January 24, 2012

சும்மா தோணிய சில உளறல்

இது பதிவு இல்லைங்க...

சும்மா எல்லார்கிட்டையும் ஹல்லோ சொல்லத் தான் வந்தேன்.

சில நாட்கள் தொடர்ந்து எனக்கு எழுத முடியாமல் போய்விடுகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும், பகிர்வதற்கும் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அதற்கு என்ன காரணம் என்று என்னால்  ஆராய முடியவில்லை. முழு ஆத்திகவாதி என்று சொல்லிக்கொள்ளும் காலம் வரவில்லை. நிறையவே ஆராய்கிறேன். பகுத்தறிவின் துணையோடு கீறிப்பார்த்து சிலதை ஒதுக்கிவிடுகிறேன். சிலதை சந்தேகக் கண் கொண்டு தோண்டிப் பார்த்து சேர்த்துக் கொள்கிறேன்.

ஆனாலும்...

தொடர்ந்து என் கண்ணனின் (கீதையை உபதேசித்தானே அவன் தான்) பெயரை ஸ்மரித்துக் கொண்டும், ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின்  மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது. என்ன எழுதுவது, பேசுவது என்று புரியவில்லை. பேசும் எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது... இது ஒரு சில நாட்களுக்குத் தான்....தாற்காலிகமாகத் தான்.... அதன் பின்  இயல்பு நிலைக்கு வந்து(வீழ்ந்து?)விடுகிறேன்...

இரு தினங்களுக்கு முன் "கைலாஷ் மானசரோவர் யாத்ரா"வைப் பற்றி  படித்துக்கொண்டிருந்தேன். கைலாஷ்நாத் புகைப்படங்கள் என் நெஞ்சித்தை
விட்டகலாமல் நின்றுவிட்டது.

பொனார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல்
மிளிர் கொன்றையணிந்தவனே...
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே நின்னையலால்
இனி யாரை நினைக்கேனே...


என் தந்தையுமாகிய ஈஸ்வரனின் பொற்பாதம் பணிகிறேன்.

...மீண்டும் பதிவிடுவேன்....


26 comments:

 1. //அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அரத்தமற்றுப் போய்விடுகிறது//

  மிக நல்ல விஷயம்.அவன் நினைவன்றி வேறு ஏதும் தேவையே இல்லை.

  தங்களின் மன நிலையை அழகாக விவரித்து இருக்கீங்க.

  கைலாச மலையின் படங்கள் அருமை.

  ReplyDelete
 2. ஒருபக்கம் நம்பிக்கை. ஒரு பக்கம் ஆராய்ச்சி. ஒரேயடியாய் பகவத் ஸ்மரணம் என்று இருந்து விட்டால் எதிலும் பிடிப்பு இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. நாம் நம் உறவினர் மத்தியில் வாழ்கிறோம். எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல் இருக்க முயலவும். எந்த ஒரு ஆராய்ச்சியும் துவங்கும் முன்னே நம் மனம் வெற்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அற்புதமான பகிர்வு.

  மனதோடு சேர்த்துக் கொள்ளும் விஷயங்களைத் தொடர்ந்து பகிர்ந்திடுங்கள் ஷக்தி!

  ReplyDelete
 4. //அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது... இது ஒரு சில நாட்களுக்குத் தான்....தாற்காலிகமாகத் தான்.... அதன் பின் இயல்பு நிலைக்கு வந்து(வீழ்ந்து?)விடுகிறேன்...//

  வெகு அருமையாக உண்மையை உண்மையாக மனம் திறந்து சொல்லியுள்ளீர்கள். எனக்கும் உங்களைப்போலவே அடிக்கடி இப்படியா அப்படியா என்ற குழப்பங்கள் மேலிடும், முன்பெல்லாம்.

  இப்போதெல்லாம் என்னை நானே மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு ஒரு சில நல்ல விஷயங்களாக மட்டும் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்று வைத்துக் கொண்டுள்ளேன்.

  உங்களுக்குக்கூட பின்னூட்டத்தில் சொல்ல முடியாத, நிறைய விஷயங்களை, நீங்கள் கேட்டுக்கொண்டதால், நான் அவ்வப்போது மெயில் மூலம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 5. படிப்பதிலும் மனம் லயிக்காத நேரங்களை, நான் ஓவியம் வரைவதில் செலவழிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு ஓரளவு மன நிம்மதியைத் தருகின்றது.

  ReplyDelete
 6. //ஒருபக்கம் நம்பிக்கை. ஒரு பக்கம் ஆராய்ச்சி. ஒரேயடியாய் பகவத் ஸ்மரணம் என்று இருந்து விட்டால் எதிலும் பிடிப்பு இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. நாம் நம் உறவினர் மத்தியில் வாழ்கிறோம். எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல் இருக்க முயலவும். //

  திரு. G M B Sir சொல்வதும் சரியே. குடும்பம், குழந்தை(கள்), உற்றார், உறவினர், நண்பர்கள், உத்யோகம், சம்பாத்யம், சமூகம் போன்ற அமைப்புடன் இயல்பு வாழ்க்கை வாழும் நாம், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல இருக்க முயற்சி செய்தாலே, அதுவே மிகப்பெரிய விஷயம் தான்.

  ReplyDelete
 7. எதுவுமே சுலபமாகச் சொல்லிவிடலாம். நடைமுறையில் பல விஷயங்கள் நம்மால் செய்ய முடியாது. நம் மனம், கிளைக்குக் கிளை மரத்துக்கு மரம் தாவிக்கொண்டே தான் இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது சற்றே கடினம் தான்.

  ஆன்மிக ஆராய்ச்சி முயற்சிகளுக்கு, அவ்வப்போது தாங்கள் (அதுவும் இந்த இளம் வயதில்) போய் வருவதாகச் சொல்வதே எனக்கு, வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது.

  ReplyDelete
 8. //மன்னே மாமணியே
  மழபாடியுள் மாணிக்கமே
  அன்னே நின்னையலால்
  இனி யாரை நினைக்கேனே...

  என் தந்தையுமாகிய ஈஸ்வரனின் பொற்பாதம் பணிகிறேன்.//

  நம்புங்கள். இந்தப் பணிவு நம்மை நிச்சயமாகக் காத்தருளும்.

  ReplyDelete
 9. ////கைலாஷ்நாத் புகைப்படங்கள் என் நெஞ்சித்தை
  விட்டகலாமல் நின்றுவிட்டது.//

  எங்கள் எல்லோருக்குமே தான்.
  அது இயற்கையான அழகல்லவா! ;))))

  நம் நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலாது தான்.

  மனம் திறந்து கூறியுள்ள பதிவுக்கு
  மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றிகள்.

  vgk

  ReplyDelete
 10. அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. பிற விஷயங்களில் மனம் ஈடுபட மறுக்கிறது...
  -உணர்வுபூர்வமான இந்த நிலையை அடையத்தான் என் மனம் விரும்புகிறது. ஆனால் என்னால் முடியவில்லை. மனம் திறந்து சொல்லியுள்ளது மிகவும் நன்று! மானசரோவர் யாத்ரா படங்கள் மனதில் நின்றது.

  ReplyDelete
 11. //ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது. என்ன எழுதுவது, பேசுவது என்று புரியவில்லை. பேசும் எதுவுமே இல்லாதது போல் ஆகிவிடுகிறது. அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது///

  சரியாக சொன்னாய் ஷக்தி/ உனக்கு கிருஷ்ணர் மேல் உள்ள பக்தியை நான் அறிவேன்
  கைலாசப்போட்டோ எங்க பிடிச்சே ரொம்ப அழகு ...அண்டவெளி அண்ணலின் சொத்து அதில் சிறு ரூபமாய் தன்னைக்காட்டிக்கொள்கிறான்.மானசரோவர் பதிவை நீ சுவாரஸ்யமாய் எழுதணும் ஷக்தி என் வேண்டுகோள் இது

  ReplyDelete
 12. சில நாட்கள் தொடர்ந்து எனக்கு எழுத முடியாமல் போய்விடுகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும், பகிர்வதற்கும் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அதற்கு என்ன காரணம் என்று என்னால் ஆராய முடியவில்லை.

  என் மன நிலையும் இப்படித்தான் ஆகிவிட்டது.. இப்போது.

  கைலாஷ் படங்கள் சூப்பர். மானசரோவர் பார்த்தே ஆகணும்.. எனக்கு எப்ப வேளை வருமோ.

  ReplyDelete
 13. பக்தி குழப்பங்களை தீர்க்கும். உண்டு பண்ணாது. ராமலகஷ்மி அவர்கள் சொன்னது போல மனதோடு சேர்ந்து கொள்ளும் விஷயங்களை பகிருங்கள்.

  ReplyDelete
 14. ramvi, gmb sir, ramalakshmi, vgk sir, ganesh, shylaja, tamizh udhayam,

  வருகைக்கு நன்றி.............

  நீங்கள் அனைவரும் வெளிப்படுத்திய அன்பிற்கும் நன்றி!

  ReplyDelete
 15. //எல்லோரிடமும் அன்பு செலுத்தி தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல் இருக்க முயலவும். எந்த ஒரு ஆராய்ச்சியும் துவங்கும் முன்னே நம் மனம் வெற்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.
  //

  நன்றி ஜி.எம்.பி சார். நீங்கள் கூறியது உண்மை, நல்ல ஆலோசனையும் கூட. மிக்க நன்றி.

  ReplyDelete
 16. //நம்புங்கள். இந்தப் பணிவு நம்மை நிச்சயமாகக் காத்தருளும்//

  நன்றி சார்... :)

  ReplyDelete
 17. ஷை, ரிஷபன்,

  நான் மானசரோவர் இதுவரை செல்லவில்லை. அது பற்றி பேச்சு வந்த போது அதைப் பற்றிய படங்களும் யாத்திரை பற்றிய செய்தியும் படிக்கும் ஆர்வம் கொண்டதால் அது பற்றி பார்க்க நேர்ந்தது.

  ReplyDelete
 18. பற்றறுத்தான் பாதத்தை பற்றிக் கொள்ளும்
  சற்றுமேறொரு சிந்தனை வேண்டோம்.
  ஒன்றினுள் ஒன்றி ஒன்றாய் நிற்கும்
  ஒன்றாய் யானவன் ஒன்றா
  புகழ்தனை போற்றியே நின்றாடுவாய் மனமே
  அகல்போல் பேரொளி பரப்பியே!
  வேறேதும் அறியவில்லை வேறாக அறியவில்லை
  துவைதம் துரித மாகா அதி
  துரிதமது அத்வைத மதே
  நிறைவான ஒன்று அவன் திருப்பாதம்
  மறை போற்றிய முனிவர்களும்
  மனதில்கொண்டு முழுவதுமாக மூழ்கியே முத்தெடுத்தார்கள்
  மனமென்னும் திரையை விலக்கியே...

  மனமது மறையுமானால் அங்கே ஐம்புலனும் தான் எங்கே...
  ஐம்புலனும் தான் மறையுமானால், சொலெங்கே? பொருளும் தான் எங்கே?

  ஆராய்வது எதை? எதைக் கொண்டு? புலன்=>மனம்=>புத்தி=>அறிவு...
  ஒன்றினுள் ஒன்று அடக்கம் கடைசியாக எஞ்சி நிற்பது அறிவு அந்த அறிவை எதைக் கொண்டு ஆராய்வது!!!...

  அகப்பொருளை ஆராயுங்கள் ஆனால், அதற்கு அவனருள் மட்டுமே உதவும்... அங்கே ஐம்புலனுக்கு வேலை இல்லை..
  அவைகள் விழித்து இருந்தால் அறிவு வெளிப்படாது... வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள்..
  இருட்டு மறைவது வெளிச்சம் வரும் பொது அதற்கு ஒரு வினாடிகூட ஆகாதாம்...

  இது ஒருவித அறிகுறி தான்.... மேலும் மேலும் முயலுங்கள்....
  காவியும், காடும் வேண்டாம்!
  கருணைக் கடவுளின் ஆசி
  அதொன்றே போதும்.

  ReplyDelete
 19. //தொடர்ந்து என் கண்ணனின் (கீதையை உபதேசித்தானே அவன் தான்) பெயரை ஸ்மரித்துக் கொண்டும், ஏதேனும் பாகவதம் சம்பந்தப்பட்ட புத்தங்களை அவ்வப்பொழுது படித்துக் கொண்டும் இருக்கும் சில நாட்களில்..... வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப்போய்விடுகிறது.//

  வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப் போவதா?.. இது எப்படி சாத்தியமாகும்னு தெரியலை, ஷக்தி!

  "என்ன தவம் செய்தனை, யசோதா..
  என்ன தவம் செய்தனை..
  எங்கும் நிறை பரப்ரம்மம்
  அம்மா என்றழைக்க..
  என்ன தவம் செய்தனை...

  "அசைந்தாடும் மயிலொன்று கண்டால்
  ........
  ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி நின்றாட
  மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனமாட
  மயக்கும் விழியாட மலரணிகளாட மலர்மகளும் பாட
  இது கனவோ நனவோவென மனநிறை முனிவரும் கொண்டாட..

  "ஆடாது அசங்காது வா...
  ......
  பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே
  மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே..."

  வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப் போவதா? இது எப்படி சாத்தியமாகும்? தெரியலையே!

  ReplyDelete
 20. எழுதுவது தொந்தரவு. எழுதாமலிருப்பது சங்கடம். புரிகிறது.
  நான் இந்தப் பக்கம் வந்து வெகு நாளாகிறது என்றாலும், 'அவன் ஸ்மரணத்தை அன்றி வேறு எதுவும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது' வரியின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இது போல் ஏதாவது காரணியைப் பற்றிக்கொண்டு மற்ற எதிலும் அர்த்தம் பார்க்க மறுக்கும் பாங்கு எனக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்கிற நப்பாசையும் :)

  ReplyDelete
 21. //காவியும், காடும் வேண்டாம்!
  கருணைக் கடவுளின் ஆசி//அருமையான பதிலுரை தமிழ்விரும்பி. மிக்க நன்றி.

  ReplyDelete
 22. //வார்த்தைகளின் மேல் ப்ரீதி விட்டுப் போவதா? இது எப்படி சாத்தியமாகும்? தெரியலையே!// வாங்க ஜீவி.... வார்த்தைகள் அவனைப் பற்றி பேச நினைத்தாலும், வேறு யாரும் சொல்லாத ஒன்றையா நான் சொல்லி விட போகிறேன்? கணக்கற்ற முனிவர்கள் ஞானிகள் காணாத கூறாத செய்யாத ஒன்றா என்னால் செய்து விட முடியும்? என்ற எண்ணம் மேலிடுகிறது. அத்தனை பேரும் கூறியதை விட பெரியதாய் என்ன சொல்லிவிடப்போகிறேன்? அல்லது மாற்றிவிடப்போகிறேன். என்னால் இந்த சிறு பிரயத்தனத்தில் அவன் புலப்படுவானா என்ற ஐயமும் சூழ்கிறது..... மிக்க நன்றி ஜீவி. அழகான ஆழமான கருத்துரை.

  ReplyDelete
 23. //இது போல் ஏதாவது காரணியைப் பற்றிக்கொண்டு மற்ற எதிலும் அர்த்தம் பார்க்க மறுக்கும் பாங்கு எனக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்கிற நப்பாசையும் :)// உங்களைப்போல் தான் நானும் அப்பாதுரை. என்னாலும் காரணியை தொடர்ந்து பற்றிக் கொண்டே இருக்க முடியவில்லை. மறுபடியும் வேறு ப்ரயாணம் தொடர்கிறது. தொடர்ந்து பற்றும் மனநிலை இன்னும் முதிரவில்லை.

  ReplyDelete
 24. நிறையவே ஆராய்கிறேன். பகுத்தறிவின் துணையோடு கீறிப்பார்த்து சிலதை ஒதுக்கிவிடுகிறேன். சிலதை சந்தேகக் கண் கொண்டு தோண்டிப் பார்த்து சேர்த்துக் கொள்கிறேன்.

  நிறைய சிந்திக்கவைத்த பகிர்வுகள்..

  ReplyDelete
 25. ஆஹா சகோதரி, இதே மன நிலையில் நானும் பலமுறை இருப்பது/இருந்தது உண்டு. அப்போது யோசித்து பார்த்தேன்/பார்ப்பேன். எதையும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நான் கண்டு கொண்டது. இதன் சம்பந்தமாக திருடினேன், இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது, இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை என எத்தனையோ எழுதிவிட்டேன். ஆம் இதை எல்லாம் பகிர்வதற்கு என்னால் வேறு ஒருவரிடம் பேசி இருக்க முடியும். ஆனால் இதை எழுதி வைக்க வேண்டும் என எனக்கு தோன்றியதுதான் விபரீதம்.

  இறைவன் நாமத்தை சொன்னால் போதும், அதை உரக்க சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் எதற்கு நாயன்மார்களும், ஆழ்வார்களும் எழுதினார்கள் என சிந்தித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். தான் பெரும் இந்த பெரும் இன்பத்தை பிறர் வாசிக்கும் போதும் அடைய வேண்டும் என்றுதான் எழுதி வைத்தார்கள். வேதங்கள் ஒலி மூலமே பரவின. ஓம் என்பது இன்னமும் ஒலி தான். ஒலி நிதானம் உடையது. ஒலி பொருள்களின் அதிர்வினால் மட்டுமே பரவக் கூடியது.

  நாம் இரண்டு சொற்பொழிவுகளுக்கு செல்கிறோம். இருவர் ஒரே விசயத்தை அப்படியே எழுதி வைத்தமாதிரி பேசுகிறார்கள் என வைத்து கொள்வோம். இப்போது பேசுபவரை பொறுத்து நமது மனம் பேச்சில் லயிக்கிறது. அதே போல ஒரே விசயத்தை அப்படியே இருவர் எழுதினாலும் எழுதியவர் எவர் என தெரியும் போது நமது சிந்தனை மாறுபடுகிறது. இது மனத்தில் ஏற்படும் ஒரு ஆலாபனை.

  எனக்கு தெரிந்த சகோதரி ஒருவர், பத்மஜா, கண்ணன் மீது தீராத பற்று உடையவர். அவர் தமிழில் எழுதிய பகவத் கீதை என் பார்வையில் எனும் ஒரு அற்புத தொடர். அதற்கு பின்னர் அவர் நீங்கள் சொன்ன மனநிலைக்கு நிரந்தரமாக சென்று விட்டார். தமிழில் இப்போது எழுதுவதே இல்லை!

  பகவான் பெருமையை எழுதிக் கொண்டே இருங்கள். அந்த அமைதியை கூட அழகாக வர்ணிக்கலாம். படங்கள் கொள்ளை அழகு.

  ReplyDelete