May 12, 2017


இயந்திர வாழ்வு





அலுப்பு
சலிப்பு
கசப்பு
வெறுப்பு
முகச் சுளிப்பு
மணமிலாப் பூக்களென
போட்டது போட்டபடி உதறி
சட்டென  துறவு பூண்டேன்
..
தனிமை
வெறுமை
வறுமை
சிறுமை
இம்மையில் கொடுமை
மறுமையின் நிலையாமை
...
எண்திசையிலும்
புறமும் உள்ளும்
புரட்டிப் புரட்டிப் போடும்
வெங்காய வாழ்க்கை

7 comments:

  1. Replies
    1. முற்றிலும் உண்மை. நன்றி வருகைக்கு ராமலக்ஷ்மி.

      Delete
  2. //எண்திசையிலும் புறமும் உள்ளும் புரட்டிப் புரட்டிப் போடும் வெங்காய வாழ்க்கை//

    இப்படியெல்லாம் வாழ்க்கையில் எதை எதையோ, தேவையில்லாமல் தேடிக்கொண்டு அல்லல் படாமமும், உடம்பை வருத்திக்கொள்ளாமலும் இருக்க, அந்தக்கடைசியில் சொல்லியுள்ள வெங்காயத்தை நிறைய வாங்கிவந்து ஆனந்தமாக வெங்காய பஜ்ஜிகளாகப் போட்டு அடிக்கடி என்னைப்போல சாப்பிட்டு மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். :)

    ReplyDelete
  3. REVISED:

    //எண்திசையிலும் புறமும் உள்ளும் புரட்டிப் புரட்டிப் போடும் வெங்காய வாழ்க்கை//

    இப்படியெல்லாம் வாழ்க்கையில் எதை எதையோ, தேவையில்லாமல் தேடிக்கொண்டு அல்லல் படாமலும், உடம்பை வருத்திக்கொள்ளாமலும் இருக்க, அந்தக்கடைசியில் சொல்லியுள்ள வெங்காயத்தை நிறைய வாங்கிவந்து ஆனந்தமாக வெங்காய பஜ்ஜிகளாகப் போட்டு அடிக்கடி என்னைப்போல சாப்பிட்டு மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. ஹஹ...நல்ல யுக்தி... கண்டிப்பா செய்யறேன் .... வருகைக்கு நன்றி சார் :)

      Delete
  4. அதனால்தான் எனது சென்னை சந்திப்பு அழைப்புகளைப் ஒதுக்கினீர்களோ

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லை ஜி.எம்.பி சார்...உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.

      Delete