June 27, 2016

ஏன் வரவில்லை...


கிட்டே நெருங்கி உன்னை
எட்டிப் பிடிக்க எத்தனிக்கையில் 
எட்டடி தள்ளிப் போகிறாய்
உணர்ந்து உன்னை கொஞ்சிக் கிடந்திருந்த
தருணத்தில் தடாலென நீ நகர்ந்ததால்
அரிச்சுவடிப் பாடமே ஆடிப்போனது

வழக்கொன்றுமில்லை எனக்கு
காவல்துறையின் இருப்பும் இல்லாமையும்புகைப்படக் கருவிகளின் துல்லியமும்
சட்ட ஒழுங்கின் அமைப்பும்
அவரவர் உயிர் போர்த்தி ஓட்டமெடுக்கும்
மானிடரிடன் பயமும் சுயநலமும்
வருத்தமொன்றுமில்லை.
எவருடனும் காழ்பொன்றும் இல்லை


உன் சரண் பற்றிய அடியவளை
இத்தனை கொடூர மரணம் எழுதி
தள்ளி நின்று
தாயத்தின் அடுத்த காயை நகர்த்தும்
உன்னிடம் மட்டுமே கேள்விகள் ஆயிரம்.
நம்பினோரை கைவிட்ட நாயகனே
உன்னை தண்டிக்க எந்த சட்டத்தில் இடமுண்டு?
வாராமலே போன மாதவனே
பிணக்கும் கோபமும் வருத்தமும்.........
உன்னிடம் மட்டுமே
ஆயிரம் ஆயிரம்.

8 comments:

  1. தங்களின் கோபம் மிகவும் நியாயமானதுதான்.

    //ஏன் வரவில்லை...//

    கலிமுற்றிவிட்டதான் அவன் ஒருவேளை வரவே மாட்டானோ என்னவோ :(

    ReplyDelete
    Replies
    1. கலிமுற்றிவிட்டதான் = கலிமுற்றிவிட்டதால்

      Delete
    2. தெரியவில்லை .... :(

      Delete
  2. இல்லாத ஒருவனிடம் கேள்விகள் கேட்டு மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான் உடன் இருப்பவனிடம் கேள்வி கேட்க உரமில்லாமல் வருத்தமில்லை காழ்ப்பில்லை என்று சொல்வது சரியா துட்டர்களை தண்டிக்க யுகந்தோறும் அவதரிப்பேன் என்பதெல்லாம் வெறும் கதை என்று ஏனோ நாம் உணர்வதில்லை. ஆரம்பத்தில் என் பதிவுகளுக்கு வந்து ஊக்கம் கொடுத்த நீங்கள் இப்போதெல்லாம் வராததேனோ காழ்ப்பேதுமில்லையே.......!

    ReplyDelete
    Replies
    1. முக நூலில் மட்டுமே சிறுது நேரம் செலவிடுகிறேன். வலைப்பதிவுகளுக்கு வருவதில்லை சார். உங்கள் மீது எனக்கேன் கோபம். கண்டிப்பாக படிக்க முயற்சிக்கிறேன். என் பெண் தற்பொழுது பத்தாம் வகுப்பு துவங்கியிருக்கிறாள். நேரம் அதிகம் இருப்பதில்லை என்பதே காரணம்.

      Delete
  3. அருமை. மின்மினிகள் மின்சாரத்தைச் சுமந்ததே போல மினுமினுக்குகின்றன. பார்த்த மாத்திரத்தில் விழிகள் வியப்பால் விரிந்து மனசும் பரவசத்தால் மகிழ்கிறது.

    'இதில் ஏன் வரவில்லை?' என்ற கேள்வி எப்படி நா புரண்டு எழும்பும்?.. பார்த்ததே, பாக்கியம் தான்.

    ReplyDelete