பக்தன்
_____
துன்பம் வரும் போது விரக்தி மனநிலைக்கு தள்ளப்படும் நடுநிலை பக்தர்கள் பெரும்பாலும் நாத்திகர்கள் ஆவதில்லை. துன்பமுற்ற நேரம் இறைவனை நிந்திப்பது நம்மில் பலரும் செய்யக்கூடியது. இறைவனை நிந்திப்பது என்றால், இறைத்தத்துவத்தின் மேல் நம்பிக்கையற்ற நிலை, விரக்தி, நல்ல செயல்களிலும் தர்மங்களிலும் நம்பிக்கை குறைதல் போன்றவையும் அடக்கம்.
இந்திரஜித் மாயா-சீதாவை உருவாக்கி அவளை அழித்த போது வானர சேனைகள் செயலற்று நின்றுவிடுகின்றனர். இலக்குவனும் இராமனும் கூட இம்மாயையில் சிக்குண்டு மனம் வெம்பி விடுகின்றனர். அப்போது இலக்குவன் தர்மம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை என்ற நம்பிக்கை இழந்து புலம்புகிறான். 'தர்மம் கடைபிடித்து நாம் கண்ட பலன் தான் என்ன!' என்று அரற்றுவதாய் சரித்திரம்..
விரக்தி நிலை பெரும்பாலும் நீடிப்பதில்லை. சொற்ப காலத்திற்கே ஆட்டுவிக்கும் பரிதவிப்பு நிலை. அதன் பின் உண்மை பக்தன் தன் நிலைக்கு திரும்புகிறான். அவன் ஒரு போதும் நாத்திகன் ஆகிவிடுவதில்லை. இது சாதாரண சாமான்ய நடுநிலை பக்தனின் நிலை என்றால், 'என்ன தலைவிதி' என்று நோகாத மனிதனோ ஞானியின் நிலையில் உள்ளவன்.
துன்பம் நேரும் போதெல்லாம் துவண்டுவிடாது இறைவனையே பற்றியிருப்பவன் சிறந்த பக்தன். உயர்ந்தவன். உதாரண புருஷன். பல பக்தர்கள், மஹாபுருஷர்களின் கதையோ நாயன்மார்கள் ஆழ்வார்கள் கதையையோ அறிந்து, தெளிந்து கொண்டோமேயானால் அவர்களின் வைராக்கியம் மனவுறுதி, பக்தி போன்றவை பொன்னைப் போல் ஜொலிப்பதைக் காணலாம்
திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவர் எட்டாம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இவரைப் பற்றிய செய்திகள் அறியலாம்.
சிவபெருமானின் "திருநீலகண்டம்" என்ற திருநாமத்தை அடிக்கடி வழங்கிவந்ததால், திருநீலகண்ட-குயவனார் என்ற பெயர் வரக் காரணமாயிற்று. ஓடு செய்து அவற்றை அடியவர்களுக்கு இலவசமாக அளித்து வருவதை திருப்பணியாக செய்துவந்தார். சிறு குறையேனும் இல்லாத மனிதன் ஏது? அவரால் பெண்ணின்பத்தை துறக்க முடியாமற் போனது. இதனால் மனம் நொந்த அவரது இல்லத்தாள், "எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்" எனக் கூறி தள்ளிவைக்கிறாள். "எம்மை" என்று கூறியதால் இனி எந்த பெண்டிரையும் யாம் தொட மாட்டொம் என உறுதி பூண்டு அதன் படி நடந்தும் வந்தார். மணவுறவு கொள்ளாமலே இருவரும் இளமை தொலைத்து முதுமையும் எய்தினர்.
ஒரு நாள், சிவனடியார் ஒருவர் திருநீலகண்டரை நாடி தமது திருவோட்டினை கொடுத்து, ஒப்பற்ற அந்த திருவோடு பொக்கிஷம் போன்றதென்றும் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுமாறும் விண்ணப்பித்து தம் பயணத்தைத் தொடர்ந்தார். சில நாட்கள் சென்று திரும்ப கேட்கும் போது, ஓடு தேடிப்பார்த்தும் தென்படவில்லை. வேறு தருவதாகவும், அதைவிடவும் நல்ல ஓடு தருவதாக வாக்களித்தும் சிவனடியார் மனம் சுருங்கி சினம் கொள்கிறார். திருநீலகண்டரே அதை கவர்ந்து கொண்டு தம்மிடம் பொய் பேசுவதாக கோபிக்கிறார்.
உன் மகனின் கையைப் பற்றி சத்தியம் செய் என்கிறார். மகன் இல்லை என்றால், மனைவியின் கை பற்றி குளத்தில் முங்கி சத்தியம் செய் எனக் கூறுகிறார். சிவனடியார் உடனே சபை கூட்டி வழக்கு தொடர்கிறார். நீர் செய்தது சரியென்றால் ஏன் சத்தியம் செய்ய தயங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிகின்றனர் அவையோர். மனைவியை தீண்ட முடியாத காரணத்தை ஊர் அறிய உரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். தடியொன்றின் ஒரு முனையை இவர் பிடித்தும், மறு முனையை மனைவியை பிடிக்கச் செய்து குளத்தில் முங்கி எழுகிறார்.
குளத்தில் முங்கி எழுந்த மாத்திரத்தில் அவர்கள் முதுமை நீங்கி இளமைத் தேகம் பெறுகின்றனர். சிவனடியார் மறைந்து அங்கே ஈசன் காட்சியளித்து புலனடக்கம் மிகுந்த அவர்களை வாழ்த்தி அருளியதாக வரலாறு கூறுகிறது.
நன்றி:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
(for further reference on thiru-neelakanta nayanaar)

சிறு வயதில் இதுமாதிரி கதைகளை படிக்கும்போது ஒரு ஆச்சரியம் பக்தியெல்லாம் இருக்கத்தான் செய்தது. அப்புறம் வீட்டிலிருந்து வெளிவந்தபின்னர் பிற(எல்லா தரபட்ட) மக்களோடும் பழகுகையில் ஆன்மிகம் உடைந்து மனிதம் பற்றிக்கொண்டது. ஆதலால் இப்பொழுது ஆன்மிகம் மிகுந்த ஆயாசத்தையே தருகிறது.
ReplyDeleteஇது என் தனிப்பட்ட கருத்து. பொங்கல் வாழ்த்துகள் :)
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க அஷோக். பொங்கல் வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஉண்மையான ஆன்மீகமும் மனிதத்தையும் ஒரு பகுதியாக போதிக்கிறதே. நல்ல சிந்தனைகள் இருந்தாலே அதுவே போதுமானது. உங்கள் தனிப்பட்ட கருத்து மிக நல்ல கருத்து. பகிர்ந்தமைக்கு நன்றி.
\\போதிக்கிறதே\\\\நல்ல சிந்தனைகள்\\
ReplyDeleteஉங்கள் ஆன்மீகம் எதை போதிக்கறது? ஏது நல்ல சிந்தனைகள்? ஏழைகளை ஏழையாய் வைத்திருப்பதா?
நிற்க.. உங்களை குழப்பவிருப்பமில்லை.. என் முதல் கருத்தை நல்ல கருத்து என்றதற்கு நன்றி :)
// உங்கள் ஆன்மீகம் எதை போதிக்கறது? //
ReplyDeleteஎதையும் போதிப்பதில்லை. உங்களை உங்களையே அடையாளம் காட்டுகிறது ( உங்களுக்கு விருப்பம் இருந்தால் )
//ஏழைகளை ஏழையாய் வைத்திருப்பதா? //
ஏன்? நாமெல்லாம் ஏழைகளை உயர்த்த முயலலாமே? ஆன்மீகம் அதைத் தடுக்கவில்லை. எதையும் செய்யாதே என்று கையையும் பிடித்து இழுக்கவில்லை. பாரபட்சமின்றி கருணை கொண்டிருக்கும் மனப்பான்மை ஆன்மீகமும் (I said alos) கற்றுத் தருகிறது. i.e. aanmeegam and manidham is not mutually exclusive. Its just diff perspective of looking into the same issues.
பலரும் ஆன்மீகத்தை மதம் சம்பந்தபட்ட விஷயங்களுடன் குழப்பிக் கொள்கிறார்கள். ஆன்மீகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டதால், கடைபிடிப்பதாலும் ஒருவன் மேன்மையானவன் என்றோ அதில் நம்பிக்கை இல்லாத இன்னொருவன் கேலிக்கத்தக்கவனும் இல்லை.
அவரவர்க்கு அதது :)
1.இரண்டு நாட்கள் முன்னால் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு போனேன்... அதில் முதல் 50 அடிக்கு உள்ள நாற்காலியில் அமர ரூபாய் 1000.
ReplyDelete2.நேற்று விஜய்டீவி டாக்ஷோ ஒன்னு. டைரக்டர் முருகதாஸ் நடிகர் சூர்யா. அதை பார்த்தீர்களா?
//ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டதால், கடைபிடிப்பதாலும் ஒருவன் மேன்மையானவன் என்றோ அதில் நம்பிக்கை இல்லாத இன்னொருவன் கேலிக்கத்தக்கவனும் இல்லை// இப்படின்னு யாரு சொன்னது??
//ஏன்? நாமெல்லாம் ஏழைகளை உயர்த்த முயலலாமே? ஆன்மீகம் அதைத் தடுக்கவில்லை. எதையும் செய்யாதே என்று கையையும் பிடித்து இழுக்கவில்லை.//
ஏழைகளை உயர்த்த முயலலாமே? ஆன்மீகம் தேவையா?
//ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு போனேன்... அதில் முதல் 50 அடிக்கு உள்ள நாற்காலியில் அமர ரூபாய் 1000. //
ReplyDeleteஉண்மையான ஆன்மீகம் நமக்குள் நாமே கண்டுகொள்வது. நம் மௌனத்தில் மலர்வது, என்பது என் எண்ணம். மற்ற கூட்டங்கள் நம்மை வழி நடத்திச் செல்லலாம். செல்வதும் செல்லாததும் நம் விருப்பம் :)
These days everything is commmercialised, that does not make the "subject in question" to take a second stand. It just means that, the way people approach any subject is not too perfect.
///நேற்று விஜய்டீவி டாக்ஷோ ஒன்னு. டைரக்டர் முருகதாஸ் நடிகர் சூர்யா. அதை பார்த்தீர்களா? //
நான் டி.வி அதிகம்(அறவே / சுத்தமாக) பார்ப்பதில்லை. எனக்குப் அதில் அவ்வளவு பிடிப்பு இருப்பதில்லை.
//ஏழைகளை உயர்த்த முயலலாமே? ஆன்மீகம் தேவையா? //
தேவையில்லை அஷோக். Everything can function independantly. IT is NOT MANDATORY someone should be interested in these to pass as a better individual. அதைத் தான் நானும் சொல்ல முயன்றேன். ஆன்மீகத்தில் ஈடுபாடு அவசியம் இருக்கவேண்டும் என்பதே அவசியமில்லை :) அது தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம்.
ரொம்ப நாளாக உங்க ப்ளாக்கு வரததால் D.R.Ashok ரூபத்தில் வந்து சற்று கலாய்த்து பார்த்தோம், அதற்கும் அற்புதமாக பதிலத்ததால் அகமகிழ்ந்தோம், இவையும் எம் திருவிளையாடல்களில் ஒன்று :P
ReplyDeleteஇப்படிக்கு
இறைவன்
//நான் டி.வி அதிகம் பார்ப்பதில்லை//
சோ புரோகிராம் என்ன தியெட்டர்லயா போடறாங்க. நாங்களும் டீவி பாக்கறதுயில்ல அன்னைக்கி வீட்ல இருந்ததுனால பார்த்தேன்.
விஜய் டாக்ஷோ.. மேட்டரு என்னன்னா.. +2ல 1125 மார்க எடுத்தவன் மேல படிக்கமுடில காரணம் no money. He is working now as a courier boy in Professional Cr's.
//தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம்//
ReplyDeleteஅதுவே ஞானம் என்று இவன் கண்டது :)
//ரொம்ப நாளாக உங்க ப்ளாக்கு வரததால் D.R.Ashok ரூபத்தில் வந்து சற்று கலாய்த்து பார்த்தோம், அதற்கும் அற்புதமாக பதிலத்ததால் அகமகிழ்ந்தோம், இவையும் எம் திருவிளையாடல்களில் ஒன்று :P
ReplyDeleteஇப்படிக்கு
இறைவன்
//
:)))))) ரொம்ப ரசித்துச் சிரித்தேன். நன்றி (இறைவா!!! :D )
//சோ புரோகிராம் என்ன தியெட்டர்லயா போடறாங்க.//
ஹிஹிஹி :))))))))
//நாங்களும் டீவி பாக்கறதுயில்ல அன்னைக்கி வீட்ல இருந்ததுனால பார்த்தேன்.//
:D
//மேட்டரு என்னன்னா.. +2ல 1125 மார்க எடுத்தவன் மேல படிக்கமுடில காரணம் no money. He is working now as a courier boy in Professional Cr's. //
வருத்தமாய் இருக்கிறது தான். இது போல் லக்ஷ கணக்கில் .... யாரை நொந்து கொள்வது. We can talk from communism to capitalism...and end result is talking or posting DOESN'T solve the problem. also... its out of place in the current post..
//தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம்//
அதுவே ஞானம் என்று இவன் கண்டது :)
உண்மை தான். விலங்கிட்டு பூட்டாமல் வாழ விடுங்கள் தனிமனிதனை... சுதந்திரமாய் பறந்து அவனே கண்டு கொள்வான்.
//We can talk from communism to capitalism...and end result is talking or posting DOESN'T solve the problem. also... its out of place in the current post..//
ReplyDeleteஅப்பா.. கண்ன கட்டுதே.. அந்த புரோக்கிராம்ல கூரியர் வேலை பாக்கற பையன engg படிக்க காசு கொடுத்தாங்க, A.R.murugadoss 'சிகரம்' என்ற அமைப்பு தொடங்கியிருக்கிறார். இது மாதிரி காசு இல்லாம படிக்க முடியாதவங்களுக்கு அவங்க அமைப்பு உதவுது :), அதுக்குள்ள communisma capitalasama... அடுத்த அவதாரம் எடுக்கவேண்டியதுதான்போல.
// இது மாதிரி காசு இல்லாம படிக்க முடியாதவங்களுக்கு அவங்க அமைப்பு உதவுது :) //
ReplyDeleteநீங்க சொல்ல வருவது புரியுது :)
//அடுத்த அவதாரம் எடுக்கவேண்டியதுதான்போல. //
ஆஹா ...மறுபடியுமா (நடுக்கம்) :)))))))))