October 12, 2017

Lalitha Sahasranama (44 - 54) (தமிழ் விளக்கத்துடன்)

Lalitha Sahasranama (44 - 54)



Naka dheedhithi sanjchanna namajjana thamOguNa;

Pada Dwaya Prabha jaala paraakrutha sarOruha;
Sinjyaana maNi manjeera manditha sri padhambuja;
Marali mandha gamana;
Maha laavanya shevadhi;
Sarvaaruna;
aavandhyangi;
Sarvaabharana Bhooshitha;
Shiva kameshwarangastha;
Shiva;
Swdheena vallaba;


() naka = finger nail - toe nail

dheedhithi = shine - reflection - ray - splendour
sanjchanna = hidden or covered
na = not - negate - no 
majjana = to sink - to sink in hell
thamO = dark / ignorance
gunaa = character (that causes ignorance (thamOguNa)


# 44 Naka dheedhithi sanjchanna namajjana thamOguNa; = Brilliance of whose nails is sufficient to dispel the hidden darkness of ignorance (of the devotees)
() padha = foot

dvaya = two - both
prabha = sheen - spelendour
jaala = collection - web
paraakrutha = to reject - dismiss
sarOruh - Lotus

# 45 Pada Dwaya Prabha jaala paraakrutha sarOruha; = Whose exquisite pair of radiant foot derides the beauty of lotus
() Sinjyaana = tinkling 

maNi = beads 
manjeera = anklet 
manditha = adorned 
Sri padha = glorious feet 
ambuja = lotus - like the lotus

# 46 Sinjyaana maNi manjeera manditha sri padhambuja; = Who has garnished her glorious feet using anklets studded with bells and gems that jingle melodiously.
() maraali = swan

madha = slow - moving slowly or softly
gamana = style of walk - departure - moving

# 47 Marali mandha gamana; = Whose delicate and graceful gait is like that of a swan
() maha = great 

laavanya = beauty - elegance
shevadhi = treasure-house

# 48 maha laavanya shevathi = She who is the treasury of immense beauty
() sarva = comprising all, entire, of all sorts

aruNa = color of red- ruby- rising sun

# 49 SarvaaruNa = who is linked with everything red - who is entirely red in every detail.
() an - not - negate - anti 

avadhya = inferior - low
anga = body - component of the body

# 50 anavadhyangi = whose body is pristine, superior and unparelleled
() Sarva = every - entire

abharana = ornaments
bhooshitha = adorned

# 51 SarvaabharaNa bhooshitha = She who dressed with complete fineries
() Shiva kameshwara = Lord shiva

angastha = part of him - his body - lap

# 52 Shiva kameshwarangastha = She who is part of Shiva * Note
() Shiva = Shiva
# 53 Shiva = Who has all attributes of Shiva - Who is Shiva
() Swaadheena = self-standing / independant / free-willed

vallabha = lover or husband -beloved

# 54 Swaadheena vallaba = Who is independant of her beloved Shiva i.e (Who exists on her free-will) *

Note1: Anga means body. Few scholars refer anga as lap and worship her as "Lalithambika who sits on the lap of shiva". If we assume anga to be the body, since shiva is artha-nari and Ambika claims part of him as arthaangini she is "shiva kameshwara-angastha" hence, 'she is part of shiva'.

Note2: Though many interpret "swadeena vallaba" as one who controls shiva, I have assumed
swadeena to be "independant". Since principle of Shakthi cannot play without shiva or purush,
we can assume Shakthi has complete free-will over shiva ie purush abides by her (hence she controls him)


( We complete "keshadhi paadha" description of abhirami and proceed to glorify "sri nagara" - celestial-subtle plane or place where she resides. )



லலிதா சஹஸ்ரநாமம் (44-54)


நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா;
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா;
சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா;
மராலீ மந்தகமனா;
மஹா லாவண்ய ஷேவதி; 
ஸர்வாருணா ;
அனவத்யாங்கீ ;
ஸர்வாபரணபூஷிதா;
ஶிவ காமேஷ்வராங்கஸ்தா; 
ஶிவா; 
ஸ்வாதீனவல்லபா ;

() நக = நகங்கள்
தீதிதி = மினுமினுப்பு 
ஸஞ்சன்ன = மறைந்திருக்கும்
ந = அல்லாத 
மஜ்ஜன = மூழ்குதல் - நரகத்தில் மூழ்குதல்
தமோ = இருள் / அஞ்ஞானம்
குணா = குணம்

# 44 நக தீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணா; = நகங்களின் காந்தியாலேயே மண்டியிருக்கும் இருளென்ற அஞ்ஞானத்தை போக்க வல்லவள்  (பக்தர்களின் புத்தியை மூடியிருக்கும் அஞ்ஞானம் - நரகத்தில் மூழ்கச் செய்யும் அஞ்ஞானம்)

() பத = பாதம்
த்வய = இரு - இரண்டு
ப்ரபா = பளபளப்பு
ஜால = பிணைப்பு - வலை
பராக்ருத = எள்ளி நகையாடுதல், ஒதுக்குதல்
சரோருஹ் = தாமரை

# 45 பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா; = தாமரைகளை இகழக்கூடியதாய் திகழும் ஒளிர்மை பொருந்திய பாதங்கள் கொண்டவள்
() சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும்
மணி = முத்துக்கள் - மணிகள் - ரத்தினங்கள்
மஞ்ஜீர = கொலுசு
மண்டித = அழகூட்டும்
ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள் 
அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற

# 46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா; = பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்.
() மராலீ = அன்னப்பறவை
மந்த = மெதுவான = மென்மையான
கமனா = நடை - நடையழகு - புறப்பாடு

# 47 மராலீ மந்தகமனா; = அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள்
() மஹா = மஹத்துவம் பொருந்திய
லாவண்ய = லாவண்யம் = எழில்
ஷெவதீ = பொற்கிடங்கு

# 48 மஹா லாவண்ய ஷேவதி; = பேரழகின் பொற்கிடங்காக விளங்குபவள்
() ஸர்வ = எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும் 
அருண = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு

# 49 ஸர்வாருணா = ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள்
() அன் = மறுக்கும் - அல்லாத 
அவத்ய = கீழ்மை - தரமற்ற
அங்க = உடல் - அங்கம்

# 50 அனவத்யாங்கீ = நிகரில்லாத உன்னத தேகத்துடன் திகழ்பவள்
() ஸர்வ = எல்லாமும்
ஆபரண = ஆபரணங்கள்
பூஷிதா = அணிதிருத்தல்

# 51 ஸர்வாபரணபூஷிதா; = அனைத்து ஆபரண அலங்கார பூஷணங்களும் தரித்திருப்பவள்
() ஷிவ காமேஷ்வர = ஶிவன் - ஶிவகாமேஷ்வரன்
அங்கஸ்தா = அங்கமானவள் - அங்கம் - மடி (தொடை)

# 52 ஶிவ காமேஷ்வராங்கஸ்தா; = ஶிவனின் அர்த்தாங்கினியானவள் - அவனின் பாதியை கொண்டவள் *குறிப்பு
() ஶிவா = ஶிவன்
# 53 ஶிவா = ஶிவனுமானவள் - ஶிவத்தன்மையை தனதாக்கியவள்
() ஸ்வாதீன = சுதந்திரம் = சுயச்சை - சார்பற்ற
வல்லபா = மணாளன் - காதலன் - கொண்டவன்

# 54 ஸ்வாதீனவல்லபா; = தனித்தன்மையுடன் விளங்குபவள் - எதனையும் அல்லது எவரையும் சாராது தனித்து இயங்குபவள் *குறிப்பு

குறிப்பு1: சிவனின் அம்சமாக விளங்குபவளாகிய அன்னை அர்த்தாங்க்கினி அதாவது அங்கத்தின் பாதியைக் கோண்டவள் எனவே "சிவகாமேஷ்வர அங்கஸ்தா" - 'அவனின் அங்கமானவள்' என்று  உணரலாம். அங்கம் என்பதை மடி (lap) என்று பொருள் கொண்டால், சிவகாமேஸ்வரனின் மடியில் அமர்ந்து அருள்பவள் என்றும் விளங்கிக்கொள்ளலாம்.


குறிப்பு2: சுவாதீன என்பதை சுதந்திரம் என்று பொருள் கொண்டு மேலே விளக்கப்பட்டிருக்கிறது. பராசக்தி தன் சுயஇச்சையின் வெளிப்பாடாகவே  உலகத்தை இயக்குகிறாள். சிவத்துவம் அதன் உட்புகுந்து இயங்குகிறது. எனவே சிவத்துவத்தை தன் வசம் வைத்திருந்து அதனை ஆள்பவளாகவவும்(to control shiva) பலர் பொருள் பிரித்துணர்கின்றனர். சிவத்துவம் இருப்பு நிலையைக் குறிக்கும். பராசக்தியானவள் இயங்கும் நிலை என்றுணர்தல் அவசியம்.


(இத்துடன் கேசாதிபாத வர்ணனை முற்றுபேற்றது. இனி அன்னையின் இருப்பிடத்தை பற்றி கூறியருளும் ஸ்ரீ நகர வர்ணனை தொடரும்.)

No comments:

Post a Comment