இருவரின் சம்பாஷணை மூன்றாம் மனிதர் பார்வைக்கு சுவாரஸ்யம். வெறும் பார்வையாளனாக ரசிக்கும் வரையில் சத்தம் கூட இனிமை தான்.
அன்றாடம் நடைபழகும் பூங்காவில் விதவிதமான சட்டை சுமந்த மனிதர்கள்.
சட்டையினுள் ஒளிந்திருக்கும் மனித இயல்புகள் இன்னும் விசித்திரமானவை.
பெசியபடியே நடைபயின்று கொண்டிருந்த இருவரில் ஒருவர் மட்டும் நாட்டு நடப்பு, பொருளாதாரம், சமூகம் தொடங்கி ட்ரம்ப் முதல் சசிகலா வரை அலசிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தலை நிமிராமல் நடை தொடர்ந்து கொண்டிருந்தார்.
"என்ன சார் சொல்லறீங்க, நான் சொல்றது சரி தானே" - அதிரவைக்கும் உயர் தொனியில் கேள்வி எழுப்பியவருக்கு பதிலுக்கு காத்திருக்க விருப்பமில்லை. "இல்லை! தவறு" எனச் சொல்வதற்கான சுதந்திரம் அளிக்க முன்வரவில்லை. சொல்லியிருந்தால் ஏற்கும் பக்குவத்திலும் இல்லை. தன் கருத்தை மற்றவர் அங்கீகரித்தாரா என கவனிக்கவுமில்லை. மற்ற நண்பருக்கு இந்த விவாதத்தில் கருத்து வேறுபாடு இருந்தது எளிதில் கணிக்க முடிந்தது.
பெண்கள் பகிரும் அலுவலக பிரச்சனைகள், மாமியார் மருமகள் அண்ணி ஒரகத்தி வேறுபாடுகள் எல்லாமே ஏறக்குறைய இதே வகை உரையாடல். ஒருவர் உணர்ச்சி மிகுதியில் பேசுவதும் மற்றொருவர் மௌனமாக தொடர்வதும் காலை நேர (காட்சிப்பிழைகள்) சுவாரஸ்யங்கள்.
குறைந்த பட்சம் மற்றவர் கருத்தை காதில் வாங்கவும் பொறுமை, விருப்பம் இல்லாத வேடிக்கை மனிதர்கள்.
//குறைந்த பட்சம் மற்றவர் கருத்தை காதில் வாங்கவும் பொறுமை, விருப்பம் இல்லாத வேடிக்கை மனிதர்கள்.//
ReplyDeleteநானும்கூட சமயத்தில் அப்படித்தான்.
’காரியச்செவிடு’ என்று சொல்லுவார்களே ... அதுபோல இருந்து விடுவது உண்டு. :)
’காரியச்செவிடு’ என்றால் தனக்கு ஆதாயமானதை மட்டும் காதில் வாங்கிக்கொள்வார்கள். மற்ற வெட்டியான விஷயங்களைக் கேட்கும் போது செவிடு போல இருந்து விடுவார்கள். :)
அடுத்தவரின் கருத்து கேட்பது காரிய செவிடு வகையில் வராது. :) நீங்கள் சொல்வது புரிகிறது. காரிய செவிடாய் இருந்து விடுதல் அமைதியை கொடுக்கும்.
Deleteபதிவுலகில் ஒரு பதிவைப் படித்து விட்டு பதிவைப் போட்டவரின் கருத்தை எதிர்ப்பார்த்துப் போடப்படும் பின்னூட்டங்களும் பல சமயங்களில் மெளனமாகவே கடக்கப் படுகின்றன. அல்லது வருகைக்கு நன்றியோடு சரி. அருமை, பாராட்டுகள் என்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு முடித்துக் கொண்டிருக்கலாமே என்றும் அப்படியான சமயங்களில் எண்ணுவதுண்டு.
ReplyDeleteஇன்னொரு கொடுமையும் உண்டு. பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு விவரமாக பதில் அளித்தாலும் அதைத் தொடர்ந்த கருத்து பரிமாற்றம் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்படுவதுண்டு. மொத்தத்தில் பார்த்தால் வலையுலகில் பதிவுகள் எதற்காகப் போடப்படுகின்றவோ அதன் அர்த்தம் இழந்தே சோகையாகக் காட்சியளிக்கின்றன.
:) உங்கள் ஆதங்கம் புரிகிறது. பதிவுலகம் இப்பொழுது அவசர கதியில் கடந்து கோண்டிருக்கிறது. சொல்ல வந்த செய்தியைக் கூட இரு வரிக்கு மிகாமல் சொன்னால் மட்டுமே ரசிக்கபடும் காலம் :(
Deleteசில நேரங்களில் மற்றவர்கள் நம்மை ஒரு wailing wall ஆகப் பயன்படுத்துவார்கள் சில மனிதர்களின் குணாதிசயங்களைக் காட்டி நானும் முன்பு ஒரு இடுகை வெளியிட்டிருந்தேன்
ReplyDelete//wailing wall// Exact term! தனக்கு தோன்றியதை கொட்டுவதற்கு ஒரு இடம். அவ்வளவே. நன்றி வருகைக்கு.
Deleteகாரியச் செவிடுக்கு ஓர் உதாரணம் .......
ReplyDelete“வரீங்களா, ஸார். காஃபி வாங்கித்தருகிறேன்” என்பது காதில் கேட்கும்.
“ஸார் .... ஒரு 100 ரூபாய் கைமாத்தாகக் கிடைக்குமா?” என்றால் அது சுத்தமாகக் காதிலேயே விழாது.
>>>>>
haha...இது போன்ற நகைச்சுவை படத்தில் பார்ததுண்டு. நிஜத்திலும் உண்டு. அப்பொழுது நம் நகைச்சுவை உணர்வு மட்டுப்பட்டு விடும்.
Deleteமற்றொரு டைப் ஆசாமிகள் (சுய கார்யப் புலிகள்):
ReplyDeleteஒருவரிடம் “ஸார் எங்கள் வீட்டிக்கு வருகிறீர்களா?” எனக்கேட்டால் “உங்கள் வீட்டுக்கு நான் வந்தால், நீ எனக்கு உன் வீட்டில் என்ன தருவாய்?” என்று திரும்பிக்கேட்பாராம்.
“நான் உங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வரட்டுமா, ஸார்?” என்று கேட்டால் “என் வீட்டுக்கு நீ வரும்போது, எனக்கு என்ன கொண்டு வருவாய்?” எனக் கேட்பாராம்.
ஆஹா! பயங்கர ஆசாமிகளாக இருப்பார்கள் போலும்.
Delete