என்ன ஏதென்று பாராமலே, "ஐவரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" கூறியதால் தாய் சொல் மீறாமல் பாண்டவர்கள் பாஞ்சாலியை மணந்தனர், என்ற காரணம் ஒப்புக்கொள்ளும் படியாக இல்லை. "இங்கே பாருங்கள் அம்மா, இவள் பெண், வஸ்து அல்ல, அதனால் அவளுக்கு பிடித்த ஒருவனுக்கே மணம் புரிய சம்மதியுங்கள்" என்று கூறியிருந்தால் விவகாரமே இல்லை. எத்தனையோ பேசியவர்கள் இதையேன் பேச/விளக்க மறந்தார்கள்?
மின்மடல் செய்தியொன்று குறிப்பிடத் தோன்றுகிறது. அனைவரும் படித்திருக்கலாம்.
"பெண்களுக்கு தோதான/பிடித்தமான/ மணப்பதற்கு ஏற்ற ஆண்கள் இங்கு கிடைபார்கள்" என்ற விளம்பரத்தைப் படித்து, பல பெண்கள் உள்ளே நுழைந்தார்களாம். கடைக்குள் நுழைந்த பெண் தேவையான ஆண்மகனை தேர்ந்தெடுக்க முதல்தளம் நோக்கி பயணிக்கிறாள். முதல் தளம் இறங்கும் வாயிலில் "இங்கே-அழகான ஆண்கள் உள்ளனர். மேற்கொண்டு தேவைக்கு அடுத்த தளம் செல்லவும்" என்று எழுதியிருந்தது. உடனே அவளும் சரி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று இரண்டாம் தளம் ஏறுகிறாள். "இங்கே-அழகும் அறிவும் நிரம்பியவர்கள்" என்று எழுதியிருந்தது. அவளுக்கு மேலும் ஆவல் மேலிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும், அழவும், அறிவும், பண்பும் செல்வமும், உயர்ந்து கொண்டே போக, ஐந்து தளங்களைத் தாண்டி ஆறாம் தளத்தின் பொத்தானை அமுக்கிறாள்.
"மன்னிக்கவும்! நபர் எண்ணிக்கை:1001900 . உங்கள் தேவைக்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. நீங்கள் திரும்பிச் செல்லலாம். நன்றி!" என்றிருந்ததாம். பெண்ணின் (மனிதனின்?) திருப்தியற்ற குணத்தை விளக்குவதாக இருக்கிறது இப்புனைவு.
இதே போல் ஆண்களுக்கும் கூட, தனக்கு ப்ரியமானவள் அழகும், குணமும், பண்பும், வேலைக்கு செல்பவளாகவும், சமையல் கலையில் நளன் போலும், வீட்டுவேலை தெரிந்தவளும், பெரியோரை மதிப்பவளும், பெற்றோரிடம் விட்டுக் கொடுத்து போகும் குணமுடையாளும், பிறன் மனை நோக்காமல் இருப்பவளும், இன்னும் அடுக்கிக்கொண்டே போனால் கை வலிக்கும். தேவைகள் முடிவதில்லை... ....சரி நாம் பாஞ்சாலி கதைக்கு வருவோம்.
'இன்னார்க்கு இன்னார்' என்று எழுதி வைத்த தேவன் எழுத்தின் பேரில்(அல்லது விதி, சான்ஸ், freewill), எடுக்கும் முடிவுகள் வேறுபடுகிறது. குந்தியின் பேச்சைக்கேட்டு ஐவரும் சம்மதித்தனர் என்பது சரியான விளக்கமாக அமையவில்லை. வேறு விளக்கம் உண்டா எனில், திரௌபதியின் பூர்வ கதை விளக்கங்கள் இதற்கு துணை போகின்றன. ஐவரை ஒருத்தி மணப்பதா என கர்ணன் உட்பட பலரும் பழிச்சொல் பேசுகின்றனர். அப்போழுது அங்கு வரும் வியாசர் பாண்டவ்ர்களில் பூர்வ சரித்திரத்தை விளக்குகிறார். ஐந்து தேவர்களாக இருந்தவர்கள், சாபத்தினால் பூலோகம் வந்துள்ளனர். தர்மதேவன், வாயு இந்திரன், அஸ்வினி தேவர்களுக்கு மகன்களாகப் பிறந்து, நற்செயல் புரிந்து இறைவனை வந்தடைவதாக சிவபெருமான் திருவாய் மலர்ந்திருப்பதாகக் பூர்வக்கதை.
நளனுக்கும் தமயந்திக்கும் மகளாகப் பிறந்த நளாயினி நல்ல கணவனை வேண்டி தவம் புரிகிறாள். பெண்ணுக்கே உரிய ஆவலுடன், தன் கணவனாக தகுதிபெற்றவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விவரிக்க, 'ஒருவனுக்கே இத்தனை குணங்களும் இருப்பது அரிது, ஆகவே நீ ஐவரை மணப்பாய்' என்று சிவன் வரமளிக்கிறார். நல்ல கணவன் அமையப் பெற வேண்டும் என்று ஐமுறை கேட்டு, ஐந்து முறையும் சிவனும் வரமளித்ததால் ஐவரை மணந்தாள் என்றும் புராணம் கூறுகிறது. வருடம் ஒருவருக்கு மனைவியாக இருந்து, மீண்டும் கன்னியாகி இன்னொருத்தருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் குறிப்பு இருக்கிறது. அதனால் இவள் "நித்திய கன்னி" என்ற பெருமைக்கும் உடையள்.
ஐவருக்கும் உண்மையாக விளங்கியவள், அவர்களை சமமாக பாவித்தாளா? இறுதியாத்திரையாக ஹிமாலயம் செல்லும் வழியில் ஐவருடனும் புறப்படும் பாஞ்சாலியே முதலாவதாகத் துவண்டு இறந்து போகிறாள். ஐவருக்கும் மனைவியானவள், தன்னை முறையாய் வென்ற அர்ஜுனன் பால் அதிக அன்பு கொண்ட பாபத்தின் சுமையால், அவள் பயணம் தடைபட்டது என்று யுதிஷ்டிரர் விளக்குகிறார்.
எந்தக் கதை எப்படியானாலும், வாழ்கையில் பல விஷயங்கள் நம்மை மீறியும், நமக்கு உடன்பட்டும் நடக்கிறது, எதனால் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன ஏன் சில சம்பவங்கள் நிகழ்கின்றன என்று விளக்கம் தேட முற்பட்டால், கேள்விகள் தேங்கியிருக்க, விடை தேடும் படலத்தில் தொலைந்தே போய்விடுகிறோம்.
உண்மைதான்... சில விஷயங்களுக்கு விடை தேட முற்பட்டால் கிடைக்காது. ஒரு தாய் பெற்ற பிள்ளைகளின் மேல் எல்லாம் பாசம் வைத்தாலும் ஏதாவது ஒரு பிள்ளையிடம் கூடுதல் பாசம் காட்டுவது இயல்புதானே. பாஞ்சாலி தன் கணவர்களில் அர்ஜுனனிடம் அதுபோல பாசம் காட்டியதை மூத்தவரான தர்மபுத்திரனால் சகித்துக் கொள்ள இயலாது போயிருக்கும் என்பது என் எண்ணம்.
ReplyDeleteநான் நினைத்ததையே தாங்களும் கூறியிருக்கிறீர்கள்... நானும் தாயின் சற்றே கூடுதல் பாசத்தைப் போல் என்று தான் தான் நினைத்தேன். இயல்பாகவே இதனால் வரும் பொறாமை உணர்வாகவும் இருக்கலாம். தர்மரைத் தவிர அனைவருக்கும் வேறு மனைவிகள் உண்டு. தர்மருக்கே பாஞ்சாலி மனைவியாக வாழ்ந்தாள் என்றும் சிலர் கூறக் கேள்விப் பட்டிருக்கிறேன். வருகைக்கு நன்றி கணேஷ்.
ReplyDeleteஎன்னதான் முன்கதைச் சுருக்கமும் புராண உபகதைகளும் சில நிலைப்பாடுகளுக்கு உறுதுணையாய் நின்றாலும், இராமாயணத்தின் ஊர்மிளை போல் பாரதத்தில் பாஞ்சாலி என்னும் பாத்திரத்தின்பால் எனக்கு எப்போதுமே பரிதாபம் எழுவதுண்டு. விடை தெரியாத கேள்விகள் பற்றிய உங்கள் பார்வை மிகச்சரியானது.
ReplyDeleteஷக்தி கடைசி பாரா எதார்த்தம் ..அருமையாய் எழுதுகிறாய்!
ReplyDeleteதிரெளபதி அன்னை சக்தியின் சொரூபம்...
ReplyDeleteஇவள் ஐந்து பேருக்கு மனைவி அழியாப் பத்தினி என்று சொல்வார்கள்...
நான் அறிந்த வரையில் இந்தப் பாஞ்சாலியை அவர்கள் ஒரு குல தெய்வமாகவே போற்றிக் காத்தார்கள் என்று கேள்வியுற்றேன்... அப்போது அதற்கு சில சான்றோ அல்லது வேறு சில உதாரணமோ தந்து விளக்கம் அளித்தார்கள் அவைகள் என் ஞாபகத்தில் இல்லை... இருந்தும், இன்னொருக் கதையும் கேள்வியுற்றேன்?! அது ஒருமுறை ஐவரும் பாஞ்சாலியும், கிருஷ்ணருடன் ஏதோ, ஒரு தோப்பில் இருந்தார்கள் அப்போது ஒரு நல்ல முடிய மாங்காய் பழமாகும் முன்னமே மரத்தில் இருந்து காம்பு அறுந்து விழுந்தது... அதை கண்ணுற்ற பாஞ்சாலி வருந்தி அவள் அண்ணனிடம் முறையிடுகிறாள், அப்போது கிருஷ்ணன் சொல்வானாம்; அதை மீண்டும் ஒரு பத்தினி எடுத்து ஒட்டினால் அது மீண்டும் அந்தக் காம்போடு இணையும் என்று அதற்கு உடனே பாஞ்சாலி இதோ நான் செய்கிறேன் என்று செய்ய து ஒட்டாமல் போக அதிர்ந்து பொய் அண்ணனிடம் முறையிடுகிறாள்.. கிருஷ்ணன் சொல்வானாம், அம்மா, நீ முதன் முதலில் சுயவரத் தேர்வில் அர்ஜுனனை மணக்கும் முன்னமே கர்ணனை கண்டபோதே உனது மனம் களங்கப் பட்டுவிட்டது... அந்த குறை தான் இப்போது இங்கே தெரிகிறது என்றானாம்.... கதை கதையானாலும் அதன் பின்பு உள்ள கருத்து கற்பின் இலக்கணத்தை உணர்த்துவதாகக் கருதலாம் அல்லது அதை கூற இந்தக் கதையும் புனைந்திருக்கலாம்.
எப்படியோ பாண்டவர்களின் அரண்மனையில் பாஞ்சாலி குல விளக்காக / குல தெய்வமாக இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம்...
இதைப் பற்றிய தகவல்களை தேட தூண்டியுள்ளது தங்களின் பதிவு.... நன்றிகள் சகோதிரி..
நன்றி கீதா, ஷைலஜா...
ReplyDeleteகீதா, நானும் உடன் படுகிறேன். ஊர்மிளை, பாஞ்சாலி இது போல் பலருண்டு, சீதா உட்பட.
நன்றி தமிழ்விரும்பி. பாஞ்சாலியை குலதெய்வமாக வழிபடுவதும், கர்ணனை பிடித்ததும் தெரியும், ஆனாலும் கதை புதிது. நன்றி....
வை.கோபாலக்ருஷ்ணன், said:
ReplyDelete//இதே போல் ஆண்களுக்கும் கூட, தனக்கு ப்ரியமானவள் அழகும், குணமும், பண்பும், வேலைக்கு செல்பவளாகவும், சமையல் கலையில் நளன் போலும், வீட்டுவேலை தெரிந்தவளும், பெரியோரை மதிப்பவளும், பெற்றோரிடம் விட்டுக் கொடுத்து போகும் குணமுடையாளும், பிறன் மனை நோக்காமல் இருப்பவளும், இன்னும் அடுக்கிக்கொண்டே போனால் கை வலிக்கும். தேவைகள் முடிவதில்லை... ..//
ஆமாம். அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆண்களின் தேவைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் முடிவே கிடையாது தான்.
ஏதோ ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று போனால் தான், நல்லது.
ஒன்று இருப்பவரிடம் மற்றொன்று இருக்காது. எல்லாம் இருக்கும் பெண்ணாக ஒருவேளை இருந்து விட்டால், நிச்சயமாக இவனை மணக்க விரும்ப மாட்டாள்.
வயது ஏறிக்கொண்டு, வாலிபப்பருவமும் போய்க்கொண்டே இருக்குமே தவிர, வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.
பல கண்டிஷன்கள் போடும்”மணல்கயிறு” எஸ்.வி.சேகர் ஞாபகம் தான் வருகிறது.
அதில் வரும் விசு போன்றவர்களால் தான், இன்றைய பல திருமணங்களும் நடத்தி வைக்கப்படுகின்றன.
வை. கோபாலகிருஷ்ணன்
========================
நன்றி வை.கோ சார்.
ReplyDelete//ஏதோ ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று போனால் தான், நல்லது.
//
:)))) ரசித்தேன். உண்மையும் அது தான். திருமணம் மட்டுமல்ல வாழ்கையிலும் பல காம்ப்ரமைஸ் செய்து நகர்ந்தாலேயொழிய இனிமை இருப்பதில்லை.
//எந்தக் கதை எப்படியானாலும், வாழ்கையில் பல விஷயங்கள் நம்மை மீறியும், நமக்கு உடன்பட்டும் நடக்கிறது, எதனால் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன ஏன் சில சம்பவங்கள் நிகழ்கின்றன என்று விளக்கம் தேட முற்பட்டால், கேள்விகள் தேங்கியிருக்க, விடை தேடும் படலத்தில் தொலைந்தே போய்விடுகிறோம்.//
ReplyDeleteஆமாம் தொலைந்து தான் போய் விடுவோம்.
பாஞ்சாலி மஹாப்பதிவிரதைகள் பட்டியலில் வருவதால், இதன் பின்னனி பற்றி நம் சிற்றறிவுக்கு சரிவரத்தெரியாமல், இதைப்பற்றியெல்லாம் நாம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது என எனக்குத் தோன்றுகிறது.
சிக்கலான பலவிஷயங்களைப் பற்றித்தான் தாங்களும் விவாத மேடைக்குக் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் அதுவும் எனக்கும் பிடித்துள்ளது.
வை. கோபாலகிருஷ்ணன்.
=========================
கருத்துக்கு நன்றி சார்:)
ReplyDeleteஎனக்கென்னவே பாஞ்சாலி பாவப்பட்டவளாய்த் தான் தெரிகிறாள்.
ReplyDeleteஆணாதிக்க சமுதாயம் தான் அன்றும் இன்றும்
vaanga sivakumaaran...உண்மை தான்...ஆணாதிக்கம் தான் என்றும்...எப்பொழுதும்...எங்கும்!!...
ReplyDelete//தன்னை முறையாய் வென்ற அர்ஜுனன் பால் அதிக அன்பு கொண்ட பாபத்தின் சுமையால், அவள் பயணம் தடைபட்டது என்று யுதிஷ்டிரர் விளக்குகிறார்.//
ReplyDeleteயுதிஷ்டிரரும் சாதாரண மனிதர்தான் என்பது புரிகிறது.
'பிடித்திருந்தது அதனால் ஐவரையும் மணந்தாள்' என்று எடுத்துக் கொள்ள ஏன் தயங்குகிறோம்?
ReplyDeleteஎன்ன ஒரு அருமையான கேள்வி (கருத்து ?)
Deleteஇந்த கேள்விக்கு என் பதில் - நாம் இன்னமும் ஆஷாடபூதிகளாய், இருட்டிலேயே இருக்கிறோம் அல்லது உண்மையை நேருக்கு நேர் சந்திக்க பயப்படுகிறோம்.
//நளனுக்கும் தமயந்திக்கும் மகளாகப் பிறந்த நளாயினி நல்ல கணவனை வேண்டி தவம் புரிகிறாள். பெண்ணுக்கே உரிய ஆவலுடன், தன் கணவனாக தகுதிபெற்றவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விவரிக்க, 'ஒருவனுக்கே இத்தனை குணங்களும் இருப்பது அரிது, ஆகவே நீ ஐவரை மணப்பாய்' என்று சிவன் வரமளிக்கிறார். நல்ல கணவன் அமையப் பெற வேண்டும் என்று ஐமுறை கேட்டு, ஐந்து முறையும் சிவனும் வரமளித்ததால் ஐவரை மணந்தாள் என்றும் புராணம் கூறுகிறது.//
ReplyDeleteஇந்த புராணத்தை எழுதியவங்க பேரு ஷக்திபிரபாவா :-))
மவுத்கல்யர் என்ற ரிஷியின் மனைவி நளாயினி, பெருவியாதியால் பாதிக்கப்பட்டவரையும் தலையில் சுமந்து தாசி வீட்டுக்கு போனதாகவும், சூரியன் உதிக்க தடை விதித்த பதிவிரதைனும் தானே போகுது நளாயினி கதை. கல்யாணம் ஆனப்பிறகே 5 கணவன் வரம் அடுத்த ஜென்மத்துக்கு கிடைக்குது.முழுசா படிச்சா உள்ள நிறைய மேட்டர் இருக்கு :-))
நல்ல பதிவு
ReplyDeleteஎனக்கு இந்த பாஞ்சாலி ஐவருக்கு மனைவி ஆன கதை கேட்கும் போது வரும் முதல் சந்தேகம் உண்மையிலேயே வியாசர் எழுதிய மகாபாரத்தில் எவ்வாறு குறிப்பிடப் படுகிறது என்பதுதான்.யாரேனும் அறிந்தவர்கள் கூறலாம்.
முற்காலத்தில் உலகின் பல பகுதிகளில் பல வகையான திருமணங்கள் வழக்கத்தில் இருந்து வந்தன.ஒரு ஆண் பல பெண்களை மணப்பதும்,ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும் அதில் இரு வகைகளே.
இப்புத்தகம்[The History of Human Marriage (1891), Edvard Westermarck] விளக்கும் மனித திருமணத்தின் வரலாறு என்பது படிக்க சுவாரஸ்யமான(?) தகவல்கள் தரும்.You can download this book.
http://www.archive.org/details/cu31924021846914
நன்றி
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்
நல்ல பயனுல்ல தகவல்...www.rishvan.com
எதனால் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன ஏன் சில சம்பவங்கள் நிகழ்கின்றன என்று விளக்கம் தேட முற்பட்டால், கேள்விகள் தேங்கியிருக்க, விடை தேடும் படலத்தில் தொலைந்தே போய்விடுகிறோம்/
ReplyDeleteஎல்லைக்கு அப்பாற்பட்டதை தேடமுடியாதே !
சிந்திக்கவைக்கும் சிறந்த பகிர்வு.. பாராட்டுக்கள்..
Shakthiprabha
ReplyDelete"நான் யார்" - ஆராய முற்படும் போதே, "நான்" அங்கு இருப்பதில்லை
நன்றி ரிஷ்வன்
ReplyDeleteபாஞ்சாலி. பாஞ்ச் என்றால் ஐந்தாமே இந்தியில்!
ReplyDeleteபல விசயங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது. எல்லாரையும் மணந்த திரௌபதிக்கு பிள்ளைகள் பிறந்தனரா? என்பதை அறிந்து கொண்டால் பல விசயங்கள் விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்.
பஞ்ச பூதங்கள். ஐந்து வகை இந்திரியங்கள் என பல விசயங்களை கட்டி காத்தவள் திரௌபதி எனலாமோ?. பூமி தாய் என அவள் போற்றப்படுவதும் உண்டு.
ஆம் சகோ. பாஞ்ச் என்றால் ஐந்து. ஐந்து புத்திரர்கள்,
ReplyDeleteப்ரதிவ்ந்தியா, சுதசோமா, ஸ்ருதகர்மா, சாத்னிகா, ஸ்ருதசேனா, முறையே,
தர்மன், பீமன், அர்ஜுனன், நகுல, சஹாதேவனுக்கு பிறந்தனர். இவர்களுக்கு உப பாண்டவர்கள் என்று பெயராம்.
போரில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை. இரவு தூங்கிக்கொண்டிருந்தவர்களை அஸ்வத்தாமன் கொன்றுவிடுகிறான்.
தங்கள் எழுத்துக்கு ஒரு மரியாதை செய்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்வையிட வரவும் சகோதரி
ReplyDeletehttp://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_06.html
"ஒருவனுக்கு ஒருத்தி" -இதற்குள் கட்டுப்படாத ஆரியர் காவியங்கள் - தற்போதைய mega serial-கள்!
ReplyDeleteநன்றி நண்பர்களே
ReplyDeleteவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் பிறக்கும் பொழுதே முடிவாகியது . படித்துப்பாருங்கள்
ReplyDeleteLIFE IS SCRIPTED , ( also he book. ). Illusion-Maya
This is a FREE DOWN LOAD OF EBOOK FROM:
free-ebooks.net/search/Natarajan.