January 11, 2016

மௌனமான நேரம்அருகேயுள்ள திருக்கோவிலில்  பூஜைக்கு பூ பறித்து கொடுப்பது என் அன்றாட பணிகளுள் தலையாயது, பிடித்தமானதும் கூட. 

பூஜைக்கு தேவையான பூவை குருக்களே சில நாள் பறித்திருப்பார். அன்றைக்கெல்லாம் இறைவனின் நாம ஜபம் செய்து விட்டு புறப்பட்டு விடுவேன்.

சென்னையின் வெயிலுக்கு சளைக்காமல், கிட்டத்தட்ட  ஒரு  நந்தவனமே கோவிலுள் குடிகொண்டுள்ளது. அதை  நங்கு செழிப்புடன்   பராமரித்து சுத்தமாய் வைத்திருக்கின்றனர்.  செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மௌனம் அனுஷ்டிப்பதால், பெரும்பாலும் நான் பேசி யாரும் கேட்டிருக்கும் வாய்ப்பு அரிது அல்லது மிகவும் குறைவு. மௌனம் அனுஷ்டிக்காத தினங்களிலும் கூட நாம ஜபத்தில் ஈடுபடுவதால், பெரும்பாலும் அறவே பேச்சை தவிர்த்து வருகிறேன். 

இன்றைக்கு அன்றாட பூக்களை சேகரித்த பின்னர், சேற்றில் புதைந்த என் கால்களை கழுவ அங்கு தொண்டு செய்யும் இன்னொரு பெண்மணி முன் வந்தார். "அடடா! வேண்டாங்க" என கூச்சத்துடன் நெளிந்த என்னை....

"அட வுடுப்பா,  நீயும்  நானும் ஒன்னு தான், சும்மா இரு,  நான் தண்ணி ஊத்தறேன்" என கூறியபடி  நீரூற்றி உதவி செய்தாள். 

அங்குள்ள இன்னொரு பெண்மணியும் மெதுவே பேச்சுக்கொடுத்தாள். 

"நீ பேசியே  நான் பார்த்ததில்லை" "செவ்வாய் சனி மௌனம், மிச்ச நாளுங்க
கண்ண மூடி உக்காந்துக்குற,  உங்குரல இன்னிக்குத் தான்   கேட்டனே" என்றாள்."அப்படியில்லம்மா, மௌனம் இல்லைன்னாலும், சாமி பேர சொல்லிட்டு இருப்பேன் அதான்" எனவும்,

"அப்புடித்தான் இருக்கணும், சொம்மா எதையானும் பெசி என்னத்த கண்டோம்,  நீ செய்யுறது தான் சரி தாயி, உன்னப் பாத்து  நாலு பேரு, கண்ணமூடி ரெண்டு  நிம்சம் சாமிய நெனைப்பாங்க பேச்சக் குறைப்பாங்க"


ஒவ்வொருவரின் செயல்பாடும் சுற்றியுள்ள சிலரயாவது சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்கும் பொழுது, சீரிய கவனதுடன் நம் எண்ணங்களை, செயல்களை, சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு நம்மிடம் இருப்பது புரியத் துவங்குகிறது. 9 comments:

 1. மெளனமாக இருப்பது எப்போதுமே மிகச்சிறந்தது. படங்கள் எல்லாமே அழகோ அழகு.

  >>>>>

  ReplyDelete
 2. //செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மௌனம் அனுஷ்டிப்பதால், பெரும்பாலும் நான் பேசி யாரும் கெட்டிருக்கும் வாய்ப்பு அரிது அல்லது மிகவும் குறைவு.//

  இதில் ‘கெட்டிருக்கும்’ என்ற வார்த்தை ‘கேட்டிருக்கும்’ என இருந்தால் இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்திருக்கும் .... தங்களின் மெளனம். :)

  //"நீ பேசியே நான் பார்த்ததில்லை" "செவ்வாய் சனி மௌனம், மிச்ச நாளுங்க
  கண்ண மூடி உக்காந்துக்குற, உங்குரல இன்னிக்குத் தான் கெட்டனே" என்றாள்.//

  அதுபோலவே ..... இதில் ‘கெட்டனே’ என்பது ’கேட்டேனே’ என்று !

  ReplyDelete
 3. //ஒவ்வொருவரின் செயல்பாடும் சுற்றியுள்ள சி ல ரை யா வ து சிந்திக்கத் தூண்டுவதாய் இருக்கும் பொழுது, சீரிய க வ ன த் து ட ன் நம் எண்ணங்களை, செயல்களை, சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு நம்மிடம் இருப்பது புரியத் துவங்குகிறது. //

  மிக அழகாக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். எங்களுக்கும் இப்போது அது நன்கு புரியத் தொடங்கி விட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. நன்றி சார். திருத்தியுள்ளேன். உடன் வருகைக்கு மிக மிக நன்றி. உற்சாகமூட்டுவதாய் உள்ளது.

  ReplyDelete
 5. சிறு தொகுப்பு - கிடைத்த தகவல், சில நல்ல பண்புகளை மௌனம் மூலம்கூட பிறருக்கு உணர்த்தலாம். சிலருக்காவது புரியாதா.
  இப்படித்தான், நான் பாலி பைகளை தவிர்ப்பேன். ஆனால், கடையில் வேண்டுமென்றே, ஐயையோ, பை வேண்டாம். என் பையில் கொடுங்கள் என்று நான்கு பேருக்கு கேட்கும்படி சொல்வேன். இங்கே, மௌனம் இல்லை. தகவல் சிலருக்கு காது வழிதான்
  சொல்லவெண்டியு ள்ளது

  ReplyDelete
 6. படிப்பது, பார்ப்பது, கேட்பது எல்லாச் செயல்களுமே நம்மில் வினைபுரிகின்றன. வெளி விஷ்யங்கள் உள் போகும் போது, உள்வாங்கிக்கொண்டவை வெளிக்குப் போகாமல் இருப்பது எப்படி சாத்தியம்?.. வலிய வாசலை அடைத்துத் தடுப்பதிலும் என்ன நியாயம் இருக்கிறது? சொல்லுங்கள்.

  பழக, பகிர, பேச வரம் கிடைத்த மனிதப் பிறவி இரண்டு நாட்களாகத் தான் இருக்கட்டுமே, மெளனமாய் இருப்பதென்றால்.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.

  சும்மா இருப்பது அருளாளர்களூக்கு சுகமாயிருக்கலாம்; சும்மா இருப்பதிலும் சுகமில்லை எனத் தெரிந்தவர்கள் என்ன செய்வது சொல்லுங்கள்.

  எழுதிக் காட்டலாமா?.. எழுதிக் காட்டும் பொழுதும் வாய் பேசவில்லையாயினும் மனம் பேசுகிறதே! என்ன செய்வது?.

  பேசுவது என்பது வாயால் மட்டும் இல்லையென்று தெரிகிறது. கண் பேசுகிறது; கண் பேசுவதைக் கேட்க காது வேண்டாம் என்றும் தெரிகிறது.

  மெளனத்திற்கு மொழி தேவையில்லாமலும் இருக்கலாம்; கண் பேசும் பொழுது பேசுவதற்கும் மொழியும் தேவையில்லை என்று தெரிகிறது.  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜீவி :) ...உண்மை தான். உண்மையான மௌனம், மனத்தின் ஓசை அடங்ககுதலே. அதற்கு இதெல்லாம் படிக்கட்டுக்கள் என்று கொள்ளலாம். குறைந்த பட்சம் ஆலையங்களில் அல்லது வழிபாட்டுத் தலங்களில் மௌனம் கடைபிடித்தல் அமைதிக்கு வழிவகுக்கும் என்பது என் எண்ணம்.

   Delete
 7. மௌனமாக இருந்து வாயை அடக்கலாம் மனதை அடக்க முடியுமா. மௌனமாக இருப்பதால் மனத் திண்மை கூடுகிறது என்கிறார்கள் எனக்குத் தெரியவில்லை. திருமதி கோமதி அரசும்மௌனம் அனுஷ்டிக்கும் கட்சி என்று எப்போதோ படித்த நினவு. பார்வையும் மௌனமும் என்று நான் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன் http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_19.html

  ReplyDelete
 8. வாருங்க்கள் gmb சார், மனத்தின் மௌனத்தின் முதல் படி வாய் மௌனிப்பதே :) ... ஆம் மனத்திண்மை கூடுகிறது..... சில நேரங்களில் எல்லாம் சுவைத்து விட்ட திருப்தி இருப்பதால், பேசுவதற்கு ஒன்றும் இல்லாதது போல் ஒரு நிறைந்த அமைதி சூழ்ந்து கொள்வதால் மௌனம் பிடிக்கிறது.

  ReplyDelete