இயந்திர வாழ்வு
அலுப்பு
சலிப்பு
கசப்பு
வெறுப்பு
முகச் சுளிப்பு
மணமிலாப் பூக்களென
போட்டது போட்டபடி உதறி
சட்டென துறவு பூண்டேன்
..
தனிமை
வெறுமை
வறுமை
சிறுமை
இம்மையில் கொடுமை
மறுமையின் நிலையாமை
...
எண்திசையிலும்
புறமும் உள்ளும்
புரட்டிப் புரட்டிப் போடும்
வெங்காய வாழ்க்கை
உண்மைதான்.
ReplyDeleteமுற்றிலும் உண்மை. நன்றி வருகைக்கு ராமலக்ஷ்மி.
Delete//எண்திசையிலும் புறமும் உள்ளும் புரட்டிப் புரட்டிப் போடும் வெங்காய வாழ்க்கை//
ReplyDeleteஇப்படியெல்லாம் வாழ்க்கையில் எதை எதையோ, தேவையில்லாமல் தேடிக்கொண்டு அல்லல் படாமமும், உடம்பை வருத்திக்கொள்ளாமலும் இருக்க, அந்தக்கடைசியில் சொல்லியுள்ள வெங்காயத்தை நிறைய வாங்கிவந்து ஆனந்தமாக வெங்காய பஜ்ஜிகளாகப் போட்டு அடிக்கடி என்னைப்போல சாப்பிட்டு மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். :)
REVISED:
ReplyDelete//எண்திசையிலும் புறமும் உள்ளும் புரட்டிப் புரட்டிப் போடும் வெங்காய வாழ்க்கை//
இப்படியெல்லாம் வாழ்க்கையில் எதை எதையோ, தேவையில்லாமல் தேடிக்கொண்டு அல்லல் படாமலும், உடம்பை வருத்திக்கொள்ளாமலும் இருக்க, அந்தக்கடைசியில் சொல்லியுள்ள வெங்காயத்தை நிறைய வாங்கிவந்து ஆனந்தமாக வெங்காய பஜ்ஜிகளாகப் போட்டு அடிக்கடி என்னைப்போல சாப்பிட்டு மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். :)
ஹஹ...நல்ல யுக்தி... கண்டிப்பா செய்யறேன் .... வருகைக்கு நன்றி சார் :)
Deleteஅதனால்தான் எனது சென்னை சந்திப்பு அழைப்புகளைப் ஒதுக்கினீர்களோ
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்லை ஜி.எம்.பி சார்...உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.
Delete