October 04, 2017

Lalitha Sahasranama (31-36) ஆங்கிலம்-தமிழ் விளக்கத்துடன்

லலிதா ஸஹஸ்ரநாமம் (31-36)




கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா;
ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா;
காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி;
நாப்யாலவால ரோமாலி லதா ஃபல குசத்வயீ;
லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா;
ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா;


() கனகாங்கத = தங்க வளையல் - கனக என்றால் தங்கம்
கேயூர = வங்கி (புஜங்களில் அணியும் அணிகலன்) 
கமனீய = ரம்யமான
புஜ = கைகள்
அன்விதா = அதனுடன் - கூடிய

# 31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா = தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள்

() ரத்ன = ரத்தினங்கள் / மணிகள்
க்ரைவேய = பதக்கமாலை - ஹாரம்
சிந்தாக = ஓயாது / அலைகழிக்கப்படுவது
லோல = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல்
முக்தபல் = முத்துக்கள்
அன்விதா = சேர்ந்த - கூடிய

# 32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா = முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள் *குறிப்பு

() காமேஷ்வர ப்ரேம = காமேஷ்வரனின் அன்பு - ப்ரேமை
ரதன-மணி = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற
ப்ரதிபண = ப்ரதியாக - பரிமாற்றம்
ஸ்தனி = மார்பகம்

# 33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி = காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள்

() நாப்யாலவால = தொப்புள்கொடியிலிருந்து 
ரோமாலி = முடி
லதா = கொடி
ஃபல = கனிகள்
குச த்வயீ = இரு மார்பகங்கள்

# 34 நாப்யாலவால ரோமாலி லதா ஃபல குசத்வயீ = தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள்

() லக்ஷய = கண்ணுக்கு புலப்படும்
ரோம = முடி
லதா = கொடி
தாரத = புறப்படுதல் 
சமுன்னேய = முடிவுக்கு வருதல்
மத்யமா = இடுப்புப் பகுதி - இடை

# 35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா = கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள்

() ஸ்தனபார = கனக்கும் மார்பகங்கள்
தலன் = ஒடிவது 
மத்ய = வயிற்றுப்பகுதி - இடை
பட்டபந்த = ஒட்டியானம்
வலித்ரயா = மூம்மடிப்புகள்

# 36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும் மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்.

குறிப்பு: "லோல" என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள். "லோலக" என்றால் பதக்கம் என்று கொள்ளலாம்.'லோலக' என்று பொருள் கொண்டு ரத்தினங்களாலான பதக்கமும் முத்து ஹாரமும் அசைந்தாடுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

சிந்தனைச் சிதறல்: ஸ்தனங்களின் அழகையும் பாரத்தையும் குறிப்பிடும் இடங்களில் சூக்ஷ்ம அர்த்தம் சிலவும் கற்பித்துக் கொள்ளலாம். கனத்த மார்பகத்தின் அழகை, உலகன்னையின் பரந்த அன்பின் அம்சமாகக் காணலாம். இயற்கையே ப்ரக்ருதியாகவும், ஷக்தியாகவும் வரித்து, பரமபுருஷனை சிவனாக பாவித்தால், ப்ரக்ருதி-புருஷ ப்ரேம பரிமாற்றங்கள் புரியலாம். பரமபுருஷனின் விலையில்லா அன்பிற்கு இயற்கை கொள்ளை  அழகையும் ஸ்ருஷ்டித்து பரிசளிப்பதாகவும் புரிந்து கொள்ளல் சாத்தியம்.



Lalitha Sahasranama (31-36)


Kanakangadha keyura kamaniye bujanvitha;
Rathna graivEya chinthaaka lola muktha phalanvitha;
Kameshwara prema-rathna maNi prathi paNa sthani;
Nabhyala vaala Romali latha phala kucha dwayi;
Lakshaya roma latha dharatha samunneya madhyama;
Sthana bara dalan madhya patta bandha valithraya;

() kanakangadha = Golden Bracelet (kanaka is gold) 
keyura = armlet
kamaniya = pleasing
buja = hands
anvita = linked - along with

# 31 Kanakangadha keyura kamaniye bujanvitha = Whose hands are elegantly adorned with Golden bracelets and armlets

() Rathna = gems - jewel
GraivEya = necklace
Chinthaaka = restlessly
lola = swinging 
muktha-phal = pearls 
anvitha = together - along with

#  32 Rathna graivEya chinthaaka lola muktha phalanvitha = She whose necklace studded with gems and pearls are swaying beautifully *note

() Kameshwara-prema = Love of Lord shiva
rathna-maNi = gem or jewels
prathipaNa = reciprocate 
sthani = breasts

# 33 Kameshwara prema-rathna maNi prathipaNa sthani = Who has reciprocated precious love of lord shiva by offering her feminity

() Nabhyala vaala = umblicus - from the navel
romali = line of hair
latha = creeper 
phala = fruits 
kucha dwayi = both the bosoms

# 34 Nabhyala vaala Romali latha phala kucha dwayi = Whose bosoms are like two fruits of creeper rising from her navel

() Lakshaya = is noticeable
roma = hair
latha = creeper
dharatha = to take off 
samunneya = can be concluded 
madhyama = mid riff

# 35 Lakshaya roma latha dharatha samunneya madhyama = Whose creeper like hair in the mid-riff is the only proof that she has a waist.

() Sthana-bara = weight of breasts
dalan = breaking 
madhya = mid riff 
pattabandha = Jewelled girdle 
valithraya = three folds

# 36 Sthana bara dalan madhya pattabandha valithraya = Whose mid=riff is three folded and whose slender waist is embellished with jewelled-girdle to protect from heavy bosoms.

Note: Lola means to sway or swing. Some explain it to mean "lolaka" which refers to dollar or pendent ( Whose dollar or pendant is studded with gems and necklace string of pearls swinging beautifully)

Reflections: Subtler understanding of the entire verses is possible upon more contemplations. Her bosoms or feminity may mean to talk on love or grace of goddess upon creation. It means motherhood. Offering her bosoms for the love of lord Shiva, may address 'prakruthi and purush' relationship. Priceless love of purush has resulted in abudant beauty of creation by prakruthi and its universal role as a mother.


No comments:

Post a Comment