October 08, 2017

Lalitha Sahasranama (37-43) ஆங்கிலம்-தமிழ் விளக்கத்துடன்

Lalitha Sahasranama (37 - 43)



AruNaruNa kausumba vasthra bhaswat katithati;
Rathna kinkinika ramya rashana dhama bhooshitha;
Kamesha gnatha sowbhagya mardavoru dwayanvitha;
MaNikya mukutaakara janudvaya virajitha;
Indragopa parikshipta smarathoonabha janghika;
Gooda gulpha;
koorma prshta jayishnu prapadanvitha;


() aruNaruna = reddish red - redness of rising sun - ruby red (aruna is also known to mean ruby or sun) 
kausumba = orange safflower
vasthra = clothing
bhaswat = shiny- luminous
kati = waist
thati = sloping sides of the hips

# 37 AruNaruNa kausumba vasthra bhaswat katithati = Who has shiny silk reddish-orange garment around her smooth-sliding waist.

() Rathna = gem - jewel 
kinkinika = tinkling bells = bells 
Ramya = delightful
rashana = girdle = place for the girdle (waist) 
dhama = garland
bhooshitha = is worn - adorned

# 38 Rathna kinkinika ramya rashana dhama bhooshitha = Whose waist is adorned with jewelled girdle that has little tinkling bells

() Kamesha = Kamseshwara
Gnaatha = knows - known 
sowbhagya = auspicious - charm - beauty 
mardava = gentle - soft ; ooru = thigh
dwaya = couple pair
anvitha = is present - endowed

# 39 Kamesha gnatha sowbhagya mardavoru dwayanvitha = whose gentle and beautiful thighs are known only to her consort Lord Kameshwara.

() Manikya = ruby 
mukuta = crest - crown ; aakara - is of the shape, seem to be, apperance
janu = knee 
dvaya = pair
viraajitha = acclaimed - celebrated - exist beautifully

# 40 MaNikya mukutaakara janudvaya virajitha = Whose pair of knees appear to be crowned of precious ruby.

()Indragopa = a red-luminous insect (used as simile in sanskrit literature) *Note
parikshipta = scattered
Smara = God of love - Kaamadeva ; 
thooNa = quiver - case for holding arrows 
janghika = leg (anterior legs)

# 41 Indragopa parikshipta smarathoonabha janghika = whose anterior legs are like quiver of kaamadeva (toes spring like arrows) from where red luminous toe-nails are scattered *Note

() Gooda = hidden - covered
gulpha: = ankles

# 42 Gooda gulpha = whose ankles are well covered

() koorma = Tortoise ; prshta = rear or hinder part (of the tortoise) - the shell 
jayishnu = victorious 
prapada = arch of the foot ; anvitha = graced - is present

# 43 koorma prshta jayishnu prapadanvitha = the arch of whose feet surpasses the tortoise shell in curvature and grace.

Note: : Indragopa is a red luminous insect that seems to have American Origin. Insect finding a place in poetries is rarest. In sanskrit literature, Indragopa is used often as simile to mean "vivid-redness" and sometimes used to mean as 'firefly'. We can assume here, that her beautiful red toe-nails seemingly look like indragopas. Very creative Imagination   










லலிதா சஹஸ்ர நாமம் (37 - 43)


அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ;
ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா;
காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா;
மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா;
இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா;
கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா ;

() அருணருண = உதயசூரியனின் சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு
கௌசும்ப = கௌசமபப்பூவின் இளஞ்சிவப்பு (safflower) 
வஸ்த்ர = ஆடை
பாஸ்வத் = மிளிரும்
கடி = இடை
தடீ = இடைச் சரிவு

# 37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; = இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்

() ரத்ன = ரத்தினங்கள் பதிந்த 
கிண்கிணிகா = சிறு மணிகள் 
ரம்யா = ரம்யமாக - இதமாக 
ரஷனா = ஒட்டியானம் - அதை அணியும் இடை
தாம = மாலை - சங்கிலி
பூஷிதா = அணிந்திருத்தல் - அலங்கரித்திருத்தல்

# 38 ரத்ன கிண்கிணிக ரம்ய ரஷனா தாம பூஷிதா; = சிற்றிடையில் சிறுமணி கிண்கிணிக்கும் ரத்தினம் பதித்த ஒட்டியானம் அலங்காரமாய் அணிதிருப்பவள்

() காமேஷ = ஈஸ்வரன் - மஹாதேவன் 
ஞாத = அறிந்த - உணர்ந்த
சௌபாக்ய = மங்கலமான - அழகான
மார்தவ = மென்மை - கனிவான
ஊரு - தொடைப்பகுதி
த்வய = இரண்டு - ஜோடி 
அன்விதா = அழகாய் அமைந்திருத்தல்

# 39 காமேஷ ஞாத சௌபாக்ய மார்தவொரு த்வயான்விதா; = அவள் மணாளன் காமேஷ்வரன் மட்டுமே உணரக்கூடிய மிருதுவான மெல்லிய தொடைகளை உடையவள்

() மாணிக்ய = மாணிக்கம் 
முகுட = கிரீடம்
ஆகார = தென்படுதல்
ஜானு = முழங்கால்
த்வய = இரண்டு - இருமை
விராஜிதா = எழிலுடன் விளங்குதல்

# 40 மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா; = இரு முழங்காலும் மாணிக்கத்தாலான மகுடம் போல் ஜொலிக்கப்பெறுபவள்

() இந்திரகோப = சிவப்பு பூச்சி இனம், ( சமஸ்க்ருத இலக்கியத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவில் உவமைக்கு பயன்படுத்தபட்டிருக்கிறது ) *குறிப்பு
பரிக்ஷிப்த = சிதறப்பட்டிருத்தல்
ஸ்மர= காமதேவன்
தூண = அம்பறாத்தூணி - அம்புக்கூடு
ஜங்கிகா = முன்னங்கால்

# 41 இந்த்ரகோப பரிஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா; = காமதேவனின் அம்பறாத்தூணி பொன்ற முன்னங்கால்களிருந்து (கால்விரல்களே அம்புகளென வரிக்கலாம்) இந்திரக்கோபங்கள் சிதறப்பட்டிருப்பது போன்ற சிவந்த மிளிர் நகங்கள் கொண்டவள் * குறிப்பு

() கூட = மறைக்கப்பட்ட
குல்ஃபா = கணுக்கால்கள்

# 42 கூட குல்ஃபா = பார்வைக்கு மறைக்கப்பட்டு (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள்

() கூர்ம = ஆமை
ப்ருஷ்ட = பின்புறம்
ஜயிஷ்னு = வென்ற - வெல்லுதல் - விஞ்சுதல்
ப்ரபதா = பாதத்தின் வளைவு 
அன்விதா = அழகுற விளங்குதல்

# 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா; = ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள்

குறிப்பு: இந்திரகோபம் ஒரு வகை பூச்சி. பூச்சிகள் கவிதைகளிலும் காவியங்களிலும் இடம்பெறுவது மிகவும் அரிது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இரு பூச்சி வகைகள் பெரிதும் உவமைக்கு உபயோகப்படுத்த பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்திரகோபம். இதன் சிவந்த வண்ணம் உவமையாக்கப் படுகிறது. சில நேரங்களில் இதன் ஒளிர் தன்மையை மின்மினிப்பூச்சிக்கு இணையாக உருவகப்படுத்துவண்டு. சஹஸ்ர நாமத்தில் அன்னையின் சிவந்த நகங்களை இந்திரகோப பூச்சிகள் சிதறியிருப்பதென்ற அழகிய கற்பனைக்கு உருவகப்படுத்தியிருக்கிறார்கள். (மேலே படத்தை பார்க்கவும்) 

reference credit:

No comments:

Post a Comment