March 08, 2016

சத்தமின்றி செய்யப்படும் சாதனைகள்

பெண்ணின் அடையாளம் அவள் சிறகுகளின் எழுச்சி. எப்பொழுதெல்லாம் சிறகை விரித்து பறக்க அனுமதிக்கப்படுகிறாளோ அப்பொழுதெல்லாம் பெண் சுவாசிக்கிறாள்.



சாதனை என்பது பெரியதாய் இமாலயமாய் இருக்க வேண்டியதில்லை. வண்ணச் சிறகை விரித்து, நல்லதை நுகர்ந்து,  தீமைக்கு எதிராய் குரல் கொடுக்கும் பெண் சாதிக்கிறாள். அவள், அக்கம் பக்கத்திலுள்ள அடுக்களைகளில் புகுந்து கொண்டிருந்தாலும், சாதிக்கிறாள்.   நல்ல குடிமக்களைப் பெற்று, பேணி நற்கருத்தூட்டி ஆக்கபூர்வமான உயிரை உலகுக்கு அளிக்கிறாள். 


பெண்ணை சுவாசிக்க விடுங்கள். அவள் அடிப்படைத் தேவைகளுக்குத் தடை போடாதீர்கள். புணர்ச்சிப் பொருளாய் மட்டும் பார்க்கும் மிருகங்களிடமிருந்து பெண்களை மீட்க, ஒவ்வொரு பெண்ணும் ஆணும் சேர்ந்து போரிடுவோம். 

பெண் சுதந்திரம் பாலுணர்ச்சிகளை தூண்டும் எழுத்துக்களிலோ, போதைப் பொருட்களிலோ, ஏட்டிக்கு போட்டியாய் சுற்றித் திரிவதிலோ முடங்கிவிடுவது அல்ல. 


எங்கெல்லாம் பெண்ணின் சுய உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பூட்டு பூட்டபடுவதில்லையோ எங்கெல்லாம் அவள்  வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப் படுகிறதோ  அங்கெல்லாம் அவள் உயிர்த்தெழுகிறாள். அவள் குடும்பம் சுகிக்கிறது. சுற்றமும்  நாடும். உலகமும் சம நோக்குச் சமுதாயமாய் பரிமளிக்கிறது. 

பெண்ணுக்கென்று தனி ஒரு தினத்தின் தேவையின்றி, ஒவ்வொரு தினமும் நல்-மனிதர்க்குறிய தினமாய் மாறட்டும்.

2 comments:

  1. //எங்கெல்லாம் பெண்ணின் சுய உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் பூட்டு பூட்டபடுவதில்லையோ எங்கெல்லாம் அவள் வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் அவள் உயிர்த்தெழுகிறாள். அவள் குடும்பம் சுகிக்கிறது.//

    மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி வை.கோ சார்.

    ReplyDelete