-and-paradise-on-one-mountain/161110

2 comments:

  1. அன்பான தீப ஒளி வாழ்த்துக்கள், ஷக்தி!

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜீவி....தங்களுக்கு தங்கள் குடும்பத்தாருக்கும் கனிவான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete