வல்லமை படப்போட்டிகாக அனுப்பிய இரு கவிதை.
படத்துக்காக இன்னொன்றும் எழுதினேன். முதலில் எழுதியது இன்னும் பிடித்தமானதாய் இருந்தது.
அடையாளங்கள்
__________________
மனமொத்த மணவாழ்க்கையின்
மொத்த அடையாளத்தை
மென்பாதங்கள் நோக
தனியொருத்தியாய் ஏனடி பாரம் சுமக்கிறாய்?
மெட்டியிரண்டை புருஷனுக்குப் பகிர்ந்து..
கொலுசு குலுங்க,
பழந்தமிழ் பண் பாடு.
சற்றே இலகுவாகி
இளைப்பாறிக்கொள்..
உன் தனித்துவத்தையும்
சேர்த்தணியப் பழகிக்கொள்.
***********
படத்துக்காக இன்னொன்றும் எழுதினேன். முதலில் எழுதியது இன்னும் பிடித்தமானதாய் இருந்தது.
அளவோடு மிஞ்சினால் அம்ருதம்
__________________________________
பெண்மையின் அடையாளம்
நளினத்தின் நகை வடிவம்
நடனத்தின் நாடி
மங்கலச் சின்னம்
ஆடவரை ஆட்டுவிக்கும் நட்டுவாங்க
ஆயிரம் காரணம் இருப்பினும்
இவர் சொன்னார்
அவர் தந்தாரென
விரலுக்கு ஒன்றாய்
மாட்டிக்கொண்டு விழிக்காதே
இதுவே பெண்ணின்
எல்லையென அடங்காதே
சிக்கென அழகாய்
ஒற்றை விரலில்
பாங்காய் அணிந்து
டக்கென தாவிக் குதிக்கும்
சுதந்திரமும் ஒப்பிலா அழகு
அளவான அழகும் அளவிலா அழகே
*******
அளவான அழகும் அளவிலா அழகே
*******
’சிக்கென-டக்கென’ இரு கவிதைகள் எழுதியுள்ளது அழகோ அழகு ! :)
ReplyDeleteஇவ்வாறு கவிதை இயற்றுவதில், தங்கள் தனித்துவத்தையும் சேர்த்தணியப் பழகிக்கொண்டுள்ளீர்கள். :)
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி ராமகலக்ஷ்மி....5 ஆண்டுகளுக்கு பிறகு ஆமை வேகத்தில் இயம்பிய நன்றி ... :D
Deleteவெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஜி.எம்.பி சார் மற்றும் வை.கோ சார்.
ReplyDeleteThank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News
ReplyDeleteThankyou so much. Your comments are encouraging
Delete