June 30, 2016

எதுவும் கடந்து போகும்





அதிர்ச்சி ஆத்திரம் துயரம்
ஜாதிமத பேதம் பேதமின்மை
அரசியல் ஆதாயம்
பகிர்வு விவாதம் ஊகம்
தற்காப்ப்பு ஆலோசனை
இரங்கற்பாக்கள்
நடு நடுவே ஊடுருவும் ஹாஸ்யம்
ஐந்து நாட்களில்
திரைகள் ஒவ்வொன்றாய் களைந்து
வெறும் செய்தியாகிப் போகும்
ஸ்வாதிகளும் வினுப்ரியாக்களும்


6 comments:

  1. தாங்கள் சொல்வது மிகவும் உண்மைதான்.

    அடுத்த புதிய செய்தி வந்ததும் பழைய செய்திகள் பொதுவாகப் பொதுமக்களுக்கு மறந்துதான் போகும்.

    ஆனால் இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு அந்த மனக்காயங்களும் வடுக்களும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மறக்கவே மறக்காது.

    இனியாவது இதுபோன்ற துயரச் செய்திகளை நாம் கேள்விப்படாமல் இருந்தால் மிகவும் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. and the dramas which happen later is even more painful

      Delete
    2. and the dramas which happen later is even more painful

      Delete
  2. இந்தப் பதிவுக்கு பின்னூட்டமாக நான் எழுதினால் அது மிக நீண்டு விடும் இருந்தாலும் தருகிறேன் “ மறதி போற்றுவோம் “ அங்கிங்கெனாதபடி எங்கும் அவலங்கள்
    ஆனால் நமக்கோ அவை -- வெறும் நிகழ்வுகள் செய்திகள்
    அண்டை வீட்டுக்காரன் மண்டையைப போட்டால்
    நமக்கென்ன பாதிப்பு ?
    ஊரில் உலகில் ஆயிரம் சாவுகள்
    வெள்ளத்தால் மழையால் மண்சரிவால்
    பூகம்பத்தால் சுனாமியால் கொடிய நோய்களால்
    ஒரே நொடியில் கோடீஸ்வரன் ஒட்டாண்டியாகிறான்
    மாடு மனை வாசல் எல்லாம் துறக்கிறான்
    எண்ணவே இயலாத அவலங்கள்
    அரை நொடியில் மண்ணில் நிகழ்வது நிஜம் .
    எங்கோ குண்டு வெடிக்கிறது
    மரண ஓலங்களும் வலியின் வேதனைகளும்
    நமக்கென்ன தெரியும் ? அவை வெறும் செய்திகள்தானே .
    மூக்கறுந்த பெண்ணும் ஈ மொய்க்கும் குழந்தைகளும்
    பத்திரிகையில் செய்திகள் தொலைக்காட்சிப் படங்கள்
    என்ன செய்வது , எல்லாம் தலை எழுத்து
    நாம் என்ன செய்ய ,--ஐயோபாவம் என்று
    " ஊச் " கொட்டுவோம் .
    இழப்பு நமக்கு நேர்ந்தால் தெரியும்
    வலியும் வேதனையும்
    ஊர் கூட்டிக் கதறி ஒப்பாரி ஓலமிட்டு
    காட்டுவோம் உலகிற்கு
    நமக்கு நேரும் இழப்பும் வலியுமே
    காலத்தின் போக்கில் மறக்கும் நமக்கு
    மாற்றானின் வலியும் வேதனையும்
    வெறும் நிகழ்வுதானே செய்திதானே
    மறப்பது மனசுக்குள்ள மருந்து
    காலம் நமக்கு கொடுத்த வரம்
    எதுவும் கடந்து போகும்
    மறதி போற்றுவோம் !

    ReplyDelete
    Replies
    1. very rude reality ... may be thats the way we can LIVE

      Delete
    2. very rude reality ... may be thats the way we can LIVE

      Delete