January 07, 2016

காத்திருப்பு



உடனிருந்த கணங்களுக்கு
உரமிட்டு உயிரூட்டி
நீரூற்றி  நிறம்சேர்த்து
செழித்தோங்கும் மனத்தோட்டத்துப் பூக்களின்
பறிக்கப்படாத  வாசம்...
()
கடன்படவில்லை உனக்கெனவே உயிர்பெற
திடம் பெறவில்லை   உறவெனவே  உரிமை தற
உன் தோளில் உறவாடும்  வேறொருத்திக்கு
என் மனப்பூக்களை அணிவித்து அழகூட்டி
அறிவிப்பின்றியே அகன்றிடவோ...

ஷக்திப்ரபா

9 comments:

  1. ’காத்திருப்பு’ என்ற தலைப்புடன் மனப்பூக்களை அணிவித்து ஒரு சோக கீதம் இயற்றியுள்ளதாகத் தெரிகிறது.

    என் சிற்றறிவுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் உள்ளது.

    இருப்பினும் நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் பதிவுலகப் ப்ரவேஸம் மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வை.கோ சார். இத்தனை மாதங்கள் இடைவெளி விட்டு பதிவிட்டாலும் தப்பாமல் வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்துகிறீர்கள். மிக்க வன்றி.

      Delete
    2. //மிக்க வன்றி.//

      அது என்ன ’வன்றி’ ? :)

      இதற்கான தங்களின் பதிலை என்னுடைய 2015-ஆம் ஆண்டுக்கான இறுதிப்பதிவினில் பின்னூட்டமாக எதிர்பார்க்கிறேன். இதோ இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      நானும் உங்களைப்போலவே 01.01.2016 முதல் பதிவுலகிலிருந்து விலகிக்கொண்டு மிகவும் ஜாலியாக இருந்து வருகிறேன். :)

      அன்புடன் கோபு

      Delete
    3. oh my god! Thats not a pleasant news. Would check out vgk sir.

      Delete
  2. Only the poet has the insight on what was said. Must be an echo of a mindset.
    Others can read/ enjoy/ understand or relate to the events from the past.

    Beautiful!

    ReplyDelete
    Replies
    1. Like your introduction ..//"நான் யார்" - ஆராய முற்படும் போதே, "நான்" அங்கு இருப்பதில்லை.//

      That statement encapsulates a ton of this, overwhelmed with thoughts even before perceiving that completely! ..

      Delete
  3. சில பதிவுகள் அப்ஸ்ட்ராக்டாகத் தோன்றினாலும் அது பற்றி விவாதிப்பது தவறு என்று தெரிந்து கொண்டேன் மனக்கிடங்கில் எழும் எண்ணங்கள் எழுத்தாகிறது யார் புரிந்து கொண்டால் என்ன புரிந்து கொள்ளாவிட்டல் என்ன வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி :) ........ ஆழப் புதைந்த சில எண்ணங்களும் எளிதில் கண்டறிய முடிவதில்லை. புரியப்படுவதும் இல்லை.

      Delete